Saturday, October 29, 2011

ஜல்லிகட்டு...!


மைதான பந்தல் மக்கள் வெள்ளத்தில்..!!
மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் .!!!
நிழல்கள் கிடைக்காமல் நெருக்கியடிக்கும் கூட்டம்
சுற்றுவட்டார மாடுபிடி படைகள் ஆங்காங்கே

மஞ்சளும் மாலையும் கட்டின மயிலைக்காளை
அடக்க பிரிபோட்டு வடமாய் நிற்க..!!!
சீறிவரும் சிவப்புக்காளை-யை அடக்க
களம் இறங்குகிறான் இந்த படைப்புக்கு
பலம்கொடுத்து கதைசொல்லிப்போகும்
மதுரை மக்களில் பாசம் தந்த சொந்தக்காரன்.

இராமநாதபுரம் சுற்றிலும் அடக்க ஆள் இல்லாமல் போன
காளை அது! யாரென்றும் பாராது வீசின பாய்ச்சலில்
தொட்டவன் தொலைவாய் போய் விழுவான் !

அரி போல கொம்புக்காளை..! களம் கண்டால்
யாருக்கும் அடங்காத காளைகளையும் !
மண்ணில் வீழ செய்யும் யுத்தமிது..!

கூட்டாளிகளைபக்கவாட்டில் மிரட்ட சொல்லி
முன்னும் பின்னும் யாரும் நிற்காமல்
துரத்த சொல்லி தான் மட்டும் பின்சாடலில்
திமில் பிடித்து அடக்கி பார்க்க துணிந்தும்
பத்துவருட பெயரை ஒத்தை நொடியில் இழந்திடும்
எந்த காளையும் இவனிடம்..!!

வந்திரிருப்பது மணப்பாறை பெரியவரின்
காளை ஏறுதளுவலில் யாரும் தொடமுடியா காளை !
வாடிவாசல் வழியாக வெளியேறும் காளையை
அடக்க ஆள் காணாது !

வேலி மஞ்சுவிரட்டு, மஞ்சுவிரட்டு...எல்லா போட்டியிலும்
புயலாய் சீரும் காளை இது..! பொதுவா அஞ்சு பேருக்கு மேல
யாரும் ஒரு காளைய அடக்க கூடாது ..ஆனா இவனுக்கு ..
மூணு பேரே போதும்..!

பேயாட்டம் போடும் காளையையும்
பசுவாட்டம் மாத்திடும் இராமநாத புற வீரம் உள்ள
சேக்காளி ரெண்டு பெரும் இவனோட கூட்டு சேர்ந்த..
மட்டு கழுத்தின் மொத்த முடிப்பும் அடுத்தநாள்
பங்காகும்!

இப்படியே திரிஞ்ச இளந்தாரி பயபுள்ள கூட்டத்துல
இன்னைக்கு ஒருத்தனும் மாடுதொடல..
குடலிறங்கி போகும்போது கூட துண்டைக்கட்டி
விளையாண்ட வீரம் இப்போது ஏனோ..!
வறுமைக்கு பயந்து வயலுக்குள்ளே!

கிட்டி வாசலில் இருந்து சீறி வரும்
காளையை அடக்கிப் பிடிக்கும்
பேரெல்லாம் அன்பாய் வளர்க்கும்
தான் வீட்டு காளைக்கு புல்லு வைப்பதோடு
நிருத்திகிடக்க...

மண்வாசம் மெல்ல கரைஞ்சு ஓடுது
கிராமியம் மெல்ல சிதைஞ்சு போகுது..
இனி பழைய பேப்பர்ல வந்த போட்டோல
மட்டும் தான். ஜல்லிக்கட்டு மிச்சமிருக்குது
(இந்த பதிப்பு நிகழ காலத்துக்கானது அல்ல..! ஒரு பிற்காலகற்பனையே ! )
........ ˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·˙.........
ஜ۩۞۩ கார்த்திக் ராஜா ۩۞۩ஜ
..... •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.......
 

2 comments:

Santhosh Kumar said...

எதிர்காலத்தை கணிக்கும் கவிஞரே,,!
கவிதை ஜல்லிக்கட்டு காட்சிக்குள் என்னை கடத்திவிட்டது. நீங்கள் சொன்ன யூகமும் வந்துக்கொண்டிருக்கிறது நீதிமன்ற தடையால்...! விம்முகிறது மனம் , கலாச்சாரம் விழிமியங்கள் செத்துவிடுமோ என்று..

படைப்புக்கு ஆயிரம் முத்தங்கள்..!

-இரா.சந்தோஷ் குமார்

Wilson Samuel said...

மண் வாசனை 💜