Tuesday, January 31, 2012

இணையத்தில் தமிழ்..மென்பொருள்

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer



உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்



பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.



NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.



தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.



அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.



தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.



அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.



நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது.

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.



அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்



உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.



நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!

Wednesday, January 25, 2012

ஜனவரி 26....





உணர்ச்சிகளை
மறக்கடித்துவிட்டு
வாய்க்கூசாமல்
வாழ்த்துக்களை
பரிமாறிக்கொள்கிறோம்

குடியரசு, மக்களாட்சி , ஜனநாயகமென்று...

அணு உலைக்கும்,
அணை உடைப்புக்கும்,
அந்நிய முதலீட்டுக்கும்,
போராட்டம் வெடித்தாலும்

புயலால் வாழ்வாதாரம்
சிதைக்கப்பட்டு
வலுவிழந்து போன
வங்கக்கரை மக்களுக்கு
நிவாரணம் தா”வென
வலக்கை நீட்டினாலும்

வீதி தோறும் வன்முறைக்கும்
வழிப்பறிக்கும் வினாடிக்கொருமுறை
மக்கள் வீழ்த்தப்பட்டுக்கிடந்தாலும்

சாதிக்க வழி இருந்தும்
சம்பாதிக்கத்துடிக்கும்
சரபோஜிக்களால்
சாமானியர்கள்... வீழ்த்தப்பட்டாலும்

இந்தியனென்றால் அந்நியத்தில்
அவமதிப்பு..
தமிழனென்றால் தன்நாட்டிலே
தாழ்ந்துதைப்பு...

ஊள்ளூருக்குள் நான்குசுவர் அறைக்குள்
அமர்ந்து கொண்டு
“இந்தியரென்று பெருமிதம்”
கூறிக்கொண்ட நிலையின் போதும்

நானில. நடுவன் ,அரசுகளின் கீழ் வெம்பி
நிற்கும் மக்கள் மனம்...!

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டும்
பொங்கல் நண்பணும் சரியில்லை
என விமர்சனக் குறிகளை
வேறு திசை திருப்பி...
வேதனைகளின் குறைக்கப்பார்க்கும்

சாமானிய மக்களே...
இந்த
வெற்று வார்த்தைகளால்
உங்கள் மனம்
சந்தோசப்பட்டுக்கொள்ளுமாயின்
நானும் பகிர்கிறேன் இனிய
“குடியரசு தின நல் வாழ்த்துக்கள்”

-கவிதைக்காரன்

Saturday, January 7, 2012

கல கல கார்டூன்ஸ் ...!


அரசியல் பண்ணூறதுன்னா என்ன!
ஐந்து வருட கோர்ஸ் அசால்ட் ஆறுமுகம்
சைதை சரோஜா... மாஸ்டர்களால் கற்றுத்தரப்படும்...

தொடர்புக்கு

நம்பர் 2ஜி - லோக்பால்பில் அவென்யூ...
176000 -cr.

































 









Sunday, January 1, 2012

BSNL விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதி


BSNL

BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதியை இணையத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் கொடுத்துள்ள ஆயிரக்கணக்கான எண்களில் இருந்து நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே இது ரொம்ப அருமையான சேவை. எண்ணை பதிய விரும்புவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை (லிங்க்) க்ளிக் செய்து பயன்பெறலாம்.

http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp – Chennai Cirlce


http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp – Tamilnadu Circle

கனவில் வந்தாரா இவர் உங்களுக்கு...?



ஒருவர் கனவில் ஒருவர் வரலாம், ஆனால் இங்கு உலகம்பூராவும் உள்ள கணிசமான அளவு மக்களின் கனவில குறிப்பிட்ட ஒரு மனிதமுகம் வருகின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நம்பித்தானாகவேண்டும் , அதிர்ச்சியடையாமல் கீழே படியுங்கள்
நியூயார்க்கில் ஒரு மனநல மருத்துவரை ஒருவர் சந்திக்கின்றார், அவர் தனது கனவில் ஒருவர் அடிக்கடி வருவதாகவும் தனக்கு அறிவுரைகள் சொல்லித் தன்னைக் கடுப்பேத்துக்கிறார் எனவும் மருத்துவரிடம் தன் குறையைச் சொல்கிறார், அந்த மருத்துவர் ஒரு ஓவியத்தை எடுத்துக்காட்டி இவரா உங்கள் கனவில் வந்தார் எனக் கேட்கிறார், அந்த ஓவியத்தில் இருந்த முகத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அந்த நபர் இவர்தான் என் கனவில் வந்தார் எனக் காட்டுக்கூச்சலிடுகின்றார்,


இது ஒன்றும் கதையல்ல உன்மையாகவே நடந்த, நடந்துகொண்டிருக்கின்ற ஒரு சம்பவம், படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த உருவம் அமெரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பிய,ஆசிய நாட்டவர்கள் கனவிலும் வந்துள்ளது, முக்கியமாக உலகத் தலைநகரங்களில் வாழும் மக்கள்தான் இத்தகைய மனிதனைக் கண்டிருக்கின்றார்கள், ஆனால் இவரை அவர்கள் முன் எப்போதும் பார்த்ததில்லை என்பதுதான் சுவாரசியமான அதிர்ச்சி!!! கனவில் வரும் இந்த மனிதன் தான்தான் கடவுள் என்பதைப்போண்ற ஒரு பிரமையை ஏற்படுத்த முயல்வதாகவும், தங்களுக்கு கட்டளைகள் இடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்,


ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4பேர் இந்த மனிதனைக் கனவில் கண்டிருக்கின்றார்கள், இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் அவர்களது நன்பர்களுக்கும் அப் படங்களைக் காட்ட அவர்களும் மேலும் அதிர்ச்சியடைந்து அம்மனிதன் தங்கள் கனவிலும் வந்துள்ளதாகக் கூறியுள்ளனர், இந்தநிலை உலகம்பூராவும் காணப்படுகின்றது


உன்மையில் இந்த மனிதன் யார்? இவனை யாராவது முன்னபின்ன பார்த்திருக்கிறார்களா? என்பதெல்லாம் விடையில்லாத

கேள்விகளாகவே உள்ளது, இந்தப்படத்தில் இருக்கும் மனிதா நீ எங்கேதான் இருக்கிறாய்? என உலகம் முழுவதும் ஒரு கூட்டம் பித்துப்பிடித்து ஓடித்திரிகின்றது என்பது மறுக்கமுடியாத உன்மை


இந்தமனிதன் பற்றி அறிவியலாளர்கள் கூறும்போது டிரீம் சர்ஃபர் தியரி என்னும் தியரியை உதாரணமாகச் சொல்கின்றார்கள், அதாவது சில குறிப்பிட்ட உளவியல்த் திறன்கள் மூலமாக மக்களின் கனவுகள் ஊடாக ஒரு விடயத்தை நம்பவைக்க முடியும் என்பதுதான் அந்தத் தியரி, இதை மைய்யப்படுத்தி Inception என்று ஒரு படங்கூட வந்துள்ளது, இந்த மனிதனும் இத்தகைய ஒரு நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகத்தான் இருக்கமுடியும் எனக்கருதும் அறிவியலாளர்கள் இதற்க்குப்பின்னால் ஏதோ ஒரு மிகப்பெரிய நிறுவனம் இருக்க முடியும் எனவும் சந்தேகப்படுகின்றனர்,


என்னவோ போங்கள் இந்தத் தகவலை வழங்கியதில் இருந்து எனக்கும் கெடிக்கலக்கமாகத்தான் இருக்கின்றது, இன்று இரவு நம்ம தூக்கம் அம்பேல்தான் போங்கள்!!! என்னங்க உங்கள் நிலமை எப்படிங்க இருக்கு இப்ப???


ஆனா பார்க்க சாந்தமாத்தான் இருக்காரு பயபுள்ள.... உஷாரா இருங்க ஹஹ !

முன்னுதாரண கிராமங்கள் ?!!!

இந்திய பணக்கார கிராமம்



இந்த பணக்காரக் கிராமத்தின் பெயர் மதாபர் நவ வியாஸ்.வெளிநாடுகளிலிருந்து படேல்கள் சம்பாதிக்கும் பணம் இவ்விடத்தை செழுமையாக்கி உள்ளதாகக் குறிப்பிடுகிறார் மனீஷ் மக்வான்.

இந்தியாவில் உள்ள எந்தக் கிராமத்தோடும் மதாபரை ஒப்பிடமுடியாது. ஐந்து சதுர கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிராமம் இது. திட்டமிடப் பட்ட சாலைகளும், வளமான வீடுகளும் இக்கிராமத்தின் வாழ்க்கைத் தரத்தை சுட்டிக்காட்டுகின்றன. பெருநகரங்க ளைவிட நாகரிகமாக உள்ளது இக்கிராமம். மளிகைக் கடைகளைவிட வங்கிகளின் எண்ணிக்கை அதிகம். டெல்லி அல்லது மும்பையை ஒப்பிடும்போது இங்கு பங்கு வர்த்தகர் கள் அடர்த்தியாக உள்ளனர்.


இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. எல்லா கட்டடங் களிலும் மூன்று மாடிகள் உள்ளன. நன்றாகக் கட்டப்படாத ஒரு கடை அல்லது வீட்டைப் பார்க்கமுடியாது. மின்சாரமும் தண்ணீரும் 24 மணி நேரமும் தடையின்றிக் கிடைக்கிறது. இங்கே அதிநவீன வசதி உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றும் இயங்குகிறது. அதில் உள்ள விளையாட்டுத் திடல் கிராமத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு இடம்தருகிறது. நல்ல சுகாதார மையம் ஒன்றும் பெரிய ஆலயம் ஒன்றும் உள்ளது. பெருநகரத்தில் உள்ள குடியிருப்பு தொகுதி என இந்தக் கிராமத்திற்குள் புகுபவர்கள் யாரும் எண்ணி விடமுடியும்.


லேவா பட்டேல்களின் தொழில் நேர்த்திக்கும் பொருளாதார வெற்றிக்கும் அடையாளமாக விளங்கும் இக்கிராமம் குஜராத்தில் உள்ள பூஜ் அஞ்ஜர் நெடுஞ்சாலைக்கு 4 கி.மீ. தூரத்தில் புஜியோ மலைப்பகுதியில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு சௌராஷ்டிராவிலிருந்து லேவா பட்டேல்கள் கட்ச் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 1800 களில் கடல்கடந்த வணிகம் இவர்களுக்கு பெரிய வாய்ப்புகளைத் திறந்தது. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு வியாபாரிகளாகவும், கொத்தனார் களாகவும், தச்சர்களாக வும் சென்றனர். கூலிகளாகச் சென்றவர்களும் உண்டு. இப்படிச் சென்றவர்களில் நிறையபேர் தான்சானியாவில் உள்ள சான்சிபாரிலும் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். அத்துடன் சோமாலியா, உகாண்டா, காங்கோ மற்றும் ருவாண்டாவில் குடியேறியவர்களும் உண்டு. 1960களில் அங்கிருந்து இங்கிலாந்து, அராபிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு மீண்டும் புலம்பெயர்ந்தனர்.


அங்கு குடியேறிய பட்டேல்கள் தொடர்ந்து தங்கள் உறவினர்கள் மற்றும் மூதாதையர்கள் கிராமங்க ளுடன் உறவிலேயே இருந்தனர். அந்தக் கிராமங்களில் ஒன்றுதான் மதாபர். ஆனால் 1990களில் ஆரம்பத்தில்தான் லேவா பட்டேல்கள் தங்களது பூர்வீக இடங்களுக்குத் திரும்ப அதிக ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் அப்படி திரும்பி வந்து குடியேறிய இடம்தான் மதாபர் நவ வியாஸ் என்று தற்போது அழைக்கப் படுகிறது. அவர்களது பழைய கிராமத்திற்கு அருகே இப்புதிய பகுதி உருவாகியுள்ளது. வெளிநாடுகளில் உழைத்துவிட்டு ஓய்வுக்குத் திரும்பும் என்ஆர்ஐ ஓய்வு கிராமமாக இவ்விடம் உள்ளது. இங்குள்ள 60 சதவிகித மக்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர் கள்.


மதாபர் கிராமத்தில் 17 வங்கிகள் உள்ளன. பிராந்திய, தனியார், தேசிய வங்கிகள் அனைத்தும் தங்கள் கிளைகளை இங்கே கடைபரப்பி உள்ளன. 2005 ஆம் ஆண்டில் இந்த வங்கிகள் வெளியிட்ட கணக்கின்படி 2000 கோடி ரூபாயை இந்தக் கிராமத்தினர் சேமிப்புக் கணக்கில் போட்டுள்ளனர். ஒரு தனிநபரின் ஆண்டு வருமானம் 13 லட்சமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. “ஒரு வருக்கு வங்கி இருப்பு 20 லட்சமாவது இருக்கும்” என்கிறார் நகைக்கடை உரிமையாளர் பவேஷ் பரே. இந்த வங்கிகளில் அதிகம் கடன்கள் கேட்டு யாரும் வருவதில்லை.



லண்டன், கிழக்கு ஆப்பிரிக்கா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் பட்டேல்கள் ஆண்டுதோறும் பிக்செட் டெபாசிட்டாக 10 முதல் 15 கோடி ரூபாய் சேர்க்கப் படுகிறது. கிராமத்தில் உள்ள கட்டட வசதிகளுக்காக கொஞ்சம் பணம் பொதுவாக தொடர்ந்து செலவழிக்கப் படுகிறது. இங்குள்ள சொத்துகளின் விலை அதிகம். ஒரு சதுர மீட்டருக்கு 35 ஆயிரம் ரூபாய் விலை என பெயர் சொல்ல விரும்பாத நிலத்தரகர் ஒருவர் தெரிவிக்கிறார். இங்குள்ள எல்லா வீடுகளிலும் அதிநவீன ஃப்ளாட் ஸ்கிரீன் தொலைக் காட்சிகள் உள்ளன. துவைக்கும் எந்திரங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளும் இல்லாத வீடுகள் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

1990&ல் ஜோவர் சிங் ஜடேஜா, கிராம பஞ்சாயத்துத் தலைவராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பஞ்சாயத்து அலுவலகம் களிமண்ணில் கட்டப்பட்டிருந்தது. ஆறு ஆண்டுகளில் இப்போது நவீன அலுவலகமாக அது மாறிவிட்டது. குளிர்சாதன வசதி, கணிப்பொறி வசதியும் இங்குள்ளது.

2001-ல் குஜராத்தை குலுக்கிய நில அதிர்ச்சி மதாபரை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனாலும் அரசு 20 கோடி ரூபாயை நிவார்ணப் பணி களுக்காக மதாபர் தபால் துறையில் செலுத்தியது. இதுவரை அந்தப் பணத்தில் இதுவரை நிவாரணம் கேட்டு யாரும் வரவில்லை. இதைவிட ஒரு வசதியான கிராமத்தை இந்தியாவில் வேறு பார்க்க முடியும் என்பது சந்தேகம்தான்.


புத்தாண்டில் இது போன்ற மகிழ்வு தரக்கூடிய செய்திகளையாவது படிப்போம்.


நன்றி:சுண்டே இந்தியன்,