அலுவல் வேலைகள் தவிர்த்து விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தேன். சதீஷ் "வா உனக்கு ஒரு நண்பனை அறிமுகப்படுத்துகிறேன் " என்று சொல்லி அமைந்தகரை Amba Skywalk அழைத்துப்போய் இருந்தான் அங்கேதான் கிரிதரனோடு முதல் சந்திப்பு...
அதற்கும் முன் தொலைப்பேசி உரையாடல்களில் பேசியிருக்கிறோம். நாங்கள் ஒரு பதினெட்டு பேர் இருப்போம். மிக நெருங்கியவட்டத்தில் ஒரு பதினோரு பேர். கான்ஃப்ரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிக்கத்தொடங்கினால் ஊரே தூங்கும் ஜாமத்தில் தான் போனைக் கட்செய்வோம்.
இதோ இவனோடும் மூன்று வருடம் கடந்து போய்விட்டது. கிரி. அந்த புன்னகை ஒன்று போது முழுசுயவிவரத்திற்கும் ஒற்றை விளக்கம் கொடுக்க. எதிரி என்றாலும் இவன் காட்டும் பொறுமையும், அன்பும் யாரிடமும் பார்த்ததேயில்லை..
அப்போ டீம்ல எல்லோரும் மச்சான்ன்னு கூப்பிட்டுகொண்ட போது கிரியை மட்டும் ஒட்டுமொத்தமாய் மாமா என்றழைத்தோம். அதுவே நிரந்தர உறவுஆகிவிட்டது.அண்ணன் திருமணத்திற்கு ஊருக்கு வந்தவனை ஏரியா சிறுவர் முதற்கொண்டு. உரிமையாக மாமா என்றழைக்க நெகிழ்து போனான்.
கிரி வீட்டிற்குப் போய் அங்கேயும் மாமன் தான். அவங்க அம்மா வித்யாசமா பார்த்து ரசிச்சாங்க..ஹஹ(கிரி அம்மா தோசை வார்த்தாங்கன்னா கணக்கு வழக்கில்லாமல் உள்ளே இறங்கும் அப்படி ஒரு கைப் பக்குவம்)
நட்பில் இணைந்தபிறகு மதுரை,கொடைக்கானல், பாண்டிச்சேரி,திருச்செந்தூர்,சங்கரன்கோவில்,திருநெல்வேலி, மாமல்லபுரம் சென்னைன்னு ஒன்றாக சுத்தியிருக்கோம்.
நெருக்கடியான தருணங்களில் இரண்டு பேரும் மெரினா கடற்கரை படகில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருப்போம். ஒரு பரிசுத்தமான நட்பு அந்த கடற்கரையின் எல்லா இரைச்சல்களையும் விழுங்கிவிட்டு அமைதியைக் கொடுக்கும்.
கொண்டாட்டங்கள் மிகுந்த இவனின் முகத்தைத் தான் உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பின்னால் காயங்களை மறைத்துக்கொண்டுகாற்றுக் குதிரையாய் திரியும் இன்னொரு கிரியை எனக்குத் தெரியும்.
உயிர் கொடுக்கும் நண்பன் கிடைப்பது கொஞ்சம் கஷ்ட்டம்தான். உயிர் கொடுக்கத்தகுதியான நண்பன் கிடைப்பது மிக மிக அரிது . கிரி அப்படியானவன் எனக்கு...
இதோ. அவன் நட்பினையும் சுமந்து நான்காம் ஆண்டுக்கு பயணமாகிறேன்.
ஈடு இணையற்ற மார்பிங் வேடத்தில் கிரிதரன் |
கிரிதரன் |
யானை கிரிதரன் அவர்களுடன் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம் |
உலக நாயகனுடன் உள்ளூர் நா யகன் (மேர்ஜ் செய்யப்படவில்லை என உறுதி அளிக்கிறோம்) |
கடுமையான போட்டோஷாப் வேலைகளுக்குப் பின் கிரி . |
3 comments:
ஹஹா கிரி
சித்தப்பு
இனனயத்திள் இவ்ேளா இறுக்கமான நண்பர்களா...!!..♪♪
வாவ்
அருமை மாப்பள ஆட்டோகிராப் அத்தனைக்கும் மறுபடியும் ஒரு ஆட்டோகிராப் அட்டகாசம்! :)
Post a Comment