Friday, February 25, 2011

மனிதா !

ஒவ்வொரு பூக்களுமே
விரும்புவதென்ன
தெரியுமா ?
கடவுளின் பாதத்தை
அடைய வேண்டும்
என்பதை விட ..
அழகியின் கூந்தலை
அலங்கரிக்க வேண்டும்
என்பதை விட ..
சிறந்த ராணுவ வீரனின்
சவத்தை அணைப்பதே !
பூக்களுக்கே
நாட்டின் மீதும்
நாட்டிற்காக உயிரிழந்த
வீரனின் மீதும்
இவ்வளவு காதல்!
உனக்கேன் இல்லை ?

இரை தேடும் புறாக்களோ
சமாதான சின்னம்
என மார் தட்டி
செல்கிறது !
நீயோ ?
தீவிரவாதத்திற்கு தலை நிமிர்ந்து
நிற்கிராய் !


உன் குருதியை
நம் தேசிய கொடிக்கு
வண்ணமாக
தர வேண்டாம் ..
உன் நரம்புகளை
நம் தேசிய கொடி
பறக்க கயிராக
தர வேண்டாம் ..
உன் எலும்புகளை
நம் தேசிய கொடி
பறக்கும் கம்பமாக
தர வேண்டாம் ..
ஆனால் ஏன்
அப்பாவி மக்கள்
ரத்தத்தை
தீவிரவாத செயல் கொண்டு
தேசிய கொடியை கரை
செய்கிறாய் !

மறக்க முடியுமா?
மும்பை சம்பவம்?
உணவருந்த வந்தவர்களின்
உயிரை குடித்தது யார்?
உல்லாசமாக வந்த
வெளி நாட்டு பயணிகளை
கைலாசதிற்கு அனுப்பியது
யார்?
பலரையும் வரவேற்கும்
நம் நாட்டை
அவர்களுக்கு
சுடுகாடாக
மாற்றியது யார் ?

மனிதா!யோசித்து பார் !
தெருவில் ஒரு
சிலையை கூட
நிம்மதியாக
இருக்க விட மாட்டாயா ?
அதன் மீதும்
உன் தீவிர வாதம்
நடனம் ஆடும் !

மனிதா !
நீ மகாத்மா ஆக வேண்டாம் ..
மனிதனாகவாவது இரு ..
தீவிரவாதம் எதற்கு ?
வாதம் வேண்டாம்!
தீவிரவாதமும் வேண்டாம்!



ஜெய் ஹிந்த் !
வந்தே மாதரம் !

No comments: