Thursday, March 3, 2011

இலங்கையின் புதிய தாக்குதல் படகுகள்: பெரும் சந்தேகம்!

இலங்கை கடற்படையினரால் வடிவமைக்கப்பட்ட கரையோர சுற்றுக்காவல் படகு ஒன்று கடந்த 1ம் திகதி முதல் கரையோர காவல் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த படகின் மூலம் தமிழக மீனவர்கள் மேலும் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம் எனக் கருதப்படுகின்றது. புதிய தாக்குதல் படகுகளை வடிவமக்கும் முயற்சிகளை சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் "அரோ" ரக சிறிய தாக்குதல் படகுகளை வடிவமைத்து கடற்படையின் கொமோண்டோ அணிகளுக்கு சிறீலங்கா கடற்படையினர் வழங்கியிருந்தனர்.

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள படகு சிறீலங்கா கரையோர காவல்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாலாவது ஈழப் போரின் போது 200 அரோ படகுகளையும், 103 உட்கரையோர சுற்றுக்காவல் படகுகளையும் தாம் வடிவமைத்திருந்ததாக சிறீலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் திஸ்ஸாநாயக்கா இந்த நிகழ்வில் பேசும்போது தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் ஒரு தாக்குதல் படகை கட்டும்போது நாம் 10 படகுகளை கட்டியிருந்தோம். இந்த படகுகள் விடுதலைப்புலிகளின் படகுகளை ஒத்தவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், புதிய கரையோர தாக்குதல் படகுகள் மூலம் சிறீலங்கா கடற்படையினர் பாக்குநீரிணையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அதிக சேதங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நன்றி.. voice of tamil youths   

No comments: