Saturday, October 29, 2011

மரச்சட்டகம்....!




ஈரேழு வயதுமுதல்

இது தான் எனக்கு தொழில்


யாருக்கும் நான் செய்து கொடுத்த


பொருள் பிடிக்கவில்லை என்று


வாய்திறந்து சொன்னதில்லை


என்று பேசியவனை -தடுத்து




அப்படி என்ன தொழிலப்பா உனது..


அவ்வளவு கைதேர்ந்தவனா! நீ?




என்று கேட்ட வினாடியில்


உடன் அவன் சொன்ன பதில் என்னை


உருக்குலைத்து போட்டது




மரச்சட்டகம் செய்பவன்..


இது வரை என் அளவு கச்சிதம் தப்பியதே இல்லை




அதன் உள்முனைகளில்


சிக்கிக் கொண்டுவிடும் மனிதர்கள்


பின் மீறி வெளியே சென்றதே இல்லை


அதை எப்படிச் சிறிதாக்கினாலும்


விசாலமாக்கினாலும்


விரும்பி வந்து புன்னகையுடன்


தன்னை அடைத்துக்கொண்டார்கள்




அவர்கள்-




ஆனால் ஒருவருக்கு


ஒருமுறைதான் நான் தொழில்


செய்து தருகிறேன் ...நீண்ட நாள் 


வாடிக்கையாளரென


எனக்கு யாரும் இல்லை..!



இங்கே சுற்றித் திரியும் மனிதர்கள்


எல்லாம் ஏதாவது ஒருநாள்


என் கைவேலைக்குள் அடங்கிபோவார்கள்..


ஆனால்....

இதுவரை...எல்லோரும்


என்னை பழித்து பேசியே என் பொருளை எடுத்து


செல்கிறார்கள்..நேற்று இறந்தவருக்கு


இன்று சட்டகம் வேண்டுமெனில்..


முன்னமே எப்படி செய்துவைக்க...


அப்படி முடியும்...




உத்தேசமாக ஒரு தினுசாய்


செய்துவைக்கலாமே..என்று


கேட்போருமிருக்க..




கண்முன்னே


நடந்து செல்வோனின் சாவுக்கு காத்திருந்து


என் பிழைப்பு நடக்கவேண்டியாதா


என உள்ளரிப்பு எனக்கு என்கிறான்..




அதோடு..!!


அலுத்துப் போகிறது எனக்கு.


இதோ இப்போது சொல்கிறேன்,


நான் இனி சட்டகம் செய்யப்போவதில்லை


உங்களுக்கான ஒன்றை


நீங்களே கொண்டு வந்துவிடுங்கள்..






நான் யாரைப்போய் கேட்பேன் எனக்கு...! 


சட்டகம்!செய்ய என்கிறான்.. ”சவபெட்டி”








(தி லாஸ்ட் பாக்ஸ்))


:::::::கார்த்திக் ராஜா:::::::

No comments: