Thursday, November 10, 2011

பனியுமில்லை வெயிலுமில்லை... புதிதாய் நிலவுமோர்... இரட்டைக்காலம்


கதிரும் நிலவுமாய் நீ..........
ஒருநாள் துயர் நீ..
மறுநாள் துணை நீ...

எனை நான் கண்டுகொள்ள
நாசி நுழைந்த சுவாசம் நீ

இளமாலைப் பொழுதில்
வெண்பனிப் பூக்கள்
சிந்தும்
வான்முகிலின்
வளர்ப்புமகளா இவள்?


குளிர்கால மேகம் சிதறிப்போகும்
குளிராத தேகம் இவளுக்கு
இறுக்கி அணைத்து
இளைப்பாறிக்கொள்வாள்
தன் காதலை...


இதழ் சொட்டும் வார்த்தையில்
இதயம் மயங்கித்தான் போகும்
கடைக்கண்ணால்
இவள் எய்யும் அம்புகளுக்குச் சமமாய்

அர்ஜுனனின் வில்லுக்கு
வலிமை தோற்கும்.


முன் பனி..
முழுமதி........
மழைக்குடை....
வெயில் நிழல்.....
வெட்க்கபந்தி............

இவையெல்லாம் நீயானால்...

உன்னைச்சமைத்து காதல் தொட்டுக்கொள்ளப்பார்க்கிறேன்
காலை உணவிற்கு..

மௌனம் கலைத்து மழையாய்
பொழிவாயே
உன் செவ்விதழால் வருடும்

அந்த முத்தமழைக்கு ஏங்கி
தாகமாயுருக்கும் என்னை
அணுவுக்கும் இடைவெளி இல்லாமல் நனைத்துவிட்டுப்போனால்
என்ன...?

சைவ அசைவம் பார்த்தா சமிக்ஞை புரிந்தாய்
விரலால் தீண்டியதும்
பட்டென கன்னம் விழும் அந்த நிமிடம்
இறந்து பிறக்கும்
என்னை

இன்னும் இன்னும் எத்தனை ஜென்மம் செய்வாய்..


நான் கிறுக்கலாய்ச்செய்யும் அத்தனையும் ரசித்தாய்
நான் ரசித்து எழுதும் அத்தனை கவிதையையும்
கிறுக்கல் என்றாய்..

அடி...
முரண்காற்றுக்கிளைய
தென்றலானவளே
என்னத்தான் செய்யப்போகிறாய்

எப்போது இதயம் கொய்யப்போகிறாய்
என ஒவ்வொரு நிமிடமும்
தட்பவெட்பம் தடுமாறும்
என்னை

தலைக்கோதி
மார்போடனைக்கும் உன் தேகச்சரணடைய
காற்றுக்குமிழிக்குள்
மூச்சைப்பிடித்து நிற்கும்
என்னை

மேகக்கூட்டுக்குள்
முத்தெடுக்கவெண்ணி
தலைகீழ் வனத்தில் நிலை கொள்லாமல்
திரியும் என்னை


அய்யோ!
போதும் இன்னும் எத்தனை “என்னை”
போட்டாலும் நீ வரப்போவதில்லை
எனத்தெரிந்தும்
புலம்பும் என்

புலம்பெயர்ந்த இதயத்தை
புதைத்த இடமாவது சொல்லிப்போயேன்..!

No comments: