Wednesday, March 2, 2011

எம்தலைவர் சாகவில்லை என்றும் புலி ஒய்வது இல்லை................

  • ஈழம் தொடர் பான என் நண்பர்களின் கருத்துரையாடல்...
     
     
     
     
      பலம் பொருந்திய படையணியை வைத்தே ஒன்றும் செய்யமுடியவில்லை மீண்டும் அந்த நிலைக்கு திரும்பமுடியுமா
    about an hour ago · · 1 personSusi Kala likes this.
  • Yuvarajangurusamy Yuvi nallathu nadakkum
    about an hour ago · · 4 peopleLoading...
  • தமிழ் வீச்சு தமிழன் ஒன்று பட்டால் முடியாத்து எதுவும் இல்லைதமிழா முடியும் முடியும்
  • சாலினி சீரடிசாய் நம்பிக்கை இருந்தால் அனைத்துமே சாத்தியம் ...
    அனைத்துத் தமிழனும் ஒன்றுபட்டால் இருந்த படையை விட பன்மடங்கு பலம் நமக்குக் கிட்டும் ...

    எம்தலைவர் சாகவில்லை என்றும் புலி ஒய்வது இல்லை..
    தமிழனின் தாகம் தமிழீழ தாயகம் ...
    about an hour ago · · 3 peopleLoading...
  • Voiceof Tamilyouths போராட்ட வடிவம் மாறி விட்டது என்றே தோன்றுகிறது....
    about an hour ago · · 3 peopleLoading...
  • Sundar சுந்தர் அப்படி என்றால் அறவழி போராட்டமா......?
    59 minutes ago · · 1 personSusi Kala likes this.
  • இடி முழக்கம் வரும் ஆனால் வராது.................
    58 minutes ago ·
  • தமிழ் வீச்சு ‎////Voiceof Tamilyouths ///கொள்கைகள் மாறாது போராட்ட வடிவம்கள் மாறாம் எனதலைவர் கூறியது எனக்கு ஞாபகத்தில் உண்டு
    57 minutes ago · · 2 peopleLoading...
  • Sendil Kumar என் தலைவர் மீண்டும் வருவார்... எங்களை வழி நடத்துவார்.... என் தலைவரின் போராட்ட படையில் நானும் இடம்பெற காத்திருக்கிறேன்.... எங்கள் லட்சியம் வெல்லும்...
    57 minutes ago · · 3 peopleLoading...
  • Rajini Jayaraman aravali poratam endral mecham irukm em enam murttaga alithuvedum singala onaigal.
    55 minutes ago · · 1 personLoading...
  • Sundar சுந்தர் இடி முழக்கம்........... நீங்கள் ஏதோ கிண்டல் செய்வது போல் தோன்றுகிறது.....
    53 minutes ago · · 1 personLoading...
  • Voiceof Tamilyouths எகிப்து தொடர்ந்து இன்று அரபு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்களும் அதற்கு கிடைக்கும் அனைத்துலக ஆதரவும்.....சிந்தனையை தூண்டுகின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை....அதே நேரம் தலைவரின் வரவையும் எதிர் பார்க்கிறேன்....
  • Sundar சுந்தர் உலக நாடுகள் அவை (ஐநா) எகிப்தை மனித உரிமை மீறல் என்று உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் ஆனால் இலங்கைக்கு அந்த நிலை ஏற்படவில்லை......
    47 minutes ago · · 6 peopleLoading...
  • Sundar சுந்தர் எகிப்து மக்கள் மீது குண்டு வீசும் வானுர்தியை சுட்டு வீழ்த்த போவதாக இங்கிலாந்து சொல்லியிருக்கிறது..... அமெரிக்க கப்பல்கள் அங்குவிரைகிறது...... ஆனால் இலங்கையில்.........?
    44 minutes ago · · 5 peopleLoading...
  • Sendil Kumar இந்த போட்டோவை பாருங்கள் உணர்வு அற்றவனுக்கு கூட உணர்ச்சி பொங்கும்..., என் தலைவர் சிரித்து பார்த்தாலே நான் கண் இமைக்காமல் பார்ப்பேன்... இந்த படத்தை பாக்கும் போது ரத்த நாளங்கள் முறுக்கேறி துடிக்கின்றது.... (குடும்ப எதிர்பார்ப்பு எதுவும் இன்றி என் இனம் என் மக்கள் என் நாடு என்று சுயநலம் அற்று எங்கள் நலன் கருதி தனது உயுரையும் துச்சமாக மதித்த எங்கள் சத்ரியனுக்கு என்றும் சாவில்லை... இது திண்ணம்.... வருவார் புதிய வேகத்துடன் புதிய திட்டத்துடன்...) இனி வரும் காலம் தலை தூக்க முடியாது சிங்கள நாய்களால்....
    40 minutes ago · · 3 peopleLoading...
  • Voiceof Tamilyouths மேற்கு நாடுகளின் போக்கு என்பது அவைகளின் தனிப்பட்ட நலன் சம்பந்தப்பட்டே இருக்கும் அவைகளால் அமைக்கப்பட்ட ஐநாவும் அப்படியே...இதையும் தாண்டிய முக்கிய காரணம்...இந்தியா...தலைவரின் ஒரே ஒரு தவறான முடிவு...விளைவுகள்...???ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இதையே சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை....
    38 minutes ago · · 4 peopleLoading...
  • Sundar Vadivel
    மொதல்ல நமக்கு தேவை தலைமை ...தலைமை இல்லாமல் துரோகிகள் இன்று நம்மை குழப்பம் விளைவிகின்றனர் ...இதற்கு ஒரே தீர்வு தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை புறம் தள்ளி அவர் வரும் வரை உண்மையான தலைமை யார் என்பதை அடையலாம் காண வேண்டும் ...இல்லை மாவீரர் கனவு... வெறும் கனவாக போய்விடும் ...இன்று எல்லோரும் தேசிய தலைவர் பெயரை பயன் படுத்துகிறார்கள் ,இதற்கு முதலில் ஒரு முற்று புள்ளி வேண்டும் ...புலிகள் தலைமை இதை கருத்தில் கொண்டு தாம் வரும்வரை இவர் உங்களை வழிநடத்துவார்கள் என்று தெளிவான பாதை வகுகவேண்டியது புலிகளின் கடமை ...இல்லை இந்த மண்ணுக்கும்,மக்களுக்கும் அவர்கள் செய்த தியாகம் வெறும் கதைகள் ஆகிவிடும் ...நமது கனவுகளும் நீர்த்து போய்விடும்See More
    37 minutes ago · · 7 peopleLoading...
  • Voiceof Tamilyouths Sundar Vadivel நூற்றில் ஒரு வார்த்தை.....!
  • தமிழ் வீச்சு http://www.youtube.com/watch?v=QqK5iCEnYak&feature=player_detailpage%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4 பாடல் உங்களில் பலபேன் கேள்விக்கு பதில் அழிக்கும்
  • Muthu Kumar
    நண்பர்களே இதற்க்கு முக்கியக் காரணம் நம்மில் ஒற்றுமை இன்மையே;

    இனவாதம் இந்தியாவையும் தொட்டுவிட்டது;கேரள மாநிலத்தில் வழக்கறிஞர் வீட்டிற்கு வீட்டு வேலைக்குச் சென்ற தமிழ் பெண்ணை நிர்வாணமாக நாய்க் கூண்டில் அடைத்து வைத்தும்;சிகரெட்டால் சூடுப் போட்...டும் சித்திரவதைச் செய்துள்ளனர்;அப்பெண் கடலூரில் மருத்துவமனையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
    இலங்கையில் எம் தொப்புள் கொடி உறவுகள் சாவுக்கு காரணமானவர்களும் மலையாளிகளே..நிரூபம்மா மேனன்;சிவ சங்கர் மேனன்;எம்.கே.நாராயணன்;விஜய் நம்பியார்...தமிழா இனியும் தூங்காதே...அழுத்தப் பிள்ளைதான் பால் குடிக்கும்.....நீ உன் தலைவனை நம்பி இன்னும் முட்டாளாகவே இருக்காதே....சிங்கள இனவாதத்தைப் போன்று இந்தியாவில் மலையாள இனவாதம் உன்னை அழித்துவிடும்......
    நண்பனே இன்று கடலூர் பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு நாளை உனக்கோ அல்லது உன் வீட்டில் ஒருவருக்கோ அவ்வளவு என் எனக்கும் கூட ஏற்படலாம்...அதற்குள் நீ விழித்துக் கொண்டாள் நம் இனம் காக்கப் படும்....இல்லையேல் எதிர்கால தமிழனின் நிலை???????????????????????????????
    See More
  • Muthu Kumar ‎@sundar..நண்பரே பலம் இங்கு முக்கியம் இல்லை;மன தைரியம் தான் முக்கியம்;சிங்கள ராணுவத்தில் இருப்பவன் உயிருக்குப் பயந்தவன்;நம்மில் இருப்பவன் உயிரைக் கொடுக்கத் துணிந்தவன்
  • Susi Kala
    எம்தலைவர் சாகவில்லை ,என்றும் புலி ஓய்வதில்லை
    தலைவர் விரைவில் வருவார்,சிங்களவனுக்கு சாவு மணி அடிக்க தலைவன் வருவான் தக்க தருணத்தில்..
    அதுவரை பொறுங்கள். அதிரடியாய் தொடங்கும் ஐந்தாம் கட்ட ஈழப்போர்!!! அது ஒர் உலகப்போர்!!!!
    தமிழீழம் நாளை நிச்சயம் ம...லரும்...
    *தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்* .
    See More
  • Voiceof Tamilyouths இதற்கு ஒரே வழி தமிழகத்தில் உள்ள நடுத்தர ஏழை வர்க்க தமிழ் உணர்வு மிக்க இளையோர்கள் தமிழக மற்றும் இந்திய அரசியலில் பங்கு பெறவேண்டும்...அப்போது தான் ஈழத் தமிழர்கள் உட்பட தமிழர்கள் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கும்....
    2 minutes ago · · 2 people
35000 கோடியை குறிவைக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்

“உலக வங்கி மற்றும் அதன் சகோதர நிறுவனங்களிலிருந்து வந்த நிதி ஏழைகளுக்கு உதவக் கூடியது போலத் தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில் ஒரு சில செல்வந் தர்களுக்குப் பயனளிக்கும் திட்டங் களுக்கு மட்டுமே வழங்குவோம். பன்னாட்டு நிறுவனங்கள் ஆசைப் படும் ஒரு நாட்டை இயற்கை வளங்கள் உள்ள ஒரு வளரும் நாட்டை நாங்கள் தெரிவு செய்வோம். அந்நாட்டுக்கு மிகப் பெரிய கடன் கிடைக்க ஏற்பாடு செய்வோம். பின்னர் அந்தப் பணத்தின் பெரும்பகுதியை எங்களது பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கும் அந்த வளரும் நாட்டிலுள்ள எங்களது கூட்டாளிகள் சிலருக்கும் திருப்பி விடுவோம்” என்று அமெரிக்கப் பேரரசின் ரகசியப் பணிகளை விளக்கும் நூலில் ஜான் பெர்கின்ஸ் தனது பொருளாதார அடியாள் வேலையைப் பற்றிக் குறிப்பிடுவார்.

உலக வங்கியாக தமிழக அரசை நினைத்துக் கொள்ளுங்கள். திட்டம் புரியும். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றித் தரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் கடனுதவிதான் (ஜான் பெர்கின்ஸ் சொன்னது போல்) ஒருசில செல்வந்தர்களுக்குப் போய் கொண்டிருக்கிறது. ஜான் பெர்கின்ஸ் கூறியது அப்படியே பொருந்துவது போல, இத்திட்டத்தின் பயன் முழுக்க முழுக்க கட்டுமான தொழிலுக்குப் போகிறது. தமிழகத்தில் சில வாரங்களாக ஏறி வரும் சிமெண்ட், செங்கல், மணல், கம்பி, கருங்கல் விலையை உற்று நோக்கினால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய சிமென்ட் வரலாற்றிலேயே 120 விழுக்காடு விலையேற்றம்:

கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதன் பணிகள் முழு வீச்சில் தொடங்கிய சில நாள்களில், 50 கிலோ கொண்ட ஒரு மூடை சிமென்ட்145 ரூபாயிலிருந்து 320 ரூபாயாக (120 விழுக்காடு) உயர்ந்திருக்கிறது. ஒரு லாரி செங்கல் (4500 செங்கல்கள்) கடந்த மாதம் 16,500 ரூபாய். தற்போது 27,500 ரூபாய்! 2 யூனிட் மணல் ரூ.4,500லிருந்து ரூ.6,500 ஆகிவிட்டது. இன்றைய நிலவரப் படி, தங்க விலையை விட தினசரி உயர்ந்து கொண்டிருப்பது கட்டு மானப் பொருட்களின் விலைதான். வட கிழக்குப் பருவமழை துவங்கி விட்டால் விலை இன்னும் உயரலாம்.


கடந்த ஆறு மாதங்களில் சிமென்ட் உற்பத்தி செய்வதற்கு பயன் படுத்தப் படும் மூலப் பொருள்களின் விலை உயரவில்லை. அரசாங்கம் சிமென்ட்டிற்கான கனிமப் பொருள்களுக்கு நீண்ட காலக் குத்தகையை மிகவும் குறை வாகவே தீர்மானித்து வழங்கி வருகிறது! வேறு எந்த வரி உயர்வும் தற்போது விதிக்கப் படவில்லை. தமிழகத்தில் வேறு எந்த அதிசயமும் அரங்கேறி விடவில்லை. அப்படியிருக்க சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் 100 விழுக்காடு விலையேற்றத்தின் கமுக்கம், கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கே வெளிச்சம்!

நான்கு கட்டமாக “நாமம்’

200 சதுர அடி பரப்பளவில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ளலாம். இதற்கு அதிகபட்சத் தொகையாக 75,000 ரூபாய் மானியமாக அரசு வழங்குகிறது. கூடுதலாக ஆகும் செலவை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

மானியத் தொகையில் வீட்டிற்குத் தேவையான இரும்பும் கம்பி, சிமெண்ட், கதவு, ஜன்னல் ஆகியன வழங்கப்படும். அதற்கான தொகை பட்டியலில் பிடித்தம் செய்யப் பட்டு, மீத முள்ள தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

அதாவது, முதல் கட்டமாக அடித்தளம் அமைக்க பயனாளி ஒருவருக்கு ரூ.9,817 வழங்கப் படுகிறது. இதில், சிமென்ட்டுக்கு ரூ.2,400 போக மீதி ரூ.7,417 பயனாளியிடம் கொடுக்கப் படுகிறது. இரண்டாவது கட்டமாக, ஜன்னல் மட்டம் வரை கட்ட ரூ.13,911 வழங்கப்படுகிறது. இதில், சிமென்ட் மற்றும் கம்பிக்கென ரூ.8,580 போக மீதி ரூ.5,331 பயனாளியிடம் வழங்கப்படுகிறது. மூன்றாவது கட்டமாக, கூரை மட்டம் வரை கட்ட ரூ.24,485-ல், சிமென்ட் மற்றும் கம்பிக்கு ரூ.21,085 போக மீதி ரூ.3,400 பயனாளியிடம் வழங்கப் படுகிறது.

இறுதியாக, ரூ.26,787-ல் சிமென்ட் மற்றும் கம்பிக்கு ரூ.9,005 போக மீதிப் பணமான ரூ.17,782 பயனாளியிடம் வழங்கப்படுகிறது. இதில், கழிப்பறை வசதிக்காக ரூ.2,200 என மொத்தம் பயனாளி ஒருவர் வீடு கட்ட ரூ.77,200 அரசு வழங்குகிறது.

இதில் முன்பணமாக ஏதும் வழங்கப்படமாட்டாது. மானியத் தொகை அடித்தளம், கூரை, கான்கிரீட், இறுதிநிலை என நான்கு கட்டங்களாக கிராம ஊராட்சிகள் மூலம் வழங்கப்படும். இத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்ட 2250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

35 ஆயிரம் கோடி மாபெரும் ஊழல் :

குடிசை வீடுகளை மாற்ற அரசு 75 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்குகிறது என்பதால் இருக்கும் குடிசையை இடித்துவிட்டு தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேர் கான்கிரீட் வீடுகளை இத் திட்டத்தின் கீழ் கட்டி வருகிறார்கள். சதுர அடிக்கு குறைந்த பட்சம் 1,200 ரூபாய் என 200 சதுர அடியில் வீடு கட்ட கிட்டத்தட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் தேவைப்படும். ஒரே நேரத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு 7,200 கோடி ரூபாய் புழக்கத்தில் வருகிறது. இதில் அரசு செலுத்தும் 2,250 கோடியை கழித்துக் கொண்டால் கூட வீடு கட்டும் 3 இலட்சம் பேரும் மொத்தமாக 5 ஆயிரம் கோடியை ஒரே நேரத்தில் கட்டுமானப் பணியில் செலுத்துகின்றனர்.

இது வெறும் 3 லட்சம் வீடுகளுக்கு மட்டும். அடுத்தடுத்த கட்டங்களில் மொத்தம் 21 இலட்சம் வீடுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மானியம் வழங்கப்படும். அப் படியானால் குறைந்த பட்சம் 35 ஆயிரம் கோடி! இதனை கணக்குப் போட்டுத் தான் இப்படி யொரு திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது. சிமெண்ட் உற்பத்தியாளர்களுக்கும், கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்யும் முதலாளி களுக்கும் இலாபத்தை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

குடிசை வீட்டில் வசிப்பதை கௌரவ குறைவு என்று மக்களின் மனதில் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியும் கான்கிரீட் வீட்டின் மீது மோகத்தை உருவாக்கியும் 100 விழுக்காட்டுக்கும் மேல் கட்டுமானப் பொருட்களின் விலையை ஏற்றி விட்டனர். இப்போது குடியிருந்த குடிசை வீடும் போய்விட்டதே என்று பயனாளிகள் பலரும் வேதனையுடன் புலம்பு வதை தினமணி உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

அதிகாரிகளுக்கும் அழ வேண்டும்

இத்திட்டத்தின் கீழ், முன் பணம் எதுவும் வழங்கப்படுவ கிராம ஊராட்சிகள் மூலமே 4 கட்டங்களாக தொகை வழங் கப்படுகிறது. அதிலும் சிமென்ட், கம்பி, ஜன்னல் போன்றவற்றிற்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையே கைகளில் தரப் படுகின்றது.

தி.மு.க. பிரமுகர்களின் அச்சுறுத்தல்கள்...

எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளூர் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் பயனாளிகளைப் படுத்தும் பாட்டை சொல்லி மாளாது. அந்தத் தி.மு.க. பிரமுகர்கள் அனுப்பி வைக்கும் சித்தாள்கள், கொத்தனார்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்கமாக இவர்கள் கேட்கும் தினக் கூலியும் அதிகம். இதில் பயனாளியும், தொழி லாளர்களும் என இருதரப்பும் ஆளும் கட்சிப் பிரமுகருக்கு கமிஷன் தரவேண்டும். அந்தப் பிரமுகரைத் தவிர்த்து விட்டு வேறு நபர்களை கட்டுமானப் பணிக்கு அழைத்து வந்தாலோ உள்ளூர் தி.மு.க. பிரமுகருக்கு கமிஷன் தர மறுத்தாலோ மானியத் தொகையை வாங்கவே முடியாத நிலை உருவாகும் என பயனாளிகள் மிரட்டப்படுகிறார்கள்.

பெருநகரவாசிகளும் இதற்கு விலைகொடுக்க வேண்டும்

இது ஏதோ, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு மட்டுமான சிக்கல் என்று நினைத்து விட வேண்டாம். இத் திட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் அடிக்க சிமெண்ட் உற்பத்தியாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள், மணல் விற்பனையாளர்களால் தமிழகம் முழுவதும் கட்டுநர்கள் மிகுந்த சிக்கலில் உள்ளனர். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட தொகையில் வீடு கட்டித் தரமுடியாத சூழ்நிலையால் கையைப் பிசைந்து கொண்டிருக் கிறார்கள். வீடு கட்டும் நடுத்தர மக்களும் அடுத்து எதை அடமானம் வைக்கலாம், எதை விற்கலாம் என பாதியில் நிற்கும் வீட்டை கட்டி முடிக்கும் வேதனையில் தவித்து வருகின்றனர். இதனால் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் விலை ஏறுவதோடு கூடுதலான கட்டுமான செலவை சமாளிக்க வீடுகளின் வாடகை உயரும். புதிய வீடுகளின் வாடகை உயரும் போது ஏற்கெனவே வீடு வாடகைக்கு விட்டிருப்போரும் வீட்டு வாடகையை உயர்த்தப் போகிறார்கள்.

ஆற்றுமணலுக்கும் பேராபத்து

தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆற்று மணலை கணக்கின்றி அள்ளி அண்டை மாநிலங்களுக்கும் விற்று கொள்ளை லாபம் ஈட்டுவது வாடிக்கையாகி விட்டது. மென் பொருள் துறையின் வீழ்ச்சி, உலகப் பொருளாதார சரிவு ஆகிய காரணங்களால் கட்டுமானப் பணிகள் சற்று இறங்கு முகத்தில் சென்று கொண்டிருந்தன. அவற்றைத் தூக்கி நிறுத்தும் விதமாக தி.மு.க. பொருளாதார அடியாட்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் உருவாகியிருக்கிறது.

பெருநகர் மற்றும் நகர்ப் பகுதிகளில் மட்டும் நடந்து வந்த கட்டுமானப் பணிகளை கிராமப் பகுதிகளிலும் நீட்டிப்புச் செய்யவே 75 ஆயிரம் மானியம் என்ற கவர்ச்சியுடன் மக்களை சந்தித்திருக்கிறார், கருணாநிதி. இப்போது மக்களும் ஏமாந்து போய் இத்திட்டத்தின் கீழ் வெறும் 75 ஆயிரம் மானியத்துக்காக 3 லட்சம் வரை இழக்கத் தயாரானது ஒருபுறம் இருக்க, ஆற்று மணலை முன்பைவிட வேகமாக கொள்ளையடிக்க கும்பல் தயாராகிவிட்டது.

ஒரே நேரத்தில் 3 இலட்சம் வீடுகள் கட்டப் படுவதால் அவற்றிற்குத் தேவையான மணலை அள்ளி தமிழகத்தின் நீராதாரத்தை விழுங்கச் செய்ய கருணாநிதி பச்சைக் கொடி காட்டிவிட்டார். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மணல் கொள்ளை கும்பலுக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அட்சயப் பாத்திரமாகியிருக்கிறது. என்ன செய்திருக்க வேண்டும்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ளதைப் போன்றே சிமென்ட் விலை உயர்வு ஏற்பட்ட போது தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் மூலம் சிமென்ட் மொத்தமாகத் தேவைப் படுவோருக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப் பட்டு வழங்கப் பட்டது. அந்தத் திட்டத்தின் மூலம் உரிய தொகைக்கு வங்கி வரைவோலை எடுத்துக் கொடுப்ப வர்களுக்கு ஒரு வாரத்தில் சிமென்ட் கிடைத்தது. தொடர்ந்து சிமென்ட் வர வழைப்பதில் ஏற்பட்ட சிக்கல், விநியோகத்தில் ஏற்பட்ட கால தாமதம் போன்ற வற்றால் அந்தத் திட்டம் கிடப்பில்போடப் பட்டதாகக் கருணாநிதி அரசு சொன்னாலும் சிமென்ட் உற்பத்தியாளர்களின் கொள்ளை இலாபத்துக்கு வழிவிட்டே இத் திட்டம் கைவிடப் பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க இத் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். ஆனால் தேர்தல் நெருங்கி வருகிறது. திருமங்கலம் பாணி தேர்தலை நம்பியிருக்கிறது, தி.மு.க. இப்படியான சூழ்நிலையில் அரசு கருவூலத்தில் உள்ளதையெல்லாம் நலத் திட்டம் என்ற பெயரில் பெரு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி விட்டு அதற்குக் கூலியாக அவர்களிடம் பெட்டி பெட்டியாக கையூட்டுப் பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு தேர்தலைச் சந்திக்கக் கருணாநிதி குடும்பம் முடிவு செய்திருக்கிறது. ஓட்டாண்டி ஆவது குடிசை வாசிகள்தாம்!

நன்றி:கீற்று...

குரங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்

ஒரு நாள் புத்தரிடம் ஒருவர் வந்தார்..
"புத்தரே, நீங்கள் எப்படி தன்னை உணர்ந்து கொண்டீர்கள்? உண்மையை எவ்வாறு உணர்ந்தீர்கள்? அதை தயவு செய்து எனக்கும் சொல்ல முடியுமா? நானும் உங்களைப்போல மிகப்பெரிய ஆளாகி மற்றவர்கள் என்னை புகழும் அளவிற்கு வரவேண்டும்"
என வெளிப்படையாக புத்தரிடம் கேட்டுவிட்டார்..
புத்தர் சிரித்துக்கொண்டே கூறினார்,
"இவ்வளவு தானே, மிகச் சுலபலம்,

புத்தம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரனம் கச்சாமி,

இது தான் மந்திரம், இதை ஒரு மணி நேரம் தியானிக்க வேண்டும். அவ்வளவு தான்
"
என்றார்.
வந்தருக்கு மிக மகிழ்ச்சி. இவ்வளவு தானே. இதோ போகிறேன். தியானம் செய்கிறேன் என்று வீட்டுக்கு ஓடினார்.
புத்தர் அவரைத் திரும்ப கூப்பிட்டு கூறினார்.
"இதை நீங்கள் தியானிக்கும் போது 'குரங்கை' நினைக்கக்கூடாது" என்றார்.
வந்தவர் "இவ்வளவு தானே. அப்படியே ஆகட்டும்" என்று வீட்டுக்கு வந்தார்.
வெளியே வரும் போதே அவருக்கு பார்க்கும் இடம் எல்லாமே குரங்காகவே தெரிந்தது. வீட்டுக்கு வந்தார் வீட்டில் எல்லாம் இடமும் குரங்குகள் நிறைந்திருப்பது போலவே அவருக்கு எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.
பூஜை அறைக்கு வந்தார். அமர்ந்தார், தன் மேல் குரங்குகள் ஏறி விளையாடுவதைப்போன்றே உணர்வு.
குரங்கைத்தவிர வேறு எதையும் அவரால் ஒரு வினாடி கூட தியானிக்க இயலவில்லை.
ஒடினார் புத்தரிடமே..
"புத்தரே, என்னை இந்த குரங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்" என காலில் வீழ்ந்தார்...
நம் மனமும் இவ்வாறுப்பட்டதே. எதை நினைக்கக்கூடாது என நினைக்கிறோமோ.....
இங்கேயே 'நினைக்கிறோம்' என்பது வந்துவிட்டது. மனம் மிக சூட்சுமமானது. எதை வெறுக்கிறோமோ அதையே நினைத்துக்கொண்டிருக்கும்.
ஆன்மீகவாதியை விட நாத்திகனே கடவுளை அதிகம் நினைக்கிறான் என்பது இதனாலேயே..

Tuesday, March 1, 2011

ஒரு ராஜா வின் மந்திரி ரொம்ப அறிவாளி. எல்லாவற்றிற்கும் நல்ல தீர்வை சீக்கிரமே கொடுத்துவிடுவார். இராஜா இவரை சோதிக்க ஒரு சோதனை வைத்தார்..
அவர் அந்த மந்திரையை அழைத்து இவ்வாறு சொன்னார்
"எனக்கு ஒரு மந்திர மோதிரம் வேண்டும். அது நான் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதை பார்த்தால் எனக்கு துக்கம் வந்துவிட வேண்டும். வருத்தமாக இருக்கும் போது அதை பார்த்தால் மகிழ்ச்சியாகிவிட வேண்டும்"
அமைச்சர் குழம்பிப்போனார்..
அமைச்சருக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுத்து அனுப்பி வைத்தார் அரசர்..
அமைச்சர் தேடித்தேடி அலைந்து போனார். காலக்கெடு முடிவடையும் தருவாயில் அமைச்சர் அசரனிடம் வந்தார்.
அவர் கையில் ஒரு சாதாரண மோதிரம் இருந்தது.
அமைச்சர் "அரசே இதோ நீங்கள் கேட்ட மோதிரம்: என அசரிடம் அம்மோதிரத்தை கையளித்தார்.
அரசருக்கு வியப்பு. அப்படி என்ன அதில் இருக்கிறது எனப்பார்க்க அதில்
"இதுவும் கடந்து போகும்" என எழுதப்பட்டிருந்தது."
அதிக மகிழ்ச்சியையும் அதிக கவலையையும் தடுக்ககூடிய இது ஒரு பிரபலமான தாரக மந்திரம்.
இவ்வாசகத்தை நாம் மகிழ்ச்சியில் நினைத்துக்கொண்டால் மகிழ்ச்சியால் மதிமயங்காமல் இருக்கவும், தலைக்கனம் வராமல் இருக்கவும் உதவும்.
இதே மந்திரத்தை கவலையாக இருக்கும் போது நினைத்தால் கவலை மாறும் என்ற தன்னம்பிக்கை வந்துவிடும்.
எனவே இம்மந்திரத்தை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
ரசனையோடு கட்டப்படும் குழந்தைகளின் 
மணல் வீடுகளை...
கரைத்து செல்லும் 
ரசனை இல்லா
கடல்...

ஆட்டு குட்டி...


கசாப்பு கடைக்காரனின் கத்திக்கு பலியாக...
எங்கோ பிறந்திருக்கிறது...
இன்று ஒரு ஆட்டு குட்டி...

 
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி..



...
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம்
80
ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம்
வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து
கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா
பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி
அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன்
விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு
கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள்
குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது
செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது
குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம்.
குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய
துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு
சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு
மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த
பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக
பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும்
பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய்
பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய்
விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி
அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர்
செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில்
குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32
கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர்
தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை
நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ்
சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர்
மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை
நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள்
பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

தகவல் தோழர்