Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, November 21, 2013

குலம்வளர்க்கச் சேராயோ...


பூத உடல் நோகும் கண்ணா...
நாதன் காண ஏங்குவதில்...

காதல் வந்து தேங்கும் நெஞ்சம்
காத்திருந்தும் காலமென்ன... 
ஆதலினால் வந்துவிடு ஆவிபற்றிக் கொண்டுவிடு

ஊதல் வந்து வீசுதுகாண்
உயிரின் சப்தம் மாயுதல் கேள்..

ஏனுனக்குப் புரியவில்லை
இதுவரைக்கும் பதிலுமில்லை...

கோமறுத்த கன்றினைப் போல் கோதை உள்ளம் கனன்றதே பார்....

பார்த்திபன் தோள் கொண்டவனே பாவைதேடி வாராயோ...

ஊழிநிறங் கொண்டவனே
உனது மாரில்ச் சாயேனோ

ஆதிஷேசன் மீது ஆடும்
ஆநிறைக் கோனே...

என் நாதமென்னும் துகில் விரித்தேன் தாவி ஓடிவா...

உன் கூர்விழியால் குமைந்த பெண்ணை கூதல் வந்து வீசும் முன்னே
குலம்வளர்க்கச் சேராயோ...

- கவிதைக்காரன்

Sunday, November 17, 2013

விடிதலுக்கேங்கினேன்... நீ வரத் தாங்கினேன்...



ஏன் மணிவண்ணா..
என்மீதிரக்கமில்லையா..
பால் மருவும் வெண்கண்ணா
விட்டு தொலைவு போகிறாயெதற்கு...

தீப்பற்றிய மெழுகாய் என் உளம்
உருகி உனைத்தேடித் தேயுது பாராயோ!

அரையணி தானவிழ
உடல் ஒளி தான் சிறிய
வளைகள் வழுக்கி விழுந்தனவே..
வந்தெனை நீயும் அணைத்திடுக...

மார் உயர்ந்தெழுந்து வாய் விம்மிடும் மங்கை
மனத் துயர் பார்க்கும் விழிகளை ஏங்கி ஏங்கி உயிர்த்தேயுதே...

தோங்கு மரமதில் வாங்கும் பூங்குயில் ராகம்
உன்பெயரெழுதி எனை மேயுதே...

பொழுது சாய்ந்து இருள் கம்மி கரைகிறது...
உளமோ உனை எண்ணி மருளுதே...

தூரமாய் உன் நிஜம்
வருவதாய் நோக்கினேன்...
ஆநிரைக் காண்கிறேன்
மாமணி கேட்கிறேன்
கோகலே நாகுகள் உகளுமன்றோ...
என் சொல்லி உய்குவேன் அவனையின்றி...

தோழி மேனியின் வெம்மையும் எனை இகழுமடி...
தோது ஏது இனி மாயன் வரவில்லை.
மாது நான் என்ன செய்கவோ
இருள் மிகச் சூழ்ந்தது
பனிப்புகை ஓங்குது..

அன்னைத் தோழியர்
அவரவர் துயிலில் தான் விழுந்து அயர்ந்து தூங்கவே...

அந்தகாரத்தின் ஆட்சி எனைக்கொய்ய
உன்னைக்காணாது
அயர்ந்த விழியது இன்னும் உயிர்பெற்று ஏங்குதே...

விடிதலுக்கேங்கினேன்
நீ வரத் தாங்கினேன்...
உன் செவி என் குரல் மடுக்கவில்லை...
ஏனென்று எனக்கொன்றும் புரியவில்லை...

ஒண்சுடரோனவன்
அவனைக் காணவில்லை
பெண்ணிவள் படுந்துயர் அவனுஞ் சகிக்கவில்லை...

யோ.... என்ன ஓர் இரவு ஏழு ஊழியாய்
எரிதழல் போலென்னை கொல்குதே..

மன்னவ நீவரின் யாதும் தீராது பாவி
என் நெஞ்சு இனி என்ன சொல்லித்தான் தீரும் போ...




- கவிதைக்காரன்

Saturday, November 12, 2011

தபுவின் பார்வையில் நான் காதலித்த தாஜ்மஹால்...!

அது வேறு உலகம். அங்கே இருப்பது ஒரேயொறு ஆலயம்.
அதில் வசிப்பது இந்துக்கடவுளோ, இலாமியக்கடவுளோ, கிறிஸ்தவக்கடவுளோ அல்ல ...

ஆனால் அங்கே ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் மனிதர்கள் வந்து வழி பட்டுப் போகிறார்கள்.பலர் மாதக்கணக்கில் அங்கே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள்.    அப்படி வாழ்ந்து வந்தவர்களில் நானும் ஒருவன்.

வாகனங்களிம் புகையால் அந்த ஆலயம் பழுப்பேறிவிடக்கூடாது என ஒரு கிலோ மீட்டருக்கு அப்பாலே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன..
                                                 



புகை இல்லாத பேட்டரிக்கார்கள் அங்கிருந்து ஆலயத்துக்குள் அழைத்துச்செல்ல பயன் படுகின்றன. அந்த ஆலயத்தை மாசு படுத்துகின்றன என்ற ஒரே காரணத்துக்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட ஆலைகள் நூறுக்கும் மேல்.

                                         


உலகெங்கும் இந்திய ருபாயின் மதிப்பு ஒரு அமேரிக்க ராலருக்கு சராசரியா நாற்ப்பந்தைந்து ருபாய் என கணக்கிடப்படுகிறது . ஆனால் அந்த ஆலயத்தில் அந்த கணக்கெல்லாம் செல்லுபடி ஆகாது. ஆம் , அந்த ஆலயத்தில் இந்தியர்களுக்கு நுழைவுக்கட்டணம் 20- ருபாய். வெளிநாட்டவருக்கு 20-டாலர்.
ஒரு ருபாயும் ஒரு டாலரும் அங்கு ஒன்றுதான்.

அப்படி யென்ன அங்கிருக்கிறது என்கிறீர்களா?  
காதல் இருக்கிறது. ஆம்! அந்த ஆலயத்தின் பெயர் தாஜ் மஹால்.
                              



NEWNESS IS THE SECRET OF ITS BEAUTY என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட கல்வெட்டை உண்மையாக்கும் வண்ணம் எப்போதும் புதிதாகவே இருக்கும்
 தாஜ் மஹால்,  
  வானம் புதிதாக இருப்பது இயற்கை வானத்தைக்காட்டிலும் புதிதாய் இருக்கக்காரணம் “காதல்”  தான்!

அதை கட்டச்சொன்னவன் ஒரு காதலன், அதைக்கட்டிக்கொடுத்தவன் ஒரு காதலன்... அதை காத்து நிற்பது காதலர்கள்....

           
காதலர்கள் எங்கே இருந்தாலும் சுற்றுப்புறத்தை மறந்து காதலில் லயித்துப்போவார்கள் ஆனால் இங்கு மட்டும் கதலர்கள் தங்களை மறந்து தாஜ்மஹாலில் லயித்துப்போகிறார்கள்.

மக்ரீனா-  ’குஷி’ -விஜய்ப்படத்தில் வரும் பாடல் இல்லை இது 400- வருடங்களுக்குமேல் புகை, பனி,வெயில் மழை... அனைத்திலிருந்தும் பழுப்பேறாமல்“தாஜ்மஹாலை-க் காக்கும் ” வெள்லைச்சலவைக்கல்.
சில நூற்றாண்டுகள் அந்த கல் மண்ணுக்குள்லே இருந்திருந்தால் வைரமாக மாறி இருக்கும். ஆனால் தாஜ்மஹால் அளவுக்கு கொண்டாடப்பட்டிருக்குமா?
கல்லிலும் காதல்..
                                     


நடுவில் வீற்றிருக்கும் கோபுரத்தை சுற்றிக் கட்டப்பட்ட நான்கு தூண்களும் சற்று வெளிப்புறம் சாய்ந்தபடி கட்டப்பட்டிருக்கிறது -விழுந்தால் கூட தாஜ்மஹாலை சேதப்படுத்திவிடக்கூடாதாம் ஒவ்வொறு அணுவிலும் காதல்...காதல்... காதல்..
                                                  

 நுழைவு வாயிலைத்தாண்டி உள்லே நுழைந்ததும் அத்தனைப்பெண்களும் மும்தாஜ்-காளாகமாறி விடுகிறார்கள். ஆனால் பாவம் பல ஆண்கள் ஷாஜகான்களாக ஆக முடியாமல் தவிக்கிறார்கள்..!

என்றாலும் அங்கே ஒரு ஷாஜகான் இருக்கிறான். - தாஜ்மஹாலைக்காக்கும் காவலாளிகளில் ஒருவன். காலையில் உள்நுழைந்து இரவு கடைசி ஆளாக என்னை (தபு)  சிலநாட்க்களாய் கவனித்தவன். ஒருநாள் என்னை பார்த்தவுடன் புன்னகைத்தான்.! பேச ஆரம்பித்தோம்!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவனுக்கு வேலை ஏதும் கிடைக்காததால் காவல் துறையில் சேர்ந்திருக்கிறான். இனிமேல் தனக்கு அழுக்கடைந்த காவல் நிலையம், திருடர்கல்  நீதிமன்றம் என வாழ்க்கைப்போகப்போகிறது என நினைத்தி இருந்தவனை ,  “
தாஜ்மஹாலை’’ காவல் காக்கப்போ! என்றவுடன் தான் அடைந்த ஆனந்தத்தை அவன் கண்கள் விவரித்த விதத்தில் காதல் எத்தனை அழகாய்... தெரிந்தது தெரியுமா எனக்கு.... 
                                 


இங்கு வந்து ஐந்து வருடம் ஆகிறதாம் இதுவரை ஒருமுறைக்கூட ஊருக்குப்போனதில்லையாம்.ஊரில் அம்மா மட்டும் தனியே... எப்போதாவது அவரை வரச்சொல்லி பார்த்துக்கொள்வதோடு சரி... மற்ரபடி அவனுக்கு வாழ்க்கையே தாஜ்மஹால் தான்...

“எனக்கு எல்லாம் இந்த கோவில் தான் பனி,மழை வெயில் எதுவும் எனக்குத்தெரியாது. ஷாஜகான் கூட தன் கடைசிகாலத்தில் சிறைவைக்கப்பட்ட இடத்திலிருந்து தாஜ்மஹாலை பார்த்தபடியே தான் இறந்தான். நான் இதை காவல் காத்துக்கொண்டிருக்கும் போதே இறக்கவேண்டும்”- என அவன்   பரவசத்தோடு பேசும் போது பேசுவதைக்கேட்கையில்....

தாஜ்மஹாலே உன் மாடத்தில் குடியிருக்கும் புறாக்கள் சிந்தும் கழிவுகளை சுத்தம் செய்யும் வேலையாவது எஅனக்குக்கொடேன் என கத்த வேண்டும் போல இருந்தது...எனக்கு


                                         
வானம் இருளத்தொடங்கியது... “இங்கே வருகிறவர்கள் இரவானால் இதைசமாதியாக நினைத்து உள்லே செல்ல பயப்படுவதையும் அப்படி சென்றாலும் பயத்தை காட்டிக்கொள்லாமல் இருக்க சப்தமெழுப்பியபடியே செல்வதை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது என்றான் அவனது கவலையைக் கேட்கையில் அப்படியே பெண்ணாக மாறி அவனைக்காதலிக்க முடியாதா என்றிருந்தது..

காதலே... அவனை கவனித்துக்கொள் அவனுக்கு ஒரு நல்ல காதலியைக்கொடு...


மழையானவள்... (தபு சங்கர் ) -லிலிருந்து.....!


(தாஜ் மஹால் உள்கட்டமைப்பு புகைப்படங்கள் :
http://jekophoto.eu/gallery/public/events/alexa-presents-on-ice-berlin-2008/taj-mahal-inside/  )
-கார்த்திக் ராஜா...!

Thursday, November 10, 2011

பனியுமில்லை வெயிலுமில்லை... புதிதாய் நிலவுமோர்... இரட்டைக்காலம்


கதிரும் நிலவுமாய் நீ..........
ஒருநாள் துயர் நீ..
மறுநாள் துணை நீ...

எனை நான் கண்டுகொள்ள
நாசி நுழைந்த சுவாசம் நீ

இளமாலைப் பொழுதில்
வெண்பனிப் பூக்கள்
சிந்தும்
வான்முகிலின்
வளர்ப்புமகளா இவள்?


குளிர்கால மேகம் சிதறிப்போகும்
குளிராத தேகம் இவளுக்கு
இறுக்கி அணைத்து
இளைப்பாறிக்கொள்வாள்
தன் காதலை...


இதழ் சொட்டும் வார்த்தையில்
இதயம் மயங்கித்தான் போகும்
கடைக்கண்ணால்
இவள் எய்யும் அம்புகளுக்குச் சமமாய்

அர்ஜுனனின் வில்லுக்கு
வலிமை தோற்கும்.


முன் பனி..
முழுமதி........
மழைக்குடை....
வெயில் நிழல்.....
வெட்க்கபந்தி............

இவையெல்லாம் நீயானால்...

உன்னைச்சமைத்து காதல் தொட்டுக்கொள்ளப்பார்க்கிறேன்
காலை உணவிற்கு..

மௌனம் கலைத்து மழையாய்
பொழிவாயே
உன் செவ்விதழால் வருடும்

அந்த முத்தமழைக்கு ஏங்கி
தாகமாயுருக்கும் என்னை
அணுவுக்கும் இடைவெளி இல்லாமல் நனைத்துவிட்டுப்போனால்
என்ன...?

சைவ அசைவம் பார்த்தா சமிக்ஞை புரிந்தாய்
விரலால் தீண்டியதும்
பட்டென கன்னம் விழும் அந்த நிமிடம்
இறந்து பிறக்கும்
என்னை

இன்னும் இன்னும் எத்தனை ஜென்மம் செய்வாய்..


நான் கிறுக்கலாய்ச்செய்யும் அத்தனையும் ரசித்தாய்
நான் ரசித்து எழுதும் அத்தனை கவிதையையும்
கிறுக்கல் என்றாய்..

அடி...
முரண்காற்றுக்கிளைய
தென்றலானவளே
என்னத்தான் செய்யப்போகிறாய்

எப்போது இதயம் கொய்யப்போகிறாய்
என ஒவ்வொரு நிமிடமும்
தட்பவெட்பம் தடுமாறும்
என்னை

தலைக்கோதி
மார்போடனைக்கும் உன் தேகச்சரணடைய
காற்றுக்குமிழிக்குள்
மூச்சைப்பிடித்து நிற்கும்
என்னை

மேகக்கூட்டுக்குள்
முத்தெடுக்கவெண்ணி
தலைகீழ் வனத்தில் நிலை கொள்லாமல்
திரியும் என்னை


அய்யோ!
போதும் இன்னும் எத்தனை “என்னை”
போட்டாலும் நீ வரப்போவதில்லை
எனத்தெரிந்தும்
புலம்பும் என்

புலம்பெயர்ந்த இதயத்தை
புதைத்த இடமாவது சொல்லிப்போயேன்..!

Saturday, October 29, 2011

திக்கற்றவளாய்.....!






திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்
 

விருப்ப வெறுப்பிற்கு அப்பால்...


இன்று அழகிய நந்தவனமாய் காட்சியளிக்கும்
இதே வையகம் தான் அவ்வப்போது நடுங்கி
பல்லாயிரக்கணக்கான உயிர்களை
பழிவாங்குகிறது...

அமைதியாய் ஆர்ப்பரிக்கும் இந்த ஆழிதான்
அன்று பொங்கி பிராவாகித்து
பலரை கொன்று குவித்து போனது...

நீல நிறத்தில் ரம்யமாய் மிளிரும் இவ்வானம்தான்
சில நேரங்களில் கனமழை பொழிந்து
எத்தனையோ பேரை காவுகொண்டது...

தென்றலாய் என் வாசலில் நிற்கும் குளிர்காற்று
தான் ஊழியாய் அன்று ஊரை சூறையாடியது...

ஆனால் இவை எதையும்


என்னால் வெறுக்க முடிவதில்லை...


என் மேல்..
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழிந்த....காதலையும்
கைவிடுத்து போன உன்னையும்......
---கார்த்திக் ராஜா ....
 

காதல் சொல்ல வந்தேன் 2






போய்வரும் திசை பார்த்து
சட்டைப்பையில் மடலோடும்..
கரங்களில் மலரோடும்..
நெஞ்சுகுளியில் சிறு பயத்தோடும்..

கண்களில் சிறு பரிதவிப்போடும்
காதலில் சிறு விதர்ப்பத்தோடும்.
வேடிக்கை பார்ப்போரின்..
பார்வைக்கு சிருதீனியாகவும்..

நேற்றுவரை பெய்யாத மழைக்கு..
ஒரு ஏக்கத்தோடும்..
கண்சிமிட்டலையே மறக்க
தூக்கம் துறந்த..இரவோடும்...
தேடிபிடித்து விரும்பியத்தை உண்டிருந்து..
தற்போது..பசித்தல் மறுத்து..

கவிதை எழுத பழகிய கைகளோடும்.. 
கண்ணீரில்லா கண்களோடும்
யார் காதல் வென்றாலும்
விழா எடுத்து கொண்டாடும்
மனோபாவத்தோடும் 

ஏதாவது ஒரு காதல்..
நீ இருக்கும் அந்த வீதியில்...
நிச்சயமாய்
குடியிருக்கும் நெடுநாளாய்..
--கார்த்திக் ராஜா..
 

காதலென...!


கண்களில் எழுதுகிறாய்
காதல் பொய் சொல்லுகிறாய்
வருகைக்காய் காத்திருப்பதாய்

காதில் பூ சூட்டுகிறாய்
ஏமாற ஆள் நானில்லை
பரிமாற்ற என்னிடமும் காதல்

மீதமில்லை அது ஒரு
விழியாளுக்கு சொந்தமாகி
அதோ ஒரு வீதியில்
வேடிக்கை பார்க்கிறார்களே
அங்கே அடிபட்டு சாககிடக்கிறது..!!

அதற்க்கு உயிர் கொடுக்க
இனி என்னிடத்தில் உதிரமில்லை..!

அவள் வீசி சென்ற புன்னகை
குத்தீட்டியாய் கோர்த்து
சென்ற பார்வைகள்-எல்லாம்
அந்த குப்பை தொட்டியில்
கிடக்கிறது பொருக்கி கொள்.

இனி என்னிடம் கவிதைகளுக்கு
மட்டும் தான் வேலை இருக்கிறது
பொய் முகவரியில் தொடங்கும்
எந்த காதலுக்கும் இடம் கொடுப்பதில்லை
நான்..

மின்னஞ்சல் பரிமாறலும் இல்லை
அரட்டையில் கேளிக்கையும் இல்லை
நான் நானாகவே இருக்க..

எனக்குபோதும் கவிதை ஒன்று!..



........ ˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·˙.........
ஜ۩۞۩ கார்த்திக் ராஜா ۩۞۩ஜ
..... •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.......
 

காதல் சொல்ல வந்தேன்

ஒரு பகல் ...
ஒரு மாலை..
ஒரு இரவு...
முகம் காட்ட மறுத்துவிட்டாய் !

மனதிற்குள் கலவரம்
நீ என்னைவெறுக்கின்றாயா?
நீ என்னைவிரும்புகிறாயா?

கேள்விகள் மனதை
தூக்கணாங் குருவி கூடு போல
காற்றில் அலைபாயச்செய்ய ..!!

அன்றுஇரவு முழுவதும்
விடியலுக்காகவே விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக விடிந்தது...!

மீண்டும் உன்முன் உதயமானேன்,
நீ என்னை உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!

சரிதான் என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை தோற்றுப் போனது !!?

உன்னிடமே கேட்டு விட
தீர்மானம் நிறைவேற்றிவிட்டேன்.

அன்றுஉனக்கு முன்னால்
நீ போகும் பாதையை
நான் ஆக்கிரமித்துக் கொண்டேன்.

அதோ வருகிறாய் உன் பெயரை
உச்சரித்தவுடன்

திசை மாறி திரும்பிப் பார்த்தாய்.
அப்போதும் நீ பேசவில்லை

உன் உதடுகள் தான் ஒரு
புன்னகை புரிந்துவிட்டு போனது.

அதில் என்னையே மறந்துப் போனேன்

என் காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?
எனக்கு ..! 

--கார்த்திக் ராஜா..!

தூசி தட்டுகிறேன் நினைவுகளை...


காணாதேசம்..
கடந்து வந்ததால்
பிரிந்துபோன காதல்
நினைத்தாலும்
பார்க்க முடியாத
பிரிதல்..!

அவளை மறந்து
காதலை துறந்து
கடல் கடந்த நிலவுகளாய்
இடம் பெயர்ந்த
பறவையாய் நான்..!

எந்த சூழ்நிலையிலும்
இனி இல்லை..!!
காதல் மீண்டும் எனும் போது
எதிர்பாரா திருப்பத்தில்
எதிர்படும் பழைய நண்பனை போல..!!

விழிசேரா நாளில்
வந்தது அவள் தொடர்பு..!!

மலர்வளையம் வைத்து விட்ட
என்-காதலுக்கு
மீண்டும்…யாரோ
சிலை திறப்பு செய்ததே போல்

கும்மாளமிட்டு
குதித்துகொண்டே
நான்..!

யாரேன தெரியாமல்
போய்விடுவாளென
எண்ணியிருந்தவனை
நேரென சந்தித்து
காதல் மொழிதீட்டினால்

சூழ்நிலை
கைதியானவனை
சாதனை செய்யென
சிறைவிடுத்தது போல்
சிந்தித்து..!
சிரித்தே
சிலாகித்தே..!
போனேன்..!!

எல்லோரும் வரவுக்காக
காத்திருக்கும்
இடங்களில் எல்லாம்
நான்
வராத உன் கனவுக்காக
விழித்திருந்திருக்கிறேன்..!

கண்களில்
சேர்த்திருந்த பழைய காதலை
மெல்ல பரணிலிருந்து
கீழிறக்கி தூசி தட்டினேன்..!!

*உனக்கான கனவை தட்டி செல்ல
எங்கிருந்தோ வந்த மழை மேகம்
கொட்டி செல்கிறது
என் மீது..!!*

*நிலா வராத நாட்களேல்லாம்
அகல் விளக்கை
நிலவாக கொள்வேணா என்ன!*

*நீ..!
இல்லாத நேரங்களில்
எல்லாம் என் கனவுகள்
உன்னையன்றி யாரை
சுற்றி.*.

இதுபோலான என்
குறுங்கவிதைகளெல்லாம்
கை கொட்டி சிரிக்கின்றது
என்னை பார்த்து...!

என்னடாகண்ணாளா!
மீண்டும் உன் கிறுக்கலுக்கு
சிறகு முளைத்துவிட்டதா என்ன-
என்று..!



:::::::::::கார்த்திக் ராஜா::::::::::::::