Monday, December 16, 2013

ஆட்டோகிராஃப்_2013 @DrJeya Bharathi_(5)‬

"நான் : பாஸ் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். பெண்கள்கிட்டே எனக்கு பேசவே வராது...
பிரபாகாரன் : அட என்ன சின்னப்புள்ளத்தனமா... போய் கேளுங்க புலவ்ஸ்.:

இப்படித்தான் ஒரு விபரம் தெரிந்து கொள்ள அவரிடம் பேசவே தயங்கி நின்றேன்.
பொதுவாகவே நாமதான் கூச்ச சுபாவமாச்சே
ஒரு விபரம் கேட்பதற்காக அலைப்பேசியிருந்தார் அந்த தோழி.
அது பற்றிய தெளிவிற்காக நேரில் வரமுடியுமா என்றார்.

நேரிலா ...ஆனா நான் திருநெல்வேலியில்லா இருக்கிறேன்னு தயங்க...
அட நான் மட்டும் என்னவாம்! நானும் திருநெல்வேலிலதான் இருக்கேன்.
போஸ்ட் ஆபீஸ்க்கு வாங்கப்பா... கிர்ர்ர்ர்...( இணைப்பு துண்டிக்கப்பட்டது)

ஆனாலும் நான் போஸ்ட் ஆபீஸ் போகவேயில்லை... ஹஹ..
பின் மாலையில் என் கடைக்கு அழைத்திருக்க அங்கே தான் அவரை முதன்முதலில் சந்தித்திருந்தேன்.

சின்ன பயம். நண்பன் வேறு கூட இருந்ததால் வந்தவரிடம் விபரங்களை கொடுத்துவிட்டு
"ஆங்... நன்றி ... பார்க்கலாம்ன்னு ஓடிட்டேன்.ஹஹ..
என்னடா இவன்னு நினைத்த்திருப்பார்... என் அலுவல் ரயில்வே கேட் அருகே அமைந்திருந்தது அப்போது
ரயில்வே ட்ராக் போட்டதால் ரயில் கடக்கும் வரை காத்திருந்தார். அந்த இடைவெளியில்தான்
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

அவர்தான் . Dr.ஜெயபாரதி. 2012-ம் ஆண்டு தொடக்கமாக இருந்திருக்கும்... அது...
அப்படித்தானே டாக்டர். எனக்கு அப்படித்தான் நினைவு...

சில நாட்கள் கழித்து மீண்டும் சந்தித்தபோது வெறும் கையில் அனுப்பக்கூடாது என்று
மூன்று ஆப்பிள்பழம் வாங்கிக்கொடுத்திருந்தேன்.

மூணு ஆப்பிளை வாங்கிகொடுத்துவிட்டு மூவாயிரம் முறை சொல்லிக்காட்டிட்டான் யா...ன்னு சொன்னாலும் சொல்லியிருப்பாங்க... ஹஹா
ஒரே மாவட்டத்துக்காரர். (தி லி)
கூப்பிடு தூரத்தில் எம் அலுவலகமும். அவர் படிக்கும் மருத்துவமனையும்...

அப்போதிலிருந்து இதோ இன்றைக்கு வரைக்கும் டாக்டர்... டாக்டர்தான்.

முன்னாடியே facebook-ல் அறிமுகமிருந்தும்... நேர் சந்திப்பில் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது... ஹஹ அது ஏன்னே தெரியவில்லை இப்போதுவரைக்கும்...

டாக்டர்கிட்ட பொய் சொல்லக்கூடாதுன்னுவாங்க... நான் இவங்ககிட்ட சொல்லவே மாட்டேன். மீறி சொன்னாலும் மாட்டிக்குவேன். ஒவ்வொரு வார்த்தையையும் கூர்மையா கவனிப்பாங்க தப்பிக்கவே முடியாது...ஆகவே கூடியமட்டும்... மௌனவிரதம் இருந்துடலாம்..ஹஹ..

ரொம்ப அன்பானவங்க..
அதைவிட அக்கறையானவங்க.. நீளமான அறிவுரைகள் நிறைய கேட்டிருக்கேன். கொஞ்சம் திருந்தவும் செய்திருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.

அவர் திருமணத்தில் நானும் கிரியும், நானும் பிரகாசும் போய் கலந்துவிட்டுவந்தோம்... சொன்னமாதிரியே பிரியாணி போட்டு கொடுத்தவாக்கை காப்பாத்திட்டாங்க..

2012-ஜனவரியில் என் பிறந்தநாளைக்கு " என் படத்தை ஓவியமாக வரைந்து கொடுத்தார். இன்னும் அப்படியே பத்திரமா வைத்‌திருக்கிறேன். சொல்ல மறந்துட்டேனே... பிரமாதமான ஓவியர்.

2014-ஜனவரியில் கூட எனக்குப் பிறந்தநாள் வருது டாக்டர்... ஹாஹா சும்மா ஒரு நினைவுறுத்தல்...

அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கு நான் கவிதை எழுதி போஸ்ட் பண்ணிடுவேன்.

போன முறை மறந்துட்டேன். போன் போட்டு திட்டுனாங்க... ஹஹ அடிச்சுபுடிச்சு வந்து எழுதியிருந்தேன்.

எங்க அப்பா மாதிரி ஒரு அக்கறையான கண்டிப்போடு என்னை வழிநடத்துற...
எங்க ராஜி... (ஜெயராஜி என்ற ஜெயபாரதி ) டாக்டரின் அன்பினைச்சுமந்து...
இதோ 2014...ம் ஆண்டை நோக்கி...

DrJeya Bharathi

‪#‎ஆட்டோகிராஃப்_2013_5‬
copy of Ravivarma..Fruit lady -JB 




எனக்குப்பிடித்த ஓவியம் -JB 

முதல் ஓவியம்  -JB  



ஓவியங்களின் ஓனர் ... 

Saturday, December 14, 2013

ஆட்டோகிராஃப்_ 2013 @Subasree Mohan (4)

அது ஒரு பின் மாலைப்பொழுது...
உன் நம்பர் கொடுடா கண்ணா என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும்...  
தயக்கமே இல்லாமல் கொடுத்துவிட்டேன்.  அடுத்த அரை வினாடியில் அழைத்திருந்தார். 

எடுத்துப்பேசிய குரலில் தான் எத்தனை வாஞ்சை...
அன்றைக்கு முன்மாலையில் எழுதியிருந்த ஒரு கவிதை பற்றிய
என்னுடைய கருத்தில் முரண்பட்டு அதை தெளிவுபடுத்தவும்... பின்னே அன்பும் அக்கறையுமான  விசாரிப்புகளையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு... இதெல்லாம் நடந்து 

சில மாதங்கள் கழித்து சென்னை வந்திருக்கிறேன் என்றும்... நீயும் வா கார்த்திக் என்றும் அழைப்பு விட்டிருந்தார். என்னால் அவரைச் சந்திக்க முடியாததின் காரணமாக சென்னையிலிருந்த அண்ணனை அவரைச் சந்தித்துவரச்செய்தேன். 

அதன் பின் நாட்களின் அந்த சந்திப்பை தவறவிட்டதன் வருத்தங்களை பூர்த்தி சேயும் விதமாக இதுவரைக்கும் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் அவரோடு நாங்களெல்லாம் நேரம் செலவிடாமல் இருந்ததில்லை... 

அன்புத்தம்பிகளாய் எங்களை அரவணைத்து அன்புசெய்யும் அந்த நல்லுள்ளம் சுபஸ்ரீ அக்கா.. (சிபி மாம்ஸை... இங்கே பிரித்தெழுதத தேவையில்லை என்றே நினைக்கிறேன்}.

 சில நாட்கள் முன் உடல்நலமின்மையால் அவதியுற்ற பொது அவர்களுக்கு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அந்த கடிதத்தின் பதில் ஒற்றை வார்த்தையில் முடிந்துவிட்டதுதான் அதனுள் எத்தனை அன்பை புதைத்து வைத்திருப்பார் என்பது எனக்கு மட்டும் வெளிச்சம்...    

அந்த கடிதம்
    
"கடந்த சில நாட்களாகவே கவனித்து வருகிறேன். உடல் நலக்குறைவின் தீவிரத்தில் ரொம்பவும் வருந்திப் போய் காணப்பட்டிருக்கும் உங்களை... அதே நேரத்தில் உங்களைச் சுற்றிஇருப்பவர்கள் எத்தனை பிரயர்த்தனமாய், அன்பினோடு உங்களை கவனித்துக் கொள்கிறார்கள் என்பதையும் கூட உடல் நலம் என்பது பெரிதாய் ஒன்றுமில்லை அக்கா... மனதை இலகுவாக வைத்துக்கொள்ளுங்கள்.
மருந்துகள் செய்யாததை மனிதர்களின் அன்பு சாதித்துவிடும்தானே...
ஒரு மனிதன் மீது எல்லோரும் அன்பு பாராட்டுவதென்பது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாதது.. நீங்கள் அத்தகைய மனிதர். உள்ளத்தின் பேரில் பொங்கும் அன்பின் ஆர்ப்பரிப்பால் எத்தனை மனிதர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறீர்கள்... 
எளிதில் அன்பை பகிரும் உங்கள் குணம் இங்கு யாருக்கு தாராளம். விரல்விட்டு எண்ணத்தொடங்கினாலும். சுபாவினைப் போல் சுபா ஒருவர்தான்.
உங்களுக்கு கொஞ்சமும் மாற்றில்லாதவர் மோகன் மாமா... அவரைப் பிரித்துப்பார்த்தலரிது.. 
மங்கோலியா சென்று வந்தது முதல் மிகுந்த களைப்பினோடும், வீசிங் தாக்கத்தினோடும்இருக்கும் உங்களை குழந்தைபோலத் தாங்கும்... பலரையும் அப்படித்தான் பார்க்கிறேன். இவர்களை நீங்கள் அடையப் பெற்றதும் அவர்கள் உங்களை அடையாளங்கண்டதும் வரம்... 
இந்த ஓய்வு உங்களுக்கு தேவையானதாக இருக்கட்டும் . அவ்வாறே நானும் நினைக்கிறேன். நதி கிளைகளோடு சங்கமித்து பெரும் ஓட்டமெடுக்கும் போதும் அணைபோட்டுக் கொஞ்சம் தடுப்போமில்லையா..அத்தகையது இந்த ஓய்வு.. 
இந்நேரத்தில் எத்தனை அன்பானவர்களை நீக்கள் பெற்றிருக்கிறீர் எனப் பெருமை பட்டுக்கொள்ளுங்கள் உங்களோடு சேர்ந்து நானும் அதையே சிந்திக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன் ஒரு மனிதன் மீது எல்லோரும் அன்பு பாராட்டுவதென்பது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாதது. நீங்கள் அற்புதமான அன்பின் குழந்தை ...
இச்சிறு உடல் களைப்பு உங்களை ஒன்றும் செய்திடாது...
மதகுகள் திறக்கும் போதுசீறிப்பாயும் வெள்ளமாய் பிரவாகமெடுத்து வாருங்கள்...
அணைக்கு மறுபுறம் கிடக்கும் களைகள் எல்லாம் வெள்ளத்தின் வேகத்தில் காணாது போகும் .
எப்போதும் உங்கள்  தம்பி..."

      எங்கள் எல்லோரின் மேடைகளையும் எங்களுக்கு முன்னே கட்டமைக்க வலியுறுத்தும் அன்பும், பரிவும்தான் உங்களோடு எங்களை சேர்த்து கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது..  காலத்தின் சுழற்சியில் ஆண்டுகள் நீங்கிபோனாலும் உங்கள் அன்பின் சரணாலயத்தைத் தேடி வரும் வேடந்தாங்கல் பறவைகள் நாங்கள்....

Subasree Mohan

#ஆட்டோகிராஃப்_ 2013





அன்பிற்குண்டோ அடைக்குந் தாழ் 





ஆனந்த தாண்டவம்











பி.சி.ஸ்ரீராம் -கேமிராவை எடை பார்த்த பொழுது க்ளிக்கியது 




சியர்ஸ்.... அக்க்ஸ் 


சீனாவில் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் போது... க்ளிக்
(விசிறி சின்னம் )

ஆட்டோகிராஃப் 2013 @Prakash Sona (3)_

அது ஒரு முகநூல்குழு... சிற்சில விவாதங்களில் அறிமுகமானோம்.

பொருள் பொதிந்த பேச்சு... யாரிவன் என்று கவனிக்கத்தக்க கண்ணியம்.

பெரும் இடைவெளிக்குப்பின் அரட்டையில் பேசிக்கொடோம். அழைப்பு எண்களை பரிமாறிக்கொண்டோம்.

ஒருநாள் திரு.ஷேர்கான் ஹமீது அவர்களோடு சென்னையில் எங்கள் நண்பர்கள் எல்லாருமாய்ச் சந்திப்பதாக திட்டமிட்டுக் கொண்டோம்.

சென்னையில் வசிக்கும் நண்பர்களையும் அழைக்கலாம் என்றதும் முதலில் சுழற்றியது பிரகாஷின் எண்ணைத்தான்.
நட்புவட்டத்தில் என்னோடு மட்டும் அறிமுகமாகி இருந்தவன். (பேச்சளவில்) சந்திப்புக்கு நான் வரும்முன்னே... வந்து கலந்து எல்லோரோடும் ஐக்கியமாகிவிட... வழக்கம் போல நான் லேட்.

அதன் பின் அதிரிபுதிரியான அந்த கலாய்ப்பும்,சந்திப்பும்
எங்களை பிணைத்துவிட... இதோ இன்னும் தொடர்கிறது...

எங்க ஊர்க்காரன் .  (திலி)
பெரும் தமிழ்ச்செருக்கு பிடித்தவன். இலக்கியம் இலக்கணம் எல்லாம் பேசுவோம். முன்பெல்லாம் எந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும் அதைப்பற்றிய நீண்டதொரு உரையாடல் இருவருக்குமிருக்கும்...

ஒரே தடத்தில் சிந்திப்பவர்களாதலால் இவன் வாதங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.

இன்றைக்குவரைக்கும் பெரும் மதிப்புடைய நட்பினுக்கு உரியவன்...

வேறென்ன சொல்ல பிரகதீஷ்வரன்... பெரியகோவில் போல என் நண்பன் பிரகாஷின் உள்ளமும் பெரிது...

இவன் சோகப்பட்டு ஒரே ஒருநாள் மட்டும் உடனிருந்து பார்த்திருந்திருக்கிறேன்.
இனியெப்போதும் அதுபோலொருதருணம் வாய்க்காது நண்பா...

என்றென்றும் நட்புடன்..

பிரகாஷ் சோனா

#ஆட்டோகிராஃப்_2013








ஆதி மற்றும் பிரகதிஷ்வரன் @பிரகாஷ் 


அத்திப்பழம் சிவப்பா? தன்  அத்தமக சிவப்பா? -ஆராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட படம்.




சின்னதா ஒரு ஹைக்கூ...


Friday, December 13, 2013

ஆட்டோகிராஃப்_2013@ Giridaran Giri (2)

அலுவல் வேலைகள் தவிர்த்து விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தேன். சதீஷ் "வா உனக்கு ஒரு நண்பனை அறிமுகப்படுத்துகிறேன் " என்று சொல்லி அமைந்தகரை Amba Skywalk அழைத்துப்போய் இருந்தான் அங்கேதான் கிரிதரனோடு முதல் சந்திப்பு... 

அதற்கும் முன் தொலைப்பேசி உரையாடல்களில் பேசியிருக்கிறோம். நாங்கள் ஒரு பதினெட்டு பேர் இருப்போம். மிக நெருங்கியவட்டத்தில் ஒரு பதினோரு பேர். கான்ஃப்ரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிக்கத்தொடங்கினால் ஊரே தூங்கும் ஜாமத்தில் தான் போனைக் கட்செய்வோம். 

இதோ இவனோடும் மூன்று வருடம் கடந்து போய்விட்டது. கிரி. அந்த புன்னகை ஒன்று போது முழுசுயவிவரத்திற்கும் ஒற்றை விளக்கம் கொடுக்க. எதிரி என்றாலும் இவன் காட்டும் பொறுமையும், அன்பும் யாரிடமும் பார்த்ததேயில்லை.. 

அப்போ டீம்ல எல்லோரும் மச்சான்ன்னு கூப்பிட்டுகொண்ட போது கிரியை மட்டும் ஒட்டுமொத்தமாய் மாமா என்றழைத்தோம். அதுவே  நிரந்தர உறவுஆகிவிட்டது.அண்ணன் திருமணத்திற்கு ஊருக்கு வந்தவனை ஏரியா சிறுவர் முதற்கொண்டு. உரிமையாக மாமா என்றழைக்க நெகிழ்து போனான். 

கிரி வீட்டிற்குப் போய் அங்கேயும் மாமன் தான். அவங்க அம்மா வித்யாசமா பார்த்து ரசிச்சாங்க..ஹஹ(கிரி அம்மா தோசை வார்த்தாங்கன்னா கணக்கு வழக்கில்லாமல் உள்ளே இறங்கும் அப்படி ஒரு கைப் பக்குவம்) 

நட்பில் இணைந்தபிறகு மதுரை,கொடைக்கானல், பாண்டிச்சேரி,திருச்செந்தூர்,சங்கரன்கோவில்,திருநெல்வேலி, மாமல்லபுரம் சென்னைன்னு ஒன்றாக சுத்தியிருக்கோம். 

நெருக்கடியான தருணங்களில் இரண்டு பேரும் மெரினா கடற்கரை படகில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருப்போம். ஒரு பரிசுத்தமான நட்பு அந்த கடற்கரையின் எல்லா இரைச்சல்களையும் விழுங்கிவிட்டு அமைதியைக் கொடுக்கும். 

கொண்டாட்டங்கள் மிகுந்த இவனின் முகத்தைத் தான் உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பின்னால் காயங்களை மறைத்துக்கொண்டுகாற்றுக் குதிரையாய் திரியும் இன்னொரு கிரியை எனக்குத் தெரியும். 

உயிர் கொடுக்கும் நண்பன் கிடைப்பது கொஞ்சம் கஷ்ட்டம்தான். உயிர் கொடுக்கத்தகுதியான நண்பன் கிடைப்பது மிக மிக அரிது . கிரி அப்படியானவன் எனக்கு... 
இதோ. அவன் நட்பினையும் சுமந்து நான்காம் ஆண்டுக்கு பயணமாகிறேன்.

Giridaran Giri
ஈடு இணையற்ற மார்பிங் வேடத்தில் கிரிதரன் 


கிரிதரன் 


யானை கிரிதரன் அவர்களுடன் ஆசீர்வாதம்
பெற்றுக்கொண்ட போது எடுத்த படம் 
உலக நாயகனுடன் உள்ளூர் நா யகன்
(மேர்ஜ் செய்யப்படவில்லை என உறுதி அளிக்கிறோம்)
 கடுமையான போட்டோஷாப்
வேலைகளுக்குப்  பின் கிரி .

ஆட்டோகிராஃப் 2013 @Pravin raja (1)


பார்க்கவும் பழகவும் பரம சாது. ரொம்ப அன்பானவன் . ஊரு கன்னியாகுமரி . இதோடு மூன்று வருடம் கடந்து நான்காவது வருடமும் வரப்போகிறது.. 

நல்ல நண்பன். ஏதாச்சும் தப்புப்பண்ணிட்டு சின்னப்புள்ளை மாதிரி முன்னாடி வந்து நிப்பான். தாறுமாறா திட்டுவேன.
நீ திட்டு சகல உன்னைவிட்டா யாருக்கந்த உரிமை இருக்குன்னு சிரிச்சுகிட்டே சொல்வான். 

குணத்திலே தங்கம். நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் பொண்ணு எடுப்போம்ன்னு பேசிக்கொண்டது இன்று வரைக்கும் சகல-ன்னுதான் கூப்பிட்டுப்போம். 

சமீபகாலனா ஆள் அடிக்கடி காணாமல் போய்டுறான். லவ்வுல சிக்கிட்டான் போல...
இவன்கிட்ட உள்ள கெட்டப்பழக்கம் சுமார் நூறு , நூத்திபுப்பத்தஞ்சு லவ்வு பண்ணிட்டு ஃபெயிலியராகிட்டேன்னு பாட்டுப் பாடியே கொல்வான். 

எதையும் தாங்கும் இதயமா மாறி இவன் நட்பை கையிலெடுத்து கடந்து கொண்டிருக்கிறோம்.

வீட்டில் பொண்ணு பார்க்குறாங்க (2013 டிசம்பர்-ல் எழுதுகிறேன்) சீக்கிரமே டும்... டும்.. டும்... இருக்கும்.! வாழ்த்துக்கள் சகல...

Pravin Raja

#ஆட்டோகிராஃப்_2013

வயதுக்கு வந்த
போது  எடுத்த படம் 
Zambia  ( kariba ) -வில் பயணத்தின் போது 


பரத நாட்டிய வகுப்பில்



பிரவின் 
ரொம்ப தேடாதீங்க  இதில் பிரவின் இல்லை... இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுதான்.



Sunday, December 8, 2013

ரௌத்திரம்

சப்தமிடாத ஓர் ஊமை மௌனம்... உள்ளிருந்து எண்ணங்களை உருட்டும்..

போதிமரம் தேடிச்செல்லும் ஞானவாக்குகள் குப்பைத்தொட்டியெங்கும் இரைந்து கிடக்கும்

வேற்றுகிரகம் போலே சுற்றியிருக்கும் தொடர்பில்லாத மனிதனை தற்செயலாயேனும் கவனிக்கத் தோன்றும்

அடுத்தது என்னவென்ற கேள்விகள் தாகத்தைக் கொடுக்ககாலிக்
குடுவைகள் எக்காளமாய்ச் சிரிக்கும்.

கவனமாயிறுவென்னும் கருணைப்பட்டோர் வாக்குகள் போலானதோர் பசி தீர்க்கும் மந்திரம் வேறில்லை...

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

இச்செகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

பாரதி மெல்ல மெல்ல உள்ளிருந்து ரௌத்திரம் விதைக்கிறான்.. கூச்சலிட்டமனம் அமைதிப்பட்ட குளமாகுது!

அதன் கள்ள மவுனத்துக்கடியில் ஏதுகுடியிருக்குதென்று யாரறிவார்.

-கவிதைக்காரன்.

Thursday, November 21, 2013

குலம்வளர்க்கச் சேராயோ...


பூத உடல் நோகும் கண்ணா...
நாதன் காண ஏங்குவதில்...

காதல் வந்து தேங்கும் நெஞ்சம்
காத்திருந்தும் காலமென்ன... 
ஆதலினால் வந்துவிடு ஆவிபற்றிக் கொண்டுவிடு

ஊதல் வந்து வீசுதுகாண்
உயிரின் சப்தம் மாயுதல் கேள்..

ஏனுனக்குப் புரியவில்லை
இதுவரைக்கும் பதிலுமில்லை...

கோமறுத்த கன்றினைப் போல் கோதை உள்ளம் கனன்றதே பார்....

பார்த்திபன் தோள் கொண்டவனே பாவைதேடி வாராயோ...

ஊழிநிறங் கொண்டவனே
உனது மாரில்ச் சாயேனோ

ஆதிஷேசன் மீது ஆடும்
ஆநிறைக் கோனே...

என் நாதமென்னும் துகில் விரித்தேன் தாவி ஓடிவா...

உன் கூர்விழியால் குமைந்த பெண்ணை கூதல் வந்து வீசும் முன்னே
குலம்வளர்க்கச் சேராயோ...

- கவிதைக்காரன்