Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, November 20, 2011

சிரிக்க ... ரசிக்க... சிலிர்க்க...அறுசுவையோடு..!



வா மகனே வா...! ஹாஹா


படிக்குற பசங்களும் இருக்காங்க நம்புங்க பாஸ்..



 இதுல எதுங்க மவுஸ் ..... கன்ஃபூஸ் பண்றாங்கப்பா...!



கூகுள் க்ளாஸிக்...பழைய ஃபிகரை எல்லாம் தேட யூஸ் ஆகுங்களா?


நேனு :வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

நைனா : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ...


ஹாஹாஹா போதும் கலைஞரே ரயிலே வராதாம்ன்னு ஊருக்கே தெரிஞ்சுபோச்சி..



இயற்கை விவசாயம் தான் பண்ணுவீங்களா? நாங்க இயற்கை ரீசார்ஜ் கூடப்பண்ணுவோம் ...!


தொழில்ல கான்ஸண்ட்ரேஷன் முக்கியம் பாஸ்...!
 



ப்ரேக் தி ரூல்ஸ் ....! ஊருக்கு ஒருநியாயம் நாட்டாமை குடும்பத்துக்கு ஒரு நியாயம்டா... நாராயணா...
 


பாப்புலேஷன் ஜாஸ்தியானா ஏர் இந்தியாலையும் வித் அவுட் போவோம்..

 


ESC- ESCAPE ---- ஹாஹா உஷார் ,,,,
 



ஷ்ர்வான் பவன்... யூ வெல்க்கம் ..


நோ கம்மேண்ட் தலைவரு.... புல்லா ஃபார்ம்ல இருக்காரு ஹாஹா
  


பிட்டடிக்கும் ஃபிகரை விட கட்டடிக்கும் பசங்க நல்லவங்க தானோ...
 


நான் என்னத்த சொல்ல.... பூமி சுத்தும்ன்னு நிறுபிச்சுட்டாங்க...  


மேல போனும்ன்னா மேல அழுத்து கீழ போனும்ன்னா கீழ அழுத்து..
-அட அடா என்னா ஒரு விளக்கம்...


 யாருக்குத்தெரியும் அம்மாவுக்கு அமௌண்ட் சரியா வரலைன்னா அணு உலைகூட ஆஸ்பத்திரி ஆகும்...



தலைவர் மொழி விஷயத்தில் இன்னும் அப்படியே தான் இருக்காருபா ஹாஹா



மூன் -ல ஆரம்பிச்ச முதல் மூண்யாண்டி விலாஸ் நாங்க தான் நைனா


 தாய்ப்பாசம் தந்தைப்பாசம் எது சிறந்ததுன்னு இல்ல சங்கதி ரெண்டுமே
உலகில் உன்னதமானது...




வாழ்க்கை சக்கரம் இவ்ளோதானுங்க...


நான் ஒருதடவ முடிவு பண்ணா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்..


கல்யாணம் பண்றவங்க கார்-ல கார்ல இப்படியாய்யா ஒட்டுவீங்க ஹாஹா ஆனாலும் உண்மையதான் சொல்றாங்க...
 



இதான் மேட்டர்....
ஹாஹாஹாஹா...
 



இங்கே அலைகடலென கூடி இருக்கும் மஹாஜனங்களே...

மைக் செட் காரன் : தலைவரே எப்போ முடிப்பீங்க எவ்ளோ நேரம் குத்தவைச்சு உக்காரனும்...நானு
 


மந்திரிசபையில தாலாட்டுப்பாடுறது யாருங்கோவ்,,,,


Monday, November 7, 2011

ஐ.டி துறையின் தகவல் தொழில்நுட்ப சுவையான நகைச்சுவைகள்


சம்பவம் 2

Helpdesk Peoples
என்னுடைய அழுவலகத்தில் ஒரு புது நபரை வேலைக்கு அமர்த்தினார்கள். அவனோ இப்பொழுது தான் புதிதாக படித்து முடித்து முதன் முதலாக வேலைக்கு வருகிறவன். கணினியைப் பற்றிய அறிவு அவனுக்கு சுத்தமாக இல்லை. ஒரு டிரெய்னி-யாக அவனை நியமித்திருந்தனர்.மதியம் எல்லாரும் உணவு இடைவேளைக்கு செல்லும் நேரத்தில் அவனை கஸ்டமர் கால்ஸ் அட்டென்ட் செய்ய அமர்த்தி விடுவது வழக்கம்..

அன்று ஒரு நாள் இப்படித் தான், ஒரு கஸ்டமர் ஒரு சின்ன சிஸ்டம் எர்ரர் பிரச்சினைக்காக அழைக்க, என்னுடைய நண்பரோ ஒரு சிஸ்டம் இன்ஸ்டாலேஷன்-யில் வேலையாக இருந்ததால், அந்த எர்ரர் செய்தியை ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வாங்கி வைக்க சொன்னார். புதியவருக்கோ ஸ்க்ரீன்ஷாட் எப்படி எடுப்பது என்பது கூட தெரியாது. அதையும் என் நண்பரே சொல்லிக் கொடுத்தார். பிறகு அந்த பிரச்சினை சரி செய்யப் பட்டது.

மற்றொரு நாள் இதே மாதிரி ஒரு கஸ்டமர் அழைக்க, முன்செய்தது போல அவரிடமும் இவன் ஸ்க்ரீன்ஷாட் கேக்க, கஸ்டமர் செம காண்டு ஆகி விட்டார். அவரு எதுக்காக அவ்வளவு டென்ஷன் ஆகி இருப்பாருன்னு நீங்க நெனைக்குறீங்க ?

அவருக்கு வந்த எர்ரர் மெசேஜ்

NTLDR Missing...

சிஸ்டம் பூட் ஆகவில்லை என்று. :)

ஹாஹாஹ

ஐ.டி துறையின் தகவல் தொழில்நுட்ப சுவையான நகைச்சுவைகள்


பொதுவாக ஒரு அழுவலகத்தில் வேலையில் இருந்தால் கண்டிப்பாக அங்கு பல சுவையான சம்பவங்கள் நடக்கும். அதுவும் இளைஞர்கள் இருக்கும் இடத்தில் இந்த மாதிரியான விசயங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் IT துறையில் சொல்லவே தேவை இல்லை. அப்படி நான் பணியாற்றிக் கொண்டு இருந்த எனது முன்னாள் அழுவலகத்தில் நான் சந்தித்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்...


சம்பவம் 1

Computer Techie
நான் என்னுடைய பழைய அழுவலகத்கில் கணினி பழுது பார்க்கும் ( Desktop Engineer ) வேலையில் இருந்தேன். ஒவ்வொரு பயனாளர்களும் ( End users ) தங்கள் கணினியில் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்கும் போது எங்களை அழைத்து பிரச்சினைகளை சரி செய்வது வழக்கம். அன்றும் அதே போல் ஒரு துறையின் துணைப் போது மேலாளர் ( Deputy General Manager ) என்னை அழைத்தார். 

இந்த அழுவலகமானது கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் அழுவலகம். அதனால் இங்கு இருக்கும் கடைநிலை பயனாளர்களுக்கு கணினியை பற்றிய போதிய புரிதல் அறிவு இருக்காது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் இது அவகளுடைய துறை கிடையாது...

சரி விசயத்துக்கு வருவோம்... அவர் தன்னுடைய கணினியில் இமெயில் வேலை செய்யவில்லை என்று புகார் செய்து இருந்தார். நாங்களும் இங்கு இருந்து கொண்டு எல்லா வழங்கிகளும்( Server ) அதனுடைய சேவைகளும் ( Email Service ) சிறப்பாக வேலை செய்வதாக சொல்லி, அவருடைய கணினியை மீள்துவக்க ( Restart ) சொன்னோம். அவரும் அவ்வாறே செய்து விட்டு பார்த்து விட்டு மறுபடியும் எங்களை அழைத்து தற்பொழுதும் வேலை செய்யவில்லை என்றார். ஆக இந்த பிரச்சினையை நேரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து நான் கிளம்பினேன்.

அங்கு நான் சென்றடைந்ததும் அவரை நான் ஒரு முறை முயற்ச்சி செய்து பாக்க சொன்னேன். அப்பொழு அவர் 1,2,3,4,5 என்று டெஸ்க்டாப்-யில் இருக்கும் ஒவ்வொரு ஐகான் வரிசைகளை எண்ணி கொண்டு ஐந்தாவது வரிசையின் கடைசியில் உள்ள ஐகான்-ஐ தேந்தெடுத்து டபுள் கிளிக் செய்தார். அப்படி செய்து விட்டு

"பாத்தீங்களா தம்பி, நானும் காலைல இருந்து இதை தான் பண்ணிட்டு இருக்குறேன், இமெயில் ஓபன் ஆக மாட்டேங்குது. தினமும் இங்க தான் கிளிக் பண்ணுவேன், இமெயில் ஓபன் ஆகிடும். இன்னைக்கு என்ன பிரச்சினையோ? கொஞ்சம் பாத்து சரி பண்ணி குடுங்க... " என்றார்...

எனக்கோ சரியான சிரிப்பு. ஏனென்றால் அவர் டபுள் கிளிக் செய்தது ஒரு வோர்ட் ஃபைல்-க்கான ஐகான். அதை அவர் ஒவ்வொரு முறை டபுள் கிளிக் செய்யும் போதும் அந்த வோர்ட் ஃபைல் தான் அவருக்கு திறந்திருக்கிறது. இந்த பிரச்சினையை தான் இவர் இமெயில் சேவை வேலை செய்யவில்லை என்று எங்களிடம் புகாராக அளித்திருந்தார்.

மேலும் அவரிடம் விசாரித்ததில், அவர் ஒவ்வொரு முறை இமெயில் சேவையை பெற இப்படி தான் ( அதாவது ஐகான் வரிசைகளி எண்ணி, ஐந்தாவது வரிசையில் இருக்கும் கடைசி ஐகான்-யை டபுள் கிளிக் செய்து) செய்வதாக கூறினார்.

யோசித்து பார்த்ததில், முன்தினம் யாரோ ஒருவர் டெஸ்க்டாப்-ல் இருக்கும் ஐகான்-களை Arrange Icons by Name கொடுத்து விட்டு மாற்றியிருக்கக் கூடும் என்று தோன்றியது.


அட அறிவு ஜீவிகளா>>>? 

Sunday, November 6, 2011

சிரித்து வாழ வேண்டும்..!

கவிதைகளோடு சில நகைச்சுவை துணுக்குகளையும் பகிர்ந்தால் என்ன !
என சில நிமிடங்களுக்கு முன்னால்; எனக்கு ஞானோதயம் வந்தது !


 புத்தருக்கு போதி மரமாம் நம்ம மரத்துக்கு பக்கமெல்லாம் போக வேண்டியதில்லை, மடிக்கணிணி பக்கம் இருந்தாலே போதும் போல...நம்ம ஏரியா ஸ்கூல் பசங்க தான் எத்தனை தடவை படிச்சாலும் ரசிக்கும் கிளாசிக் ஜோக்ஸ் அவங்க கிட்ட தினம் தினம் க்ரியேட் ஆகும்... !



^^^^^^^^

சிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

^^^^^^^^^^

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா... 

அப்பா: வாத்தியார் கிட்ட சொல்லவேண்டியதுதானே? 

பையன்: அவன் பெயருதான்பா ராமு.

^^^^^^^^^^




ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?

^^^^^^^^
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!

^^^^^^^^

ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்டா.

மாணவர் : நள்ளவேலை சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்


^^^^^^^

டாக்டர் பரிட்சைன்னாலே கை கால் எல்லாம் உதறுது. ஒரு நடுக்கம் வருதே டாக்டர். கவலைப்படாதீங்க . . . நாம பா‌ஸ் ப‌ண்‌ணிடுவோ‌ம்னு ந‌ம்‌பி‌க்கையோட இரு‌ங்க. 

சரியா போச்சு போங்க . . . நான் ‌ஸ்கூ‌ல் ‌ஹெட்மாஸ்டர் டாக்டர்.

^^^^^^^

பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

^^^^^^^^^

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!

^^^^^^^^^^

டீச்சர் : ஏன் லேட்?

சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்

டீச்சர் : போர்டுக்கும் லேட்டா வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?

சிறுவன் : பள்ளிப்பகுதி மெதுவாகச் செல்லவும்னு போர்டு வச்சுருந்தாங்க.


^^^^^^^^^^
தேர்வு அறை...

ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க

மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"

^^^^^^^^^^
ஆ‌சி‌ரிய‌ர் : வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எங்கிருந்து வருகிறது?

மாணவ‌ன் : முட்டையிலிருந்து.

^^^^^^^^^

ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

^^^^^^^^^

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான். 

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்? 

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

^^^^^^^^^
- ஹாஹா நம்ம பசங்களுக்கு வாத்தியார்ன்னா கேக்கவே வேணாம் ஏறி நின்னு விளையாடுவாங்க...!