Wednesday, January 25, 2012

ஜனவரி 26....





உணர்ச்சிகளை
மறக்கடித்துவிட்டு
வாய்க்கூசாமல்
வாழ்த்துக்களை
பரிமாறிக்கொள்கிறோம்

குடியரசு, மக்களாட்சி , ஜனநாயகமென்று...

அணு உலைக்கும்,
அணை உடைப்புக்கும்,
அந்நிய முதலீட்டுக்கும்,
போராட்டம் வெடித்தாலும்

புயலால் வாழ்வாதாரம்
சிதைக்கப்பட்டு
வலுவிழந்து போன
வங்கக்கரை மக்களுக்கு
நிவாரணம் தா”வென
வலக்கை நீட்டினாலும்

வீதி தோறும் வன்முறைக்கும்
வழிப்பறிக்கும் வினாடிக்கொருமுறை
மக்கள் வீழ்த்தப்பட்டுக்கிடந்தாலும்

சாதிக்க வழி இருந்தும்
சம்பாதிக்கத்துடிக்கும்
சரபோஜிக்களால்
சாமானியர்கள்... வீழ்த்தப்பட்டாலும்

இந்தியனென்றால் அந்நியத்தில்
அவமதிப்பு..
தமிழனென்றால் தன்நாட்டிலே
தாழ்ந்துதைப்பு...

ஊள்ளூருக்குள் நான்குசுவர் அறைக்குள்
அமர்ந்து கொண்டு
“இந்தியரென்று பெருமிதம்”
கூறிக்கொண்ட நிலையின் போதும்

நானில. நடுவன் ,அரசுகளின் கீழ் வெம்பி
நிற்கும் மக்கள் மனம்...!

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டும்
பொங்கல் நண்பணும் சரியில்லை
என விமர்சனக் குறிகளை
வேறு திசை திருப்பி...
வேதனைகளின் குறைக்கப்பார்க்கும்

சாமானிய மக்களே...
இந்த
வெற்று வார்த்தைகளால்
உங்கள் மனம்
சந்தோசப்பட்டுக்கொள்ளுமாயின்
நானும் பகிர்கிறேன் இனிய
“குடியரசு தின நல் வாழ்த்துக்கள்”

-கவிதைக்காரன்

No comments: