Saturday, June 2, 2012

மரணமே வா!


மரணமே வா...!!!

---கவிதைக்காரன்---

என் மரணம் கண்ணீர்
வடிக்கும்
சம்பிரதாயமாக இருக்க வேண்டாம்
கவிதைகளால் உங்கள்
வருத்தச் செய்தியும் வேண்டாம்
பிரிந்தாயே நண்பா
என பிதற்றலும் வேண்டாம்

தேனடைகள் எரிக்காமல் 
தேனில்லை...
உவர்நீரால் புதைக்கப்பட்ட
இச்சமுத்திரத்தில் ஒரு
ஓரத்தில் என்னையும்

சராசரிக்கும் கீழானவனாக
கொன்றொழித்து விடாதீர்
மின்னல்கள்
திறந்து போகாது

என் மரணமும் மீந்து போகாது 
ஏதோ ஒரு விடியலில்
நான் இருக்கப்போவதில்லை

ஆனால் யாதும் செய்யாமல்
மரிக்கப்போவதுமில்லை
பிறக்கும் போதே
என் மரணமும்
குறிக்கப்பட்டு விட்டதை
ஏற்றுக்கொள்ளாத
மூடனில்லை நான்


வேங்கை மரத்தின் கீழ்
வெய்யில விழலாம்
வேர்கள் விழலாமா..
ஒடுக்கப்பட்ட இனம் என
மரத்துப்போனவர்களே

ஒடுங்கிக்கொள்ளுங்கள்
நாங்கள் ஒதுங்கிக்கொள்வாரில்லை
மீண்டும் கேட்டுக்கொல்கிறேன்
என்னையும் சராசரியாக்கி விடாதீர்கள்....!!!


2 comments:

ஜீவா said...

மனம் ஒரு நிலையில் இல்லாத போது தோன்றும் அந்த எண்ணம் மரணம்... காலத்தின் கோலத்தால் நானும் ஒரு நாள் புலம்பி திரிந்தேன், ஆம் யாரும் இங்கு சராசரி இல்லை, சாதிக்க பிறந்தவர்களே.... மனம் சோர்வடையும் போதெல்லாம் நமக்குள் ஒலிக்கும் ஒரே மந்திரம் "வீழ்வேனென நினைத்தாயோ" என்பதாய் தான் இருக்க வேண்டும்

Maanu Paris said...

Maranathilum oru yeathirpaarpu eruka thaan seigirathu