(இந்த கிராமம் என்னை ஏன்தான் விட மறுக்கிறதோ )
இந்தமுறை எதை கொண்டு கவிதை எழுதலாம் என்று
சுற்றிதிரிகையில் பின்னே வந்தவர்
(எத்தனை முறைதான் எதிரே வந்தவரையே வம்புக்கு இழுப்பது ?)
ஈரத்தலையுடன் வண்டிமாட்டை பத்திபோக ..என்கற்பனைக்கும்
அனுபவத்திற்கும் வெட்டான்குழி கிணறு இந்தமுறை தீனியானது ...
சரி கவிதைக்கு(?) போவோம்...!!
அரைகால்சட்டையோடு...
செவப்பு துண்டெடுத்து ..
கருத்தமேனிய காலை வெயிலுக்கு காட்டி
பயகாரனுங்க வீட்டுமுன்னே
கூவி கூவி கூப்பிடுவோம்..
வெள்ளாமைக்கு நேரமுன்னு
பெருசுக எல்லாம் போசபோசக்க
வெகுளிபசங்களாய் எல்லோரும்
செங்கல் சூளைக்கு செல்லும்
மாட்டுவண்டியை தொத்தியபடியே
வந்து சேரும் வெள்ளான்குழி கிணறுக்கு
வயது எத்தனை யாருக்கும் தெரியாது
ஆனால் நாங்களெல்லாம் வந்து விட்டால்
எங்களஊடே சேர்ந்து அதற்கும்
வாண்டுக நினைப்பு வந்தே தீரும்
அப்படி ஒரு ஆட்டமிருக்கும் அன்று...
வரும்போது பத்து பதினொன்றாய்தான்
வருவோம் ஆட்டம் கலைகட்டும் போது
கூட்டமும் ஏறிப்போய் இருக்கும்...
எல்லோருக்குமாய் நடக்கும்
தொட்டுபுடிச்சி விளையாட்டு
மறுநாள் விடிந்தாலும் நிறுத்திடதோணாது...
ஆனால் காலையில் கரையில் வைத்த
துண்டு மீண்டும் கையில் எடுக்க
மாலை மூணு மணி தாண்டி போயிருக்கும்..
என்றோ! ஒருமுறை கரகாட்டகாரன்
படம் போடுகிறான் என்று தெரிந்து
அந்த வாழைப்பழ காமடிக்காய்
விரைந்தே கரைஏறினோமேன்று நினைவில்..
மற்றெல்லா நாட்களிலும் அந்த வெள்ளைச்சட்டை
விருமாண்டியண்ணன் வந்து விரட்டும் வரை
கனஜோராய் களைகட்டும் எங்கள் குளியலாட்டம்...!
லேசாக ஆரம்பிக்கும் விளையாட்டு தீவிரம் அடைவது
பால்காரர் பையன் அவுட்-தாகும் போதுதான்
அவன் சின்ன பையன் என்பதால் யாரும்
லேசுல சிக்கமட்டோம்;அவனும் விரட்டி பிடிச்சு
தொட்டுடுவான் கடையநல்லூர்காரன் மூர்த்திய..
இப்படியே மாறி மாறி ஆடும் ஆட்டம்
மதியம் போது பசிய தூண்டும்..
வெள்ளரி காட்டில் பளுத்ததமட்டும் தேடி
எடுத்துவந்து கொடுக்கும் படப்புவீட்டு
பரிதி மட்டும் எல்லோருக்கும் அண்ணன் ஆவான்
(அன்றுமட்டும் )
எல்லாரும் கரை ஏறி தலைதுவட்டி
முடிச்சது பின்ன முதஆளா தப்பிசிரனும்
இல்ல எவனாவது நம்மள மட்டும் தண்ணியில
தள்ளிடுவான்... இந்த விஷயத்தில் மட்டும் நான்
எப்போதுமே அலர்ட்..அடிக்கடி சிக்குவது
டிராக்டர் வேலு தான்..
இப்படியே சந்தோசங்களை கண்டே இருந்திருந்த
வெள்ளான்குழி கிணறு இன்று எதோ ஒரு சில
பெருசுகளை தவிர யாரும் சீண்டாமல்..!
பூசாரிமகன் சின்னத்தம்பி தவறி விழுந்து இறந்தும்
பூங்கொடியக்காவ காதலிச்ச செல்லதுரையண்ணன்
தற்கொலை செஞ்சுட்டதுக்காகவும்
பலியாகிப்போனது அந்த கிணறு...
இப்போது கூட இரவு மத்தியான நேரம்
அதைதாண்டி போக பயப்படும் சின்னபசங்களுக்கு
தெரியாது அந்த கிணறின் சின்னகுழந்தை கதறல்கள்..
-கார்த்திக் ராஜா....
No comments:
Post a Comment