Wednesday, March 23, 2011

சேற்றில் மட்டுமே சிந்தியதால்..

யந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம்
இன்று சிறகுகள் முளைத்து
சந்திரனில் பறக்கும் தட்டுகளாய் !
 ஆனால்
 இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும்
இன்னும் கலையாத கனவுகளாய்
மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன்
ந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம்
இன்று தந்திர நரிகளாய்
வற்றிப்போன கண்ணீரிலும் ,
ஒட்டிப்போன வயிற்றிலும்
இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை மட்டுமே
கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்கிறான் ,
அஞ்சிக் கேட்டால் கோழை என்கிறான்
இவைகளில் இன்னும் மிச்சம் இருக்கும் சுதந்திரம்
எங்கள் கிழிந்த ஆடைகளில் மட்டுமே !
ற்றிக் கட்டிய கோவணம்,
சூரியனை மிரட்டும் இருட்டுத் தேகம் ,
வற்றிப்போன நதியாய் இவனின் இரத்தம்,
வற்றாத கடலாய் இவனின் உழைப்பு என
அனைத்தையும் குழைத்து ஏர் பிடித்து
பூமி கிளரிய பழைய மனிதன் இன்று
பாடப் புத்தகங்களில் மட்டுமே காட்சித் தருகிறான்.
வியர்வைகளை சேற்றில் மட்டுமே
 சிந்தியதால்தான் என்னவோ
இன்னும் அழுக்காகவே இருக்கிறது
என் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை !

No comments: