Showing posts with label கவிதைக்காரன். Show all posts
Showing posts with label கவிதைக்காரன். Show all posts

Sunday, December 8, 2013

ரௌத்திரம்

சப்தமிடாத ஓர் ஊமை மௌனம்... உள்ளிருந்து எண்ணங்களை உருட்டும்..

போதிமரம் தேடிச்செல்லும் ஞானவாக்குகள் குப்பைத்தொட்டியெங்கும் இரைந்து கிடக்கும்

வேற்றுகிரகம் போலே சுற்றியிருக்கும் தொடர்பில்லாத மனிதனை தற்செயலாயேனும் கவனிக்கத் தோன்றும்

அடுத்தது என்னவென்ற கேள்விகள் தாகத்தைக் கொடுக்ககாலிக்
குடுவைகள் எக்காளமாய்ச் சிரிக்கும்.

கவனமாயிறுவென்னும் கருணைப்பட்டோர் வாக்குகள் போலானதோர் பசி தீர்க்கும் மந்திரம் வேறில்லை...

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

இச்செகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

பாரதி மெல்ல மெல்ல உள்ளிருந்து ரௌத்திரம் விதைக்கிறான்.. கூச்சலிட்டமனம் அமைதிப்பட்ட குளமாகுது!

அதன் கள்ள மவுனத்துக்கடியில் ஏதுகுடியிருக்குதென்று யாரறிவார்.

-கவிதைக்காரன்.

Friday, October 25, 2013

எண்ணங்களை எழுதுகிறேன்


பொழுதுகள் மிகச்சீக்கிரமாய் விடிதலை.. எதிர்கொள்கின்றன..
அல்லது நகரத்தின். வேகத்தில் நம்மை திணித்துச் சமன்படுத்திக் கொள்ள நாம் வேகமாகச் சுழல்கின்றோம் எனவும் கொள்ளலாமோ...


ஊரிலிருக்கும் போது... அரிதாக சில நேரம் பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பேன்... சீக்கிரம் எழுந்துவிட்டால்... இன்னுமா தூக்கமென்று போர்வையோடு தண்ணீரை ஊற்றிப் போகும் அக்காளைச் சபித்தது போல் அவை என்னைச் சபிப்பதில்லை... செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது ஒரு கலை...
அது ஒரு தியானம் போன்றது அந்த நிமிடங்களில் அவைகளோடு அளவளாவிக் கிடைக்கும் மகிழ்வை எழுத்தில் கொண்டுவருவது சவால் தான்.
இதுவெல்லாம் சிலகாலம் முன்புதான்... அதற்கும் முன்பற்றி சிந்தித்தால்...
நினைவு நதி ஈரமாய்ச் சிலிர்க்கத்தொடங்குகிறது...
அதிகாலைக்கும். நமக்குமான உறவுநம் வயதையொத்ததல்லவா... அதுவும் பால்யங்களை விட பதின்மங்கள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகாலையில் தான் அர்ச்சனைகளோடு தொடங்கும்..


பள்ளிக்கூட வயதில்.. நான்கரை மணிக்கு விடியும் எனக்கு உறக்கத்தை கொன்றுவிட்டு, எழுந்து முகவாய் கழுவிவிட்டு சைக்கிளை மிதித்துபரபரப்பாய் பாளையங்கோட்டையிலிருந்து பெருமாள் புரம் வரைக்கும் போய்

வண்ணதாசனோ,வண்ணநிலவனோ சரியாய் நினைவில்லை... அந்த எழுத்தாளர் வீட்டருகே. உள்ள ஜேசு. அண்ணன் வீட்டில் தயாராகின சமோசாக்களை பெட்டியில் அடுக்கிக்கொண்டு... வேய்ந்தான் குளாத்திலிருந்து வேலைக்கு ஆயத்தமாகும்..

சில நாள் பாதித்தூக்கத்தில் சைக்கிள் மிதித்து பாளையங்கோட்டை மத்தியச்சிறை முன்னே இருக்கும் பேரூந்துநிறுத்தத்தில் பத்துநிமிடம் படுத்து எழுந்தோடுவேன்...

அப்போதெல்லாம் புதிய பேரூந்துநிலையம் கட்டி முடித்திருக்கவில்லை...
அங்கிருந்து அதே பரபரப்போடு பாளையங்கோட்டை வீதிகளின் தேநீர்விடுதிகள் ஒவ்வொன்றிலும் சரக்குக் கொடுத்துவிட்டுமார்கெட், கே.டி.சி. நகர், வி.மு சத்திரம் , பாளை டவர், வண்ணாரப்பேட்டை வந்து பெட்டிகாலியாகவும் வன்ணாரப்பேட்டை வாங்கு ஊதவும் சரியாய் எட்டு மணியாகிவிடும்...

திரும்ப வீட்டுக்கு வந்து அடித்துபிடித்து பள்ளிக்கூடத்திற்கு ஓடிப்போய். .. லேட்டானதிற்கு பி.டி-யிடம் பிரம்படிவாங்கி ... பாடம் படித்து கொஞ்சம் பால்ராஜின் உதவியால் வாத்தியாருக்குத் தெரியாமல் பெஞ்சுக்கிடையில் குட்டித்தூக்கம் போட்டு மதியம் பலவீட்டுவிருந்துண்டு பள்ளிக்கூடம் விட்டதும் காலையில் கொடுத்த சரக்கிற்கு மாலை பணம் வசூலித்த பெருமாள் புரத்து ஜேசுதாஸ் அண்ணன் வீட்டுக்குப் போய். கணக்குக் கொடுத்தால் இருபத்து ஐந்துரூபாய் கொடுப்பார்... அது அந்த ஒருநாளின் உழைப்பின் சம்பாத்தியம்...

அத்தனை பர பரப்புக்கிடையில் உழன்று கிடைத்த ஊதியத்தை சட்டைப் பையில் சுமந்து அம்மாவிடம் கொடுக்கும் போது கிடைக்கும் ஒரு பெருங்கத்தையான சந்தோசத்தை..

இதோ இன்னும் இரண்டொரு நாளில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஏ.டி.எம் இயந்திரத்தின் வாசலில் வரிசையில் நின்று தேய்த்து எடுக்கும் ஊதியப்பணத்தில் நிச்சயமாய் பெறமுடிவதில்லை... பெரும் இடைவெளி ஏதேனும் விழுந்திருக்கலாம்... காலம் புரட்டிவிளையாடும் போது பந்துகள் தான் என்ன செய்யும்... நினைவு நதி குளிர் உதிர்க்கின்றது...

*******


நேரம் போனதே தெரியவில்லை...

சமீபமாய் பால்ராஜைச் சந்தித்தேன் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் மனைவியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். ஆண்டிநாடார் பாத்திரக்கடை முன்னே முண்டிக்கொண்டிருந்த கூட்டத்தில் அடையாளம்கண்டு கொண்டோம்.

புதுமாப்பிள்ளைக் களை கழுத்தில் மின்னியது... நலம் விசாரித்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாய் கலந்துவிட்டான்.

ஜேசுதாஸ் அண்ணனைப் பார்க்கத் தோன்றியது. போயிருந்தேன், எம்.எச் ஜுவல்லரிஸில் கொடுத்த கைப்பையைச் சுமந்தபடி நிலம் விற்றுக் கொண்டிருக்கிறார். ரெட்டியார்பட்டிக்கு கிழக்கே ரெண்டரை செண்ட் வாங்கிப்போடு இப்போ குறைஞ்சவிலைதான். கிரையம் நானே முன்னயிருந்து முடிச்சுத்தாரேன்னு அவர்பாட்டுக்கு பேசினார்.... எனக்கு இருபத்தைந்து ரூபாயை இடதுகையால் அவர் கொடுக்கும் லாவகம் கற்பனையில் ஓடிக்கொண்டிருந்தது...

******

பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் யாரோ தொட்டியில் ரோஜா வளர்த்திரிக்கிறார்கள்... அது மென்மையாய் என்னை நோக்கிப் புன்னகைக்கின்றது...

தண்ணீர் ஊற்றுவானேனென்று மனம் பரபரக்கின்றது...

பெரிய சைக்கிள் மிதித்தது தினத்தந்தியை வீசிப் போகும் சிறுவனை எங்கோ பார்த்தது போல் இருக்கின்றது.. அது நானாக இருப்பது வாய்ப்பில்லை...


கருப்புவண்ணத்தில் நிக்கல் நிறமிட்ட கடிகாரம் தனக்கான பணியை ஒலியெழுப்பி கூவுகிறது.வண்ணாரப்பேட்டை வீதிகளின் பரபரப்புஎன்னைத் தொற்றிக்கொள்கிறது....

வாருங்களேன் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அதிகாலை சென்னையின் மிச்சங்களை நுகர்வோம்...

- கவிதைக்காரன்.

Saturday, May 26, 2012

அது ஒரு அழகிய ஹைக்கூ.... காலம்! [ மகிழம்பூII ]



***உறங்கிக்கொண்டிருந்தஏரியின்உறக்கத்தை கெடுத்ததுஒற்றை நீர்குமிழ்.
***
தூண்டில்காரனின்தக்கை மேலேதும்பி அமரும்நேரம் ஹைகூவானது...
***
பிரசவம் இலவசம்ஆட்டோவில்இருக்கு ஆஸ்பத்திரியில்இருக்கவேண்டியது..
***
அரளிச்செடிக்குபூ-பூத்த மகிழ்ச்சிபிள்ளை பெற்றெடுத்தாள்மலடி..த்தாய்..
***
வேதம் ஓதும்சாத்தான்கள்கள்ளுக்கடையில்மதுகேடு வாசகம்.
***
மழை கொட்டியதுவிற்ற நிலத்தை நினைத்துவிம்முகின்றான்விவசாயி
***
மழலை சொன்னதெல்லாம்புரிந்ததாய் சிரிக்கிறான்நான் அவன் சிரிப்பதுபுரியாமல் ஏதேதோசொல்கிறேன்
***
கட்டப்பட்ட கண்களோடுதராசின் அடியில் புளிஒட்டப்பட்டதை அறியாநீதிதேவதை...
***
கோடையில்வீதிக்கு வீதிகுயவனின் கைவண்ணம்மண்பாண்டதண்ணீர்பந்தல்..
***
நள்ளிரவுநாய்கள் ஊமையாய்போனால் பகலில்பூட்டை உடைத்ததாய்ஒப்பாரிவைத்திருக்கும்மனிதர்கள்.
***
லெவல்கிராஸிங்கில்எப்போது இரயில்போகுமென தந்தைஎப்போது இரயில்வருமென பிள்ளை
***
கிளைவெட்ட வெட்ட தளிர்க்குதுமரம். துணைவெட்டியதால்உலருது மனிதம்இளம்விதவை
***
நானும் நீயும்நடந்த பாதைசிறு மௌனத்தின் போதும்விளையாடிக்கொண்டணநிழல்கள்
***
மனிதன் மனிதனாய் வாழஎழுதிய மத நூல்கள்குப்பையில் கிடக்கின்றனமதம் சொல்லி...

***
சற்றொரு நிமிடம்இடறி விழுந்தேன்என் காலுக்கு அடியில்வானம்
***

பறந்துவிடாமல் நீயிறுபிடித்துவிடாமல் -நான்இரசிக்கிறேன்வேண்டுகோள்வண்ணத்துபூச்சிக்கு..

***
யானைக்கும் சிறகுமுளைக்குதுகுறும்புசெய்யும்சிறுவ்னை சுமந்துநடக்கும் போது

***

இதுவரை எந்தகவிதையும்எந்த கவிஞனையும்சமாதானப்படுத்தி இருக்கமுடியாது.- இருந்தால்எழுத்துகள் எப்போதோஅழிந்திருக்கும்

***
விலையேறியேப்போவதால்மொத்த தங்கமும் பாதுகாப்பாய்சில வங்கியில்பல அடகுகடையில்

***
மழையில்நனைந்த குடைஜலதோஷம் பிடிக்குமெனஉலரவைக்கும்சிறுமி

***
ஜாதி மதபேதமில்லைகாகக்கூட்டில்குயிலின் முட்டை

***எரியும் மனதைஅணைக்கும்கண்ணீர்

***

வேலிகாக்க கூலிபயிரை மேய்வது

***
துப்பாக்கிக்கு ரவைவாங்கிய தேசத்தில்பசித்தவனுக்கு கஞ்சியில்லைசோமாலியா

***
’விடுதலை’புத்தகம் எழுதுகிறார்சிறைக்குள்ளிருந்து..

***
வாசகனுக்குவிருந்து வைக்கபட்டினியாகத்துணிபவன்படைப்பாளி!!!

***
பம்மிகொண்டேபோகும் அம்மாவின்அழுகைக்குரலுக்குபதில் தேடியேதேய்த்துப்போகும்சீனத்து டெலிபோன்கார்டுகள்

***

விமானப்பணிப்பெண்ணும்வீட்டுவேலைக்காரியும்ஒன்றாகத் தெரிவதில்லைபலபணக்கார கண்களுக்கு

***
சாவிகளைதொலைத்தவர் பட்டியலில்எப்படியும் இடம்பெற்றிருக்கும்ஒவ்வொருவர் பெயரும்

***
கோவிலுக்குபடியளக்கிறான் பக்தன்கடவுளிடம் பிரார்த்தனையில்லட்சம் செய்தேன் கோடி கொடு

***
அறிமுக நாயகனகவேஅடையாளம் தெரியாமல்போன கோடம்பாக்கத்துவரவுகள்

***
மருந்து வாங்ககாசில்லையெனவிஷம் வாங்கும்பேரறிவாளிவாக்காளன்
***
கனவுகண்டுக்கொண்டேதூங்கிவிடுகிறேன்தூங்கிகொண்டே கனவும்கண்டுவிடுகிறேன்மிச்சமாய் பலிக்காத கனவுகள்

***
குப்பையில் எறியப்பட்டகாகித நெரிசலில்கவனிக்கப் படாதபாதி எழுதிய கவிதைகள்

***
எழுத்துபிழைகளைஅடையாளம் காண்போருக்குகவிதை படித்தஅனுபவம்.மற்றவருக்கு கருத்தைரசித்த அனுபவம்
***
முடிக்கவே மனமில்லாமல்எழுதிகொண்டேபோவதால்ஹைக்’’கூ-வென்றானதோ?!

***-கார்த்திக் ராஜா

Thursday, May 3, 2012

மாலை நேரம் .... மனதின் ஓரம்,,, வந்தாள் தோழி..




மாலை நேரம் மனம் அமைதி வேண்டி
கொஞ்சம் வீட்டுத்தோட்டத்துப் பக்கம் 
எட்டிப்பார்த்தது மனம்...

நேற்றைய கவலை மூட்டையின்
முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதால்
அச்சுமைகள் கொஞ்சம் மனதை
இறுக்கிக்கிடக்க..

எதேச்சையாய் கைப்பேசித்திரையில்
தோழியவள் பெயர் மின்ன
தூரல் ஏறியது என் வானம்...

அழைப்பை எடுத்து நலம் விசாரித்து
நாட்களின் இடைவெளியை வார்த்தைகளில்
பகிர்ந்தது மனதை இறகாகப்
பறக்கச்செய்கிறது...

ஏனோ அதுவரை அலைபாய்ந்த மனது
அவளின் பேச்சினால் திசைமாறிப்போனது
வழக்கமாய் இருவரும் பரஸ்பரம் நிகழ்வுகளைப்
பறிமாறிக்கொள்வோம்... இன்று..

நான் வளர்க்கும் நாய்க்குட்டியின்
வளர்ச்சியையும் , மீன்களின் செல்லப்
பெயர்களையும், என் தோட்டத்தின் மரங்களையும் 
மலர்ச்செடிகளையும் அம்மா விதைத்த
கீரைச்செடிகளையும்... பற்றி கலந்துரைடாடும் போது

கொஞ்சம் கிணற்றுப்பக்கம் சென்ற போது 
குதித்துக்குளிக்கும் ஆசை என்னை ஆட்டுவிக்க 
பேச்சைத் துண்டித்து நீருக்குள் மூழ்கினேன்..

இயற்கையும் தோழமையும் என்னுள்
இருந்த அத்தனைக்கவலைகளையும் 
மூழ்கடித்தே போனதை நினைத்து 
சிலிர்த்தேன்... 

அவள் என்மீது கோபித்திருப்பாளா தெரியாது... 
இடையிலே துண்டித்தேனென.. 
ஆனால் அதையே அவளிடம்
நான் எதிர்ப்பார்க்கிறேன்...

நாளை சண்டையிடுவதற்காய்
அழைப்பாளென...!

-கவிதைக்காரன் 

Tuesday, March 20, 2012

ஆரெனின் கண்டால் சொல்வீர்...



 



செம்பொட்டு புலரும் காலை நிதம்
வானில் பறந்து பாங்காய்..

சிலிர்க்கும் சிட்டே கொஞ்சம்
கேளென் இசைக்கும் நெஞ்சம்...

பெட்டைக்குருவி உன்னை
பேணமறந்து போனோம்..!

முற்றும் அழிந்த பின்னே
இங்கே நினைவுநாளா விளக்குகின்றோம்..

அலைகற்றை எழுப்பும் தாக்கம்
சிதைந்ததெம் மழலை ஏக்கம்..!

உச்சிமிகப்பழுக்கும் வயதில்
காணவோ நீயும் இல்லை...

எத்தனை மரங்கள் கொன்றோம்...!
எத்தனை பறவை தின்றோம்...!

வலைஉலகம் சுமக்கும் பெயரை -எம்மையும்
அறியாமல் வல்லூறாய் வதைத்தே கொன்றோம்..

நெற்றை கொடுக்கும் கைகள் -நிதம்
உன்னை காணாது கண்கள் தேங்கும்...!

ரெட்டை சிறகு போதும் ஆரெனின்
எனக்குத் தாரும்...

பீடித்த மானுடம் வேண்டாம்
நீ வாழ்ந்த வெறுங்கூடெனக்குப் போதும்...

யாரெனில் எனக்குச்சொல்வீர்
ஆங்கோர் குருவி கண்டால்..

-கவிதைக்காரன்

Friday, March 9, 2012

உடைந்த சில்லுகளாய் மனம்..





என் வழித்தடங்கள் எல்லாம்
வெறுமையால் நிரப்பப்பட...

போகும் பாதையெல்லாம் வேண்டா வெறுப்பாய்
நிலவும் கதிருமென்னை அன்னிச்சையாய்

ஆக்கிரமித்துக்கொள்ள
நிழல் என்னை நீங்காத இருள் என்னை பீடித்துக்கொண்டது..!

பெரும் போக்கிடமில்லாதவனாக
நாடியவரோடேயே நட்போடு அண்டிக்கிடப்பதால்

உனதருமையும் தரமிழந்து போகிறதோ!
மற்றான் மணம் புதிதென்பதால் தானோ

உன்னையே கண்முன் எடைபார்க்கவும்
துணியும் அன்போ...இவையெல்லாம்

எதை எதிர்ப்பார்த்து நின்றாய்
ஏமாற்றம் உன்னைச்சாய்த்துப்போட...கலங்காதே...

இல்லாத அருமை இருக்கும் பேருக்கும்
உணரும் வரை நீயும் நானும் மட்டுமில்லை
தனிமைக்கும் நீயே துணையாவாய்...

சில நேரம் சமாதானப்பட்டுக்கொள்ள முனைந்தாலும்
சட்டென உடைந்த கண்ணாடிச்சிதறல்களாக என்னைச் சாய்க்கப்பார்க்கிறதே.. என்செய்வாய்...
**
முள்ளுக்கு வேலி இல்லை என..
முடங்குதல் அழகோ..!

உன் வானம் பின்னால் ஆயிரம் விண்மீன்...
வாழக்கற்றுக்கொள்வதைக் காட்டிலும்

வாழ்ந்துவிடல் நன்றாமே.. குழந்தையாய்
கொஞ்சம் தவழ்ந்து போவது

தாழ்ந்து போவதிலும் நன்றென்பாய்...
வா... ஒரு மின்னல் மழை ரசிக்க...

வெயில்காலம் மழைக்காலம் மாறி வந்த போதும் கவிதைக்கு குறைவா என்ன உன்னிடம்... !

கவலையை கடவாய் மனிதா!
ஏதுமில்லை வெற்றிடம் காற்றோடும் கதை பேசலாம்..!

Wednesday, February 22, 2012

எதிர்வினை..





நிசப்த அலைவரிசையில்
அவன் என் முன் அமர்ந்துகொண்டு
பார்வையால் என்னை ஆக்கிரமிப்பதை
தடுக்க முடிவதே இல்லை..!


அவன் கேட்கும்  கேள்விகளுக்கு
பதிலைச்சொல்லி முடிப்பதற்குள்
அடுத்த கேள்வியை
எடுத்து என்  முன்வைக்கிறான்..


எப்படி சாத்தியமாகிறது இவனால்
என்று நான் சிந்திக்கும் முன்னரே
அடுத்தடுத்த கேள்விகள்
எடுத்து வைக்கப்பட்டன


ஆனால்...!
ஒரு ஒற்றுமை என்னவெனில்


அவன் கேட்க்கும் அத்தனைக்கேள்விகளும்
என் அன்றைய நாளின் செயல்களையே
உடனிருந்து வேவுபார்த்ததாக இருக்கிறது..!


முதல் கேள்வி இப்படியாக இருந்தது
ஏன் தேவை இல்லாத இடங்களிலும்
உன் சுபாவம் தெரியாதவரிடத்தும்
வார்த்தைகள் விதைக்கிறாய் என..!


அடுத்த கேள்வி உனக்கான அடையாளத்தை
ஏன் இத்தனை மட்டமாக்கிக்கொள்கிறாய்? என!


அடுத்த கேள்வி பொறுமையில்லாமல்
உன் கோவத்தையும் வெளிப்படுத்தி
பொதுஇடத்தில் மேலும் இழுக்கு சுமந்து
அவப்பெயரைத்தேடிக்கொள்வானேன்?


அதன்பின்னராக.... உனக்கு அறிவென்பதே இல்லையா!?
என்றும்... கேள்விகள் தீர்வதாகவே தெரியவில்லை


இப்படி நான் பதிலகளைத்தேடும் முன்னரே
அவன் கேள்விகள் என் மனதின்
எல்லையைத்தொட்டு கடந்து போய் விடுகிறது,...


அதன் பின் நான் அவனுக்கு
பதில்களைச்சொல்லாமல்
மனதின் எண்ணங்களை பரிசீலித்த்துக்
கொண்டிருந்தமையால்
அவன் அங்கிருந்து கிளம்பிப்போனதை
கவனிக்கவே இல்லை ...!


அவனுக்கும் என் பதில்கள் தேவையாக இல்லை
என்னை சிந்திக்க வைப்பதே
அவன் வந்ததன் காரணமாக
இருந்தது...! தினமும்...


அவனைப்பற்றி விசாரிப்பதும்
எனக்கு தேவையாகப்படவில்லை...


அதோ அதோ தொலைவில்
அவன் கடந்து போகிறான்
நான் உரத்தகுரலில் அவன் பெயரைக்கேட்டேன் !
பதில் வரவில்லை...மீண்டும் கேட்டேன்
“மனசாட்சி” என்றொரு எதிரொளி வந்தது...!


-கவிதைக்காரன்

Sunday, February 19, 2012

எதிரிகளிடம் ஜாக்கிரதை....








நேற்றைய கனவில்
எனக்கும் என் எதிரிக்குமான
வாய்த்தகராறு...!

சற்று நேரத்தில் வார்த்தை
பெற்றுப்போட்ட சண்டைக்குழந்தைகள்
உடனுக்குடன் நாகரீகம் பாராமல்
நடுரோட்டில் கைசரசங்களாக வளர்ந்திடுகிறது..

ஓங்கு குத்தப்பட்ட கைகள் அவன் நாசியை
பதம்பார்க்க..  மீள்வதற்குள்
அடுத்த குத்து அடி வயிற்றில் என
ஆக்ரோசமாகிப்போனது அச்சண்டை..!

சண்டை அன்று எனக்கு பிடித்தமான
பொருளாகி இருந்தது...
எதைப்பற்றியும் எவன் பற்றியும்
சிந்திக்காமல் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள

வெளிநாட்டில் இருந்து வரும் மாமன்
வாங்கி கொடுத்த விளையாட்டு பொம்மை
போல அதன் மீது அத்தனை
ஆர்வமாகத்தோன்றியது...அந்தச்சண்டைகள் எனக்கு...

அதுவும் எதிரிக்கு முதலில்
இரத்தம் கொட்டிப்போனால்
நாம் தான் மோதலில் ஆக்கிரமிப்பில்
இருக்கிறோம் என்ற ஆணவம்
தலை மேல் ஏறி அமர்ந்து கொள்ளும்!

அது அடுத்த அடியைக்கொடுக்க
கொஞ்சமும் யோசிப்பதில்லை..
அது சண்டைக்குப்பின்வரும்
நிகழ்வுகளைப்பற்றி சிந்திக்க விடுவதே இல்லை!

மூளை மரத்துப்போய் முன்கோபம்
நரம்புகளை முறுக்கேறச்செய்ய !
சுற்றி வேடிக்கைபார்ப்போரின் முகபாவனைகள்
நம்மை ஒரு இரக்கமில்லாதவன் மேல்
செலுத்தும் பார்வையோடு அதேநேரம்
மிரட்சியாக பார்க்கும் போது

கிடைக்கும் பெருமித உணர்வு
எதிரியை நிலைகுலையச்செய்யும்
அளவுக்கு தாக்க வைக்கிறது...!
அநேகமாக இன்னும் இரண்டு அடி
கொடுத்தால் எதிரி வீழ்ந்திடுவான்

என் கனிப்பு தப்பவில்லை
அடுத்த இரண்டு அடிகளுக்குள்ளாகவே
அவன் வீழ்ந்தான்..
இனி அவன் எழுந்து வந்து அடிக்கப்போவதில்லை
அடிவாங்கவும் திராணி இல்லாதவனானான்!

அங்கிருந்து கிளம்பும் முன் அச்சத்தால்
எவனும் அவனைக்காப்பாற்றவோ என்னை
தாக்கவோ முனைவதாகப்படவில்லை!

எதற்கும் அவர்களை இன்னும் பலவீனப்படுத்தலாமென்ற
எண்ணத்தில் நான்கைந்து வன்சொற்களை
ஏகவசனாமாக வீசிவிட்டு விரைந்து கடந்து போகிறேன்
அந்த இடத்திலிருந்து... !

நான்
சிறுவயது முதல் இதுபோலான
சண்டைகளுக்கு தலைபடுவதில்லை,
 ஏன் கெட்டவார்த்தை
பேசுவோருடனோ கூட நட்பு பாராட்டியதே இல்லை

அதைவிட பள்ளியில் எனக்கு இருந்த
நல்லபெயரை காப்பாற்றிக்கொள்ள
இருக்கும் இடம் தெரியாமலே வளர்ந்துவிட்டவன்..!

ஆனால் இன்று ஒருவனை இரத்தம் வரும்
அளவுக்கு காயப்படுத்த நான் குரூரமானவனாகிப்போக
யார் காரணம் !? வேடிக்கை பார்த்தவனில் ஒருவன் வந்து
விலக்கி இருப்பானேயானால்..!

வார்த்தைச்சண்டை கைநீட்டும் முன்
அவ்விடத்தை நான் கடந்திருப்பேனேயானால்!

இந்த நிகழ்வு நடந்தே இருக்காதே
என எனக்கு நானே என்னை நல்லவனாகச்சித்தரிக்க
சமாதானப்படுத்திக்கொண்டிருக்கையில்

கனவு முடிந்தது... காலை புலர்ந்தது
 கவனமாக எதிரிகளைத் தவிர்த்து வருகிறேன்..!

-கவிதைக்காரன்
[கார்த்திக் ராஜா] 

Saturday, February 18, 2012

நடிகை





அவள் திரை ஊடகத்தில்
தவிர்க்க முடியாத நாயகி
ஆகி இருந்தாள்;

கவர்ச்சிக்கு பெயர்போன
அவளுக்கு அத்தகையதோர் வேடம்
ஒதுக்கப்பட்டுக்கிடந்தது
கிட்டத்தட்ட எல்லா படங்களிலும்

அறிமுகம் செய்த ஒரு
இயக்குனரோடு காதலென்றும்

நடிகர் ஒருவரோடு தொடர்பென்றும்
பத்திரிக்கைகள் அவளை
எழுதி தள்ளிக்கொண்டு இருந்தது

அதையெல்லாம் அவள்
கண்டு கொள்வதாகவே இல்லை..
அது இன்னும் அவளைப்பற்றி
விளம்பரமாக்கி இருந்தது...

புதியதாய் ஒரு இயக்குனர் ஒருவரின்
திகில் கதையொன்றில்
நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாள்.

மலைப்பிரதேசமொன்றில்
படப்பிடிப்புக்காக வந்திருந்தபொழுது
மாலை ஒப்பனை வேளையின் போது

அந்த காட்சியை முதலாவதாக
ஒரு புரொடக்‌ஷன் மேனேஜர்
கண்டிருந்தான்.

தான் தனிமையில் ரசித்து
சிலிர்த்த நாயகி கயிற்றின் பிடி
கழுத்தில் மாட்டப்பட்ட நிலையில்

கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து
கொண்டிருந்தாள் - என
அவன் அறிய வந்த போது

படமாக்க
தயாராகிக்கொண்டிருந்த
அத்தனை டெக்னீஷியன்களின்
காதுகளுக்கும் அச்செய்தி
அறியப்பெற்றிருந்தது.

ஊடகங்களெல்லாம் “உச்” கொட்டின..
மஞ்சள் பத்திரிக்கைகளெல்லாம்
வாயடைத்துப்போயின..

அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்த
தயாரிப்பாளர்களெல்லாம் நெஞ்சுவலி
சிகிச்சையென
அனுமதிக்கப்பட்டிருந்தனர்..

 “யாரென்றறியப்படாத
பிரபல” இயக்குனரின்
போன் ஒலிக்கிறது..!
மறுமுனைக்குரலில்
ஒரு மெல்லிய வனமம்
குடியிருக்கும் புன்னகையோடு

காரியம் முடிந்ததாய்
சொல்லிச்செல்கிறது..


அத்தோடு மூடி மறைக்கப்படுகிறது
கவர்சியான அவள் பிணம்

விற்பனைக்கு தயாராகின்றன
அவளது எச்சில் ஆப்பிள்களும்
அவள் எழுதிய காகித வஸ்துக்களும்!
சில வஸ்திரங்களும் கூடவே...!


-கவிதைக்காரன்...

யாரிவனென்றறிய...





சற்றுமுன் தண்டவாளங்களுக்கருகே
 வேகமாய் என்னை
கடந்து போன ஒருவன் சற்று
தூரத்திலிருந்து முறைத்துப்
பார்க்கிறான்.

கொஞ்சமும் அவன் பார்வை
என்னை விட்டு அகலாமல்
வெறித்துப்பார்ப்பதால் அவன்
என்னைத்தான் பார்க்கிறான்

என்பதை உறுதி செய்துகொண்டேன்  
மேலும் யாரவன் என்பதை
சிந்திக்க தொடங்க அந்த நேரம்
சரியாக இருக்குமென ஆரம்பித்தேன்.

இதுவரைக்கும் சண்டைகள் போடாதவனாக
இருக்க வேண்டும்...
இதுவரைக்கும் என்னால் தூற்றப்படாதவனாக
இருக்க வேண்டும்...
இதுவரைக்கும் நான் புறக்கணித்தவர்களில் ஒருவனாக
இல்லாமலிருக்க வேண்டும்...

ஏனெனில் இவையெதிழும் அவன் முகச்சாயல் தாங்கியவனைக்கண்டதில்லை..

இப்போது என்னை ஒரு பயம்
அப்பிக்கொண்டது கொஞ்சம்
இருள் படர்ந்தது போல
இருந்த அவன் முகம் வெளிச்சம் மெல்ல
படர்ந்ததாய் என் பார்வைக்குப்புலப்பட!

கொஞ்சம் திகிலுறும் போது அது நடந்திருந்தது..
ஆளில்லாத அந்த இரும்புப்பாதை தடத்தை
கடக்க வேகமாய் சென்று இரயிலடிபட்டு
இறந்து போனான்...

கழிவு மீனுக்கு காத்திருக்கும்
காகக்கூட்டம் போலவும்
மாலை நேர இறைச்சிக்கடையில்
வாலாட்டி நிற்கும் நாய்கள் போலவும்

கூட்டம் அவனைச்சூழ்ந்து கொள்ள
இடைவெளிகிடைக்காத இடங்களில்
மெல்ல நிழைந்து அவனை அருகினேன்

வெள்ளைச்சட்டை அணிந்திருந்த
அவன் இரத்தச்சகதியில்
சிவந்து போயிருந்த ஆடைக்குள்
இறந்துகிடந்தான் .!!

அருகாமையிலிருந்ததால்
இப்போது அவன் முகம்
இன்னும் தெளிவாய்ப்பட்டது
ஆம் அது நானாக  இருந்தது...!


எண்ணம் & எழுத்து
-கவிதைக்காரன்

Friday, February 17, 2012

கொள்ளை போகும் கனவுகள்








என் கனவுகள்
கொள்ளையடிக்கப்படுகின்றன!
வேண்டி விரும்பி யாராலென
கண்டுபிடிக்க நினைத்து
தூக்கம் வராமல் காத்து
தவிக்கிறேன்...!


அது ஒரு இளமையான முகமாக
இருக்கக்கூடும் நான் ஆணென்பதால்
அது அநேகமாக பெண்ணொருவளாக
இருக்குமென நினைக்கிறேன்.
அப்படி இல்லாமல்
போனாலும் கூட மனம் அதையே
விரும்புகிறது...


கொஞ்சம் ஆழமாய் யோசித்தால்
யாரோ பழக்கப்பட்ட வீட்டின்
வரவேற்பறையின் அமர்ந்திருக்கிறேன்.
சம்பிரதாயக்குரல்க்கள்
வழக்கத்துக்குமாறாய் துள்ளலாக
ஒலிக்கிறது...


சற்று தள்ளி இருளான அறைக்கு
வாயில்நிலையில் தொங்கவிடப்பட்ட
சங்குதோரணங்களுக்கு பின்னால்
தெரியும் ஓரு ஜீவனின் தவிப்பை
சப்தமேயில்லாமலும் சம்பந்தமே
இல்லாமலும் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.


இந்த தருணம் சுகமானதாய் இருந்தாலும்
மனம் அதை ஏற்க மறுத்து பின்வாங்க
விருட்டென எழுந்து வெளியேறுகிறேன்.
இன்னும் கனவுகள்
களவு போய்க்கொண்டே இருக்கின்றன!



-கவிதைக்காரன்..

Thursday, February 16, 2012

யுகம் யுகமாய்






ஆதியின் கூட்டில்
நடந்து நடந்து
சுமந்து சுமந்து
கடந்து கடந்து
அடைந்த நதிக்கரை மீதினில்
அமைந்த நாகரீகம்...

கற்களை
பெயர்த்து கரும்பாறை
இடுக்கில் மரவேரை
சொறுகி மழைகாலம்
பாறை பெயர்த்து வழி
அமைத்த நாகரீகம்

தீயின் காலம்
சருகுகள் கரிய
கரும்புகை படர
வளர்ந்த நாகரீகம்

பறவை எச்சிலில்
துளிர்த்த இலையில்
பாங்காய் வளர்ந்த
பயிர்களில் பசித்தீர்த்த நாகரீகம்

கல்லில் குடைந்த
கூர்வெட்டோத்தியின்
குருதிநாற்றத்தில் கொன்று
மலத்திய செந்நரி
மாமிசங்கொண்ட நாகரீகம்

 வட்டுகல் விற்கள்
வீசி ஏய்தி வீழ்த்திய
களிறும் விரட்டிய
அரிமாவையும் புரட்டிய
நாகரீகம்

மண்சுடல் சிற்பம்
மதில் கரி உருவமென
குடைந்து குழைத்த
குறுமலை நாகரீகம்

நூறாண்டு வாழும்
ஆமை கொன்று
நீராடும் மீனை
குதறிக்கிழித்து
களித்த பொழுதின்
எச்ச நாகரீகம்






மண்ணையும் மழையையும்
விண்ணையும் பொன்னையும்
அளந்த சேற்றில் ஊறிய
சபிக்கப்பட்டவனின் மிச்சத்தடங்களாய்

தூக்கைச் சுமக்கும்
நாகரீகம்


சைவ வைணவ பட்சிகளென
தவிட்டு போதனைக்குள்
சாஸ்ட்ராங்கமாய் கால் நீட்டி
படுத்துக்கிடக்கும்
நாம்

குரங்குகளின் புணரல்
கற்றோமென்றால் முகஞ்சுளிக்கவும்
நாய்களையும் அதன் உப்பு
நாக்குகளையும் அறிந்த படியால்

உள் வீட்டுக்கு காவல் வைத்தோமென்றால்
அறிவுஜீவியெனக் கொள்ளவும் தயங்கியதில்லை...

வெப்பம் படிந்த
அண்ணாச்சி பழங்களைப்போல
வெளிக்கசடுகள்
நீங்காமல் திரிகிறோம் யுகம் யுகமாய் !


-கவிதைக்காரன்

Thursday, February 9, 2012

அகர முதல என்போம் ... அடிமைத்தனம் கொல்வோம்..!


உயிர்மெய் ஆய்தம்
உயிரளபடை ஒற்றளபடை
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஐகார குறுக்கம் ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கமென
எம் வாழ்க்கை
சார்பு எழுத்துக்கள் போல எவரையேனும்
சார்ந்தே போய்விடுமா!

குறிலும் நெடிலுமாய்
குன்றலினும் நெஞ்சம் நிமிர்த்தி
களத்தில் ஆயுதமாய்

உயிரெழுத்தாய் துடித்த
பொங்கியெழு தமிழ்க்கூட்டம்

மென்மை மறந்து
வன்மமேறிய
இடையினர் துரோகத்தால்

முதன்மையிழந்த தமிழ் யாம்! ...!

விடிந்தெழுமென...!
ஏக்கமாய்...! வேலிக்குள்
விட்டிலாய்..!

-கவிதைக்காரன்..

Wednesday, February 8, 2012

பெரிதினும் பெரிதாய் பெற சிறிதாய் ஒரு விதை..! செய்வோம்













நிரம்பட்டுமே 
நீர்த் திவலைகளால் 
எம்சம்சாரியின் 
கழநிகள்..! 


இலவச அரிசிக்கு 
இடமில்லாமல் 
போகும் போது..! 


அவன் கண்ணீரின் 
கவலைகள் 
கொய்யப்படுமா!? 


சக மனிதன் 
ஜெகத்தை அழிக்கும் 
முன் பசியால் 
மரித்துக்கொண்டிருப்பதை 


உணராத கண்களுக்கு 
கண்ணீரின் வலி 
தெரிந்திருக்குமென்பது.. 
வாடிக்கையான வேடிக்கை! 


உழவன் மகன் உழவனாய் 
இல்லாத பட்சத்தில் 
விளை நிலங்களை முள்வேலிக்குள் 
முடமாக்கி மலடாக்கிக்
கொண்டிருக்கும் தரகர்கள்...


விலைமாதுவாகிக்கொண்டிருக்கும் 
மண்ணை  மீட்பதிலாகட்டும்...
வீழ்ந்து  கொண்டிருக்கும்
விவசாயம் காப்பதிலாகட்டும் 
தேய்ந்து கொண்டிருக்கும் 
இந்தியாவின் முதுகெலும்பை 
தூக்கி நிறுத்துவதிலாகட்டும்

அத்தனைக்கும் நம் ஒற்றை விதையில் 
பதில் உண்டு..! 


விதைகளை 
மரம் செய்வோம்...! 
பறவைகள் 
வாழ்வாதாரம் காப்போம்...!


-கவிதைக்காரன்..!