இப்போதே அழகாய்
ஒரு கவிதை சொல்லிவிட்டுப்போ!
என வேகமாக வேலைக்குச்செல்ல
இருப்பவனை
சட்டை பிடித்து
இழுத்து நிறுத்துகிறாய்..!
அலமாரியில்
நிறைய தபு சங்கரின்
புத்தகங்கள் கிடக்கின்றன..!
வாசித்துக்கொள் நேரமாயிற்று என்றேன்..!
ஆனாலும் உன் கைப்பிடி
என்னை விடவே இல்லாமல் இறுக்கமாய்
பற்றிக்கொள்ள..!
வேறு வழியே இல்லாதவனாய்
இரண்டு வினாடிகள்
உன்கண்களையே உற்றுப்பார்த்து
நெருங்கி... அருகில் வந்து
செல்லமாய் கன்னங்களை கிள்ளிவிட்டு
“லேட் ஆகிடுச்சுடா செல்லம்”
என்றவாறே புறப்பட்டுவிட்டேன்..!
நீயும் அந்நிமிடம் என்னை விட்டுவிட்டாய்..
அப்படி எந்த கவிதையை என் கண்களிலிருந்து
வாசித்து விட்டாய் நீ..
தெரியவே இல்லை..
எனக்கு....
5 comments:
வெண் மேகங்களூடே
கறுப்பு நிலவு
ததும்ப ததும்ப
மன நயம் பேசும் உன்
அச்சில் வார்த்த
கலை நயம் கொண்ட
உன் உரு கவி வாசிப்பை தான்
//இப்போதே அழகாய்
ஒரு கவிதை சொல்லிவிட்டுப்போ!//
அப்படிச் சொல்ல மாட்டேன் கவிதைக்காரா! நீங்க ஏற்கனவே சொன்ன கவிதைகள் எல்லாம் அழகுதான்...வாழ்த்துக்கள்
ஹாஹாஹ...! ஜண்ஸி
தினம் தினம் ஒரு கவிதை,
அது புதுக் கவிதை...
புதிதாய் ஒரு காதலை
புதிதாய் ஒரு நேசத்தை
புதிதாய் ஒரு பாசத்தை
நிரப்பி விட்டு செல்கிறது...!
உன் கண்கள் சொல்லும்
புத்தம் புது கவிதை...
உன் தீண்டல் சொல்லும்
ஓராயிரம் கவிதைகள்...
மழைக்கால நேசத்தை...
வெயில் கால கோபத்தை...
உன் கெஞ்சலை...
உன் அக்கறையை...
உன் கொஞ்சலை...
உன் ஆளுமையை...
உன் குறும்பை...!
என் மேல் மொத்தமாய்
நீ வைத்திருக்கும்
அத்துனை உணர்வுகளையும்...
உன் தாயாய்
உன் சகோதரியாய்
உன் சேயாய்
உன் தோழியாய்
உன் யாதுமானவளாய்...!
நீ எழுதிய அத்தனை
கவிதைகளின் மொத்த தொகுப்பாய்...
உன் கண்கள் எனக்குள்
காதலை விதைத்த கதை...!
உன் கண்கள் எனக்குள்
உன்னை விதைத்த கதை...!
உன் கண்கள் எனக்குள்
நம்மை உணர்த்திய கதை...!
நாம் வாழ்நாள் வாழப்போகும் மீதி கதை...!
உன் ஒரே ஒரு கண்சிமிட்டல்
உன் ஒரே ஒரு புன்னகை
உன் ஒரே ஒரு மெல்லிய தீண்டல்...
போதுமடா எனக்கு...
வாழ்ந்து விட்ட நாட்களும்
வாழ போகும் நாட்களும்
கவிதையாய், கவிதை சாரலாய்
கவிதை மழையாய் உன் கண்களில்...!
Kavithaikaranukea potya arumai thoziea puthuvitha kathal kavithaigal
Post a Comment