ஒரு நாள் புத்தரிடம் ஒருவர் வந்தார்..
"புத்தரே, நீங்கள் எப்படி தன்னை உணர்ந்து கொண்டீர்கள்? உண்மையை எவ்வாறு உணர்ந்தீர்கள்? அதை தயவு செய்து எனக்கும் சொல்ல முடியுமா? நானும் உங்களைப்போல மிகப்பெரிய ஆளாகி மற்றவர்கள் என்னை புகழும் அளவிற்கு வரவேண்டும்"
என வெளிப்படையாக புத்தரிடம் கேட்டுவிட்டார்..
புத்தர் சிரித்துக்கொண்டே கூறினார்,
"இவ்வளவு தானே, மிகச் சுலபலம்,
புத்தம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரனம் கச்சாமி,
இது தான் மந்திரம், இதை ஒரு மணி நேரம் தியானிக்க வேண்டும். அவ்வளவு தான்
"
என்றார்.
வந்தருக்கு மிக மகிழ்ச்சி. இவ்வளவு தானே. இதோ போகிறேன். தியானம் செய்கிறேன் என்று வீட்டுக்கு ஓடினார்.
புத்தர் அவரைத் திரும்ப கூப்பிட்டு கூறினார்.
"இதை நீங்கள் தியானிக்கும் போது 'குரங்கை' நினைக்கக்கூடாது" என்றார்.
வந்தவர் "இவ்வளவு தானே. அப்படியே ஆகட்டும்" என்று வீட்டுக்கு வந்தார்.
வெளியே வரும் போதே அவருக்கு பார்க்கும் இடம் எல்லாமே குரங்காகவே தெரிந்தது. வீட்டுக்கு வந்தார் வீட்டில் எல்லாம் இடமும் குரங்குகள் நிறைந்திருப்பது போலவே அவருக்கு எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.
பூஜை அறைக்கு வந்தார். அமர்ந்தார், தன் மேல் குரங்குகள் ஏறி விளையாடுவதைப்போன்றே உணர்வு.
குரங்கைத்தவிர வேறு எதையும் அவரால் ஒரு வினாடி கூட தியானிக்க இயலவில்லை.
ஒடினார் புத்தரிடமே..
"புத்தரே, என்னை இந்த குரங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்" என காலில் வீழ்ந்தார்...
நம் மனமும் இவ்வாறுப்பட்டதே. எதை நினைக்கக்கூடாது என நினைக்கிறோமோ.....
இங்கேயே 'நினைக்கிறோம்' என்பது வந்துவிட்டது. மனம் மிக சூட்சுமமானது. எதை வெறுக்கிறோமோ அதையே நினைத்துக்கொண்டிருக்கும்.
ஆன்மீகவாதியை விட நாத்திகனே கடவுளை அதிகம் நினைக்கிறான் என்பது இதனாலேயே..

No comments:
Post a Comment