Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Saturday, October 29, 2011

இன்று புதிதாய் பிறந்தேன்!




தினம் சூரியன் தேடி
சிறகு கிழிய பறக்கும்
சிறுபறவை நான்
வெறுப்பாய் அல்ல..
நெருப்பாய்..! என் தேடல்

காலை உதித்திடும்
பகலவன் கண்டே
படபடக்கும் மனம்
அலையாய் குதிக்கும் கடல்
கடந்த பாதைக்கு அங்கே
துண்டு விரித்தாற்போல்
நிலமாய் !!!

எனக்கோர்.பயணம்
மிச்சமிருக்கிரதாய்
தினமும் தொடர்கிறேன்
அந்த பயணத்தை..!!!

மாலைவரை..கடந்து
மலை ஒன்றை அடைந்து
வேனில் வெயில் தாங்கி
கிளை அமரும் வரை என் சிறகு
ஒயப்போவதே இல்லை..!!!

ஓய்விற்கும்..அங்கே நிழல்
தர ஆளில்லை..
தாகம் தீர்பதும் இல்லை
எதையும் நினையாது
கடுமையாய் ஒரு பயணம்..!!

எதை தேடி அலைகிறேன்
எதை கொணர்ந்து போகப்போகிறேன்
இதோ தொட்டு விடும் தூரத்தில்
தான் சூரியன் என்றே
என் காலை விடிகிறது..

வேடர்களின் பார்வைக்கு
நான் விருந்தாய்..
மூடர்களின் பேச்சுக்கு
நான் கொழுந்தாய்..
எதையும் முதுகிலோ
மூளையிலோ ஏற்றி கொள்ளாமல்
மேற்கொள்கிறேன் என் பயணத்தை...!!!

அதோ வாழ்வென்னும் சூரிய கதிர்கள்
கரம் நீட்டி அழைக்கிறது என்னை..!!!

என் சிறகில் வலு உள்ளவரை
ஒவ்வொரு நிமிடத்தையும்
வாழ்கிறேன் எனக்காக மட்டும்
சில தேடுதல்களோடே..

ஆம்.! வாழ்ந்தேன் வீழ்ந்தேன்
என்றாகாமல் போகவாவது
நான் சிறகை அசைக்கிறேன்!

இதோ நெருங்கி விட்டது
என் வானம்! வெளிச்சமாய்...

........ ˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·˙.........
ஜ۩۞۩ கார்த்திக் ராஜா ۩۞۩ஜ
..... •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.......
 —