Tuesday, June 28, 2011

தியேட்டர் நொறுக்ஸ்-1

Title-க்கு ஜெட்லி மன்னிக்கணும்

இப்பெல்லாம் நினைச்ச உடனே online -ல டிக்கெட் புக் பண்ணி ஈசியா போய் படம் பாத்துட்டு வந்துடுறோம். அதுல நமக்கு ஒரு நிம்மதி இருக்கா அப்டின்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன்(வாரத்துக்கு நாலு மொக்கை படம் பார்த்தா அப்படித்தான் இருக்கும்). அந்த காலத்துல தியேட்டர்ல படம் பாக்குறப்ப படத்தோட சேர்த்து சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இருக்கும்.  இப்பெல்லாம் அது இல்லை. தியேட்டருக்கு போனமா வந்தமான்னு தான் இருக்கோம்(பின்ன அங்க என்ன ரூம் போட்டு சாப்பிடவா முடியும்).

கவுண்டர்:

முன்னெல்லாம் அப்படி இல்லை. முதல்ல கவுண்டர்ல உள்ள queue ல போய் நிக்கணும். அப்புறம் டிக்கெட் எடுக்கணும்(என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு). கவுண்டர் பாத்தீங்கன்னா பெரிய சுரங்கப்பாதை மாதிரி புல் இருட்டாவும் வளைஞ்சு வளைஞ்சு நாலைஞ்சு row  வாகவும் இருக்கும். இரும்பு கம்பி போட்டிருப்பாங்க.

கவுண்டர் ஆரமிச்சு டிக்கெட் கொடுக்குற இடம் வரைக்கும் ஒரு அரை கிலோ மீட்டராவது இருக்கும். கூட்டமா இருந்தா டிக்கெட் கொடுக்குறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே இந்த கவுண்டருக்குள்ள போய் நின்னுடுவோம். டிக்கெட் எடுத்து வெளில வர்றதுக்குள்ள மன்னன் பட ரஜினி மாதிரி ஆயிடுவோம்.

கவுண்டருக்குள்ள ஒரே ஒரு மஞ்ச லைட்தான் எரியும். அத்தனை row க்கும் சேர்த்து ஒரே லைட்தான். இரவு காட்சி போனோம்னா டிக்கெட் எடுக்குற வரைக்கும் ஒரே திக் திக் தான். பேன் வேற இருக்காது(ஆமா நீ எடுக்குற அஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு A/C போடுவாங்க).

இதுல சில பேரு நம்ம தலைல ஏறி முன்னேறி போவாங்க(நம்மளால சில பேரு முன்னேறி போறாங்கன்னு மனச தேத்திகிட வேண்டியதுதான்). பெரிய சண்டையே நடக்கும். அந்த இருட்டுல நம்ம மேல ஏறிப் போறது யார்ன்னு கூடத் தெரியாது. சில நேரம் நம்ம நெருங்கின சொந்தகாரனா கூட இருக்கும்.

தரை டிக்கெட்(நான் இல்லைங்கோ)

அப்புறம் டிக்கெட்ல மூணு வகை உண்டு. chair ,பெஞ்ச்,தரை. Chair டிக்கெட் எல்லாம் பணக்காரங்க உக்கார்றது அப்டின்னு ஊர்ல ஒரு நினைப்பு. உண்மைதான். வசதியானவங்கதான் Chair டிக்கெட் எடுத்து வருவாங்க.

நமக்கெல்லாம் பெஞ்ச் இல்லைனா தரைதான். பெஞ்ச் டிக்கெட் எடுத்தா நம்ம வீட்டுக்கு மூட்டைப் பூச்சிகள் இலவசம். அதனால தரை டிக்கெட்லதான் படத்துக்கு கூட்டிட்டு போவாங்க.

இரவு காட்சியா இருந்தா ரொம்ப வசதி. தியேட்டருக்கு வெளில கூட (கதவுக்கு பக்கத்துல) உக்கார்ந்து படம் பாக்கலாம். காத்தும் நல்லா வரும். படம் மொக்கையா இருந்தா அப்படியே ஓடலாம். (ஆனா நாங்கெல்லாம் என்னை மொக்கயா இருந்தாலும் அசர மாட்டோம்ல).

Wallpapper:

அப்புறம் wallposter . தியேட்டர்ல ஒரு இடத்துல படத்தோட காட்சிகளை ஒட்டி இருப்பாங்க. முதல்ல போய் அதத்தான் பாப்போம். இடைவேளைல மறுபடியும் பாத்துட்டு இந்தஇந்த  காட்சிகள் முடிஞ்சிடுச்சு. இந்த காட்சிகள் எல்லாம் இனிமே வரும் அப்படின்னு discuss (ஆமா பெரிய Group Discusstion) பண்ணுவோம். சில காட்சிகள் படத்துல வரலைன்னா தியேட்டர் operator -யை திட்டுவோம். அந்த காட்சியை கட் பண்ணிட்டானே அப்டின்னு.

அப்புறம் ஷீல்ட். எந்த எந்த படம் எவ்ளோ நாள் ஓடிருக்குன்னு ஷீல்ட் அங்க வச்சிருப்பாங்க. அத பாக்குறதுல ஒரு அலாதியான சந்தோஷம். எத்தன தடவ அதே தியேட்டருக்கு போனாலும் அந்த ஷீல்ட திரும்ப திரும்ப பாப்போம்.

இன்னும் நிறைய இருக்கு. உங்களோட கருத்துகளுக்கு பிறகு சொல்றேன். பிடிக்கலன்னா இதோட நிறுத்திக்கிடுவோம்....

No comments: