Tuesday, November 8, 2011

மதிப்பிற்குரிய மருத்துவ சிகாமணிகளே மெடிக்கல் ரெப்புக்ளே....!


 நோயாளியா க்ளினிக் போறது குத்தமா? 

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாக் காதல்-



நோயாளனாக இருந்தால் மட்டுமே டாக்டர் வீட்டில்,க்ளீனிக்கில்  பொறுமையாகக் காத்திருக்க முடியும்.
 ஆனால் அப்படிப்பட்டவர்களுக்குக் கூட நிறைய சோதனைகள் உண்டாகின்றன. உதாரணம் : டோக்கன் சிஸ்டம் இல்லாத டாக்டர்கள் க்ளீனிக்.
 இந்த மாதிரி டாக்டர்களின் கதவருகில் ரேஷனில் மண்ணெணை வாங்க முண்டுவது போல ஒரு ஆங்க்ரி  கூட்டம் எப்போதும் நிற்கிறது. கதவு திறக்கப்படும் போதெல்லாம் ஃபயர் ஆக்ஸிடெண்ட்டிலிருந்து தப்பிக்கிற மாதிரி ஒரு கூட்டம் உள்ளே போய் விழும். சில சமயம் டாக்டரே மல்லாக்க விழுகிற அளவுக்குப் போகிறது.
 டோக்கன் சிஸ்டம் இருக்கிற இடங்களில் வேறு மாதிரி பிரச்சினைகள். காலையில் வந்து டோக்கனை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். கிறுக்கன் மாதிரி நாம ஒன்றரை மணிநேரம் கிளினிக்கின் வினைல் சேரில் வீணாப்போன பழைய பேப்பர்களை மேய்ஞ்சுட்டு நாம் காத்திருப்போம். அவர்கள் ஜாலியாக டிவி பார்த்துவிட்டு திருமதி செல்வம் , மெட்டி ஒலின்னு பார்த்துட்டு திருட்டுப்பூனை விட்டத்தில் பாய்வது போல குறுக்கில் புகுந்து போவார்கள்.
 இன்னும் சிலர் எந்த பிரியாரிட்டியும் இல்லாமல் வாம்மா மின்னலு என்று டாக்டர் அழைத்தது போல விலுக் விலுக்கென்று நமக்கு முன் புகுந்து விடுவார்கள்.
 எங்கள் ஏரியாவில் டாக்டர் ஒருவரது கிளினிக்கில் வேறு மாதிரி கழுத்தறுப்பு.
 பகலில் பசுமாடு தெரியாத 90வயசு பெருசு ஒருத்தரை டோக்கன் தருவதற்கு வைத்திருக்கிறார். உள்ளே மூன்று பேர் மட்டுமே இருக்கும் போது 38-ம் நம்பர் டோக்கன் தருவார்! ஏற்கனவே நமக்கு முன்னால் உட்கார்ந்திருப்பவர் 48ம் நம்பர் டோக்கன் வைத்திருப்பார்.
ஒரு நாளைக்குக் குறைந்தது 8000 ரூபாய் சம்பாதிக்கும் அலோபதி ஹோமியோபதி டாக்டர் டோக்கன் தருகிற ஆளுக்கு சம்பளமாக மாசம் ஆயிரமோ ரெண்டாயிரமோ தர மூக்கால் அழுவதால், இந்த மாதிரி வீட்டைவிட்டு வந்த வயோதிகப்பெரியவர்,   மகன் மகள் கைவிட்ட நிலையில் கடைசிகாலத்துக்கு உழைக்கும் பெரியவராய் பார்த்து  அமர்த்துகிறார்கள். அவருக்கு ஐம்புலன்களில் மூக்கு மட்டுமே வேலை செய்யும் என்பது கொசுறு செய்தி, பாவப்படுவதா இல்லை அவரோடு கத்தி பிராணன் போவுதேன்னு கவலைப்படுவதா தெரியாமல் வந்தநோயோடு மேலும் பி.பி ஏத்திக்கும் சொந்தகாசு சூன்யம் வேறு..


அவர்களும் சம்பளத்தைக் குடு என்று கேட்பதற்குள்ளாகவே அவர்களுக்கு சுவாசம் நின்று விடும். ஆகவே போட்டதைத் தின்றுவிட்டு கார்ஷெட்டில் கிழிந்த பாயில் படுத்திருப்பார்கள்.
 இது முதல் கழுத்தறுப்பு.
 அடுத்தது மஹாகனம் பொருந்திய கையிலப்பை கழுத்துல டை வாயிலப்பொய்.. மெடிக்கல் ரெப்புகள்.
 அவர்கள் டோக்கனும் வாங்குவதில்லை, காத்திருப்பதும் இல்லை. கதவு திறந்ததும் உள்ளே பூரும் அவர்களைப் பார்க்கும் போது தொறந்த வூட்டுல சொல்லும் பழமொழி ஞாபகம் வரும். அவர்களோடு சண்டை போட்டுப் பாருங்கள், ம்ம்ம்ஹூம். கல்லுளி மங்கன் மாதிரி உட்கார்ந்திருப்பார்கள்.வாயோட வாய் திறக்க மாட்டார்கள்...

 அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர்களுக்குப் பாவம் பிழைப்பு!@தொழில்
 நோயாளிகளை விட அவர்களுக்கு அதிக பிரியாரிட்டி தரும் டாக்டர்களைச் சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் தரும் ஓஸி மருந்துகள்.

(இதைப்படிக்கும் டாக்டர்கள் யாரும், வரிந்து கட்டிகிட்டு வர வேணாம் நான் சொல்வது இம்மாதிரியான சில டாக்டர்களை-மை லார்ட்)
 மருந்துக் கம்பெனிகள் என்ன ஐடியாவில் இந்த இலவச சாம்ப்பிள்களைத் தருகின்றனவோ, ஆனால் டாக்டர்கள் சிலர் (கவனிக்கவும், சிலர்) தாங்க முடியலை அவர்கள் லொள்ளு... கால்ப்பால்-க்கு கூட கபடி விளையாடும் எழுத்தில் கிறுக்கி தள்ளுவார் ப்ரிஸ்க்ரிப்ஷன் எப்படிதான் அங்கிருக்கும் நர்ஸம்மா-வுக்குத் தெரியுமோ அள்ளிவழங்குவார் பொதுத்தேர்வுக்கு மனப்பாடம் செய்ததுபோல் வெள்ளி மாத்திரை காலைல ஒண்ணு சாயங்காலம் ஒண்ணு நைட்டு ஒண்ணு சாப்பிட்டபின்னாடி சாப்பிடுங்க -ன்னு வானவில் கலருக்கும் பத்தே வினாடியில் சில சமயம் அதுக்கும் குறைவான வினாடியில் விளாசித்தள்ளுவார்.எங்க ஊர் டாக்டர் வெறும் பிரிஸ்கிரிப்ஷன் தருவதோடு சரி.

 மருந்தே யாருக்கும் தருவதில்லை. ஓஸி வாங்குகிற மருந்துகளை என்னதான் செய்வாரோ! ஆனால் ஒரு நாளைக்கு நாற்பது ரெப்புகள் வருவார்கள். அவர் ஓஸி மருந்து வாங்கும் நேரத்தில் எந்தப் பேஷண்ட்டாவது செத்தாலும் அவருக்குக் கவலை இல்லை.

சமீபத்தில் மலேஷியா தோழமை ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஒண்றும் இல்லை காபி கொட்டியதை கவனிக்காமல் வழுக்கி விழப்போக 
முப்பத்தைந்து வருடங்களாக பிராக்டீஸ் செய்து வரும் அவர் ஆரம்பத்தில் இப்படியெல்லாம் இல்லை.காய்ச்சல் தலை வலியிலிருந்து சைக்கிளில் விழுந்த காயம் வரை எல்லாவற்றிற்கும் அவரே ஆபத்பாந்தவன்...
ஆனால்....

 கண் பார்வை மங்கி, காது கொஞ்சம் மந்தமேறி, எழுதும் போது கை வைப்ரேட்டர் மாதிரி ஆடுகிற இந்த வயதில்தான் இவ்வளவு பணத்தாசை.

 இது மாதிரி டாக்டரையோ, மெடிக்கல் ரெப்பையோ நான் பார்த்ததே இல்லை என்று சொல்பவர்கள் கையைத் தூக்குங்கள்?


(கம்மெண்டில் சொல்லுங்க ....)

1 comment:

Anonymous said...

paarthe illai endru eppadi solla? niraya paarthuthan irukkiromo.