தாயாய் மாறி
நானும் தாலாட்டை
சொல்லி தலைகோதி தூங்க வைக்க
மகனோ மகளோ..!
என் மடி மீது துவள
இன்னும் இரண்டே நாளென..
கண்விழித்து தவமிருந்தேன்..
இன்றோ..இருளாய் விடிய..
நாளை வலியாய்..தவிப்பதை
எண்ணி தூக்கமிலந்து துவண்டு
போனவளை தொடுதல் ஸ்பரிஸத்தால்
புத்துயிர் தந்து கொண்ட என்னவர்..
தரையில் நடந்தவர் இப்போதெல்லாம்
என் தடம் பார்த்து பின்னால்...!
கவனமாக...காவலாய்..
விடிந்தது இன்றோ...!
எந்த வித அடையாளமும்
இல்லாமல் இன்று என்மடியில்
முளைக்கபோகும் பத்துமாத
வரம்..சத்தமின்றி..
நாளதின் பொழுதும்
பனியின் வேகமாய் கரைய
எனக்குள்ளே உணர்ச்சிஅலைகளின்
உத்யாதபரிவர்த்தனை
வைரமுத்துவின் கருவாச்சி
காவியமும்..! மறந்துபோன
பெயர் தெரியாத எழுத்தாளர்களும்,
முகம் மறந்த சின்னத்திரை
மருத்துவர்களும்,நாள் மறந்த
பத்திரிக்கை துணுக்குகளும்
பிரசவம் பற்றி சொல்லிய பாடம்
கண்முன்னே கடந்து போக
அனுமதிக்கப்பட்டேன்
கருவறை தாண்டப்போகும்
என் கருவின் முதல்
வரவேற்பறைக்கு..
கத்திகளும் கட்டிலும்
இறஇந்திருக்கும் அறைக்குள்லே
நான் மறுபிறவி எடுக்கப்போவதை
மறக்கடித்த வலியோடே..!
எனக்கு வாய்த்த தாதிப்பெண்
போலே (செவிலி) இன்முகமும்
இனிந்த சொல்லும் வாய்த்தவள்
எல்லா அன்னைக்கும் வாய்த்திடல்
வேண்டும் அவளுக்கும் மழழை
இரண்டாம்..! சற்றே தைரியம் எனக்கும்
உயிர்கொள்ளும் வலிமறக்க
முதுகுதண்டில் மருந்திட்டாலும்
பேறுகால வலி என்பது
உணரும் வரை உயிர்பயத்தோடு
வாழும் கடைசிநாளை
எண்ணும் மனநிலையாய்
பத்து செ.மீ விரிதலில்
என் பத்துமாத தவம் தலை
முட்டிதிறக்க..விம்மியெலும்
வலியின் அலையை மூன்றொரு
முறை முயற்சித்தே..!
மெல்லகண்கலங்கி
மயக்கத்தில் சரிகிறேன்
கண்கள் மூடியிருந்தாலும்,
கருவிழிகள் உன்னைக் காண
பட்டாம்பூச்சியாய்..! மாறித்
துடிக்க..
ஆனந்தக் கண்ணீரோடு
நானும் ஆர்பரித்து அசையாமல்
தவிப்பதை யாரும்
பார்த்திருக்க மாட்டார்கள்.
என் மூச்சுக்காற்று - உன்
வாசத்தை தேடியதை - யாரும்
உணர்ந்திருக்க மாட்டார்கள்.
என் உதடுகள் அரைகுறை
மயக்கத்தில் -உன்னை
அழைத்ததை - யாரும்
கேட்டிருக்க மாட்டார்கள்
என் செவிகள் மீண்டும் உன்
குரலை கேட்க தவம் கிடந்ததை
யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்
என் உடம்பெல்லாம் மறத்துப்போனாலும்
உயிர் மட்டும் உன்னைக் காண
உனக்கே உனக்காய்
வாழ்ந்து கொண்டிருந்ததை யாரும்
மறுக்க மாட்டார்கள்.
இந்த பூமிக்கு - நீ
ஒரு புதுப்பிறவி - உன்னால்
எனக்கும் ஒரு மறுபிறவி
இப்போதே அள்ளியணைத்து
உனக்கு பாலுட்ட திளைக்கும்
என் மார்புக்குள்ளே மெல்ல
வேகம் கூட்டி தவிக்கும்
இதயம்..!
*புத்தம் புதிய இரத்தரோஜா
பூமிதொடாபிள்ளையின் பாதம்*
தாதியவள் கையில் தலைகீழாய்
கரைகயில் சித்தம் மெல்ல மறந்து..நான்
என் தவம் தங்கப்பேழையாய்..
செஞ்சிவப்பாய் கண்மூடி..
முற்றும் மறந்த வலிகள்
மெல்ல உன் பாதம் என் கையில்
படும் வேளையில்...உடைந்து விழுந்த
பனிமலையாய்...
முதல் கண்ட உன்பாதமே எனக்கு
முதல் ஸ்பரிஸமாய்...!
கண்மணியே..! இன்றும் உன் பாதங்களை
எடுத்த முதல் புகைப்படம்!...பத்திரமாய்..
என் கண்களுக்குள்...!
........ ˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·˙.........
ஜ۩۞۩ கார்த்திக் ராஜா ۩۞۩ஜ
..... •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•...
—
1 comment:
beautiful words dear
Post a Comment