Saturday, October 29, 2011

தூசி தட்டுகிறேன் நினைவுகளை...


காணாதேசம்..
கடந்து வந்ததால்
பிரிந்துபோன காதல்
நினைத்தாலும்
பார்க்க முடியாத
பிரிதல்..!

அவளை மறந்து
காதலை துறந்து
கடல் கடந்த நிலவுகளாய்
இடம் பெயர்ந்த
பறவையாய் நான்..!

எந்த சூழ்நிலையிலும்
இனி இல்லை..!!
காதல் மீண்டும் எனும் போது
எதிர்பாரா திருப்பத்தில்
எதிர்படும் பழைய நண்பனை போல..!!

விழிசேரா நாளில்
வந்தது அவள் தொடர்பு..!!

மலர்வளையம் வைத்து விட்ட
என்-காதலுக்கு
மீண்டும்…யாரோ
சிலை திறப்பு செய்ததே போல்

கும்மாளமிட்டு
குதித்துகொண்டே
நான்..!

யாரேன தெரியாமல்
போய்விடுவாளென
எண்ணியிருந்தவனை
நேரென சந்தித்து
காதல் மொழிதீட்டினால்

சூழ்நிலை
கைதியானவனை
சாதனை செய்யென
சிறைவிடுத்தது போல்
சிந்தித்து..!
சிரித்தே
சிலாகித்தே..!
போனேன்..!!

எல்லோரும் வரவுக்காக
காத்திருக்கும்
இடங்களில் எல்லாம்
நான்
வராத உன் கனவுக்காக
விழித்திருந்திருக்கிறேன்..!

கண்களில்
சேர்த்திருந்த பழைய காதலை
மெல்ல பரணிலிருந்து
கீழிறக்கி தூசி தட்டினேன்..!!

*உனக்கான கனவை தட்டி செல்ல
எங்கிருந்தோ வந்த மழை மேகம்
கொட்டி செல்கிறது
என் மீது..!!*

*நிலா வராத நாட்களேல்லாம்
அகல் விளக்கை
நிலவாக கொள்வேணா என்ன!*

*நீ..!
இல்லாத நேரங்களில்
எல்லாம் என் கனவுகள்
உன்னையன்றி யாரை
சுற்றி.*.

இதுபோலான என்
குறுங்கவிதைகளெல்லாம்
கை கொட்டி சிரிக்கின்றது
என்னை பார்த்து...!

என்னடாகண்ணாளா!
மீண்டும் உன் கிறுக்கலுக்கு
சிறகு முளைத்துவிட்டதா என்ன-
என்று..!



:::::::::::கார்த்திக் ராஜா::::::::::::::
 

No comments: