Saturday, August 27, 2011

சென்னை ஆட்டோ! பிகரின் லேட்டஸ்ட் டேட்டா!


நேற்று ஒரு தோழியை அழைத்தேன்.
செல்போனில்....
"நீங்கள் டயல் செய்த எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது"

"நீங்கள் டயல் செய்த எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது"

என்று இரண்டுதரம் சொல்லி முடித்தவுடன் எதிர்முனையில் தோழி "ஹல்லோ" என்றாள்.
நான் அதிரிந்து போனேன். விசாரித்ததில் அது அவளது காலர் டியூனாம்.

என் காது கழன்டு கம்மாயில் விழுந்தது.

பழைய உதவாக்கரை பாய் பிரண்டுகளை கழட்டிவிட பிரத்தேகமாக
வடிவமைக்கப்பட்டது என்ற கூடுதல் தகவலோடு சிரித்தாள்.

"தி ஸ்மெல் ஆப் சென்னை"
என்றால் எப்படி கூவம் பிரத்தேக இடம் பிடிக்குமோ அது போல

"தி சவுண்ட் ஆப் சென்னை" என்றால் அப் கோர்ஸ் அதே தான்


"த்தா....பெரிய பரு....நீ...ம#ரு....த்தா...ல..க..புடு...சாவுகிராக்கி..." .

இவற்றோடு சேர்ந்து கோரஸாக முழங்கும் சென்னையின் இன்னொரு நேட்டிவிட்டு சவுண்டு

மாஹூ....மஹூ...மஹூ.மஹூ....மாஹூ.....

ஆட்டோ. ஆட்டோகாரர்களின் சைக்காலஜி சிலருக்கு அத்துப்படி.

சில டிப்ஸ்.
நீங்க பைக்கிலோ காரிலோ சென்னையில் பயணித்தால்,
சவாரி இல்லாத ஆட்டோவுக்கு பின்னால் பயணிப்பதை தவிர்க்கவும். பின்னால் எத்தனை வண்டிகள் அணிவகுத்து வந்தாலும் அது பத்து கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் நகரப்போவதில்லை. பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் யாரோ ஒருவர் கொஞ்சம் ரிலாக்ஸாக கையை உயர்த்தி கொட்டாவிவிடும் பட்சத்தில் அட்டோ சடன் பிரேக் அடித்து அங்கேயே நின்றுவிடும். நீங்கள் அப்பாவியாய் போய்.... பிரேக் பிடிக்காமல் பின்னால் முட்டினால் சென்னையின் முதல் நேட்டிவிட்டி சவுண்ட் கிளம்பிவிடும். அதேதாங்க "த்தா....பெரிய பரு....நீ...ம#ரு....த்தா...ல..க..புடு...சாவுகிராக்கி..." .

இப்படி ஆட்டோக்களின் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகி இம்சித்து வரும் நிலையில் நாம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பொத்தானை அழுத்தி தேர்ந்தெடுத்த ஒரு பித்தான் சட்டசபையில் "சிட்டியில் ஷேர் ஆட்டோ பெர்மிட்டுகளை அதிகப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

கே.என். நேருவோ ஷேர் ஆட்டோக்ளுக்கு பதிலாக மினி பஸ் அறிமுகப்படுத்தப்படும் என்றார். அவர் சொன்னது கொஞ்சம் அறிவார்த்தமான பதிலாக இருந்தது. ஆனால் அது செயல்வடிவம் பெறும் போது தான் சிக்கலே இருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கலாம் என்ற விவாதம் வரும்பொழுது ஏற்கனவே ஷேர் ஆட்டோவின் தயவிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கி வரும் பகுதிகளில் மினி பஸ் இயக்க அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் நமக்கு தெரிந்த அரசியல்விதிகளின்படி அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். காரணம் பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களும் மீட்டர் ஆட்டோக்களும் அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளுக்கும் ரௌடிகளுக்குமே சொந்தமானது என்பது ஊரறிந்த உண்மை.

எனவே ஆட்சியாளர்களின் வருமானம் பாதிக்கும்படியான எந்த ஒரு நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கமாட்டார்கள். மினி பஸ் வந்தென்ன நாம் வழக்கம்போல் ஷேர் ஆட்டோவையும் மீட்டர் ஆட்டோவையும் துரத்திக்கொண்டே ஓடவேண்டியது தான்.

அரசியல்வாதிகள் மக்களை எந்த அளவுக்கு முட்டாளாக நினைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன சான்று.

1. எல்லா ஆட்டோக்களிலும் கட்டாயமாக மீட்டர் பொருத்தியிருக்கவேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஆனால் அவர் எல்லா ஆட்டோக்களும் இனி மேல் மீட்டர் கட்டணத்தை தான் வசூலிக்கவேண்டும் என்பதை கண்டிப்பாக சொல்லவில்லை.

2. ஆட்டோக்காரர்களின் இந்த அராஜகத்தை எப்படி அரசாங்கம் ஒடுக்கப்போகிறதாம்?
இன்னும் நிறைய ஆட்டோ பெர்மிட் கொடுப்பதன் மூலமாம். நிறைய ஆட்டோ பெர்மிட்டுகள் வழங்குவதால் ஆதாயமடைய போவது யாரென்று சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை.அதாவது நிறைய ஆட்டோ பெர்மிட்டுகள் கொடுத்தால் சென்னை நகரமெங்கும் ஆட்டோக்களாக நிறைந்திருக்கும். அப்போது போட்டி அதிகமாகும். போட்டி அதிகமானால் கட்டணம் தானக குறைந்துவிடும்.

இது அரசாங்கத்தின் வாதம். இப்படி ஒரு அறிவார்த்தமான அரசியல் உலக அரங்கிலே எங்கும் காண கிடைக்காதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதே ஸ்ட்ரேட்டஜியை பின்பற்றி தமிழக அரசியலை தூய்மைபடுத்தவேண்டுமென்றால் ஒரே வழி.
234 பதிலாக 2000 தொகுதிகளாக பிரித்து 2000 எம்.எல்.ஏக்களுக்கு பெர்மிட் வழங்கவேண்டும். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் சுருட்டுவதில் போட்டி நிலவும். போட்டி வந்தால் பொறாமை வரும். போட்டி பொறாமை வந்தால் சுருட்டுவது ஆட்டோமேட்டிக்காக குறைந்துவிடும். இது எப்படி இருக்கு?

இந்த மேன்மையான திட்டத்தை மிக்கியிடம் தெரிவித்தேன். அவன் சிரித்தான்.

'2000 பேருக்கு பெர்மிட் கொடுத்தா தமிழ்நாடு பத்தாது. அது பத்தாம ஆந்திரா கேரளான்னு கைவச்சிடுவாங்க"

"அங்கேயும் அதே மாதிரி பிரிச்சுட்டா சரியான போட்டி தானே"


ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஓட்டு போடுகிறோம். அதை தவிர இந்த அரசாங்கத்தின் மீது நமக்கு என்ன அதிகாரம் இருக்கிரது? இந்தியாவின் ஜனநாயகம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் சர்வாதிகார ஆட்சி. நான் எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

Wednesday, August 24, 2011

மைலாப்பூரை சுற்றி வந்தேன் !...கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகு சிலநாட்களுக்கு முன்பு மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. மயிலைவாசி நண்பர் மாமி மெஸ்ஸுக்கு தான் அழைத்துச் செல்வதாக என்னையும், என் நண்பரையும் அழைத்துச் சென்றார். இரவு ஒன்பது மணிக்கு மேல் சென்றதால் மாமி மெஸ் மூடப்பட்டிருந்தது. வேறு வழியின்றி கற்பகாம்பாளுக்கு போனோம்.

மயிலாப்பூர் மாமி மெஸ் தான் ஒரிஜினல். இதே பெயரில் ஏராளமான டூப்ளிகேட் மெஸ்கள் சுற்றுவட்டாரங்களில் இயங்குவதாக கேள்விப்படுகிறோம். மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் இருந்து வலதுபக்கமாக திரும்பினால் கிழக்கு மாடவீதியில் பாரதிய வித்யா பவன் வரும். அதையொட்டி வலதுபுறமாக செல்லும் சந்தில் சென்றால் ஐந்தாவது அல்லது ஆறாவது வீடு மாமி மெஸ். விநாயகா கேட்டரிங் என்று போர்டு மாட்டியிருக்கும். மெஸ் என்றதுமே கற்பகாம்பாள் மாதிரி நாற்காலி, டேபிள் எல்லாம் போடப்பட்டு வசதியாக இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். லிட்டரலாக சொல்லப்போனால் மாமி மெஸ் ஒரு கையேந்தி பவன். சாப்பாடு கிடைக்காது. டிஃபன் மட்டும் தான். ஞாயிறு விடுமுறை.

ம்ஹூம். கற்பகாம்பாள் இப்போது ஆஹா ஓஹோவென்று புகழும்படியான சுவையில் இருப்பதாக தெரியவில்லை. பொடி தோசை பயங்கர காரமாக இருந்தது. சரக்கடித்தால் மட்டுமே அதை சந்தோஷமாக சாப்பிடமுடியும். நெய் ரோஸ்ட் திகட்டியது. அடை அவியல் சாப்பிட்ட நண்பர் மட்டும் திருப்தியாக இருந்தார். அடுத்து அவரும் ஒரு பொடிதோசை சாப்பிட்டு நொந்துப்போனார். கடைசியாக சாப்பிட்ட டிகிரி ஃபில்டர் காபி சொர்க்கம். எனக்கு காபி கொஞ்சம் கசப்பாகவே இருக்கவேண்டும். ரொம்ப சூடாக சாப்பிடமாட்டேன். நன்கு ஆற்றி மிதமான சூட்டில் சாந்து மாதிரி கொழகொழவென்று இருக்கும் காப்பியை காலையில் குடிக்க எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம். பெட் காஃபி இல்லாவிட்டால் நான் எழுந்திருக்கவே மாட்டேன்.

அடுத்து ஓரிரு நாள் கழித்து மாமி மெஸ்ஸுக்கும் போனோம். சாலையோரத்தில் டூவீலர்களையும், கார்களையும் நிறுத்திவிட்டு மாமாக்களும், மாமிகளும் பேட்ச் பேட்சாக கையில் தட்டேந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அக்கம் பக்கம் முழுக்க அக்ரஹாரத்து ஸ்டைல் வீடுகளும், அபார்ட்மெண்ட்களும். சாப்பிடுபவர்கள் யாரும் இலைகளையும், தட்டுக்களையும் ஆங்காங்கே போட்டுவிடுவதில்லை.

பேச்சுலர்கள் கூட்டம் கூட்டமாக ஜோதி தியேட்டருக்கு ஒரு காலந்த்தில் வந்தது மாதிரி வத்துக்கொண்டே இருக்கிறார்கள். மெஸ் நடப்பதற்கான அறிகுறி இல்லாமல் சாலை சுத்தமாக இருக்கிறது. இங்கே சாப்பிடுபவர்களை காட்டிலும், பார்சல் வாங்கி வீட்டில் சாப்பிடுபவர்கள் தான் அதிகமாம். மெஸ்காரர்கள் ஒரு நொடி கூட ஓய்வின்றி பார்சலித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

மாமிக்கள் நிறைய பேர் வந்து சாப்பிடுவதால் தான் இதற்கு ‘மாமி மெஸ்' என்று பெயர் வந்ததா என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன். மெஸ்ஸின் உள்ளே படமாகிவிட்ட ஒரு மாமியை காட்டினார். அவர் நடத்திய மெஸ்ஸாம் அது. தீர்க்க சுமங்கலியாக பழுத்த வயதில் சமீபத்தில் தான் சிவனடி போய் சேர்ந்தாராம். ஆனாலும் அந்த மாமியின் கைமணம் இன்னமும் சமையலில் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள்.

தோசை, இட்லி, போண்டா, சாம்பார், சட்னி, வடக்கறி இத்யாதி.. இத்யாதியெல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருக்கிறது. தோசை, இட்லி சமாச்சாரங்களை மட்டும் அவர்களே தட்டில் போடுகிறார்கள். சட்னி, சாம்பார் நமக்கு வேண்டிய அளவுக்கு நாமே ஊற்றிக் கொள்ளலாம். இங்கே சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் சாம்பாராக தானிருக்கிறார்கள்.

நானும் கூடவந்த நண்பரும் ஆளுக்கொரு பொடிதோசை சாப்பிட்டோம். ஆஹா.. என்ன சுவை! என்ன சுவை! பொடின்னா மாமி மெஸ் பொடிதான்! கற்பகாம்பாளிலும் சாப்பிட்டோமே பொடிதோசை என்ற பெயரில் ஏதோ ஒரு வஸ்துவை. அடுத்து நண்பர் இரண்டும், நான் ஒன்றுமாக கல்தோசை சாப்பிட்டோம். இங்கே தோசை என்றாலே அது கல்தோசை தான். வேறு எதுவும் சாப்பிடும் ஸ்பெஷல் மூடில் இல்லை. பில்லுக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்று மனதுக்குள் ஒரு கணக்கீடு போட்டு இரண்டு நூறு ரூபாய் தாள்களை நீட்டினேன்.

கற்பகாம்பாள் ரேட்டை மனதில் கொண்டு நூற்றி இருபது ரூபாய் வரை பழுத்திருக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஒரு நூறு ரூபாய் நோட்டையும், மூன்று இருபது ரூபாய் நோட்டுக்களையும், ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் பில் போடுபவர் திருப்பித் தந்தார். மொத்தமாகவே முப்பத்தி ஐந்து ரூபாய் தான் ஆனது. சரவணபவன் தரத்தில், அதைவிட சுவையில் சரக்கு இருந்தாலும் ரேட்டு என்னவோ கையேந்திபவன் ரேட்டு தான். தோசை ஐந்து ரூபாய். பொடி தோசை பத்து ரூபாய். இட்லி, போண்டா வகையறாக்கள் ரேட்டு தெரியவில்லை. அடுத்த முறை செல்லும்போது விசாரிக்க வேண்டும்.

மாலை வேளைகளில் ரெப்ரெஷ் ஆக செம மெஸ் இந்த மாமி மெஸ். மாமி மெஸ் சமையலை ருசிப்பதற்காகவே அய்யராக கன்வெர்ட் ஆகி பலபேர் மயிலாப்பூர்வாசியாகி விட்டிருக்கிறார்கள்.

* - * - * - * - * - * - *

சென்னையில் சத்யம் சினிமாஸுக்கு சிங்கிளாக கூட போவதென்பது பர்ஸை பழுக்க வைக்கும் வேலை. மேற்கூரையே இல்லாத டூவீலர் பார்க்கிங்குக்கு முதன்முதலாக பத்து ரூபாய் வாங்கி புண்ணியம் கட்டிக்கொண்டவர்கள் அவர்கள். குடும்பத்தோடு தியேட்டருக்கு படம் பார்க்க ஒரு நடுத்தரக் குடும்பம் சென்றால் ஒரு மாத சம்பளத்தை டிக்கெட் + ஸ்னாக்ஸ்க்காக தண்டம் அழுதுவிட்டு வரவேண்டும். நானும், நண்பர் ஒருவரும் அங்கே படம் பார்க்கச் சென்றால் ஸ்னாக்ஸ் வெளியில் வாங்கி சாப்பிட்டு விடுவது வாடிக்கை.

சமீபத்தில் ஒரு ’யூ சர்ட்டிபிகேட்’ ஆங்கிலப்படம் பார்க்கப் போயிருந்தோம். சத்யமுக்கு எதிரிலிருந்த ஒரு பேல்பூரி கடையில் பேல்பூரி வாங்கி சாப்பிட்டோம். கடைக்காரர் சேடு கிடையாது. இருந்தாலும் ஒரு மசலா எஃபெக்ட்டுக்காக சேடு மாதிரி மாறுவேடம் போட்டிருந்தார். மசாலாவை கொஞ்சம் தூக்கலாக போடும்படி என்னுடன் வந்த நண்பர் கடைக்காரரை தீவிரவாத அணுகுமுறையோடு வற்புறுத்தினார். தூக்கலான மசலாவோடு வந்த பேல்பூரி தீக்கங்கு மாதிரி இருந்தது. கடைக்காரர் ஊற்றியது மசலாவா? சில்லி சாஸ்ஸா என்று தெரியவில்லை. வாயில் வைத்ததுமே நாக்கு மட்டுமன்றி, உடலின் சகலபாகங்களும் எரிந்தது. எவ்வளவு நீர் குடித்தும் எரிச்சல் அடங்கவில்லை.

“என்னங்க இவ்ளோ காரம்?” என்று கடைக்காரரிடம் கேட்டதுக்கு, “அதுக்கு தான் பக்கத்துலே ஜிலேபியும் விற்கிறோம். ரெண்டு ஜிலேபி வாங்கி வாயிலே போட்டுக்கோங்க. எல்லாம் சரியாயிடும்” என்றார் கூலாக. வியாபாரத் தந்திரம்!

* - * - * - * - * - * - *

இன்னமும் கோலி சோடாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் கோலி சோடாவை பார்ப்பது இப்போது அரிதாகி விட்டது. பன்னீர் சோடாவை விட சாதா சோடா தான் எனக்கு பிடிக்கும். சோடாவை உடைத்து லெமன், சால்ட் சேர்த்து அடிக்கும் லெமன் சால்ட் சோடா தரும் கிக்குக்கு இணையேயில்லை. லெமன் கொஞ்சம் புளித்திருந்தால் ஒத்தமரக் கள் சுவை. இதே கோலி பாட்டிலில் அடைத்து இருமல் மருந்து ஸ்மெல்லில் வரும் 'கலரு' இப்போது சுத்தமாக கிடைப்பதில்லை. ஆனால் கோலி சோடா இன்னமும் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கூல்பார் ஒன்றில் கிடைக்கிறது. காட்டாக கேஸ் அடைக்கப்பட்ட அதே சுவைக்கு இன்றும் உத்தரவாதம் உண்டு. சென்னையில் வேறெங்காவது கோலி சோடா கிடைக்கிறதா? சைதாப்பேட்டையில் கிடைப்பதாக முன்பு கிருபாஷங்கர் ஒருமுறை சொன்னதாக நினைவு.

Tuesday, August 23, 2011

அறிவோமா அறிவியல்

கொரில்லாக்கள் சில வினோதங்கள்!
பூமியில் வாழும் மிகப்பெரிய மனிதர்களின் மூதாதையர்கள் (Primates) கொரில்லாகள்தான். நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சுமார் 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும். கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடிகள் வரை நீளும். இவை பொதுவாக நான்கு முதல் எட்டு மனிதர்களின் பலத்திற்கு சமமான பலத்தினை பெற்றிருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாகளை விட உருவத்தில் பாதி அளவுதான் இருக்கும்.
Adult male and female Gorillas

கொரில்லாக்கள் மனிதர்களை போல் கை மற்றும் கால்களில் தலா பத்து விரல்களையும், கண்கள் மனிதர்களை போல் முன்னோக்கிய பார்வையும், 32 பற்களையும் பெற்றிருக்கும். ஆனால் கால்களை விட கைகள் மிக நீளமாகவும் அதிக தசைகளையும், கைகளில் உள்ள விரல்களை போல் கால்களிலும் இருக்கும். Adult கொரில்லாக்களின் (Age-15) முதுகில் உள்ள ரோமங்கள் வெளிர்நிறத்தில் (silverback) மாறிவிடும்.

கொரில்லாகளால் மனிதர்கள் போல் கைகளை ஊன்றாமல் நடக்க முடியும் ஆனால் அவை அவ்வாறு நடக்க விரும்புவதில்லை. இவைகளுக்கு கோபமும் எரிச்சலும் வரும்போது மட்டுமே கைகளை தூக்கி நெஞ்சில் அடித்து பயங்கரமாக சத்தமிடும்.
கொரில்லாக்கள் பொதுவாக 50 வருடங்கள் வரை உயிர்வாழும். இதன் குட்டிகள் மிக சிறியவையாக 2 கிலோ எடையே இருக்கும். குட்டிகள் பொதுவாக 3 வருடங்கள் வரை தாயை சார்ந்தே வாழும் ஆண் கொரில்லாக்கள் 12-13 வருடத்திலும் பெண் கொரில்லாக்கள் 11-12 வருடத்திலும் பருவ வயதை எட்டும். கூட்டம் கூட்டாமாக வாழும் இவை இளம் வயது கொரில்லாகளுக்கு உணவு சேகரிக்கும் முறை, குழந்தை பரிமாரிப்பு, தாங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றை கற்று கொடுக்கும்.

கொரில்லாக்கள் உடல் அசைவுகள், சத்தம், முக மாற்றத்தின் மூலமாக பேசிக்கொள்ளும். மனிதர்களின் சத்தத்தை போல் சத்தம் போடமுடியாது, ஆனால் நம் கற்றுகொடுத்தால் செய்கைகளையும், நாம் பேசும் மொழியையும் அறிந்து செயல்படும்.
கொரில்லாக்கள் மிகவும் புத்திசாலியானது. அவை நம்மைபோல எல்லாவிதமான Emotion -களையும் ( love, hate, fear, grief, joy, greed, generosity, pride, shame, empathy, and jealousy) பகிர்ந்துகொள்ளும். கொரில்லாக்கள் நம்மைபோல் சிரிக்கும், சத்தம் போட்டு அழும் ஆனால் அழும்போது கண்ணீர் வராது.

Crying Gorillas

Smiling Gorilla

கொரில்லா குடும்பத்தில் ஒரு Silverback, பிரச்சனை செய்யாத தன்மையுடைய பலம் வாய்ந்த ஒரு ஆண் கொரில்லா, வயதுக்கு வாராத ஒரு ஆணும் (8-13 years old) மூன்று அல்லது நான்கு வயதுக்கு வந்த பெண் கொரில்லாவும், 5 -8 வயதுக்கு வராத பெண் கொரில்லாகளும் இருக்கும். சிலநேரங்களில் குடும்பங்கள் இதைவிட சிறியதாகவும், பெரியதாகவும் இருக்கலாம். சில நேரம் இளம் ஆண் கொரில்லாக்கள் கூட்டமாக தனியாகவும் சுற்றிகொண்டிருக்கும்.

ஒரு கொரில்லா குடும்பம்


கொரில்லாக்கள் இரவுநேரம் 13 மணி நேரமும், மத்திய வேளைகளில் சிறிது நேரமும் தூங்கும், மாற்ற நேரங்களில் உணவை தேடி உண்டுகொண்டிருக்கும். இவை பொதுவாக கிழங்கு, பழம், இலை, தளை, எறும்பு, கரையான் போன்றவற்றையும் உண்ணும். தூங்குவதற்கு வசதியாக சிறிய மரங்களில் படுக்கைகளை தயார் செய்து கொள்ளும், படுக்கைகள் springy platform போன்று இருக்கும்.
மூன்று வகையான கொரில்லாக்கள் உள்ளன அவை Western Lowland, Eastern Lowland and Mountain gorillas, இவை ஆப்ப்ரிக்காவில் வாழும் இடத்தை பொருத்து பெயரிடபட்டுள்ளது. இதில் Mountain கொரில்லாக்கள் அழியும் தருவாயில் உள்ளது, தற்சமயம் சுமார் 400-600 வரையே உயிர்வாழ்கிறது.
Mountain gorilla

Western Lowland gorilla

Eastern Lowland Gorilla

கொரில்லாக்கள் மிகவும் அமைதியானவைகள், இவைகளின் முதல் எதிரியே மனிதன்தான், இன்றும் ஆப்ரிக்காவில் இவை உணவுக்காக வேட்டையாட படுகிறது. பிற விலங்குகளை பிடிக்க இவற்றை கண்ணியில் பயன்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் விலங்கியல் பூங்ககளுக்காக பிடிக்கப்படும் குட்டி கொரில்லாகாக அதன் முழு குடும்பமும் அழிக்கபட்டுவிடும் ஏனென்றால் முழு குடும்பமும் அந்த குட்டிக்காக போராடுவதால்தான்.


மாமிசத்துகாக கொல்லபட்ட கொரில்லாக்கள் (கண்களில் கண்ணீரை வரவளைக்கும் கொடூரம்)

அறிவோமா அறிவியல்:(உயிரியல் ) தொடர்ச்சி...

 சில விலங்கியல் வினோதங்கள்!

1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும்.
2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

3. உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

4. இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.


5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.

8. உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.

9. Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)


10. Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும். 11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.


12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.
13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.


14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.

அறிவியல் ஆயிரம்....!

அறிவோமா அறிவியல் ஆயிரம்: புத்திசாலியான விலங்குகள்!
உலகில் மனிதன்தான் மிகபுத்திசாலியான உயிரினம் என்று எல்லோராலும் ஏற்றுகொள்ளபட்டாலும் மாற்ற விலங்கினகளும் நம்மைபோன்று புத்திசாலிகள் தான் என்று பல விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது . நம்மால் கற்றுக்கொள்ளமுடியும், பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியும் , சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்திக்க முடியும், 
 
சுக துக்க உணர்வுகளை வெளிபடுதமுடியும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும் ஆகவே மனித இனம்தான் புத்திசாலிகள் என்று நினைத்துகொண்டிருகிறோம் ஆனால் விலங்கினகளும் மிகசிறந்த புத்திசாலிகள்தான் என்பது இன்றைய பதிவில் காணலாம்.

Squid and octopus: கடலில் வாழும் உயிரினங்களில் புத்திசாலியான விலங்குகளில் இவை முக்கிய பங்குவகிக்கிறது. ஆக்டோபஸ்கள் தங்களுக்கு தேவையான கூடுகளை கடலில் கிடைக்கும் கழிவு பொருள்களை கொண்டு கட்டும் அதுவும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறத்தை தேர்ந்துஎடுக்கும். தன் உடலில் உள்ள நிறத்தினை மிகவேகமாக மாற்றும் தன்மையுடையது.Sheep: பலவருட ஆராய்ச்சிக்கு பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஆடுகள் சிறந்த புத்திசாலிகள் கண்டுபிடித்துள்ளார்கள். ஆடுகளால் பழகிய மனிதர்களின் முகம் விலங்குகளின் முகத்தினை எத்தனை நாட்கள் கழித்து பார்த்தாலும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும். மனிதர்களே போல் சிந்திக்கும் தன்மையும் உடையது. (நானும் புத்திசாலியாக்கும்....ஆமா)
Crows: உலகில் உள்ள பறவையினிலே காகங்கள்தான் புத்திசாலியானவை. நம்முடைய வட்டரகதைகளில் வருவதை போன்று புத்திசாலிதனமாக உணவு மற்றும் தண்ணீரை உண்ணும் திறன்னுடயது. (எப்படிங்க... உட்க்கார்ந்து யோசிப்பாங்களோ?) Monkeys: கண்ணாடின் முன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் தன்மையுடையது. மாற்ற பெரும்பான்மையான விலங்கினங்களால் தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ளமுடியாது , நம்ம பூனைகளால் கூட முடியாது. (கண்ணாடிய பார்த்துடாதீங்க பின்விளைவுகள் மோசமாக இருக்கும்?ஹாஹாஹா )தஒலப்ஹஇன்ச: நமக்கெல்லாம் தெரியும் டால்பின்கள் மிகவும் புத்திசாலிகள் என்று. இதன் மூளை எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கும். கடலுக்கடியில் உணவு தேடிசெல்லும்போது அதன் மூக்கை பாதுகாக்கும் பொருட்டு பஞ்சு போன்ற பொருளை தனது மூக்கின் மீத வைத்துக்கொண்டு செல்லும், அதனால் அதன் மூக்கின் மீது காயம் ஏதும் இல்லாமல் தப்பித்து கொள்ளும் . இந்த குணநலன்களை அதன் சந்ததிகளும் பின்பற்றும். (ரெம்ப புத்திசாலிதான் டாக்டருக்கு படிக்க வைங்கப்பா மூக்குல பஞ்சி வைக்குமாம் ஹாஹா....) Elephants: யானைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை இதற்கு மிக அபாரமான நியாபக சக்தியுண்டு. யானைக்கு யாரேனும் தீங்கு செய்தால் அவை சாகும் வரை நினைவில் வைக்கும் தன்மையுள்ளது. யானைக்கும் தன்னை கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் உண்டு. (யானைக்கு கண்ணாடி எங்க செய்வாங்க?)Chimpanzees and Gorillas: பூலோகில் உள்ள விலங்கினத்திலே இவைதான் மிகவும் புத்திசாலியானவை. (படத்தை பார்த்தாலே தெரியுமே?)

இன்னும் ! தொடரும்.......!

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!..

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.
ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்.

இராமநாதபுரம் மாமன்னர் செல்ல முத்து சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ம் ஆண்டு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார்.
ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.
ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.
திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.
கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.
அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.
விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.
வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.
அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.
1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.
வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.
1790ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியானார்.
1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கியவர் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.

முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.

இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது.
வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.

Sunday, August 21, 2011

கவனமா இருக்கீங்களா !?

எல்லாருக்கும் வணக்கம் என் வலைப்பூ பக்கம் வந்து பல நாள் ஆச்சு!
சரி இன்னைக்கு எதாவது பண்ணலாம்ன்னு நினைச்சேன் ! முகநூல் வேற ஆள் இல்லாத வீடு போல சத்தமில்லாம கிடக்கு, அதனால தான்  சரி பிரெஷா எதாவது கொடுக்காட்டாலும் நமக்கு தெரிஞ்ச சில தொழில்நுட்ப வலைகளை பகிர்ந்துக்கலாமென்னு இந்த பதிவு
(காப்பி பேஸ்ட்-லாம் கலந்து தான் கொடுத்திருகேன் ).


இப்போ எல்லோரும் அகில உலக சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்!!! ஆமா,
நம்ம படத்த இனையதளத்துல போட்ட மறு வினாடியே உலகத்தின்
எந்த மூலையில இருக்கிறவங்களும் பாக்க முடியுமே. ஆனா இது
மாதிரி இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன்
நாம சில முக்கியமான விசயங்களையும் தெரிஞ்சுக்கணும்.


இப்போ, செல் போன், காமிரா எல்லாத்துலயும் மெமரி கார்ட்
இருக்கு. அதுல வச்சிருந்த ரொம்ப பெர்சனல் ஆன பைல்ல
இப்போ எனக்கு தேவையில்லை, அதனால அத
இருந்த தடயமே தெரியாம அழிச்சிட்டேனே!! அப்படின்னு
நீங்க நினைச்சீங்கன்னா, சாரி நீங்க ஒரு அப்பாவி. (அய்யோ சும்மா தமாஸு) ரொம்ப கவனமா இருங்க, விஷமிகள் கையில் அது கிடைத்தால், விபரீத விளைவுகள் நேரலாம். விடை தெரிய இந்த மெமரி டிஸ்க் அபாயங்கள் பத்தி அவசியம் படிங்க.
தளம்:சுடுதண்ணி
********************************************


இப்பெல்லாம், அனேகமாக வீட்டுக்கு வீடு, கணிணி மற்றும் இணைய இணைப்பு இருக்கு நாம பயன்படுத்துற வன்பொருட்களுக்கு ட்ரைவர் அப்டேட் செய்றது அவசியம். ஒவ்வொரு தடவையும் நாம் ஒவ்வொரு வன்பொருட்களுக்கும் ட்ரைவர் தேடி அப்டேட் செய்றது கஷ்டமா இருக்கும். அப்போ என்னதான் செய்றதுன்னு கேட்குறீங்களா, இதோ இங்கே போய் பாருங்க.
(உன் தளத்துக்கு வந்தா சும்மா அங்க போ இங்க போன்னு சொல்லிகிட்டு-ன்னு திட்டுறீங்களா?)


வங்கிக்கு போகாம, இணைய தளத்துலேயே பண பரிமாற்றங்கள்
செய்றீங்களா. ரொம்ப கவனமா இருங்க, உங்களோட
கடவுச்சொல்லை திருடும் வாய்ப்பு நிறய இருக்கு. திருடு போகாம
இருக்கனுனம்னா என்ன செய்யனும்ன்னு தெரிஞ்சுக்க
இதை படிச்சு பாருங்க.
தளம்:கணினி மென்பொருட்களின் கூடம்
*********************************************


ஆணி புடுங்குவதை சற்று நிறுத்தி விட்டு, நல்ல சுவராசியமான
இடுகை ஒன்றை தயார் செய்து வைத்திருப்போம். அந்த நேரத்தில்
பாஸ் அழைத்ததாலோ, அல்லது வேறு காரணத்தாலோ save செய்வதற்கு பதில் delete செய்து விட்டீர்களா!!
விடுங்கள் கவலையை, மென் பொருட்களின் துணை இன்றி அதனை
மீட்டெடுக்கும் வழி இங்கே இருக்கிறது!!!
தளம்:வந்தே மாதரம்
****************************************************


இதே போல் தொழிநுட்ப தகவல் தந்திருக்கும் புதிய தளங்களை
பார்ப்போம்.

புது மலர் 1:தளம்: காளை(லை) வணிகம். இது April - 2009 -இல்
தொடங்கபட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் நிறய
எழுத ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (என நினைக்கிறேன்)

நல்ல சம்பளம் வரும் வேலையில் சேர்ந்தாச்சு, வீடு, கார் எல்லாம்
வாங்கியாச்சு, அடுத்து பணத்தை எங்கே முதலீடு பண்ணலாம்னு
யோசிச்சிக்கிட்டு இருக்கிக்கீங்களா. அப்படின்னா இங்கே போய் பாருங்களேன்!! பங்குவணிகத்தில் ஈடு பட
செய்ய வேண்டிய விவரங்கள் எல்லாம் இருக்கு.
*****************************************


புது மலர் 2: ஜனவரி - 2010 -இல் தொடங்க பட்டிருக்கிறது.
தளம்:நாடோடியின் பார்வையில்நீங்க Microsoft Excel பயன்படுத்துறீங்களா, அதுல ஒரே Folder - ல
ஏகப்பட்ட பைல் வச்சு இருப்பீங்க. அந்த பைல்களின் பெயர்களை copy பண்ணாமலே கொண்டு வர வித்தையை இங்கே சொல்லி இருக்காங்க, படித்து பாருங்களேன்.
***********************************************


இவை நிச்சயம் உங்களுக்கு பயன்படும். இது விடுமுறை காலம்,
அதனால நாளைக்கு உங்களை எல்லாம் ஒரு "ஜாலியான சுற்றுலா"
கூட்டிட்டு போகப்போறேன். இந்த இடத்துக்கு நிச்சயம்
நீங்க போயிருக்க மாட்டீங்க (சில - நபர்களைத்தவிர!). ஒரு வித்தியாசமான அனுபவம்
காத்திருக்கு!!


சரி காபி வந்திருச்சி....! குடிச்சிட்டு ஒரு குட்டி தூக்கத்தையோ இல்ல டிஸ்கவரி தமிழ்ல பேர்-க்ர்ல்ஸ் பார்க்கபோறேன்
முடிஞ்சா இது எஃப்.பி-லயும் போஸ்ட் பண்ணூறேன்!


கம்மெண்ட் போட ஆள் இருந்தா எல்லா ப்ரோக்ராமும் கேன்சலாகிடுமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹாஹா நன்றி.!!

என்ன செய்யப்போகிறோம்?


புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை. நமது உலகம் நம் கண் முன்னே அழிவதை நாம் திரைப்படக் காட்சிகளைப் போல பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

நமது வாழ்கை முறைகளால், நாம் நமக்கே வைத்துக் கொண்டுவரும் இந்த சூனியத்தைப் பற்றி நம் பதிவர்களில் சிலர் கூடப் பதிந்துள்ளனர். உலக உருண்டை ஒரு உள்ளங்கையில் இருப்பது போல சில படங்கள் பார்த்திருப்போம். உண்மையிலேயே இந்த உலகத்தின் அழிவும் அதை காப்பதும் நம் ஒவ்வொருவரின் கைகளில் தான் உள்ளது. சுனாமி, பெருவெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கடலோர கிராமங்கள் கடலில் மூழ்குதல் போன்ற இயற்கை சீரழிவுகளால் நம்மில் பலர் இன்று வரை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இவையெல்லாம் நம்மக்கு ரத்தம் அல்ல... தக்காளி ஜூஸ்.

நம்மால் மாற்றப்பட்ட இந்த சீதோஷ்ண நிலையினால், புவியில் உள்ள அனைத்து பனிப் பகுதிகளும் உருகி, கடலில் கலப்பதால், கடற்பரப்பின் வெப்ப நிலை உயர்ந்து, கடலின் அடிப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயு நாம் சுவாசிக்கும் ஆக்சிசன்னுடன் கலந்து நச்சுக் காற்றாக மாறிவிடும். இந்த பேராபத்து இன்னும் 4-5 ஆண்டுகளில் நிகழத் தொடங்கும். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இப்புவியின் வெப்பநிலை உயர்வு 1.8 degree F (1 degree C). இதில் கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் 1.1 degree F (0.6 degree C).

இயற்கை சீற்றங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கார்பன்-டை-ஆக்சைடும், மீத்தேன் வாயுவும் புவி தட்பவெப்ப மாற்றத்திற்கு மிக முக்கிய காரணிகள். அதிலும் மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட 25 மடங்கு சக்தி வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போது, சூரிய வெப்பத்தை பூமிக்கு கொண்டுவந்து சேர்த்து பல உயிரனங்களும், தாவரங்களும் வாழ உதவியது. ஆனால், இன்று அதிக அளவில் நம்மால் வெளியேற்றப்படுவாதால், அது நமக்கே ஆபத்தை உருவாக்கி விட்டது.

கடல் நீர்மட்டம் உயர்வது பெரும் ஆபத்தானது. தற்போதைய நிலவரப்படி கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் 1.8 mm உயர்ந்துகொண்டிருக்கிறது. 18 -ம் நூற்றாண்டில் 2cm, 19 -ம் நூற்றாண்டில் 6cm மட்டுமே உயர்ந்த கடல் நீர்மட்டம், கடந்த நூற்றாண்டில் மட்டும் 19cm உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டுக்குள் இது ௦0.8meter-க்கும் 1 .5 meter-க்கும் இடைப்பட்ட அளவில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மட்டம் 1meter-ஐ நெருங்கும்போது உலகின் பெரு நகரங்களான லண்டன், நியூயார்க் மற்றும் டோக்யோ போன்றவை மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடும்.

நமது சரித்திரம் தொடர வேண்டுமென்றால், சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நம் வாழ்வியல் சங்கதிகள் எதிர்காலத்திலும் ரசிக்கப்பட வேண்டுமென்றால், சந்ததிகள் நலமாய் வாழவேண்டும். கீழ் உள்ள படங்களை பெரிதாக்கி பாருங்கள் நமது தற்கொலையின் பாதச் சுவடுகள் தெரியும்.

விலங்குகள் கூட தனக்கு ஆபத்து என்றால் உரத்து குரலெழுப்பும். தம்மை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நாம்???