கழநியிலே நெல் எடுத்து -அதை
பக்குவமாய் முத்தாக்கி
பாலெடுத்து பொங்கலுக்கு
பானை வைப்பார் அம்மா...!
வெண்ணிற பால் பொங்கிவர
கரும்பு இளநீருடன் முக்கனியும்
படையல் வைப்பார் அப்பா..!
இதை எண்ணி எண்ணியே
பொங்குதடா என்மனம்
பணத்துக்காய் ஆசை கொண்டு
பசி தீர்த்த நிலத்தை விற்று...
பறி கொடுத்தேனடா என் இன்பத்தை
அன்னிய நாட்டினிலே அடிமையாய் நானும்
கடிகாரத்தை விட வேகமாய்
வாழ்கையெனும் படகினிலே...!
தினமும் பொங்குமடா என்மனம் -
இனி எங்கே வைப்பேன் என் பொங்கலை..
மீட்டிட முடியாது போனது எந்தன் நிலம்.. வெள்ளைக்காரனின் வெள்ளை நிற கட்டிடமொன்று எழுந்து நிற்கிறது என் நஞ்சையில்...
விதவைகோலத்தில்...என் விளைநிலம்..
பொங்குகிறது.... என் கண்ணில் குளம்...
பக்குவமாய் முத்தாக்கி
பாலெடுத்து பொங்கலுக்கு
பானை வைப்பார் அம்மா...!
வெண்ணிற பால் பொங்கிவர
கரும்பு இளநீருடன் முக்கனியும்
படையல் வைப்பார் அப்பா..!
இதை எண்ணி எண்ணியே
பொங்குதடா என்மனம்
பணத்துக்காய் ஆசை கொண்டு
பசி தீர்த்த நிலத்தை விற்று...
பறி கொடுத்தேனடா என் இன்பத்தை
அன்னிய நாட்டினிலே அடிமையாய் நானும்
கடிகாரத்தை விட வேகமாய்
வாழ்கையெனும் படகினிலே...!
தினமும் பொங்குமடா என்மனம் -
இனி எங்கே வைப்பேன் என் பொங்கலை..
மீட்டிட முடியாது போனது எந்தன் நிலம்.. வெள்ளைக்காரனின் வெள்ளை நிற கட்டிடமொன்று எழுந்து நிற்கிறது என் நஞ்சையில்...
விதவைகோலத்தில்...என் விளைநிலம்..
பொங்குகிறது.... என் கண்ணில் குளம்...
No comments:
Post a Comment