Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts
Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts

Sunday, January 1, 2012

BSNL விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதி


BSNL

BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதியை இணையத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் கொடுத்துள்ள ஆயிரக்கணக்கான எண்களில் இருந்து நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே இது ரொம்ப அருமையான சேவை. எண்ணை பதிய விரும்புவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை (லிங்க்) க்ளிக் செய்து பயன்பெறலாம்.

http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp – Chennai Cirlce


http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp – Tamilnadu Circle

Sunday, November 13, 2011

108- நூற்றி எட்டு



108 சேவை

இன்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தி இது.



108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.

ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான். 

இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: ஹிந்து நாளிதழ்

Saturday, November 12, 2011

கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம் ----??


"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை வடிவினை காண்போம்.சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் பயன்படுத்தினார்கள்.

அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.அந்தபுல்லு
கற்பூரபுல்லு,கோரைப்புல்லு என இரு வகைப்படும்.கோரைபுல்லுக்கு கழுஎன்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும்.கற்பூர பாயின் விலை அதிகம் பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.


கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும்.இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "
கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை"கழுஎன்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க,கழுதைக்கஎன்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.


அதன்உண்மையான அர்த்தம் "
கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆகி விட்டது.