ஸ்ட்ரெஸ்ஸுன்னா என்ன?
”நாளைக்கு ஸ்ட்ரெஸ் பத்தி சொல்றேன்னீங்க”- அலுவலக எலக்ட்ரீஷியன்
“ஆமாமில்ல?”
“ஆமாமில்லை இல்லை, ஆமாம் ஆமாம்”
“பரவாயில்லையே, அடுத்தவங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸை டிரான்ஸ்ஃபர் பண்ற அளவுக்கு வந்துட்டீங்க போலிருக்கே, இதுக்கு மேலயும் ஸ்ட்ரெஸ் பத்தி நா சொல்லணுமா?”
“வழக்கமா நீங்க போடற மொக்கையை ஃபார் அ சேஞ்ச் நான் போட்டேன். அதுக்கே ஸ்ட்ரெஸ் ஏறுதுன்னா மத்தவங்களைப் பத்தி கொஞ்சம் யோசிச்சிக்குங்க”
“ம்ம்ம் சரிதான். ஸ்ட்ரெஸ் என்கிறது ஒரு மனநிலை. ஒரு வேலையைச் செய்யணும்ன்னு தீர்மானம் பண்ணதுலேர்ந்து அதை முடிக்கிற வரைக்கும் இருக்கிற மனநிலை”
“அப்போ ஒரு வேலையை செய்யணும்ன்னு தீர்மானம் பண்ணதிலேர்ந்து ஒரு ஆள் கடுப்பா சுத்திகிட்டு இருப்பானா?”
“எல்லாருமில்லை”
“பின்னே?”
“ஸ்ட்ரெஸ்ஸுங்கிறது அடிப்படையில ஒரு பயம், அந்த பயம் சிலருக்குத்தான் இருக்கும்”
“ராவுல செய்யற வேலையா இருந்தா முனி கினி அடிச்சிடுமோன்னு பயப்படலாம், பகல்ல என்ன பயம்?”
“பயம்ன்னாலே முனி அடிக்கிறது, ஆவி பிடிச்சிக்கிறதுதானா, தன்னம்பிக்கை இல்லைன்னா கூட பயம் வரும்ங்க”
“ஏன் தன்னம்பிக்கை இல்லாமப் போகணும்?”
“ஒரு வேலையோட நெளிவு சுளிவு தெரியாம இருந்தா பயம் வரும். அதுல என்னென்ன பிரச்சினை வரும்ங்கிறது தெரியாம இருந்தா பயம் வரும். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தெரியாம இருந்தா பயம் வரும்”
“இருங்க, இருங்க… ஸ்ட்ர்ஸ்ஸுன்னா பயம்ன்னீங்க. பயம் ஏன் வருதுன்னா தன்னம்பிக்கை இல்லைன்னா வரும்ன்னீங்க. தன்னம்பிக்கை ஏன் இருக்காதுன்னா வேலை தெரியல்லைன்னா இருக்காதுன்னீங்க. கோபாலா, ஏன் சார், எங்க போறே, டீ வாங்க, என்ன டீ ந்க்கிற மாதிரி போய்கிட்டே இருக்கு?”
“இதுக்குத்தான் காஸ் அண்ட் எஃபெக்ட்ன்னு பேரு”
“காஸ் அண்டு எஃபெக்ட்டுன்னா? காசு இல்லாததால மாசக்கடைசீல அஃபெக்ட் ஆயிட்றமே அதா?
இல்ல சில பேருக்கு காசு வெட்டினா நல்ல எஃபெக்ட் இருக்கே அதா?”
இல்ல சில பேருக்கு காசு வெட்டினா நல்ல எஃபெக்ட் இருக்கே அதா?”
“ரெண்டுமில்லை. காரணமும், விளைவும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு. எல்லாக் காரணத்துக்கும் ஒரு விளைவு இருக்கு. பயம்ங்கிறதை ஒரு விளைவா எடுத்துகிட்டு அதுக்கான காரணத்தைப் பிடிக்கணும். அந்தக் காரணத்தை விளைவா எடுத்துகிட்டு அதுக்கான காரணத்தைப் பார்க்கணும்”எதாவது புரியுதா?
“சுமாராப் புரியுது, சொல்லுங்க”
“அப்படிப் பார்க்கிறப்ப, அடிப்படைல ஸ்ட்ரெஸ் வர்ரதுக்கு காரணமே போதுமான நாலட்ஜ் இல்லாததுதான்”
“அப்ப மடையனுங்கதான் ஸ்ட்ரெஸ்ஸா இருப்பாங்களா?”
“ஒரு விஷயம் பத்தி தெரியாம இருக்கிறது மடத்தனமோ முட்டாள்தனமோ இல்லை. அது வெறும் அறியாமை. அவ்வளவுதான். எனக்கு ஈபி பத்தி அறியாமை இருக்கலாம். உங்களுக்கு சிக்ஸ் சிக்மா பத்தி அறியாமை இருக்கலாம். உலகத்தில் எல்லாருக்குமே பல விஷயங்களில் அறியாமை இருக்கும். அறியாமை இருக்கிறதே தெரியாதவன் முட்டாள். தெரிஞ்சிகிட்டோம்ன்னா அறியாமையைப் போக்கிக்க என்ன பண்ணனுமோ அதைப் பண்ணலாம். அப்ப அறியாமை விலகிடும்”-
“நீங்க என்ன டிவியில வர்ர சாமியாருங்க மாதிரி பேசறீங்க?”
“ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லுது. அதெல்லாம் இப்ப வேணாம். செய்யற வேலைல நல்ல நாலட்ஜ் இருந்தா ஸ்ட்ரெஸ், ஸ்ட்ரெயின் எதுவும் கிடையாது”
“அவ்ளோதானா? விஷயம் தெரியாதவங்க மட்டுந்தான் டென்ஷன் ஆவாங்களா?”
“அவங்க மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருக்கு”
“அது என்ன?”
“எல்லாத்தையும் இழுத்துப் போட்டுகிட்டு தானே செய்யறது. கீழே வொர்க் பண்றவங்க கிட்ட சப்டெலிகேட் பண்றதில்லை. அப்ப ஸ்ட்ரெஸ் வரும்”
“அந்தப் பிரச்சினை எனக்கில்லை. எனக்குக் கீழ யாருமில்லை”
“தன்னால முடியாத வேலைகள் மட்டுமில்லை முடியாத அளவுக்கு வேலைகள் இழுத்துப் போட்டுகிட்டு பண்ண முடியாம திணறும் போதும் ஸ்ட்ரெஸ் உண்டாகும். நோ ந்னு சொல்லத் தெரியணும். என்னால இது முடியாது, என்னால இவ்வளவு முடியாது… அதை சொல்லத் தெரியணும்.”
“அது எனக்கு நல்லாத் தெரியுமே”
“எல்லாத்துக்கும் நோ ந்னு சொல்லிகிட்டு இருந்தா எதுவுமே கத்துக்க முடியாது”
“சரிங்க, ஸ்ட்ரெஸ் உண்டாகிற காரணங்கள் தெரிஞ்சும் அதை அவாய்ட் பண்ண முடியல்லை. அப்ப?”
“ரிஸ்க் எடுங்க. ரெண்டு மூணு தப்பு பண்ணுங்க”
“அய்யிய்யோ… தப்பு பண்ணுன்னு சொல்றீங்க?”
“வாழ்க்கைல எல்லாத்தையும் சரியாவே பண்ணிகிட்டு இருக்கேன், தப்பே பண்ணதில்லைன்னு சொல்றவன் எதையுமே புதுசா டிரை பண்ணியிருக்க மாட்டான். உங்களுக்கு எவ்வளவு அனுபவம்ங்கிறதே எவ்வளவு தப்பு பண்ணீங்கங்கிறதைப் பொருத்துதான் சொல்லலாம்”
“இது கொஞ்சம் ஓவராயில்லையா?”
“இல்லை. நீங்க ஒரு டெலிவிஷன் கம்பெனி ஆரம்பிக்கறீங்க. அதுக்கு ஒரு சர்வீஸ் இஞ்சிநீயர் வேணும். அதுக்கு இண்டர்வியூவுக்கு ரெண்டு பேர் வர்ராங்க. ஒருத்தன் அருமையான கம்பெனியிலேர்ந்து வர்ரான். அவங்க தயாரிக்கிற டிவில பிரச்சினையே வராது. அருமையான குவாலிட்டி. இன்னொருத்தன் சடை கம்பெனிலேர்ந்து வர்ரான். அவங்க டிவியில எப்பவுமே பிரச்சினைதான். யாரை எடுப்பீங்க?”
“சடை கம்பெனி ஆளைத்தான்”
“ஏன்?”
“அவனுக்குத்தான் எல்லாப் பிரச்சினையும் அட்டெண்ட் பண்ணத் தெரிஞ்சிருக்கும்”
“இப்பத் தெரியுதா, சரியா இருக்கிறது எக்ஸ்பீரியன்ஸ் இல்லை, சரியில்லாதுதான் எக்ஸ்பீரியன்ஸுன்னு?”
“இருங்க, நா கொஞ்சம் முதல்லேர்ந்து வர்ரேன்”
’அப்போ டீக்கு காசு கொடுத்திடு -லஞ்ச் ப்ரேக்ல பார்க்கலாம்’
மனதுக்குள் ‘அடப்பாவிமனுஷா--- ஸ்ட்ரெஸ்ஸ ஏத்துறேன்னு சொல்லிட்டு
அக்கௌண்ட்ல ஏத்துபுட்டன்யா டீ கணக்கை...!
ஹ்ம்ம்ம் என்ன வாழ்க்கடா....!
’அப்போ டீக்கு காசு கொடுத்திடு -லஞ்ச் ப்ரேக்ல பார்க்கலாம்’
மனதுக்குள் ‘அடப்பாவிமனுஷா--- ஸ்ட்ரெஸ்ஸ ஏத்துறேன்னு சொல்லிட்டு
அக்கௌண்ட்ல ஏத்துபுட்டன்யா டீ கணக்கை...!
ஹ்ம்ம்ம் என்ன வாழ்க்கடா....!
No comments:
Post a Comment