தனிமையிலே நான் புலம்ப
எனக்குள்ளே துளிர்விட்ட காதல்செடி
காதல் நீருக்காய் தவிக்கிறது.........!!!
நீ வந்து நீருற்று...
ஏதோ ஒரு நீதிமன்றத்தில்..
நிலுவையில் இருக்கிறது..
இவர்களின் பாகபிரிவினை
வழக்கு...!
பிரிந்தே செல்லும்
தண்டவாளங்கள்...
பறவைகள் முட்டையிட்டு
குச்சு பொரிக்கும் என தெரிந்தும்
என் புத்தகத்தின் பல
பக்கங்களில் இன்னும்
குட்டி போட்டுக்கொண்டுதான் உள்ளது
நீ கொடுத்த மயில் இறகு...
மழை வரும்
பொழுதெல்லாம் என்னுள்
வந்து போகிறது
பள்ளி கூட மைதானத்தில்
நாம் ஒன்றாய் செய்து விட்ட
காகித கப்பல் ஞாபாகங்கள்
இன்றோ தனிமையில்
தள்ளாடிய படி நானும்
காகித கப்பலும்.....