Showing posts with label கடல் ரசிகன்.... Show all posts
Showing posts with label கடல் ரசிகன்.... Show all posts

Sunday, November 20, 2011

நினைவுகள் தாங்கிய நதிக்கரையில்....







நம் சந்திப்பு பொழுதுகளின்
இறுதியில்..
விடைபெற்று நீ சென்றதும்

அடுத்த ஐந்தாறு நிமிடத்தில் 
அழைத்து எங்கே இருக்கிறாய் 
என்கிறாய் ..!

*உன் மனதில் தான் என 
சொல்ல வார்த்தை முட்டும் 
எனக்கு..
அந்த நிமிடம்....!

^^^^^^^^^^
அன்றொரு கடற்கரை 
சந்திப்பில் 
உன்னை அருகில் 
வைத்துகொண்டே 
அலைகள் ரசித்திருந்தவனிடம் 
சரி வா கிளம்பலாமென்றதும் 

அத்தனை ரசனையையும் 
உதறிவிட்டு இன்னும் 
கொஞ்ச நேரம்
எனக் கெஞ்சி நிற்கிறேன் 
உன்னிடம்
அந்த நிமிடம்..!
^^^^^^^^^^

ஒரு மதிய பொழுதினில்.
"பசிக்குது சாப்பிடலாமா ?"
என்று கேட்டால்
"எனக்குப் பசிக்க வில்லை 
என்கிறேன்.
ஏன் ? எனக்காரணம் கேட்டாய்

பார்வையாலே உனை 
மென்று கொண்டிருக்கிறேன் 
இனி எப்படி பசிக்கும் 
என்றதும்,  செல்லமாய் அடிக்க கை 
ஓங்கினாய் அந்த நிமிடம்.

^^^^^^^^^^^

இப்படி தெளிந்த என் வானத்தில் 
என் காதல் பூப்பூத்தது 
மழை நீரில்லாமலே ..!
இன்று நதிக்கரையோரம் 
வட்டக்கல் வீசி 
தனித்து நிற்கிறேன் 
நீயில்லாமலே..! 

அந்த நிமிட நினைவுகள் எல்லாம் 
இன்று என் சில பல 
மணி நேரங்களை 
ஆக்கிரமித்துக்கொள்கிறது 
முழுவதுமாய் ..!

கல் விழுந்த இடம் சுற்றி 
அலை அலையாய் உன் நினைவுகள்..

எழுத்துப்பிழைக்காரன்... 
-கார்த்திக் ராஜா.. 


Saturday, October 29, 2011

கடல் ரசிக்க கற்றுக்கொள்கிறேன்....



காற்றோட்டமாக..

கடற்கரையைக்

கால்கள் கடந்த ஒரு நாளில்

தற்செயலாகக் கவனித்தேன்

கடலோடு பேசிக்கொண்டிருந்தான்.ஒரு சிறுவன்....



தூரத்தில் அவன் நண்பர்களாய் அறியபட்டவர்கள்..

வானெங்கும் பட்டங்களை பறக்க விட்டுகொண்டிருக்க

நிறமாயிருந்த பட்டங்கள்

திக்கற்றுத் திரிந்தன...







சிறுவனின் வார்த்தைகளைப் போல


மெல்ல மெல்லஆர்பரித்துக்கொண்டிருந்த கடல்


பின் மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கியது.





அவன் தன் வீட்டுத் தோட்டத்தில்



நேற்று நட்டு வைத்து



இன்னும் வளரத் தொடங்கியிராத



ரோஜாசெடியயை பற்றி



அவன் கடலிடம் சொல்லத் தொடங்கியபோது



கரையெங்கும் ரோஜாவின் வாசம்..எனக்கு





அவன் அம்மா அவனை போனமாதம் அடித்ததாய்



குற்றச்சாட்டு ஒன்றை எடுத்து சொல்லும் அத்தியாயத்தில்



நூலறுந்து..வால் பிறண்டு..



தலைகுத்திக் கீழே விழுந்துகொண்டிருந்தது ஒரு பட்டம்..





மெல்ல இருட்டத் தொடங்கி வானில் நட்சத்திரங்கள் தோன்றின..



நான் இன்னும் அந்த கடல் சிறுவனை வேடிக்கை பார்ப்பவனாய்..





அவன் தன் கையிலிருந்த அந்த சிவப்பு பொம்மைக்கு நட்சத்திரங்களைக்



காட்டினான்..



தன் செல்ல பூணைகுட்டிக்கு சில முத்தங்களைக் கொடுத்தனுப்பினான்.





கரையோரம் இருந்த பாறைகளின்..இடுக்குகளையெல்லாம்



தன் மழழையால் நிரப்பிக் கொண்டிருந்தான்..





கடல் தன்னை மறந்து



அவனோடு மானசீகமாகப் பேசிக்கொண்டிருக்க





அலைந்துகொண்டிருக்கும் கடலின்



கரையில் கிடக்கும்..கிளிஞ்சலாக



மாறி கடலை ரசிக்க கற்றுக்கொண்டேன் அவனிடம் நான்.





::::::::கார்த்திக் ராஜா::::::