Saturday, October 29, 2011

நேசிக்கவேண்டியது நிறைவாய் இருக்க யாசித்து நின்றேமடா!




பதின்மத்தில்


பார்வை அழகாகிறது


பார்வை அழகானதும்


ரசிக்க பழகுகிற்து


ரசிக்க பழகும் போது


காதல் பிறக்கிறது


காதல் பிறந்ததும்


கவிதை பிறக்கிறது


கவிதை பிறந்த்தும்


காதலி சிரிக்கிறாள்


காதலி சிரித்ததும்


கனவு பூக்கிறது


கனவு பூத்ததும்


கற்பனை விரிகிறது


கற்பனை விரிந்ததும்


நினைவு மறந்த்து


நினைவு மறந்த்தும்


நிம்மதி தொலைகிறது


நிம்மதி தொலைந்ததும்


நித்திரை கலைகிறது


நித்திரை கலைந்த்தும்


காதல் காணாமல் போகிறது..??


காதல் காணாமல் போனதும்


கவிதை தீவிரமாகிறது..!!!


கவிதை தீவிரமானதும்


கல்லையும்


காற்றையும்


கடலலையும்


நிலவையும்


விண்வெளியையும்


வாண்மேகத்தையும்


மழையின் பொழிவையும்


மழலை சிரிப்பையும்


மாலை சூரியனையும்


மகரந்த பூக்களையும்


நதியின் ஓட்டமும்


நட்ச்சத்திர கூட்டமும்


பாலை மணலும்


காலை பனியும்


கூவும் குயிலும்


கொக்கரிக்கும் சேவலும்


ஆடும் மயிலும்


ஓடும் மானும்


இளமையின் வறுமையும்


ஏழையின் கனவும்


சிலுவையின் கரையும்


நிலுவையில் வழக்கும்


அலையில்லா கடலும்


அது வடித்த கண்ணீரும்


நட்பின் நலினமும்


அன்பின் பரிவும்


பாரதி பாக்களும்


பால் தரும் கோ-க்களும்


இளமையின் வலிமையும்


ஏகையின் வலியும்


பெண்ணிய பெருமையும்


மண்ணிய உரிமையும்


தேசகுற்றங்களும்


நேசகரங்களுயும்..!


லஞ்ச ஊழல்களும்


பஞ்ச பசிகளும்..


கடிகார முள்ளும்


காலத்தின் சொல்லும்


விடையில்லா கேள்விகளும்


கேள்விகேட்க்க ஆள் இல்லா


கொடுமைகளும்...






கண்முன்னே கவிதைகளாகி


நிறைந்தோட...!




முன்னமே முடிவெடுத்திருக்கலாம்!..


நேசிக்கவேண்டியது நிறைவாய் இருக்க


யாசித்து நின்றோமடா! -என்று


உள்ளுக்குள் குரலிடும் நெஞ்சம்..!


உறமாய் உயிரானது..!


இன்று நான்


கவிதையை நேசிப்பவனாய்...!




:::::::கார்த்திக் ராஜா::::::
 









No comments: