Sunday, November 6, 2011

சிரித்து வாழ வேண்டும்..!

கவிதைகளோடு சில நகைச்சுவை துணுக்குகளையும் பகிர்ந்தால் என்ன !
என சில நிமிடங்களுக்கு முன்னால்; எனக்கு ஞானோதயம் வந்தது !


 புத்தருக்கு போதி மரமாம் நம்ம மரத்துக்கு பக்கமெல்லாம் போக வேண்டியதில்லை, மடிக்கணிணி பக்கம் இருந்தாலே போதும் போல...நம்ம ஏரியா ஸ்கூல் பசங்க தான் எத்தனை தடவை படிச்சாலும் ரசிக்கும் கிளாசிக் ஜோக்ஸ் அவங்க கிட்ட தினம் தினம் க்ரியேட் ஆகும்... !



^^^^^^^^

சிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

^^^^^^^^^^

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா... 

அப்பா: வாத்தியார் கிட்ட சொல்லவேண்டியதுதானே? 

பையன்: அவன் பெயருதான்பா ராமு.

^^^^^^^^^^




ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?

^^^^^^^^
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!

^^^^^^^^

ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்டா.

மாணவர் : நள்ளவேலை சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்


^^^^^^^

டாக்டர் பரிட்சைன்னாலே கை கால் எல்லாம் உதறுது. ஒரு நடுக்கம் வருதே டாக்டர். கவலைப்படாதீங்க . . . நாம பா‌ஸ் ப‌ண்‌ணிடுவோ‌ம்னு ந‌ம்‌பி‌க்கையோட இரு‌ங்க. 

சரியா போச்சு போங்க . . . நான் ‌ஸ்கூ‌ல் ‌ஹெட்மாஸ்டர் டாக்டர்.

^^^^^^^

பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

^^^^^^^^^

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!

^^^^^^^^^^

டீச்சர் : ஏன் லேட்?

சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்

டீச்சர் : போர்டுக்கும் லேட்டா வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?

சிறுவன் : பள்ளிப்பகுதி மெதுவாகச் செல்லவும்னு போர்டு வச்சுருந்தாங்க.


^^^^^^^^^^
தேர்வு அறை...

ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க

மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"

^^^^^^^^^^
ஆ‌சி‌ரிய‌ர் : வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எங்கிருந்து வருகிறது?

மாணவ‌ன் : முட்டையிலிருந்து.

^^^^^^^^^

ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

^^^^^^^^^

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான். 

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்? 

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

^^^^^^^^^
- ஹாஹா நம்ம பசங்களுக்கு வாத்தியார்ன்னா கேக்கவே வேணாம் ஏறி நின்னு விளையாடுவாங்க...!


No comments: