வெட்டுக்கிளிகள் சுமார் 13 விதமான சப்தங்களை எழுப்புகின்றன. இந்த சப்தங்களின் மூலம் மற்ற வெட்டுக்கிளிகளுக்கு வெவ்வேறு செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறதாம். * (நம்ம பசங்க sms பண்ணுறாப்போல ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி ..! ) லாக்கா எனப்படும் பூச்சிகளின் உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வகைப் பிசின்தான் அரக்கு. உலக அளவில் இது இந்தியாவில்தான் 80 சதவிகிதம் கிடைக்கிறது. பிராணிகளில் அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது ராட்சத ஆமைதான். இவை 300 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும். *(கொடூரமா *இராட்சத* இருந்தாதான் அதிக நாள் வாழ முடியுமோ?) யானைக்குட்டி பிறந்தவுடன் 125 கிலோ எடையிருக்கும். *(அதான் நான் தூக்கி கொஞ்சவே இல்லங்க ) பாம்பு கடிக்கும் போது சுரக்கும் நஞ்சு 4 முதல் 6 துளிகள்தான். *(ஹூக்கும் அதுக்கே பூய் சேர்ராய்ங்க.. பின்ன! பசுமாதிரி லிட்டர் கணக்குலையா சுரக்கனும்.! ) நெருப்புக் கோழி முட்டைகளை பகலில் பெண்ணும், இரவில் ஆணுமாக இரண்டும் அடைகாக்கின்றன. *(சின்ன டவுட் நெருப்புகோழி முட்டை வெந்துடாதா? நாங்களும் திங்க் பண்ணுவோம்ல ) ஒரு பட்டுப்பூச்சிக்கூடு சுமார் 3000 அடி நீளமுள்ள பட்டு நூலைத் தருகிறது. *(பேசாம 30 -அடில ஒரு புடவையே கொடுத்திருந்தா நல்லா இருக்குமே ) நாய்களுக்கு வியர்வை நாக்கின் வழியாகத்தான் வெளியேறுகிறது. அதனால்தான் நாய் ஓடும் போது நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது. *(ஹாஹா நோ கம்மேண்ட்ஸ் அப்புரம் ஜொள்ளு பார்டிங்கல்லாம் என்னை முரைப்பாய்ங்க ) ஸ்லாத் எனும் மிருகம் தலைகீழாக நடக்கும். மேலும் இது தண்ணீர் குடிப்பதில்லை. *(நாளைல இருந்து தரை பண்ணி பார்க்குறேன் ..இந்த பாலைவனத்தில் இருக்குறவங்களும் ட்ரை பண்ணலாமே!) பூச்சியினங்களில் குறைவான ஆயுட்காலம் கொண்டது ஈ தான். ஆண் ஈ 14 நாட்களும், பெண் ஈ 29 நாட்களும் உயிர் வாழும். *(ஈ -க்கும் லவ் பெயிலியர்லாம் இருக்கும் போல..! ஹாஹா ஆனா ஒன்னு ஒருமாசத்துக்குள்ல எல்லாம் முடிஞ்சுரும் டீ.வி -சிரியலுக்கு இது தேவலை.. ) புத்திசாலியான 10 மிருகங்களுள் பன்றியும் ஒன்று. *(இனி எவனாவது திட்டட்டும் ஹாஹா ) கோல்டன் ஈகிள் எனும் கழுகு ஒரு சிறு முயலை ஆகாயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்க்கும் சக்தியுடையது. * | | ||||
Thursday, June 9, 2011
கொஞ்சம் விஷயம் கொஞ்சம் வழக்கம் போல...ஹிஹி..
உலகின் மிகப் பெரிய விஷயங்கள்..(கூடவே என் நக்கல்கலும் இலவசம்)
நல்ல விஷயங்களை எப்படி சேர்த்தா..என்ன..! படிங்க தெரிஞ்சுகோங்க..!
உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.
* (ஆனா ஒண்ட்ரை மணிநேரம் தான் படம் போடுவாய்ங்க..)
உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.
*(தங்கத்தையும் பயபுள்ளைங்க கிட்டதான் வாங்கனும் போல!)
உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.
*(அப்போ நயன்தாரா இல்லையா? ச்சீச்சீ நயாகரா இல்லையா?)
உலகின் மிகப் பெரிய அணை அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.
*(தண்ணில்லாம் இருக்குமா! அது சரி அமெரிகாவுல இல்லாத தண்ணியா! நான் சாமி சத்தியமா தண்ணியைத்தான் சொன்னேன்)
உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிகோ வளைகுடா.
*(அப்போ ரோடெல்லாம் வளைஞ்சு வளைஞ்சு தான் போகுமோ ஹிஹி ஒரு பொதுஅறிவுதாங்க..)
உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு இந்தியா.
*(மிஸ்டு கால் கொடுக்குறதுதான் இப்போ பெஸ்ட் ! ஆனாலும் இதுலயாவது முன்னால வந்தோமே)
உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.
*(நல்லவேளை ரூபியும் மொக்ஷ்-ஸும் அங்கே பொறக்கலை.. 128-வரி அம்மாடி!-இது ரூபி!.. 128-வரிகளா..மம்மி டாமி காப்பாத்துங்க..-இது மொக்ஷ்)
உலகின் மிகப் பெரிய பூங்கா ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.
*(நமக்கு அங்கயும் ஒரு நண்பன் இருக்கான்..பயபுள்ள..இப்பொதான் தெரியுது என்ன வேலை பாக்குறான்னு..*புல்லுகில்லு வெட்டிகிட்டு இருப்பானோ?*)
உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.
*(நான் ஒரே ஒரு ஆளை அனுப்புறேன்..முடிஞ்சா.சமாளிச்சுட்டு அப்பொறம் 40000-பேரை வச்சி சமாளிக்க முடியும்னு பேட்டி கொடுங்க முடிஞ்சா..(எங்க இரத்திகா? மணி 4-ஆகப்போவுது..! ) )
உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான்.
*(சம்பந்தமில்லாத இடம் நம்ம புள்ளைங்களுக்கு..! ம்ம்..இருந்தாலும் ..காங்ரஸ் பேரு இருக்குற ஒரே காரணத்துக்காக..நான் போல..)
உலகின் மிகப் பெரிய கிறிஸ்துவத் தேவாலயம் இத்தாலியிலுள்ள புனித பீட்டர் தேவாலயம் தான்.
*(பிரேசில் சிலை -ல மட்டும் தான் பெருசு போல.. )
உலகின் மிகப் பெரிய அரண்மனை சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இம்பீரியல் அரண்மனை தான்.
*(ராஜ வாழ்க்கைதான் ஆனா ஒரு ஈ-மெயில் கூட கண்காணிப்புல சிக்காம வெளில போகமுடியாது.. )
உலகின் மிகப் பெரிய ஹோட்டல் ரஸ்யாவின் மாஸ்கோவிலுள்ள ரோஸிலா தான்.
*(யாராவது அங்க இருகீங்களா..!..சாப்பாடு சாப்பாடு..)
உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம் தான்.
*(விளையாட சொன்னா கூட பரவாயில்லை ஆனா ஊரு பேரை மட்டும் மருபடியும் டைப் பண்ண சொல்லாதீங்க..)
உலகின் மிகப் பெரிய இரயில்வே சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் தான்.
*(நல்ல இடம் தான் ஆனா காத்திருக்கனுமா என்ன.?)
உலகின் மிகப் பெரிய விமான நிலையம் ரியாத்திலுள்ள காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம் தான்.
*(ரியாத் காலித் ! பிண்ணீட்டாங்க..போங்க..)
உலகின் மிகப் பெரிய கடல்துறைமுகம் அமரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுகம் தான்.
*(நான் இதுக்குமேல மொக்கை போட்டால் அடிக்க வருவெண்ணு சொல்லாமல் சொல்லும் அன்புள்ளங்களே! .. (இப்ப்டி இடையில எதாவது சொல்லலன்னா..! நம்மலை பிடிச்சு மேய்ஞ்சுடுவாங்க..) மாலை வணக்கம்)
உலகின் மிகப் பெரிய இரயில்வே பிளாட்பாரம் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்விக் பிளாட்பாரம் தான்.
*(ஹாஹா..இது பாயிண்ட்...கடைசில ப்ளாட்பாரத்துல..உங்களை விட்டேன்னு ..தப்பா நினைச்சுகாதீங்க..! டாட்டா பைய் பை சீ யு!.. ஹாஹா..)
Wednesday, June 8, 2011
காதல் ஸ்பெஷல்.....

கைகளில் அழகுபடுத்திய மருதாணியுடன்
புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்..
கைபேசியில் பேசிக்கொண்டே எனைக் கடந்தபோது
வெகுநேரம் முன்வந்து தொந்தரவு செய்த என் ஒற்றை முடியை
காதோரம் ஒதுக்கி விட்டுச் சென்றாயே..
அந்த நொடியில்..
அருகமர்ந்து பேசியபடியே
உன் தோள் சாய்ந்து தூங்கியிருந்தேன்..
ஏதும் சொல்லாமல் என் பக்கமாய்
உன் தலையை சாய்த்துக்கொண்டாயே..
அந்த நொடியில்..
நானே செய்ததாகச் சொல்லி
உன்னிடம் நீட்டிய பலகாரத்தை
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
“சூப்பரா இருக்குப்பா“னு சொல்லி சமாளித்தாயே..
அந்த நொடியில்..
பேருந்துப் பயணத்தின் கூட்டத்தினிடையே
என்னை உற்று நோக்கிய யாரோ ஒருவனை
எரித்துவிடுவதாய் பார்வை வீசினாயே..
அந்த நொடியில்..
ஒவ்வொரு முறையும்
எனக்கான பிறந்தநாளை மறந்துவிட்டு,
கோபித்துக்கொண்ட என்னை சமாதானம் செய்ய
ஏதேதோ கோமாளித்தனங்கள் செய்வாயே..
அந்த நொடியில்..
புதிதாய் வாங்கிய பேனாவை
எழுதிப்பார்க்க ஆசைப்பட்டு ஏதோ கிறுக்கினாய்..
என்னவென்பதை எடுத்துப் பார்க்க
என் பெயர் இருந்ததே....
அந்த நொடியில்..
அழைபேசியில் வரும் கணிணி குரலை
“சொல்லுடா செல்லம்“ என அழைத்து
வேண்டுமென்றே வெறுப்பேற்றி
என்னிடம் அடி வாங்குவாயே..
அந்த நொடியில்..
புதிதாய் புடவை உடுத்திவந்த என்னை
செல்லமாய் தலையில் குட்டி
“எப்டி சேலை கட்டிருக்க பாரு“என தரையமர்ந்து
கீழ் மடிப்புகளை சரிசெய்தாயே..
அந்த நொடியில்..
எப்போதும் பேர் சொல்லியே அழைக்கும் நீ
காதல் அதிகமாகும்போது மட்டும்
“கோழிகுஞ்சு“என என்னிடம் சிணுங்குவாயே..
அந்த நொடியில்..
சொர்க்கமும் நரகமாய்
நீ அருகிலில்லாத இந்த காதலர் தினம்..
பிரிவின் ஏக்கத்தில் தவித்துக்கிடந்த தருணம்
உன்னிடம் வந்த குறுஞ்செய்தி.. “ஐ மிஸ் யூடி கோழிகுஞ்சு“..
இந்த நொடியில்...
.
.
“ஐ லவ் யூடா”
.
Tuesday, June 7, 2011
இத படிக்காதீங்க.. கடுப்பாய்டுவீங்க...

“ஆபீஸ்ல ஒரு சின்ன மீட்டிங். நான் வீட்டுக்க வர லேட் ஆகும். நீ சாப்ட்டு தூங்கு“.. கிருஷ்ணா போனில் சொன்னதும் வசந்திக்கு கோபம் வந்துவிட்டது. “என்னங்க திடீருனு இப்டி சொல்றீங்க?? இப்பவே மணி 10.30 ஆய்டுச்சு. தனியா இருந்தா நா பயப்புடுவேனு உங்களுக்கு தெரியாதா??? ப்ளீஸ் சீக்கிரம் வந்துடுங்க“னு அழுகாத குறையாக கணவனிடம் கெஞ்சினாள். “வந்துட்றேன் செல்லம். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துட்றேன்டா. நீ கதவெல்லாம் பூட்டிட்டு லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு. நா வந்துட்றேன்“னு சொல்லி மனைவியை ஒருவழியாக சமாதானப்படுத்திவிட்டு மீட்டிங்கை தொடர்ந்தான்.
இங்கு..... வசந்தி வாட்ச்சைக் கவலையோடு பார்த்துவிட்டு எழுந்து மெதுவாக நடந்தாள்.. நடந்தாள்.. வாசலுக்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரே இருட்டு. வலதுபுறம் இடதுபுறம் முன்புறம் எல்லா பகுதியும் ஒரே இருட்டாக இருந்தது. அக்கம்பக்க வீடுகள் அதிகமில்லாத ஏரியா அது. இனம்புரியாத பயம் அவளைப் பிடித்துக்கொண்டது. மெதுவாய் உள்ளே சென்று வாசற்கதவைப் பூட்டி தாழ் போட்டாள். மேல் தாழ், நடுத்தாழ் இரண்டையும் போட்டுவிட்டு திரும்பி நடந்தாள்.. நடந்தாள்..
அங்கு..... அலுவலகத்தில் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. கிருஷ்ணா அவர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தான்.
இங்கு..... திரும்பி நடந்த வசந்தி கிச்சனுக்குள் சென்றாள். சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டுக்கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்று உட்கார்ந்தாள். சாதத்தைப் பிசைந்தாள். வாயருகே கொண்டு சென்றாள்.. திடீரென அப்படியே அசையாமல் இருந்தாள்.. அப்படியே இருந்தாள்.. இன்னும்.. இன்னும்... பிறகு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டுக்கொண்டபடியே சாப்பிடாமல் அதிலேயே கை கழுவினாள்.
அங்கு..... ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. கிருஷ்ணா அலுவலகத்திலிருந்து புறப்பட்டான். மெதுவாக தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
இங்கு..... சாப்பிடாமல் எழுந்த வசந்தி டிவி ஆன் செய்தாள். சோபாவில் உட்கார்ந்து சேனல் மாற்ற ஆரம்பித்தாள். மாற்றினாள்.. மாற்றினாள்.. அடுத்த சேனல்.. அதற்கடுத்த சேனல்.....
“........னங்..........“ திடீரென மாடியில் ஏதோ சத்தம் கேட்க அதிர்ந்தாள். பயத்துடனே மெதுவாக எழுந்தாள். டிவிஐ ஆஃப் செய்துவிட்டு மாடிப்படி அருகே வந்தாள். மெதுவாக எட்டிப் பார்த்துவிட்டு படிகளில் ஏறினாள்......... ஏறினாள்......... ஏறினாள்..
அங்கு........ கிருஷ்ணா பைக்கில் வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான். வாகனங்களைத் தாண்டி படு வேகமாக வந்துகொண்டிருந்தான்.
இங்கு....... மாடி ஏறிய வசந்தி சத்தம் வந்த திசையில் பார்த்தாள். அங்கே........ அங்கே......... அங்கே............
“மியாவ்.“. ஒரு கருப்புப் பூனை. பயம் தெளிந்து மீண்டும் மாடியிலிருந்து இறங்கினாள். இறங்கினாள். மெதுவாக.. மெதுவாக.. இறங்கினாள்.
அங்கு...... கிருஷ்ணா இன்னும் வந்துகொண்டிருந்தான்.. வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான்.
இங்கு..... வசந்தி படிகளில் மெதுவாக இன்னும் இறங்கிக் கொண்டிருந்தாள்..
அங்கு.... பைக்கில் கிருஷ்ணா வந்துகொண்டிருந்தான்.
இங்கு....... கடைசிப் படியில் கால் வைத்தாள் வசந்தி... பட்டென கரெண்ட் போனது. எதிர்பாராத அந்த நொடியினால் அவளுக்கு பயத்தால் உடல் வியர்த்து நடுங்கியது. எங்கும் ஒரே அமைதி....... அமைதி.......... அமைதி..
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது...
“டொக் டொக்“ கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் வசந்தி உரைந்துவிட்டாள். தைரியத்தை வரவழைத்து “யாரது“ என்று கேட்டாள். பதிலில்லை. மறுபடியும் தட்டும் ஓசை... “யாருனு கேக்குறேன்ல“ வசந்தியின் குரல் நடுக்கத்துடன் வந்தது. பதிலேதுமில்லை. அந்த இருட்டுக்குள்ளும் அவளுடைய கண்கள் பயத்தில் மின்னியது. “டொக் டொக்“ கதவு தட்டப்பட்டது.. வசந்தி பயத்துடன் உள்ளே நின்றுகொண்டிருந்தாள்.
“டொக் டொக்“...... “டொக் டொக்“....
மெதுவாக கதவருகே சென்றாள் வசந்தி.. கதவின் தாழ்ப்பாளை விளக்கும் நோக்கத்தில் அதன் அருகே கையை கொண்டுசென்றாள். கைகள் நடுங்கியது.
இப்போது கதவு பலமாக தட்டப்பட்டது. “டொக் டொக் டொக்“.. வசந்தியின் கைகள் நடுங்கியது.... “டொக் டொக்“... நடுக்கம்.. “டொக் டொக்“.. நடுக்கம்..
மெதுவாக கதவின் தாழ்ப்பாள் நீக்கித் திறந்தாள். அங்கே.. அங்கே... அங்ங்ங்ங்கே..
“தொடரும்“னு கொட்ட எழுத்துல போட்டுட்டாய்ங்க..
என்ன முறைக்குறீங்க??? அதான் படிக்காதீங்கனு சொன்னோம்ல... படிச்சு முடிக்கிறதுக்குள்ள கடுப்பாய்ருப்பீங்களே.. படிச்சதுக்கே இப்டினா டிவில பாத்த எனக்கு எப்டி இருக்கும். அட ஆமாங்க.. இது ஒரு மெகா தொடரோட ஒரு அத்தியாயம்.
சத்தியமா சொல்றேங்க.. எனக்கு சீரியல் பாக்குற பழக்கமே இல்ல. ஆனா மத்தவங்க அதுல வர்ற கதையப் பத்தி பேசும்போது அப்டி என்னதான் இருக்குனு நேத்து ஒரு சீரியல் பாக்கலாம்னு உக்காந்தேன்.
ஐய்யயோ... இனிமே மறந்துகூட சீரியல் பாக்க கூடாதுடா சாமி.. நா மேல சொன்ன காட்சி தான் ஒரு அத்தியாயம் முழுதும் ஓட்டினாய்ங்க. அந்த வசந்தி நிக்கிறது, நடக்குறது, பாக்குறது எல்லாமே ஸ்லோ மோசன்ல் காட்டி கொன்னுட்டானுக. அவ மெதுவா மாடிப்படி ஏறுனத மட்டும் விடாம அஞ்சு நிமிசம் காட்றாங்க. பத்தாததுக்கு பேக்ரவுண்ட் மியூசிக் வேற.. அதோட எட்டு கோணல்ல கேமராவ சுத்த விட்டு விளையாட்றாய்ங்க.
எப்டியும் கதவை திறந்ததும் கிருஷ்ணா தான் நிப்பான்னு நமக்கே தெரியும்.. இந்த லட்சணத்துல பெருசா ட்விஸ்ட் வைக்கிறதா நெனச்சு “தொடரும்“னு வேற போட்டுட்டாங்க. அந்த கிருஷ்ணா பைக் ஓட்றதையும், வசந்தி வாட்ச்சப் பாக்குறதையும் வச்சே ஒரு அத்தியாயம் முடிச்சுட்டாங்க. இந்த மாதிரி சீரியல்ல, மோஷன் போறத தவிற மத்த எல்லாத்தையும் ஸ்லோ மோசன்ல காட்டி நம்ம பொறுமைய ரொம்பவே சோதிக்கிறாங்க.
இதுல எட்டு நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பர இடைவேளை வேற. முப்பது நிமிச நாடகத்துல பதினொரு நிமிசம் விளம்பரம். விளங்குமா இது??? இவனுக காசு சம்பாதிக்கிறதுக்காக இப்டி மொக்கையான தொடர்கள வருஷக்கணக்கா ஒளிபரப்பி நம்ம உசுர வாங்குறாய்ங்க. இத, ஒரு நாள்கூட விடாம டெய்லி எப்டிதான் பாக்குறாங்களோ தெரில. இதுல, பாக்காம மிஸ் பண்ணிட்டோம்னு அடுத்தநாள் வந்து, கதைய வேற கேப்பாங்க பாருங்க... பக்கத்துல இருக்குற நமக்கு கடுப்பு தான் வருது. இதுல யார தப்பு சொல்றதுனே புரிய மாட்டீங்குது..
இதுல என்ன கொடுமைனா எந்த சீரியல் பெஸ்ட்டுனு அவார்டு வேற குடுத்துப் பாராட்டுவாங்களாம். ஹய்யோ.. ஹய்ய்ய்யோ..
சரி சரி.. டைம் ஆய்டுச்சு. அவங்கவங்க பாக்குற சீரியல போய்ப் பாருங்க..
அடுத்த பதிவுல சந்திக்கலாம்.பஸ்சுல போறேன் பார்ட் 2 :P ..
நா (இரத்திகா தான் வேற யார்! ) வேலைக்கு சேர்ந்த புதுசுல பஸ் பாஸ் எடுக்கலாம்னு, கூட வேலை பாக்குற ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் முடிவு பண்ணிருந்தோம். வேலை பாக்குற கம்பெனில இருந்து ஒரு சான்றிதழும் போட்டோ ரெண்டும் கொண்டு போகணும்னு, தெரிய வந்துச்சு. ஆபீஸ்ல அந்த சான்றிதழ, தனித்தனியா முந்தின நாளே வாங்கி வச்சுகிட்டோம். அன்னைக்கு சாயந்திரம் எல்லாரும் பேசிவச்சு, மறுநாள் காலேல பத்து மணிக்கு பாஸ் எடுக்குற எடத்துக்கு போய்டலாம்னு சொல்லி வச்சிருந்தோம். அதுல ரெண்டு பேர் வரமுடியாதுனு சாக்கு சொன்னாங்க. நான் தான் அவங்கள திட்டி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வரலாம்னு அட்வைஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன். சரின்னு சொல்லிட்டாங்க.
போட்டோ மட்டும் ரெண்டு வேணும். நான் ஏற்கனவே பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வச்சிருந்த ஞாபகம்.. அதுனால வீட்ல போய் தேடிப் பார்த்தேன். கரெக்டா ரெண்டு போட்டோ இருந்துச்சு. அப்பாடானு எடுத்துவச்சுகிட்டேன்.
மறுநாள் காலேல 9 மணி இருக்கும்.... கிளம்பி ரெடியாயிட்டு மத்தவங்களுக்கு போன் செஞ்சேன். பதினஞ்சு நிமிசத்துல பஸ் ஸ்டாப்புக்கு வந்துட்றதாவும் அப்புறம் பஸ் பிடிச்சு பஸ் ஸ்டாண்ட் போய்டலாம்னும் சொன்னாங்க. என் வீடு பஸ் ஸ்டாப் பக்கத்துலங்குறதுனால அவங்க வந்ததுக்கப்புறம் போகலாம்னு முடிவு பண்ணி வெய்ட் பண்ணேன்.
சும்மா இல்லாம அந்த ரெண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் எடுத்து பாத்துகிட்டு இருந்தேன். நா அதோட விட்ருக்கலாம். விதி யாரை விட்டுச்சு?
போட்டோவுக்கு கீழ கொஞ்சம் இடம் காலியா இருந்துச்சு. அதாவது ரெண்டு போட்டோலயும் கீழ இருந்த வெள்ளை அட்டைய சரியா வெட்டாம விட்ருந்தாங்க. சும்மா தான இருக்கோம், அத சரியா வெட்டலாம்னு நெனச்சு, ரெண்டு போட்டோவையும் சேர்த்து வச்சு கத்திரிக்கோல எடுத்து நரிச் நரிச்சுனு அழகா வெட்டினேன். எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுச்சு.. பின்னாடி இருந்த ரெண்டாவது போட்டோ தலைகீழா இருந்துருக்கு... (அவ்வ்வ்வ்வ்வ்)
என்னோட பாதி நெத்தி வரைக்கும் அழகா வெட்டி எடுத்திருந்தேன். அவ்ளோ தான்... எனக்கு என்ன பண்றதுனு தெரில. வேற போட்டோவும் இல்ல. மத்த ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னா வீணா அடிதான் விழுகும். ஏன்னா, வரமாட்டேன்னு சொன்ன ரெண்டு பேர மானக்கேடா திட்டி, நான் தான் வரவச்சேன். வெட்டினத எதையாவது வச்சு ஒட்டலாம்னாலும், அத பாஸ் எடுக்குற எடத்துல வாங்க மாட்டாங்க. இன்னும் பதினஞ்சு நிமிசத்துல பஸ் ஸ்டாப்ல இருக்கணுமே.. என்ன பண்ணித் தொலைக்கிறது? அந்த ஸ்டுடியோ, வீட்டுக்கு பக்கத்துல தான் இருந்துச்சு. அதுனால அந்த போட்டோவுக்குரிய கவர்ல, ஸ்டுடியோல குடுத்த கம்ப்யூட்டர் நம்பர் இருந்துச்சு, அத எடுத்துகிட்டு அவசரமா போனேன். உடனே வேணும், கொஞ்சம் ப்ரிண்ட் போட்டுக் குடுங்கனு சொன்னேன். பயபுள்ள, பணம் டபுளா வேணும்னு எகத்தாளமா பேசினான். வேற வழியில்லாம குடுத்து அவசரமா வாங்கிட்டு வந்தேன்.
பஸ் ஸ்டாப்புக்கு, நா வரவும் மத்தவங்க வரவும் நேரம் கரெக்டா இருந்துச்சு. ஒண்ணுமே நடக்காத மாதிரி எல்லாரோடயும் கிளம்பிப் போனேன். மனசுக்குள்ள தப்பிச்சுட்டோம்டானு தோணுச்சு.
பாஸ் எடுக்குற இடத்துக்குப் போய் க்யூ“வுல நிக்கும்போது தான் தெரிஞ்சுச்சு, எல்லாரும் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ கொண்டு வந்திருந்தாங்க. நா மட்டும் தான் பாஸ்போட் சைஸ் கொண்டு வந்திருக்கேன். (அவ்வ்வ்வ்வ் ஸ்டாம்ப் சைஸே தான் வேணுமா..???)
இது கூட தெரியாதா?ங்குற மாதிரி பாத்தவங்கள கண்டுக்காம, அசடு வழிஞ்சுகிட்டே, மறுபடியும் பக்கத்துல இருந்த ஸ்டுடியோவ தேடிக் கண்டுபிடிச்சு அந்த போட்டோவ குடுத்து, ஸ்டாம்ப் சைஸ் பிரிண்ட் போட்டு எடுத்துகிட்டு வந்தேன். அந்தப் பயபுள்ளயும் பத்து ரூபாய் அதிகமா வாங்கிட்டான்.
ஒரு வழியா அத குடுத்து பஸ் பாஸ் எடுத்துட்டு வந்துட்டேன். ஆனா இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்ன தெரியுமா??? மறுநாள் ஆபீஸ் போனதுக்கப்புறம் தான் ஒரு தகவல் தெரிய வந்துச்சு.. ஸ்டாஃப் பஸ் (Staff Bus), ஆபீஸ்ல இருந்து ஏற்பாடு பண்ணிட்டாங்கனு.. என்ன கொடுமை சார் இது??? (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
இன்னமும் அந்த உபயோகப்படுத்தாத பஸ் பாஸையும், தலை வெட்டப்பட்ட என்னோட போட்டோவையும் பத்திரமா வச்சிருக்கேன். பல்பு வாங்கினதுக்கு கெடச்ச அடையாளச் சின்னம்ல..ஹாஹாஹா படிச்சதும் இப்படிதான் சிரிபீங்க!.....
ஹாஹாஹா படிச்சதும் இப்படிதான் சிரிபீங்க!...
மெயில்-சிலநேரத்துல கவலையையும் மறக்க செய்யுறாப்போல..மேட்டர்களை ..தட்டி விட்டுர்ர்ர்ராங்கப்பா! ஹாஹா..!
யாரோ ஒரு தோழி !யின் ஒரு நாள் வரலாறு..!
(அநேகமா இரத்திகா-வா கூட இருக்கலாம்!) எப்பவும் பஸ்க்கு கரெக்ட்டா அஞ்சு ரூபாய் சில்லரை எடுத்து வச்சுக்குவேன். (கண்டக்டர் கிட்ட திட்டு வாங்க முடிலப்பா..). இன்னைக்குனு பாத்து சில்லரை இல்லாம ஒரு இருபது ரூபாயும் ஒரு நூறு ரூபாயும் பர்ஸ்ல இருந்துச்சு. சரினு இருபது ரூபாய கைல எடுத்துகிட்டு நூறு ரூபாய பர்ஸ்ல வச்சு ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டேன்.
ஸ்டாப்புக்கு வந்து பக்கத்துல இருக்குற கடைல சில்லரை கேட்டேன். (காலங்காத்தால வந்து சில்லரை கேட்டா எதுக்கு தான் இப்டி முறைக்கிறாய்ங்களோ தெரில..) இல்லைனு சொல்லிட்டான். வேற வழியில்லாம பத்து ரூபாய்க்கு டாப்-அப் கார்ட் வாங்கினேன். (மிஸ்டு கால் குடுக்குறதுக்கு எதுக்கு டாப்-அப் பண்ணனும்னு கேக்காதீங்க.). மீதி ரெண்டு அஞ்சு ரூபாய் குடுத்தான். வாங்கிட்டு பஸ் ஏறினேன். என் நேரங்காலம், கொஞ்சம் லேட்டாய்டுச்சு.. ஆபீஸ் பஸ்ஸ விட்டுட்டேன். (அந்த டிரைவர் வாட்ச் நாசமாப்போக..) ஸ்டாஃப் பஸ் போய்டுச்சுனா, டவுன் பஸ்ல போய் ஆபீஸ் கேம்ப்பஸ்ல 20 நிமிசம் நடக்கணும்.
டவுன் பஸ்க்கு டிக்கெட் 4.50, அதுனால பேக்ல இருக்குற நூறு ரூபாய மாத்த தேவையில்ல, கைல தான் அஞ்சு ரூபாய் இருக்குதேனு நெனச்சு நம்ம்ம்ம்பி ஏறினேன். டிக்கெட் எடுத்தது போக மீதி அம்பது பைசாவ அப்புறம் தர்றேனு கண்டக்டர் சொல்லிட்டாரு.. (தருவாரா தரமாட்டாரா???). எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. பாதி தூரம் போனதுக்கப்புறம் திடீர்னு பஸ் நின்னுபோச்சு. வேறொன்னுமில்ல.. ப்ரேக் டவுனாம். பாதி வழில இறக்கி விட்டுட்டாங்க. உடனே, கூட வேலை செய்யுற பொண்ணுக்கு போன் பண்ணி, பஸ்ஸ விட்டுட்டேன் அதுனால அரைமணி நேரம் லேட்டா வருவேன்னு சொல்லி, முடிக்க வேண்டிய வேலையோட தகவலையும் சொல்லிகிட்டிருக்கும்போதே போன் பேலன்ஸ் காலியாயிடுச்சு.
வேற பஸ் பிடிக்கலாம்னு ஹேண்ட் பேக்குள்ள பர்ஸ தேடினேன். கெடைக்கலங்க.. அப்ப தான் தெரிஞ்சது.. காலேல இருபது ரூபாய எடுத்துட்டு மறந்துபோய் பர்ஸ வீட்லயே வச்சிட்டு வந்திருக்கேன்... (அவ்வ்வ்வ்). என் நிலைமைய கொஞ்சம் நெனச்சுப் பாருங்க. கைல சுத்தமா காசில்ல. தெரிஞ்சவங்க யாரும் பக்கத்துல இல்ல. போன் பண்ண கூட காசில்ல.
ப்ரேக் டவுனான பஸ்ஸோட டிக்கெட், வேற டவுன் பஸ்க்கு செல்லும்னு சொன்னாங்க. ஆனா என்னோட கெட்ட நேரம்... எந்த லோக்கல் பஸ்ஸும் நிக்கல. கூட வந்தவங்க சிலர், ஆட்டோல சேர் பண்ணி போகலாம் வறீங்களானு கேட்டாங்க.. ஹிஹிஹி“னு கேனத்தனமா ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டே “கண்டக்டர்கிட்ட மிச்ச பணம் வாங்கணும். அதுனால நீங்க போங்க“னு சொல்லி சமாளிச்சேன். அவங்களும் போய்ட்டாங்க.
ஆனாலும் விடாம அந்த அம்பது காச கேட்டு வாங்கிட்டோம்ல.. (கண்டக்டர் தான் முறைச்சுகிட்டே குடுத்தார்.. நம்ம காச குடுக்குறதுக்கு என்னா கடுப்பு வருது இவுங்களுக்கு..)
ஏ.டி.எம் கார்டும் பர்ஸ்ல தான் இருந்துச்சு.. (ஹிஹி அக்கவுண்ட்ல பணமில்லங்குறது வேற விஷயம்..) காயின் போன்ல பேசணும்னா கூட ஒரு ரூபாய் வேணும். ரெண்டு பேர்கிட்ட, ஒரு கால் மட்டும் பேசிக்கிறேன்னு அவங்க செல்போன கேட்டேன். சொல்லி வச்சது மாதிரி பேலன்ஸ் இல்லங்க“னு சொல்லிட்டாங்க. (கெட்டெண்ணம் பிடிச்சவய்ங்க..)
இன்னைக்கு ஆபீஸ் போன மாதிரிதான்னு நொந்துகிட்டேன். திடீருனு அங்க ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சுச்சு பாருங்க.. என் தூஊஊஊரத்து சொந்தக்காரர் ஒருத்தர், அவர் மனைவியோட அந்தப் பக்கமா பைக்ல வந்தார். அத பாத்ததுக்கப்புறம் தான் எனக்கு நிம்மதியாச்சு. ஒருவழியா அவர் கிட்ட விஷயத்த சொல்லி அவர் பைக்லயே ட்ரிப்பில்ஸ் போயிட்டேன். வழக்கம்போல ஆபீஸ்ல திரு திருனு முழிச்சுகிட்டே திட்டு வாங்கினேன்.
இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில!! ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!! அவ்வ்வ்வ்வ்....
இது அரசியல் பதிவல்ல....
இந்த வெளங்காத போலிசாமியாருங்க மத்தில, எனக்கு டமாஷா தெர்ஞ்ச ஒரு மேட்டர எழுதுறேன். இன்னைக்கு காலைல ஒரு நியூஸ் பாத்தேன். "கோவையை அடுத்த ஆனைமலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மிளகாய் அரைத்து அம்மனுக்கு பூசி வழிபாடு"ன்னு.
கோவை ஒரு வளர்ந்து வரும் தொழில் மாநகரம்! கோவை போதுமான அளவு வளர்ந்திட்டுதுன்னு சொல்றவங்க, ப்ளீஸ் வேணாம் நான் விரதத்துல இருகீன் ! அப்புரம் உங்களளுக்கு கான்ன கட்ட ஆரம்பிச்சுரும்! மத்தவங்க கீழ படிங்க.
ஒரு தொழில் நகரின் வளர்ச்சி என்பது அதன் தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், தொழில்நுட்பம், மற்றும் போக்குவரத்தை மையகப்படுத்தியதே.
தொழில் நகர வளர்ச்சியில் போக்குவரத்துக்கு மிகையான பங்குண்டு. ஆகாய மார்க்கம் முதலீட்டாளர்களின் வரப்பிரசாதம்ன்கறது என்னோட அபிப்பிராயம்.
அதை முடக்குவது தொழில்களை முடக்குவதற்கும், புது முதலீடுகளை மறுப்பதற்கும் சமம்.
இப்போ மேட்டர் என்னன்னா, பயபுள்ளைக விமான நிலைய விரிவாக்கத்த எதிர்த்து நம்ம வால்பாறை போற பஸ்ஸ அதே ஆனமலைல நிப்பாட்டிருக்கலாம்.
இல்ல, ஏர்போர்ட் முன்னாடி உண்ணாவிரதம் இருந்திருக்கலாம். இதெல்லாம் விட்டுட்டு , மொளகாய் அரைக்கிறதும், பூசறதும்.........
எந்த காலத்துல இருக்கானுகன்னு தெரில.
நான் வாழ்ந்த கோவைல இப்படியும் இருக்கானுகலே காமெடி பீசுங்க!
வெளங்கிரும்!
கோவை ஒரு வளர்ந்து வரும் தொழில் மாநகரம்! கோவை போதுமான அளவு வளர்ந்திட்டுதுன்னு சொல்றவங்க, ப்ளீஸ் வேணாம் நான் விரதத்துல இருகீன் ! அப்புரம் உங்களளுக்கு கான்ன கட்ட ஆரம்பிச்சுரும்! மத்தவங்க கீழ படிங்க.
ஒரு தொழில் நகரின் வளர்ச்சி என்பது அதன் தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், தொழில்நுட்பம், மற்றும் போக்குவரத்தை மையகப்படுத்தியதே.
தொழில் நகர வளர்ச்சியில் போக்குவரத்துக்கு மிகையான பங்குண்டு. ஆகாய மார்க்கம் முதலீட்டாளர்களின் வரப்பிரசாதம்ன்கறது என்னோட அபிப்பிராயம்.
அதை முடக்குவது தொழில்களை முடக்குவதற்கும், புது முதலீடுகளை மறுப்பதற்கும் சமம்.
இப்போ மேட்டர் என்னன்னா, பயபுள்ளைக விமான நிலைய விரிவாக்கத்த எதிர்த்து நம்ம வால்பாறை போற பஸ்ஸ அதே ஆனமலைல நிப்பாட்டிருக்கலாம்.
இல்ல, ஏர்போர்ட் முன்னாடி உண்ணாவிரதம் இருந்திருக்கலாம். இதெல்லாம் விட்டுட்டு , மொளகாய் அரைக்கிறதும், பூசறதும்.........
எந்த காலத்துல இருக்கானுகன்னு தெரில.
நான் வாழ்ந்த கோவைல இப்படியும் இருக்கானுகலே காமெடி பீசுங்க!
வெளங்கிரும்!
பி.கு:- அஜித் ஸ்டைல்ல(சிட்டிசன் கிளைமாக்ஸ்), "இது அரசியல் பதிவல்ல. எதற்கெல்லாம் எதிர்ப்பக் காட்டணும்னு தெரியாத ஒரு இனத்தின் நக்கல்ஸ்!"
Subscribe to:
Posts (Atom)








