பார்க்கவும் பழகவும் பரம சாது. ரொம்ப அன்பானவன் . ஊரு கன்னியாகுமரி . இதோடு மூன்று வருடம் கடந்து நான்காவது வருடமும் வரப்போகிறது..
நல்ல நண்பன். ஏதாச்சும் தப்புப்பண்ணிட்டு சின்னப்புள்ளை மாதிரி முன்னாடி வந்து நிப்பான். தாறுமாறா திட்டுவேன.
நீ திட்டு சகல உன்னைவிட்டா யாருக்கந்த உரிமை இருக்குன்னு சிரிச்சுகிட்டே சொல்வான்.
குணத்திலே தங்கம். நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் பொண்ணு எடுப்போம்ன்னு பேசிக்கொண்டது இன்று வரைக்கும் சகல-ன்னுதான் கூப்பிட்டுப்போம்.
சமீபகாலனா ஆள் அடிக்கடி காணாமல் போய்டுறான். லவ்வுல சிக்கிட்டான் போல...
இவன்கிட்ட உள்ள கெட்டப்பழக்கம் சுமார் நூறு , நூத்திபுப்பத்தஞ்சு லவ்வு பண்ணிட்டு ஃபெயிலியராகிட்டேன்னு பாட்டுப் பாடியே கொல்வான்.
எதையும் தாங்கும் இதயமா மாறி இவன் நட்பை கையிலெடுத்து கடந்து கொண்டிருக்கிறோம்.
வீட்டில் பொண்ணு பார்க்குறாங்க (2013 டிசம்பர்-ல் எழுதுகிறேன்) சீக்கிரமே டும்... டும்.. டும்... இருக்கும்.! வாழ்த்துக்கள் சகல...
Pravin Raja
#ஆட்டோகிராஃப்_2013
|
வயதுக்கு வந்த
போது எடுத்த படம் |
|
Zambia ( kariba ) -வில் பயணத்தின் போது |
|
பரத நாட்டிய வகுப்பில் |
|
பிரவின் |
|
ரொம்ப தேடாதீங்க இதில் பிரவின் இல்லை... இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுதான்.
|
1 comment:
ஹஹா பிரவின் அண்ணா...
ஒரு நாள் உங்கள வரைட்டி டான்ஸ் ஆட வச்சு பாக்கணும்
ஜிம்பாலே ஜிம்பல ஜிம்பா... ஸ்பெசல் டான்ஸ்
Post a Comment