Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Saturday, October 29, 2011

நட்புக்காக...




இலைகளுக்குள்ளும்


தேனெடுக்கும்

அன்பின் வனமிது






எந்த பூவில் தேன் தேட


சுற்றியுமென் நட்புக்கள்


சருகாய் ஆனபோதும்


என் பாதையின் முட்களுக்கு


மஞ்சம் செய்தவராய்..




வேரெடுத்து ஆழ


நின்ற என் நட்பிற்கு


வானமே கூரை..!




சித்தன்னவாசல்


சிற்பங்கள் தோற்கும்


இவர்களின்


அன்பின் அத்வதம்


முன்னால்


இங்கே ஒரு


பாதையில் ஓய்வெடுக்கும்!

அமர்வி நாற்காலி எப்போதும்

அன்பை சுமந்து காத்திருக்கும்


முப்பதுபேர்கூட அமரும்

ஒற்றை சதுரடியில்


நண்பணாய்..!




சித்தப்பன் பெரியப்பன்


உறவெல்லாம் சீந்துவாரில்லாது


போக நட்பென்னும்


அறவு மட்டும்


அண்டங்கள் அழிந்தாலும்


அடைகாக்க


பறந்துவரும்


தாய்க்குருவியாய்..!




இங்கு மிச்சம் விட்டு செல்லும்


எம் நட்பின் அடையாளம்


தலைமுறைகளையும்


தாண்டிச்செல்லும்!




-கார்த்திக் ராஜா
 —