Saturday, March 12, 2011

இவனை காக்க ஏதுமில்லை ஒரு சட்டம்

ஈரைந்து வயதினிலே
ஓரைந்து உடன் பிறப்புகள் இவனுக்கு
உழைத்து சம்பாதித்து காக்கும்
பொறுப்பு இவனுக்கு...
நாள் முழுக்க உழைத்திட்டாலும்  
பெறுமானமில்லா வருமானம்
இவனுக்கு... ஆனாலும் காக்கிறதே
தன்மானம்...
இப்படியே தொடர்கிறது வாழ்க்கை சில காலம்...
இப்போதோ வந்து விட்டது இவனுக்கு போதாத காலம்..
குழந்தை தொழிலாளர் தடை சட்டம்...
இவனுக்கு பயனோ வேலை நீக்கம் மட்டும்...

உழைத்து தின்றிருந்தவன் அந்தோ பரிதாபமாய் வீதி பிச்சை எடுக்க...

இப்போது இவனை காக்க ஏதுமில்லை ஒரு சட்டம்...

No comments: