Tuesday, August 23, 2011

அறிவோமா அறிவியல்:(உயிரியல் ) தொடர்ச்சி...

 சில விலங்கியல் வினோதங்கள்!

1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும்.
2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

3. உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

4. இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.


5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.

8. உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.

9. Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)


10. Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும். 11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.


12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.
13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.


14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.

1 comment:

Unknown said...

நல்ல பதிவு உங்களிடம் தேடுதல் வேட்கை அதிகம் உள்ளது நான் பதிவர்களில் புதியவன் அண்மைகால பதிவனும் கூட முகநூல் நட்பு பிளாக் வரை தொடர்வது மாசற்ற மகிழ்ச்சியே