மாலை நேரம் மனம் அமைதி வேண்டி
கொஞ்சம் வீட்டுத்தோட்டத்துப் பக்கம்
எட்டிப்பார்த்தது மனம்...
நேற்றைய கவலை மூட்டையின்
முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதால்
அச்சுமைகள் கொஞ்சம் மனதை
இறுக்கிக்கிடக்க..
எதேச்சையாய் கைப்பேசித்திரையில்
தோழியவள் பெயர் மின்ன
தூரல் ஏறியது என் வானம்...
அழைப்பை எடுத்து நலம் விசாரித்து
நாட்களின் இடைவெளியை வார்த்தைகளில்
பகிர்ந்தது மனதை இறகாகப்
பறக்கச்செய்கிறது...
ஏனோ அதுவரை அலைபாய்ந்த மனது
அவளின் பேச்சினால் திசைமாறிப்போனது
வழக்கமாய் இருவரும் பரஸ்பரம் நிகழ்வுகளைப்
பறிமாறிக்கொள்வோம்... இன்று..
நான் வளர்க்கும் நாய்க்குட்டியின்
வளர்ச்சியையும் , மீன்களின் செல்லப்
பெயர்களையும், என் தோட்டத்தின் மரங்களையும்
மலர்ச்செடிகளையும் அம்மா விதைத்த
கீரைச்செடிகளையும்... பற்றி கலந்துரைடாடும் போது
கீரைச்செடிகளையும்... பற்றி கலந்துரைடாடும் போது
கொஞ்சம் கிணற்றுப்பக்கம் சென்ற போது
குதித்துக்குளிக்கும் ஆசை என்னை ஆட்டுவிக்க
பேச்சைத் துண்டித்து நீருக்குள் மூழ்கினேன்..
இயற்கையும் தோழமையும் என்னுள்
இருந்த அத்தனைக்கவலைகளையும்
மூழ்கடித்தே போனதை நினைத்து
சிலிர்த்தேன்...
அவள் என்மீது கோபித்திருப்பாளா தெரியாது...
இடையிலே துண்டித்தேனென..
ஆனால் அதையே அவளிடம்
நான் எதிர்ப்பார்க்கிறேன்...
நாளை சண்டையிடுவதற்காய்
அழைப்பாளென...!
3 comments:
சில நேரங்களில் செல்ல சண்டைகள் கூட நட்பை பலமாக்குமே .................
இக்கவிதை எந்த தத்துவத்தையும் ஏந்தி வரவில்லை; அழகான ஒரு கவிதைக்காட்சியை நமக்குள் வரைந்து செல்கிறது, ஜன்னல் கண்ணாடியில் மழை வரைந்து செல்லும் ஒரு ஓவியத்தைப் போல!!
Arumai karthick
Post a Comment