பப்லு குறும்புச் சிறுவன். ஆனால் இன்றைக்கு ஏனோ சும்மா, அமைதியாக உட்கார்ந்திருந்தான். உள்ளே இருந்து அவனுடைய தாயார் கத்தினார். ‘ஏய் பப்லு, என்ன செஞ்சுகிட்டிருக்கே?’
‘சும்மாதான்ம்மா இருக்கேன்’ என்றான் பப்லு.
’பொய் சொல்லாதே’ என்று கத்தினார் அம்மா. ‘உன்னால சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது. ஏதாவது குறும்பு செஞ்சுகிட்டிருப்பே!’
பப்லு யோசித்தான். கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து ரோட்டில் எறிந்தான். ‘அம்மா, ரோட்ல கல் வீசிகிட்டிருக்கேன்!’ என்றான்.
’படவா ராஸ்கல். அந்தக் கல் யார்மேலயாவது பட்டா என்ன ஆகும்? அதை முதல்ல நிறுத்து!’ என்றார் அம்மா.
‘சரிம்மா. நிறுத்திட்டேன்’ என்றான் பப்லு. ‘இனிமேலாவது நான் சும்மா இருக்கலாமா?’
’எதையும் செய்யாது இருத்தல்’ என்கிற ஒரு நிலையே கிடையாது என்கிறது ஜென். நீங்கள் ஏதும் செய்யாமல் ‘சும்மா’ உட்கார்ந்திருப்பதாக நினைத்தாலும், அது உண்மையில்லை: ’Doing by way of actively not doing’ என்கிற மிகப் பிரபலமான ஜென் வாசகம் இதைத்தான் குறிப்பிடுகிறது!...

No comments:
Post a Comment