Wednesday, February 8, 2012

பெரிதினும் பெரிதாய் பெற சிறிதாய் ஒரு விதை..! செய்வோம்













நிரம்பட்டுமே 
நீர்த் திவலைகளால் 
எம்சம்சாரியின் 
கழநிகள்..! 


இலவச அரிசிக்கு 
இடமில்லாமல் 
போகும் போது..! 


அவன் கண்ணீரின் 
கவலைகள் 
கொய்யப்படுமா!? 


சக மனிதன் 
ஜெகத்தை அழிக்கும் 
முன் பசியால் 
மரித்துக்கொண்டிருப்பதை 


உணராத கண்களுக்கு 
கண்ணீரின் வலி 
தெரிந்திருக்குமென்பது.. 
வாடிக்கையான வேடிக்கை! 


உழவன் மகன் உழவனாய் 
இல்லாத பட்சத்தில் 
விளை நிலங்களை முள்வேலிக்குள் 
முடமாக்கி மலடாக்கிக்
கொண்டிருக்கும் தரகர்கள்...


விலைமாதுவாகிக்கொண்டிருக்கும் 
மண்ணை  மீட்பதிலாகட்டும்...
வீழ்ந்து  கொண்டிருக்கும்
விவசாயம் காப்பதிலாகட்டும் 
தேய்ந்து கொண்டிருக்கும் 
இந்தியாவின் முதுகெலும்பை 
தூக்கி நிறுத்துவதிலாகட்டும்

அத்தனைக்கும் நம் ஒற்றை விதையில் 
பதில் உண்டு..! 


விதைகளை 
மரம் செய்வோம்...! 
பறவைகள் 
வாழ்வாதாரம் காப்போம்...!


-கவிதைக்காரன்..! 

No comments: