Tuesday, June 7, 2011

எந்திரன்.


அய்ய், ரஜினியோட எந்திரன் படம், ட்ரைலர் வெளியீடு பார்த்தேன். வர்றவன் போறவனெல்லாம் புகழுறான். பிரம்மாண்டமான படம் அப்டி இப்டின்னு சொல்லுறானுவ. ட்ரைலர் நல்லாத்தான் இருந்துச்சு. பிரம்மாண்டம்தான். ஒத்துக்கறேன்.

150 கோடி செலவு பண்ணி எடுத்திருக்காக. சினிமா ஒரு கலை. அந்தக் கலைகளுக்காக இவ்ளோ பணம் செலவு பண்ணலாமாங்கரதுதான் என்னோட கேள்வி.
நம்ம நாட்ல 5 ல 2 பேர் இன்னும் பொருளாதாரத்துல தன்னிறைவு அடையல. அமெரிக்காக்காரன் படம் எடுக்குறான்னா, அங்க எல்லாரும் பொருளாதாரத்துல தன்னிறைவு அடஞ்சவங்க. காசு பணம் இருக்குது, எடுக்குறான்.

UAE நகர அரபு நாட்டினர், எப்பவே பொருளாதாரத் தன்னிறைவு அடஞ்சவங்கதான். கலாச்சாரத்திலும், கலைகளிலும் மேலோங்கியவர்கள்தாம். ஆனா அவங்களே 30 கோடிக்கு மேல படம் இன்னும் எடுக்கல. நமக்கு இப்படி ஒரு படம் தேவையா?
நாமளும் கேனப்பயளுவ, அதையும் ஐநூறு, ஆயிரம்னு டிக்கெட் எடுத்துட்டு பாப்போம் (பாபா படத்துக்கு 500 ரூவா கொடுத்து, மொத ஷோவுக்கு பெட்டி வரலுனு, யூத் படம் பாத்திட்டு, நூன் ஷோவுக்கு வந்து முட்டி போட்டுட்டு படம் பாத்து நொந்தது தனிக்கதை) . படம் பிச்சுகிட்டு ஓடும். நமக்கும் ஒரு தேவையற்ற பெருமை வரும், தலைவன் படத்தை பாத்துட்டேன்னு.
உண்மையில் இந்தப் படத்தால் யாருக்கெல்லாம் நன்மை வரும்னு சொல்றேன்.

1. இயக்குனர் சங்கர்- இனி இவர் ரொம்ப பெரிய இயக்குனர் ஆயிடுவாரு. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்- க்கு இணையா பேசுவாங்க. சம்பளம் கோடிக்கணக்குல வாங்குவாரு.

2. தயாரிப்பாளர் மாறன்- தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் இவருக்கு ஒரு மதிப்பு வரும். தயாரிப்பாளர்கள் சங்கத்துல தலைவர் ஆகி அங்கயும் கட்சி வளர்ப்பார்(குடும்ப அரசியல்தான். அதுல ஒண்ணும் சந்தேகம் இல்ல). மற்றும் தன்னோட பொஞ்சாதி மற்றும் மச்சுனன் பேர்ல படங்களைத் தயாரிக்க ஆரம்பிப்பாரு(இங்கயும் டேக்ஸ் பிரச்சினை!)

3. தலைவர்(!!!) ரஜினி- வழக்கம்போல ராயல்டி வாங்கிட்டு இமயமலை போயிடுவாரு. எல்லாரும் சத்திய நாராயணா சொன்னதை(இப்படம் வெளியானபின் நாடோடி மன்னன் படம் வெளியானபின் உண்டான அலையை ஏற்படுத்தும்) நம்பி, ரஜினியும் அரசியலுக்கு வருவார்னு சொல்லிக்கிட்டு திரிவானுக. வழக்கம்போல ரஜினி எலக்சன் டைம்ல தி.மு.க. க்கு வோட்டு போட சொல்லிருவாரு.

4. கார்த்திக்  ராஜா  (நாந்தேன்)- புனைவு எழுத (சுட்டது சுகம் தரும் ! ஹிஹி )  தலைப்பு கெடச்சுதே!(ஹி..ஹி...)

ஆக மொத்தம், வெளங்காம போகப்போறது ரசிகர்களும், நாமும்தான்

(டிவிலதான்
ட்ரைலர திருப்பித் திருப்பி போடுவானே!).

No comments: