Tuesday, January 7, 2014

கற்கோவில் கட்டியவராம் தமிழரெல்லாம்...புற்றுக்
கரையானை
புசித்துண்ட
கருநாகம்
புற்றை
குடியாய்
கொள்வது
போல்
கற்கோவில்
கட்டியவராம்
தமிழரெல்லாம்
காத்திடுவார்
வரிசையிலே
பொற்கோவில்
தனில்
புகுந்த
பூநாகம்
பார்ப்பரிங்கே
பொய்க்கும்
மொழி
புரிகிறதா
கடவுளுக்கு...!

நீக்கமற
நிரைந்துவிட்ட
நீள்சடையோன்
நினை
வணங்க
இடைத்தரகன்
மடைபோல
நிற்கின்றான்

மடை
திறந்த
வெள்ளம்
போல்
மல்கும்
கண்ணீர்
உனைத்தழுவ
மாணிக்க
வாசகரின்
சுவைத்தமிழோ
என்செய்கும்

விடையேறி
இவண்
வருவாய்
இனிதன்மை
விளங்கிடவே
எனதமிழில்
வருதிப்பேன்
வருவாயோ
என் தேவ!

-கவிதைக்காரன்.

நிகழ மறுக்கும் அற்புதம் அவன்

Strong Beauty face detail by Art-of-man
காற்றிலெழுதியவைநீங்கள்
நண்பனாக்கிக்கொள்ளும்
தகுதிகளற்றவன்
அவன்.
போட்டி
பொறாமையில்
திளைத்தவன்
உங்கள்
உடமை
கவர்பவன்
கச்சிதமாய்
தனக்கேதும்
தெரியாதென்று
நடிப்பவன்
காட்சிகளை
புனைத்து
கதை
விட்டு
உங்களை
நம்பச்செய்ய
வைப்பதில்
கைதேர்ந்தவன்

உற்சாகமான
வார்த்தைகள்
அவனுக்கு
வசதிப்படுவதில்லை
இருண்ட
உலகின்
சுடுகின்ற
வெப்பநதி
அவன்.

தவறி
நட்பில்
விழுந்திடாதீர்
எப்போது
வேண்டுமானாலும்
உங்களை
கவிழ்கவோ
பழிவாங்கவோ
நம்பிக்கைக்கு
ஊறுசெய்யவோ
அவன்
தயங்குவதேயில்லை
அவனோடு
நட்பு
கொள்ளாதீர்

உங்கள்
தோழி
தமையரை
அவனுக்கு
அறிமுகஞ்
செய்யாமலே
விடுங்கள்
அவனுக்கு
சகோதரிகள்
தேவையில்லை

அவன்
குற்றங்களை
மன்னிக்க
துணியாதீர்கள்
குறுவாட்களை
அவன்
இடையிலிருந்து
இறக்கியிருக்க
மாட்டான்
விசுவாசமற்றவன்
முன்பே
சொன்னது
போல்
பொய்
அவனுக்கு
பொங்கல்சுவை

அவனுமென்ன
செய்வான்
இச்சமூகம்
அவனுக்கு
விசத்தை
ஊட்டிவிட்டதன்பேரில்
விசத்தை
தானே
பகிருவான்
அவனிடமெப்படி
கண்ணியம்
கேட்கிறீர்கள்

பணம்
புகழ்
பதவி
பேராசையெல்லாம்
அவனுக்கில்லை
எப்போதாவது
கொஞ்சம்
பேனாக்களின்
வீரியத்தில்
கிறுக்குவான்
எழுத்தென்னும்
போதை.

அவனுக்கு
வழிகாட்டாதீர்
அவனை
தூக்கிசுமக்காதீர்
பின்பற்றாதீர்
அவன்
விழுந்தே
கிடப்பவன்
எப்போது
விழுவான்
எழுவான்
எண்ணிக்கிடப்பதில்
அர்த்தமில்லை
அவனுக்கு
புன்னகைக்க
தெரியும்
அறத்தின்
பெயரால்
மனிதனென்பதற்கு
சிறு
அடையாளம்.

நீங்கள்
புன்னகை
கேட்டால்
கொஞ்சம்
தேடித்துழாவி
உள்ளொன்றும்
புறமொன்றுமாய்
கொஞ்சம்
வழித்து
கொடுப்பான்
எப்போது
வேண்டுமானாலும்
சம்பவித்து
விடக்கூடிய
மரணத்தின்
சுமை
அவன்.

விலகிநில்லுங்கள்
அவனோடு
நட்பு
பாராட்டாமல்
உங்களை
சுமக்கும்
வலிமை
அவனுக்கு
இல்லை
நல்லவனென்ற
வார்த்தை
கண்டுபிடிக்கப்படும்
முன்
பிறந்தவன்
அவன்.


நிகழ
மறுக்கும்
அற்புதம்
அவன்
அற்பன்
என்றாலும்
தாங்கிக்கொள்வான்

இதற்கும்
மேல்
அவனோடு
நட்பு
கொள்வீரென்றால்
ஒரு
கணப்பொழுதில்
உடைந்து
விழும்
கண்ணீர்குமிழி
யொன்றைத்தவிர
உங்களுக்கு
கொடுக்க
அவனிடம்
ஒன்றுமே
இராது
அவன்
நானில்லை
என்று
பிரகடனம்
செய்யும்
துணிவெனக்கு
போதவில்லை
போல

-கவிதைக்காரன்.

எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையது...


காற்றிலெழுதப்பட்டவை 

என்னை
உங்களுக்கு
அடையாளம்
தெரியாமலிருக்கலாம்
என் புலமென்ன
பிறப்பென்ன
மொழியென்ன
என்
வாழ்வென்ன
இறந்தால்
எரிப்பவரா
புதைப்பவரா
எதுவும்
உங்களுக்குத்
தெரியாது
ஜனசந்தடிகளில்
உங்களில் ஒருவராய்
உங்களோடே
வாழ்ந்திருக்கிறேன்

உங்களிலிருந்து
கிழக்கிலும்
மேற்கிலும்
வடக்கு
தெற்கு
என
எல்லா
திசைகளிலும்
பிறந்திருக்கிறேன்.

பர்மா
ஈழம்
அமிர்தசரசு
லாகூர்
இசுரேல்
பனாமா
இலத்தீன்
ஆப்பிரிக்கா
என
எல்லா
தேசங்களிலும்
என்
பிறப்பு
சம்பவித்திருக்கிறது
புலத்தினை
தாண்டி
புறப்பட்ட
வழியில்
அகதியாகவும்
ஆண்டபரம்பரையாகவும்
என்
வாழ்வு
அமைந்திருக்கிறது

இளைத்தவனை
அடித்து
அவன்
முதுகிலும்
பயணித்திருக்கிறேன்
ஏய்த்தவன்
பூட்சுக்கு
முதுகை
காட்டி
மண்டியிட்டுமிருக்கிறேன்

நாடு
பிடித்த
நாவுகளில்
தோய்ந்த
ரத்தரூசியும்
எனக்குத்தெரியும்
பழுப்பு
கம்பிகள்
பாய்ச்சி
தோலைக்கிழித்து
வழியும்
ரத்தகோரத்தின்
வலியும் எனக்கு
தெரியும்.

கைப்பற்றிய
நிலத்தை
என்னுடையதாக்கி
பெரும்
வரலாற்றையும்
திரித்திருக்கிறேன்

பிறந்த
தேசத்தில்
நீ
அடையாளமற்றவன்
என
விரட்டவும்
பட்டிருக்கிறேன்

எனக்கு
உபதேசிக்கப்பட்டதெல்லாம்
எது
உன்னுடையதோ
அது
நாளை
மற்றொருவனுடையது
மற்றொருநாள்
அது
வேறொருவனுடையது
என்பதே

வேடிக்கை
பாருங்கள்
உபதேசம்
செய்வோர்தான்
அனைத்துக்கும்
சொந்தம்
கொண்டாடுகின்றார்

இதுவரைக்கும்
ஏனென
கேட்டதுமில்லை
கேட்டபோதும்
போலிபகுத்தறிவாதி
என
முத்திரை
குத்தப்பட்டிருக்கிறேன்

தீவிரவாதி
என
சுட்டுத்தள்ளப்பட்டிருக்கிறேன்

துரோகி
என
நாடு
கடத்தப்பட்டிருக்கிறேன்


வீட்டுச்சிறையில்
அடைத்து
வைக்கப்பட்டிருக்கிறேன்

இளமையெல்லாம்
சிறையில்
கழித்திருக்கிறேன்

பயணீத்த
வாகனத்திலே
வெடித்து
உயிர்நீத்திருக்கிறேன்


கடைசி
வரைக்கும்
எந்த
தோட்டாவும்
என்
கேள்விகளை
சுட்டுத்தள்ளமுடிவதில்லை

-கவிதைக்காரன்.

Friday, December 20, 2013

ஆட்டோகிராஃப்_2013 @Achi Poorani_(7)

இந்த முகநூல் வட்டாரத்தில் நீண்டநாட்களாக இவரைத் தெரியும்...

இவரது பதிவுகளைப் பார்த்ததும் நாலாங் கிளாஸ் படிக்குற பொண்ணு போட்டோவை ப்ரொஃபைல்ல வைத்துக்கொண்டு என்ன வில்லத்தனமா பேசுறாங்க இவங்க சங்காத்தமே வேணாம்ன்னு unfriend செய்துவுட்டு போய்ட்டேன்.

பின், தெருவிளக்கு-ன்னு ஒரு முகநூல் குழு தொடங்கப்பட்டது.

அன்றைய நாட்கள் மிகுந்த உற்சாகமிகு மனிதர்களையும், நட்பினர்களையும் , மனிதநேயம் மிக்கவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்திய களம் அது...

அப்துல் வாஹப், பிரபின் ராஜ், ரூபியா அர்ஸா, ராஜ் குமார், இரத்திகா மோகன் ,குமார் ரங்கராஜன், சுதாகர் பாண்டியன் ,மோகனப் ப்ரியா, தமிழ் அருவி, பிரபாகரன் க்ருஷ்ணா , ஷேர்கான் ஹமீது , விமல் ராஜ், வேலுச்சாமி , இப்படி பலர்பலர் ஐக்கியமான இடத்தில் ....

இவரையும்பார்க்க முடிந்தது. பின்னாளில் தான் மீண்டும் நட்பில் இணைந்தேன். ஆச்சி கஜா @ Achi poorani .

ஆச்சியை அம்மான்னு தான் கூப்பிட்டுப்பேன். அவங்க மலேஷியால இருக்கும் போது சுமார் அதுபது, எழுபது வயதுக்காரராக எண்ணி... ஹாஹா

ஆச்சியின் வரலாறு அதிரிபுதிரியானது. நீங்க பெண் , உங்களால் முடியாதுன்னு யாரும் சொன்னா அவ்ளோதான். டின் கட்டி தூக்கிடுவாங்க..

ரொம்ப தைரியம், தன்னம்பிக்கை,போல்ட்னஸ் இதெல்லாமே ஆச்சியின் தற்காப்பு ஆயுதங்கள். கிட்டப்போனா நக்கீரன் மாதிரி கீர் கீர்ர்ர்ர்தான்.

ஆனா இதையெல்லாம் தாண்டிய ஒரு மெல்லிய உணர்வுகளை படம்பிடித்துக்காட்டும் அன்பு அவர்களிடம் இருக்கும்.

அதுதான் அவங்களோடு என்னை, எங்களை நெருக்கமாக்கிச் சேர்த்தது.

எதாவது நிகழ்வுகளில் சந்திக்கும் போது என்னை "என் பையன்"-என்றுதான் அறிமுகப் படுத்துவார். மறுதலிக்கும் ஜனங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை நாங்கள்.

இந்தத் தூய்மையான அன்பை சின்னச் சின்ன வார்த்தைக் கோர்ப்புகளால் சொல்லிவிட முடியாதுதான்.

ஆச்சி வீட்டுக்கு நேரம் கிடைத்தால் அப்பாயிண்மெண்டோடு ஆஜராவோம்.

நான்கு மணி நேரம் முன்னே டீ போடத் தயாராகி விடுவார். வந்து பத்தாவது நிமிடத்தில் தேனீர் கோப்பையைச் சுவைத்துவிட்டு பக்கத்து ஹோட்டலில் வாங்கியது தானேன்னு கிண்டல் அடிப்போம்.

முதல் முறை போனபோது... தோசை தேங்காய் சட்னி சாப்பிட்டுவுட்டு முதல் வேலையாக LIC பாலிசியை புதுப்பித்துக் கொண்டேன். ஹாஹா.... வாழ்க்கை அழகானது...

ஆச்சியோட குட்டிப் பொண்ணு அக்‌ஷிதா... அதாகப்பட்டது அக்‌ஷி -தான் அச்சியாகி ...ஆச்சியாக நிலைத்துவிட்டது.

ஆச்சி ஒரு இண்டர்நேஷனல் லைசன்ஸ் ஹோல்டர். எல்லா கார்களைப் பற்றிய விபரமும் அத்துபடி... கார்களைப் பற்றிப் பேசத்தொடங்கினால் அவர் கண்களில் உற்சாகம் அப்பிக்கொள்ளும்...

பேருக்குத்தான் அம்மாவும் பையனும் ஒருவரை ஒருவர் கலாய்த்து காலி செய்வதில் தடையே கிடையாது..

facebook-ல ஆச்சி போல ஒருத்தர் கிடையாது... அவரை சரியாப் புரிந்து கொண்டவங்க லிஸ்ட் வெகு சொற்பம்.

குதர்கமாகப் பேசி மனதைக் காயப்படுத்தி மன்னிப்புக் கேட்டு அன்பில் இணைந்தவர் லிஸ்ட் ரொம்ப பெருசு...

நேர்மையான அன்போடு இருந்தா அதே அன்பைத் திருப்பித்தரும் சுவறில் எறிந்த பந்து அவர்.

எசகுபிசகு பண்ணா பேட்டை எடுத்து தலையில் போடவும் தயங்க மாட்டார்.

பலர் ரகசியங்களின் பெட்டிச்சாவி... சத்தம் மூச்.

எனக்கு நட்பு ரொம்ப புடிச்சவிசயம்... உறவுகளைத் தாண்டியும் ...

ஆனா உறவாகக் கிடைத்த நல்ல நட்பு ஆச்சியோடிருந்தது...

என்றும் இருக்கும்...

Achi Poorani

#ஆட்டோகிராஃப்_2013_(7)ஆட்டோகிராஃப்_2013@Karthi Keyan_(9)

மதுரை!
நேசத்தையும் பாசத்தையும் மனசு நிறைய பூசிக்கொண்டு தெற்குச் சீமையிலிருந்து அறிமுகமான நண்பன்.

குணத்திலும் நட்பிலும் கண்ணாடி மாதிரி... நாம் எதைக் காண்பித்தோமோ அதையே பிரதிபலிக்கும் கேரக்டர்.

ரெண்டு மூனு வருஷம் முன்னாடியே இவனைய் தெரியும் ... அதிகம் பேச்சுவார்த்தை இருக்காதுசந்திக்கும் இடத்தில் தித்திப்பாய் பேசிக்கொள்ளும் முகநூல் நண்பன்.

ஆனால் காலம் அத்தனையையும் மாற்றிப் போட்டுவிட்டது...
இன்றைக்கு மதுரைன்னு சொன்னாலே மனசில் முதலில் வந்து நிற்பது கார்த்திதான். கார்த்திகேயன்.
ஆமா! நானும் கார்த்தி , அவனும் கார்த்தி... ஒரு ரகசியம் சொல்லட்டுமா KARTHICK -ன்னு இந்த ஃபேஸ்புக்கில் ஒரு Group -ப்பே இருக்கு சுமார் ஐநூறு பேருக்குமேல் உறுப்பினரா இருக்கோம் யார் நிர்வாகின்னே தெரியாது

ரொம்ப காலமா போன் , முகநூல் தொடர்பிலே இருந்த நண்பன். நிறைய பேசுவோம். பயங்கரமான கலகல பேர்வழி...

ஈவுஇரக்கமே இல்லாமல் கலாய்த்து காலி பண்ணுவான். மதுரை அமேரிக்கன் கல்லூரி மாணவன் கேட்கவா வேணும்...

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் நேரில் சந்தித்துக்கொண்டோம்.மதுரையில் ஒரு நண்பர் திருமண்த்தில் கலந்துவிட்டு அப்படியே கார்த்தியோடு மதுரை வீதி உலாதான்.

அந்த ஒருநாள் இயந்திர உலகத்தின் சாவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு நட்பின் கூட்டணியோடு (கார்த்தி,கிரி,நானும்) அரட்டைக் கச்சேரிதான்.

"தோர் 3D" படத்திற்குப் போய் கண்ணாடி போட்டு நானும் கிரியும் தூங்கிட்டோம். "ஹாஹா கொடுத்த காசுக்குப் படம்பார்த்துக் கொண்டிருந்தான். "

வீட்டில் மூணாவது பையன். ஆக ரொம்ப செல்லம்... மதுரை வீதிகளில் கருப்பு பல்சரில்
எதிர்படுவான். கவனித்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் கேட்டால் நெஞ்சம் கொடுப்பான். இதை வேறு மாதிரி கூட சொல்லலாம்...

"உயிர் கொடுப்பான் தோழன்... "

கார்த்திக்கும் என் நட்பில் மிக முக்கியமானவர்க்கும் ஒத்துப்போகாதசூழல்.!

யாரைச் சாந்தம் செய்யன்னு வந்தபோது... விடு மச்சி நீ .....என் தப்பில்லைன்னு நம்புறேல்ல அதுபோதும்ன்னு விலகி நடந்தான். "அங்கே நிற்கிறே மச்சான் நீ... "

மனிதர்களைக் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான அன்பு...

கார்த்திய அந்த கலகலப்போடு ஏத்துகிட்டா... அவன் இன்னொரு தேவராஜ். (தளபதி மம்மூட்டி கேரக்டர்)

நாங்க பலநேரம் தேவராஜ்ன்னுதான் ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டுக்குவோம்

உன் நண்பன் யார்ன்னு சொல்லு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்னு யாரும் கேட்டா... தயக்கமே இல்லாமல் கார்த்தியை(யும் ) கை காட்டுவேன்.

நண்பேண்டா...

Karthi Keyan

@ஆட்டோகிராஃப்_2013_(9)


     Thursday, December 19, 2013

ஆட்டோகிராஃப்_2013 @தமிழ் அருவி_(8)

இந்த ஆட்டோகிராஃப் எழுதத்தொடங்கியது முதல் எத்தனை புத்துணர்வான தருணங்களைக் கடந்திருக்கிறேன். பழைய நிகழ்வுகளைக் மீளெழுப்பி அதன் ஆதாரங்களின் ஸ்ருதியினோடு பயணிக்கும் சுகானுபவம் ரம்யம்.

நினைவுநாடாக்களின் சுழற்சியொலியில் இன்றைக்கு எழுதவிருக்கும் நபரை அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டீர்கள் உங்களில் பலரும்...

தெருவிளக்கு என்றொறு முகநூல் குழு!
குழுவுக்கு வெளியேயான நட்புவட்டமெல்லாம் மாமா , மச்சான் சகல-என்ற அளவில் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது ”தெருவிளக்கு” வேறொரு மாதிரியான உலகம்.

நிறைய அன்பானவர்கள். நட்புமிக்கவர்கள் , தமிழ்பால் காதல் கொண்டவர்கள். வரம்பு மீறிய பேச்சுக்களுக்கு இடம் தராதவர்கள்., நட்பின் அடிப்படையில் பிணைந்திருந்தவர்கள். பிறர் அந்தரங்கங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். யார் இவரென்ற ஆராய்ச்சிகளுக்கு இடமில்லாது நீங்கள் யாராக இருந்தாலும் அவ்வாறே உங்களை ஏற்றுக்கொள்பவர்கள், நல்ல காரியங்கள் செய்ய கரம் கோர்த்திருந்தவர்கள். இப்படி பலரும் புளங்கிய இடம்தான் ”விளக்கு” .

பெரிய பெரிய விவாதங்கள்! ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பு என்ற சமரசம் உலாவுமிடத்தில் அறிமுகமானவர் இவர்.

எந்த ஊர்? என்ன பெயர்? எதுவும் தெரியாது!

:தமிழ் அருவி!:
அவ்வளவுதான்.

அறிமுகமாகியபோது பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை...
யார் வம்பிற்கும் போகாத சாந்த சொரூபி.
சிலபல மாதங்களுக்குப்பின் தான், அறிமுகப்படலமே...

அப்போல்லாம் அவரை அருவியாரே!ன்னுதான் கூப்பிடுவேன்.
அவரோட எழுத்துப்பிழைகளை சரமாரியாக கலாய்த்துத்தள்ளுவேன்,
அவரோட நட்புவட்டம் ரொம்பச் சின்னது! ஆனாலும் ஆழமானது! அந்த சின்னவட்டத்தில் நானும் உள்ள நுழைந்துவிட்டது அவர் வாங்கி வந்த சாபமா வரமான்னு அவரைத்தான் கேட்கனும்,

அக்காவை- அக்க்ஸ் என்றும் தம்பியை- தம்ஸ் என்றும் அழைத்துக்கொள்ளும் “நவநாகரீக” (ஞே!) முறையை
அறிமுகப்படுத்தி வைத்தது நாங்க தான்!
நாளடைவில் அக்காவாகிப்போன அருவியார்.

குணத்தில் ரொம்பவே சாந்தம். அமைதின்னு
முன்னாடி சொன்னேன்ல....
அதெல்லாம் அப்படியே தண்ணி ஊற்றி அழிச்சுடுங்க...

ஆள் பக்கா சூரி, கோபம் வந்தா ருத்ரதாண்டவம் தான் (ஹாஹா சும்மா).
தமிழ்ல அவருக்கு ரொம்ப புடிச்ச வார்த்தை “யோவ்”.
ரொம்ப பழகினவங்க எல்லாரும் அவருக்கு (ஆண்) யோவ் தான்...

இவரைப்பற்றிய மேலதிக தகவல்கள் விக்கிபீடியாவில் தேடினாலும் கிடைக்காது. பேச்சுவழக்கு இலங்கை மாதிரி இருப்பதால் அநேகமாக இலங்கையைச் சேர்ந்த அயல்தேசத்துக்காரரா இருக்கலாம்
(அடிச்சு கேட்டாலும் நான் சொல்லமாட்டேன்  )

இப்படி என் கையை கட்டிப்போட்டுட்டு ஆட்டோகிராஃப் எழுதுன்னா என்னத்த எழுத? வேறு வழியில்லை..

ஆனால்
அருவி போலொரு அன்பான... நட்புக்கும் திறமைக்கும் மரியாதை கொடுக்கத்தெரிந்த ஒருவரைப் பார்த்ததே இல்லை.
அவரையே பார்த்ததில்லை என்பது கொசுறு தகவல்.
(ஸ்கைப்-தவித்து  ).

தனக்குத் தெரியாத விஷயத்தை
தெரிந்தது போல் காட்டிக்க மாட்டாங்க!
தெரியாதுன்னும் காட்டிக்க மாட்டாங்க ஹாஹா.
அப்படியே ஓரமா உட்கார்ந்து
வேடிக்கை மட்டும் பார்ப்பாங்க..

ஃபேஸ்புக் ஓனர் மார்க் லைக்  போடுபவருக்கு,
ஒரு லைக்குக்கு இவ்வளவுசம்பளம்ன்னு அறிவித்தால்
ஒரே நாளில் விண்டோவ்ஸ் ஓனரை முந்திடுவாங்க
அப்படி ஒரு லைக் சிகாமணி!

தமிழ் அருவி என்றொரு முகநூல் கணக்கிற்கு
அப்பாலான உலகில் அவர் ஒரு பெருமதிப்புடைய பெண்மணி! அது பிறருக்குத் தெரியாமல், வெளிக்காட்டிக்காமல் தன் குழந்தைத்தனங்களோடு இவ்வுலகின் நேசங்களை இணையத்தில்
சின்ன வட்டத்துக்குள் வடிவமைத்து ரசிக்கும் அவரை... அவராகவே ஏற்றுக்கொள்ளும் பிற நட்பினர் சிலரும் இங்குண்டு

அவர்களோடு நானும் ...
தம்பியாக...

(சென்னை வரும் போது ரெண்டுபேரைச் சந்திக்கனும்ன்னு சொல்லியிருக்கார். ரெண்டில் ஒருத்தர் நீங்களும்ன்னு சொல்லியிருக்கார்... பார்ப்போம் காலம் என்ன பதில் எழுதி வைத்திருக்குன்னு...)

தமிழ் அருவி

#ஆட்டோகிராஃப்_2013_(8)


             


  

                                                               
Tuesday, December 17, 2013

ஆட்டோகிராஃப்_2013 @Ivan Saranraj_(6)

நிச்சயமாகச் சொல்வதென்றால் கிரிதரனுக்கு முன்னதாக நேரில் பார்த்த முகநூல் நண்பன் யாரென்றூ கேட்டால் இவனைத்தான் சொல்லனும் 

சென்னைக்கு வந்திருந்தபோது அவனும் ஏதோ தேர்வுக்காக வந்திருந்தான்.

நான் சதீஷ் ரமேஷ் சரண் நால்வரும் தான் முதலில் சந்தித்துக் கொண்ட நன்பர்கள். 

கோவையில் அப்போது பணியில் இருந்தான் சரண். 
எங்க கூட்டத்திலேயே ரொம்ப நல்லவன் யார்ன்னு கேட்டா சரணைச் சொல்லலாம். 

அவ்ளோ கலாய்த்தாலும் சின்ன புன்னகையில் கடந்து போய்டுவான். அக்மார்க் நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி ஏதும் இருந்தா அது எங்களோடு சேர்ந்ததாகத்தான் இருக்கும்.

சரணும் நானும் சென்னை கோவைன்னு பைக்கில் ஊர்சுத்தியிருக்கோம். அதெல்லாமே கொண்டாட்டமான தருணங்கள். 

பசங்களூக்கு ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கும். அது என்னன்னா 

மாமா,மச்சான்னு கூப்பிட்டுக்குவாங்க ஆனா! இந்த மாப்பிள்ளைன்னு கூப்பிடுவதற்கு கொஞ்சம் சங்கோஜப்படுவாங்க...

எங்க ஜில்லாவுலயே அதை உடைச்சது சரண்தான்.  

"மாப்ள டேய்" -இப்படித்தான் ரொம்ப மரியாதையா கூப்பிடுவான். ரொம்ப மரியாதை தெரிஞ்ச புள்ளையாண்டான். 

முன்னாடில்லாம் அடிக்கடி முட்டிக்குவோம். பத்தாவது நிமிசம் ஒட்டிக்குவோம். 

எங்க friendship எல்லோரிடத்திலும் அதி உன்னதமான நம்பிக்கையும் ஒட்டுதலும் இருக்கும். ஆனா அது அவரவர் வரைக்கும் தான். 

இதை விளக்கமா சொல்லனும்ன்னா போனவாரம் சரண் சென்னை வந்திருந்தப்போ ரூம் புக் பண்ணும் போது நான் தான் அட்ரஸ் ஃபில் பண்ணினேன். அப்போதான் அவன் ஐடி-யில் "பாலக்காடுன்னு" போட்டிருந்தது.

அதுவரைக்கும் அவன் சொந்த ஊர் எதுன்னே தெரியாது... 

சரண் பத்தி ஒரு வார்த்தையில் சொல்லனும்ன்னா ....!

தமிழ், மலையாள, தெலுங்கு கன்னடப் பெண்கள் எல்லாம் தயங்காமல் ராக்கி கட்டக் கூடிய ஒரு அக்மார்க் ஆஞ்சநேயர்.  

எங்களோட என்சைக்கிளோஃபிடியா சரண்தான். எல்லா வீடியோ புகைப்பட ஆதாரங்களும் இவன் டேட்டாபேஸ்ல இருக்கும் 

பேதங்கள் ஏதுமின்றி 
பேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய் ஆண்டுகள்
கடந்து நட்போடிருப்போம் ... வா நண்பா... 

Ivan Saranraj

@ஆட்டோகிராஃப்_2013_(6)

கொடைக்கானல் சுற்றுலாவின் போது ...

காதல் தோல்வியில் ரயிலுக்கு முன் பாயும் முன்பு எடுத்த படம்.


(அந்த ரயில் விபத்துக்குள்ளாகி பயன்படுத்த
முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது
லேசான சிராய்ப்புகளோடு
சரண் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்)
                                                          பேதங்கள் ஏதுமின்றி 
                   பேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய் 
சரண்ராஜ்