Saturday, February 26, 2011

அப்பா விட்டு சென்ற பழைய 
காலத்துஓட்டை காலணாவை..
நண்பர் ஒருவர் நாணய கண்காட்சிக்காக..
கேட்டார்...என தேடும் போது..
என் மகனின் உண்டியலை 
அது நிரப்பி இருந்தது...
எத்தனை கேட்டும் ஓயாத அழுகையால்..
அவ்வெண்ணத்தை கைவிட்டுவிட்டேன்...


பின்பு ஒரு நாள்..
தன் சோட்டுசிறுவர்களுடன்..
என் மகன் விளையாடும்போது ...
'இது எங்க தாத்தா சேர்த்து வைச்சிஇருந்தது..'
என பெருமை பொங்க...!சொல்லும்போது ..


என் தந்தைக்கும் என் மகனுக்குமான தலைமுறை 
இடைவெளி நிரப்பபடுகிறது ...சிறிதளவேனும்..


பழைய ஒரு ரூபாய் தாள்களை...
பத்திர படுத்துகிறேன் நான் ..
என் பேரனுக்காய்...

பிட்சை கேட்டு வந்தார்
கடவுள் பிச்சைகாரனாக...
போ என்று சொல்லிவிட்டேன்..
ஆனால்
போகும் வழியில்
கோவில் உண்டியல் பார்த்ததும்
அதில் போட்டேன் காணிக்கை
இறைவன் கேட்டது அங்கு ...
கொடுத்தது இங்கு ...
கடவுள் காணிக்கை கேட்கவில்லை
கருணை தான் கேட்கிறார்
இனியாவது.. 

யாதுமாகிலும் சிறு மாற்றம் 

செய்வோம்..


அவசரமாய் நான் எழுதிய கவிதைகளில் ...  
நீ
என் தோழியாய் இருந்தாய் ...
ஒரு பௌர்ணமி இரவில்
நீ இல்லாத தனிமையில்
படித்துவிட்டு அழுதேன் நீ என்..
காதலியாய் இருந்திருக்கிறாய்..
  • மீனவனை கைது செய்வான்
    மீட்டு தரவே கெஞ்ச வைப்பான்
    வலைகளையும் அறுத்து வைப்பான்
    வருத்தபட்டால் கழுத்தறுப்பான்
    படகினையும் எரித்திடுவான்
    பாவபட்டால் சிரித்திடுவான்
    கடலையும் கைது செய்வான்
    காட்டுமிராண்டியாய் கொலைசெய்வான்
    கடவுள் நானோ பொறுத்திருப்பேன்
    கடைசியாக சுனாமியாவேன் *
    சிங்களத்தை சீரழிப்பேன்
    சீக்கிரமாய் முடித்துவைப்பேன்

Friday, February 25, 2011

en_kaathalae.jpg
முதல் காதல்!!!

காலப்
பேராழியில்....
கலைந்து
போகிற
உலகம்!!!!

பிறந்தழிந்து
மீண்டும்
கருக்
கொள்கிறது....!!!!

இப்படி
எத்தனை
யுகங்களாய் ......???
தொடர்கிறது
இம்மாற்றம்...????

ஊழிப்
பெரு..
வெள்ளத்தில்....!!!
ஊஞ்சலாடும்
உலக
உயிர்களின்
நடுவில்....!!!

காதல்
தன்னை...
நிலைப்
படுத்திய...
தருணம்
எது?????

ஆகாயப்
பெரு வெளி
தன்...
அணுவளவு...
உயிர்ச்சத்தை...??

அண்டத்தில்
தெளித்தவுடன்
அது
பிண்டமாய்
உருமாற......!!!

பிண்டம்
பிராணனை
சேர்த்துக்
கொள்ள....!!!

பிறந்தது
முதல்
உயிர்...!!!!

உயிர்
என்னும்
ஜீவாத்த்மா...!!!.
இயங்க
ஒரு
கூடு
தேவைப் பட.....!!!!

பஞ்ச
பூதங்களின்
பகிர்வால்....!!!

உருவானது
உடல்
என்னும்
பரமாத்மா...!!!!

உயிரே
உடலானது...!!!
உடலே
உயிரானது...!!!

உடலும்
உயிரும்....
ஒன்றையொன்று....!!!!
ஈர்த்துக்
கொள்ள....
உண்டானது
முதல்
காதல்....!!!!சுகி ஈஸ்வர்(எனது நண்பனின் படைப்பு)
நிறைய இதயங்கள்
இங்கு தான் உறைகின்றன்
உலகின் தூரங்களை ஒரு
சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது
தொலைபேசி!

காதல் பேசியும்
அரசியல் தகவலறிவித்தும்
குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின்
ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது
தொலைபேசி!

கால வேகத்திற்கு
கையில் அடங்கி போய்
உலக விஸ்த்தாரிப்பை
ஒரு சொடுக்கலில் அறிவித்த்
மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும்
அலைபேசியென அர்த்தம் கொண்டுவிட்டதில் -
தொலைபேசிக்கே பெருமை!

மனிதா !

ஒவ்வொரு பூக்களுமே
விரும்புவதென்ன
தெரியுமா ?
கடவுளின் பாதத்தை
அடைய வேண்டும்
என்பதை விட ..
அழகியின் கூந்தலை
அலங்கரிக்க வேண்டும்
என்பதை விட ..
சிறந்த ராணுவ வீரனின்
சவத்தை அணைப்பதே !
பூக்களுக்கே
நாட்டின் மீதும்
நாட்டிற்காக உயிரிழந்த
வீரனின் மீதும்
இவ்வளவு காதல்!
உனக்கேன் இல்லை ?

இரை தேடும் புறாக்களோ
சமாதான சின்னம்
என மார் தட்டி
செல்கிறது !
நீயோ ?
தீவிரவாதத்திற்கு தலை நிமிர்ந்து
நிற்கிராய் !


உன் குருதியை
நம் தேசிய கொடிக்கு
வண்ணமாக
தர வேண்டாம் ..
உன் நரம்புகளை
நம் தேசிய கொடி
பறக்க கயிராக
தர வேண்டாம் ..
உன் எலும்புகளை
நம் தேசிய கொடி
பறக்கும் கம்பமாக
தர வேண்டாம் ..
ஆனால் ஏன்
அப்பாவி மக்கள்
ரத்தத்தை
தீவிரவாத செயல் கொண்டு
தேசிய கொடியை கரை
செய்கிறாய் !

மறக்க முடியுமா?
மும்பை சம்பவம்?
உணவருந்த வந்தவர்களின்
உயிரை குடித்தது யார்?
உல்லாசமாக வந்த
வெளி நாட்டு பயணிகளை
கைலாசதிற்கு அனுப்பியது
யார்?
பலரையும் வரவேற்கும்
நம் நாட்டை
அவர்களுக்கு
சுடுகாடாக
மாற்றியது யார் ?

மனிதா!யோசித்து பார் !
தெருவில் ஒரு
சிலையை கூட
நிம்மதியாக
இருக்க விட மாட்டாயா ?
அதன் மீதும்
உன் தீவிர வாதம்
நடனம் ஆடும் !

மனிதா !
நீ மகாத்மா ஆக வேண்டாம் ..
மனிதனாகவாவது இரு ..
தீவிரவாதம் எதற்கு ?
வாதம் வேண்டாம்!
தீவிரவாதமும் வேண்டாம்!



ஜெய் ஹிந்த் !
வந்தே மாதரம் !

கவனமாக இருங்கள்....

தேர்தல் நேரம் இது
பஜனை மாறும் நேரம் இது
நமப் பார்வதி பதே என்றவர்கள்
ஓம் நமோ நாராயணா என்பார்கள்
ஓம் நமோ நாராயணாஎன்றவர்கள்
நமப் பார்வதி பதே என்பார்கள்
அவரா இவர் ?இவரா அவர் ?
வியப்பில் ஆழ்த்துவார்கள்
உத்தமபுத்திரன் என்பார்கள்
யோக்கியன் என்பார்கள்
ஊருக்காகவே வாழ்பவன் என்பார்கள்
தியாகத்தின் சின்னம் என்பார்கள்
கேழ்வரகில் நெய் என்பார்கள்
கவனமாக இருங்கள்....

புலிகளின் போர் முடிந்ததா?
இல்லை!
புலிகள் ஒடுக்கப்பட்டனரா
இல்லை!
இன்னும் எங்கள் ஈழம்
மீட்கப்படவில்லை!
தலைவன் இருந்தால்
ஒரு பிரபாகரன்

இல்லை  என்றால் தமிழர் ஒவ்வொருவரும் பிரபாகரன்!

இது என் நண்பனின் காதளுக்குகாக எழுதியது,

காதல் எனும் சோலையில் பூத்த புதிய மலரே
காலன் வந்து என்னை தூக்கிச் சென்றாலும்
என்னை தீயிலிட்டு வருத்தாலும்
என் நினைவில் எழுதப்பட்ட உன் பெயர் அழியாது

மூச்சின் கற்று விண்ணுலகை நோக்கி பயணிக்கும் போதும்
உன் பெயர் கொண்ட சொல் அழியாது

இனிமையான மொழியாம் என் தாய் மொழி தமிழ் -அதில்
ஆயிரம் சொற்கள் கொட்டி கிடக்க -அதில் மூன்று சொற்கள் மட்டும்
என் நாவில் வளம் வருவது ஏன்

மூன்று வார்த்தை கொண்ட மொழியாம் மௌனம் -அதில்
உலகம் அடங்கும் -மூன்று வார்த்தை கொண்ட பெயராம் அதில்
என் உயிர் அடக்கம்

உன் இனிமையான பெயரை கேட்ட இந்த செவிகளுக்கு -
வேறு பெயர் கேட்பதற்கு கசக்கிறது

அடி பெண்ணே கேள் !
நீ இல்லாத ஒரு உலகம் என் கனவிலும் கொல்லாது
உன் பெயரில்லாத என் பெயர் எந்த கல்லறையிலும் இருக்காது

பெயர் சொல்லாத ஒருவனை கடவுள் என்பேன்
பெயர் சூடிய உன்னை பிரியா என்பேன்

நிற்காமல் ஓடும் வாழ்க்கை பேருந்தில் , அவசரஅவசரமாக, இறங்கும் வழியில் ஏறிவிட்டு...ஏறும் வழியில் இறங்க வழி தெரியாமல் தவிக்கும்
அறிவு ஜீவிகளில் நானும் ஒருவன்...!!!


எப்பொழுதாவது
சொந்த ஊருக்கு சென்றால்
என்னிடம் சொல்வதற்காக
நிறைய கதைகளை
வைத்திருக்கிறது
ஊர்

ஊரிடம் சொல்ல
என்னிடம் இருப்பதெல்லாம்
ஊரைப் பிரிந்த
கதைகள் மட்டுமே..............!!!!!!

என்றோ கருவாகி,
அன்னையின் அளவற்ற
பாசத்தால் உயிர் பெற்று,
ஏதுமறியா வயதில்
துள்ளிக்குதிக்கும் இளவட்டமாய்
பள்ளிப் படியேறி,
உற்ற தோழனாய்
என் இதயத்தில் குடியேறிய,
என் உயிர் நண்பனின்
நட்பிற்கு தலை வணங்குகிறேன்...........
வாழ்க நட்பு....
வளர்க அதன் புகழ்.....!!!!!


நாம் கடைசியாக சந்தித்து பேசிய அந்த மரத்தடிக்கு போயிருந்தேன் பாவம் என்னைப்போல் நீ இல்லாமல் அதுவும் காய்ந்து தனியாகத்தான் காணப்பட்டது ....

அந்த மரத்தடியில் சாய்ந்து நானும் நீயும் பேசியது செல்ல செல்ல சண்டை போட்டது நீ கேட்டதை தரவில்லை என்பதற்காக என்னுடன் கோப பட்டது உன் கோபத்தை போக்க உன்னை சிரிக்க வைக்க நான் பட்ட பாடுகள் என்று இன்னும் எல்லாமே மனதில் ஓடிக்கொண்டே இருக்குதடா ....

மரத்தின் வலியை பொருட்படுத்தாமல் அதில் நமது பெயரை நீ அழகாய் எழுதியது இன்னமும் அழகாய் தெரிகிறது ....

ஒரு இதயம் அதன் ஒரு முனையில் உனது பெயர் மறு முனையில் எனது பெயர் ....

நாம் பிரிந்து விடுவோம் என்பதை முன் கூட்டியே தெரிந்து தான் இடை வெளியுடன் உனது பெயரையும் எனது பெயரையும் சேர்க்காமலே பிரித்து எழுதினாயா ....

மரத்தின் நிழல்களில் அமர்ந்து நாம் மணிக்கணக்கில் நம் உள்ளங்களையும் ஏக்கங்களையும் பகிர்ந்து கொண்டோமே ஏனடா என்னை புரிந்துக்கொள்ளாமல் தனியே விட்டு சென்றாய் ....

இப்போது இலையுதிர் காலமா என்று எனக்கு தெரிய வில்லை ஆனால் என் புலம்பல்களால் மரத்தின் இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கிறது ....

நீ என் அருகில் இருந்த நாட்களில் இந்த மரத்தின் இலைகளில் உனக்கு கவிதை எழுதி சமர்பித்தேன்
ஆனால் என் கவிதைகளையும் என் காதலையும் பொய்யாக்கி போவாய் என்பது எனக்கு அப்போது தெரியாதுடா ....

அன்புள்ள கண்ணாலனே இப்போதும் அதே மரத்தடியில் இருந்து என் புலம்பல்களை எழுதுகிறேன் என் புலம்பல்கள் மக்கிப்போவது இல்லையடா ....


நான் மக்கிப்போனாலும் நாம் வாழ்ந்த இந்த மரத்தடியிலேயே என் உயிர் உரமாய் போகுமடா ....

Wednesday, February 16, 2011

kannieerill eluthiyathu...

கண்ணில் மழையை தூவினாய்..
துடைக்க கரங்கள் இருந்தும் ...
இயலாமல் கிடக்கிறேன்..
நீ..
நிற்பதோ என் கல்லறையின் முன்பாக...