Tuesday, June 28, 2011

தியேட்டர் நொறுக்ஸ்-1

Title-க்கு ஜெட்லி மன்னிக்கணும்

இப்பெல்லாம் நினைச்ச உடனே online -ல டிக்கெட் புக் பண்ணி ஈசியா போய் படம் பாத்துட்டு வந்துடுறோம். அதுல நமக்கு ஒரு நிம்மதி இருக்கா அப்டின்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன்(வாரத்துக்கு நாலு மொக்கை படம் பார்த்தா அப்படித்தான் இருக்கும்). அந்த காலத்துல தியேட்டர்ல படம் பாக்குறப்ப படத்தோட சேர்த்து சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இருக்கும்.  இப்பெல்லாம் அது இல்லை. தியேட்டருக்கு போனமா வந்தமான்னு தான் இருக்கோம்(பின்ன அங்க என்ன ரூம் போட்டு சாப்பிடவா முடியும்).

கவுண்டர்:

முன்னெல்லாம் அப்படி இல்லை. முதல்ல கவுண்டர்ல உள்ள queue ல போய் நிக்கணும். அப்புறம் டிக்கெட் எடுக்கணும்(என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு). கவுண்டர் பாத்தீங்கன்னா பெரிய சுரங்கப்பாதை மாதிரி புல் இருட்டாவும் வளைஞ்சு வளைஞ்சு நாலைஞ்சு row  வாகவும் இருக்கும். இரும்பு கம்பி போட்டிருப்பாங்க.

கவுண்டர் ஆரமிச்சு டிக்கெட் கொடுக்குற இடம் வரைக்கும் ஒரு அரை கிலோ மீட்டராவது இருக்கும். கூட்டமா இருந்தா டிக்கெட் கொடுக்குறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே இந்த கவுண்டருக்குள்ள போய் நின்னுடுவோம். டிக்கெட் எடுத்து வெளில வர்றதுக்குள்ள மன்னன் பட ரஜினி மாதிரி ஆயிடுவோம்.

கவுண்டருக்குள்ள ஒரே ஒரு மஞ்ச லைட்தான் எரியும். அத்தனை row க்கும் சேர்த்து ஒரே லைட்தான். இரவு காட்சி போனோம்னா டிக்கெட் எடுக்குற வரைக்கும் ஒரே திக் திக் தான். பேன் வேற இருக்காது(ஆமா நீ எடுக்குற அஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு A/C போடுவாங்க).

இதுல சில பேரு நம்ம தலைல ஏறி முன்னேறி போவாங்க(நம்மளால சில பேரு முன்னேறி போறாங்கன்னு மனச தேத்திகிட வேண்டியதுதான்). பெரிய சண்டையே நடக்கும். அந்த இருட்டுல நம்ம மேல ஏறிப் போறது யார்ன்னு கூடத் தெரியாது. சில நேரம் நம்ம நெருங்கின சொந்தகாரனா கூட இருக்கும்.

தரை டிக்கெட்(நான் இல்லைங்கோ)

அப்புறம் டிக்கெட்ல மூணு வகை உண்டு. chair ,பெஞ்ச்,தரை. Chair டிக்கெட் எல்லாம் பணக்காரங்க உக்கார்றது அப்டின்னு ஊர்ல ஒரு நினைப்பு. உண்மைதான். வசதியானவங்கதான் Chair டிக்கெட் எடுத்து வருவாங்க.

நமக்கெல்லாம் பெஞ்ச் இல்லைனா தரைதான். பெஞ்ச் டிக்கெட் எடுத்தா நம்ம வீட்டுக்கு மூட்டைப் பூச்சிகள் இலவசம். அதனால தரை டிக்கெட்லதான் படத்துக்கு கூட்டிட்டு போவாங்க.

இரவு காட்சியா இருந்தா ரொம்ப வசதி. தியேட்டருக்கு வெளில கூட (கதவுக்கு பக்கத்துல) உக்கார்ந்து படம் பாக்கலாம். காத்தும் நல்லா வரும். படம் மொக்கையா இருந்தா அப்படியே ஓடலாம். (ஆனா நாங்கெல்லாம் என்னை மொக்கயா இருந்தாலும் அசர மாட்டோம்ல).

Wallpapper:

அப்புறம் wallposter . தியேட்டர்ல ஒரு இடத்துல படத்தோட காட்சிகளை ஒட்டி இருப்பாங்க. முதல்ல போய் அதத்தான் பாப்போம். இடைவேளைல மறுபடியும் பாத்துட்டு இந்தஇந்த  காட்சிகள் முடிஞ்சிடுச்சு. இந்த காட்சிகள் எல்லாம் இனிமே வரும் அப்படின்னு discuss (ஆமா பெரிய Group Discusstion) பண்ணுவோம். சில காட்சிகள் படத்துல வரலைன்னா தியேட்டர் operator -யை திட்டுவோம். அந்த காட்சியை கட் பண்ணிட்டானே அப்டின்னு.

அப்புறம் ஷீல்ட். எந்த எந்த படம் எவ்ளோ நாள் ஓடிருக்குன்னு ஷீல்ட் அங்க வச்சிருப்பாங்க. அத பாக்குறதுல ஒரு அலாதியான சந்தோஷம். எத்தன தடவ அதே தியேட்டருக்கு போனாலும் அந்த ஷீல்ட திரும்ப திரும்ப பாப்போம்.

இன்னும் நிறைய இருக்கு. உங்களோட கருத்துகளுக்கு பிறகு சொல்றேன். பிடிக்கலன்னா இதோட நிறுத்திக்கிடுவோம்....

Monday, June 27, 2011

இரை – சிறுகதைeraai
மாலை நேரம் தான் ‘மடையான் ‘ பறவை அதிகமாகச் சிக்கும். அதுவும் வானம் கொஞ்சம் மப்பும் மந்தாரமாக இருந்துவிட்டால் போதும். குறைந்தது மூன்று ஜோடியாவது விழும். காத்தமுத்து, மடையான் பிடிப்பதற்காகக் கண்ணி வைத்திருந்தான்.
குடிசைக்குள் படுத்திருந்த அவனுடைய யோசனை முழுவதும் ‘கண்ணியில் ஏதாவது மாட்டியிருக்குமா?’ என்ற கேள்வியிலேயே இருந்தது.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவனது குழந்தைகள் சத்தமாகக் கைத்தட்டிக் கொண்டே….‘‘ மடையான், மடையான் பூப்போடு. ஆளுக்கு ரெண்டு பூப் போடு ‘‘ என கும்பலாகப் பாடினார்கள்.
சத்தம் கேட்ட காத்தமுத்து, திடுதிடுவென்று எழுந்து வாசலுக்கு வந்தான். வானத்தில் நூற்றுக்கணக்கான மடையான்கள் கூட்டமாகத் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தன.
iraai
அண்ணாந்து பார்த்த அவன், தோளில் கிடந்த துண்டை உதறி முண்டாசு கட்டியபடி குடிசைகுப் பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் இறங்கினான்.
காத்தமுத்துவைக் கண்டதும் குளித்துக் கொண்டிருந்த அவணது மனைவி பொன்னம்மாள் தலையைத் தேய்த்துக் கொண்டே சொன்னாள்:
‘‘ இன்னிக்காவது அம்புடுற மடையானை வூட்டுக்குக் கொண்டா. புடிக்கிறதையெல்லாம் வித்து வித்துத்தான் என்னத்த நெறஞ்சது. பிள்ளைகளும் ஆசையா ஒவ்வொரு நாளும் கேட்டுக்கிட்டு கிடக்குதில்ல ‘‘ என்றாள்.
அவள் சொல்வதைக் காதில் வாங்காதவன் போல், வரப்பில் ஏறி நடக்க ஆரம்பித்தான்.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சையாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு மத்தியில்… ஒருவித எதிர்பார்ப்போடு நடந்தான்.
வருடந்தோறும் ஜப்பசி கடைசி, கார்த்திகை மாதங்களில் மடையான் பிடிக்க வயல்களில் கண்ணி வைப்பான்.
பயிர் வளர்ந்துவருகிற வயல்களில்,தண்ணீர் கிடக்குற இடமாகப் பார்த்து…மெல்லிய நைலான் நரம்புகளில் முடிச்சுகள் போட்டு, முளைக்குச்சியில் அடித்து வைப்பான்.
இரை தேடி இறங்கும் மடையான்கள், மெலிதான நரம்பு முடிச்சுக்குள் காலை நுழைத்துவிடும். பின்பு, பறக்க முடியாமல் காலில் சிக்கியிருக்கும் முடிச்சு இறுக்கிக் கொள்ளும். இந்த வித்தையில் அவன் ரொம்பவும் கைதேர்ந்தவன்.
பிடிக்கிற மடையான்களை அவனே சந்தையில் விற்றுவிடுவான். ஜோடி நாற்பது ரூபாய் வரைக்கும் போகும்.
indianpondheronMAAjan01சில நாட்களில் மூன்று நான்கு ஜோடிகள்கூட மாட்டிக் கொள்ளும். சில நேரங்களில் ஓன்றுகூட விழாது.
நிறையப் பிடித்தால் நேராகப் பக்கத்து டவுனுக்குப் போய்விடுவான். அங்கே தெருத்தெருவாகக் கூவிக் கொண்டே விற்பனை செய்வான்.
பிடிக்கிற மடையானை சமைத்துத் தின்ன வேண்டும் என்கிற ஆசை ஒரு நாளும் அவனுக்கு வந்ததில்லை.
அவனுடைய பொருளாதாரச் சூழ்நிலைக்கு, விற்றுக் காசாக்குவதுதான் புத்திசாலித்தனம் என நினைத்துக் கொள்வான்.
வீட்டில் குழந்தைகள்… ‘ அப்பா மடையான் பிடிச்சுகிட்டு வரலையா ‘ என்று கேட்கும் போது சங்கடமாக இருக்கும். பொன்னம்மாளும் சில நாள் கோபித்துக்கொள்வாள்.
காத்தமுத்து , ஓடைப்பங்கை நெருங்கும்போதே வழக்கம் போல் அவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே, கண்ணி வைத்திருக்கும் வயலில் இறங்கி… கணுக்கால் சேற்றில் அகலக்கால் போட்டு நெருங்கினான்.
ஒற்றை மடையான் ஒன்று சுக்கில் சிக்கி… விடுபட முடியாமல் இறக்கையை அடித்துக்கொண்டு தவித்தது. லாவகமாக அதன் கழுத்தைக் கவ்விப் பிடித்துத் தூக்கினான்.
‘ என்னை விட்டுவிடு ‘ என்பதுபோல் பிடித்திருக்கும் அவனது கைகளின் மேல் இறக்கைகளால் படபடத்தது.
அதனுடைய உடலிலிருந்தே ஒரு இறகைப் பிடுங்கி, அதன் கண் ரப்பை மேல் குத்தி இழுத்துக் கட்டினான். இரண்டு பக்கத்து இறக்கைகளையும் முறுக்கி முதுகுப்பக்கம் வைத்தான்.
இனி அதனால் பறக்க முடியாது!
ஒற்றை மடையானாக விழுந்தால்… வியாபாரத்துக்குப் பெரும் சங்கடம். கொஞ்சம் கறிதான் இருக்கும். யாரும் வாங்க மாட்டார்கள்.
யோசித்தான். ‘பொன்னம்மாளும் நீண்ட நாளாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். பேசாமல் வீட்டுக்கே கொடுத்துவிட்டால் என்ன…?‘ என்று பட்டது.
காத்தமுத்து தூரத்தே குடிசையை நோக்கி மடையானோடு வருவதைப் பார்த்த அவனது குழந்தைகள் கும்மாளமிட்டன.
‘ நிஜமாகவே எடுத்து வருகிறாரா…?‘ என குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்த பொன்னம்மாளும் மகிழ்ந்தாள்.
அதே வேளையில்… ஊர்க் கடைசியில் இருக்கிற ஜயனார் கோயில் மூங்கில் தோப்பில் இறக்கை முளைக்காத மூன்று மடையான் குஞ்சுகள்.
‘இரை தேடப்போன அம்மாவை இன்னும் காணோமே‘ என்கிற பீதியில் கூட்டுக்குள் கிடந்த குஞ்சுகள் கலவரம் அடைந்தன.
வழக்கமாக இந்த நேரத்துக்கு எல்லாம் அம்மா வந்துவிடுவாளே… இன்று இன்னும் காணோமே. இரவு வந்துவிட்டால், கண்வேறு தெரியாதே என்ற கவலையில்…அவை ‘கீச்…கீச்…‘ என அழ ஆரம்பித்தன. அந்தச் சத்தம் மூங்கில் தோப்பு முழுவதும் எதிரொலித்தது.
குஞ்சுகள் தேடுகிற அம்மா இனி வர மாட்டாள்.
அவள் காத்தமுத்து வீட்டு மண் சட்டியில் கொதித்துக் கொண்டிருந்தாள்.
தனது மூன்று குஞ்சுகளுக்காக இரை தேடப்போன ஒரு அம்மாவைத் தனது மூன்று குழந்தைகளுக்கு உணவாக்கி விட்டாள் இன்னொரு அம்மா.
அம்மா, அம்மாவைச் சமைக்கிறாள்.
சிறுகதை வெளியான இதழ்- ஆனந்த விகடன் 26.1.1997

லயக்க வைக்கும் குழந்தையின் நடனம்!

http://www.youtube.com/watch?v=CcD5B32EF8E&feature=player_embeddedது ஒரு குழந்தையின் நடனம். அந்த குழந்தை பாடும் மொழி நமக்கு புரியவில்லை. அரேபியாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் நான் பலமுறை இந்த குழந்தை பாடிக்கொண்டே ஆடும் நான்கு நிமிட நடனத்தை கண்டுகளித்துவிட்டேன்.அலுப்புத் தரவில்லை. அக்குழந்தை தனது நடனத்தோடு ஒன்றினைந்தவிதம் லயக்க வைக்கிறது. ஒருவிதப் பரிசுத்தமான உணர்வை, சுகத்தைத் தருகிறது. நண்பர் பழமைப்பேசியின் தளத்தில்தான் இந்த இணைப்பை முதலில் கண்டுகளித்தேன். என்போல ஏற்கனவே பலரும் இக்குழந்தையின் நடனத்தை இரசித்திருக்ககூடும். ஒரு திரைப்படத்திற்குப் பலர் விமர்சனம் எழுதுவதுபோல இந்த நடனத்திற்கு நானும் ஒரு சிறுகுறிப்பைப் பதிவு செய்கிறேன்,அவ்வளவுதான். மேலும் பலருக்கு அறிமுகம் செய்யவே இந்த பதிவு.

லைஃப் ஒரே டென்ஷனா இருக்கா? இந்தப் படங்களைப் பாருங்க!


ன்றாட சிறு பிரச்னையைச் சந்தித்தாலும் உடனே பதற்றமடைவோரே அதிகம். வளரும் தலைமுறையிடம் இந்த இயல்பு இன்னும் அதிகம். பலர் முன்பு பள்ளிக்கூட வாத்தியார் திட்டினால், அடித்தால் கூட அதோடு, வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் தற்கொலை செய்துகொண்ட மாணவ,மாணவியர் பற்றி செய்தித்தாள்களில் வருகிறது.
.
’லைஃப் ஒரே டென்ஷனா இருக்கு, எங்கப்போனாலும் ஒரே பிராபளமா வருது’ என ஏ.சி அறையில் இருந்தபடி அலுத்துக்கொள்ளும் நண்பர்களை சந்திக்காமல் இருக்கமுடியாது. அப்படிச்சொல்பவர்களுக்கு உண்மையிலேயே பிரச்னைன்னா என்ன? என்பதைச் சொல்லாமல் சொல்லும் இந்தப் படங்களை அண்மையில் எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்தார். அந்த படங்களை பலரும் பார்க்கவே இந்த பதிவு…Saturday, June 25, 2011

ஒதுக்கப்பட்டவன்:-நீதியில் புறம்பு சொல்லப்பட்டு
பாதையில் முட்களை கொண்டு
சிறைவாசம் சென்றுவந்தவன்
யாருக்காகவோ ஒரு
தீப்பொறி கோபம்..!
எரியும் நெருப்பாக மாரும் முன்னே
ஆத்திரத்தில்  ஆயுதம் ஏந்தியவன்..
அந்தோ பரிதாபமாய் இன்று
ஊருக்குள் ஒதுக்கப்பட்டவனாய்..
யாரையும் குற்றம் சொல்லதேவை இல்லை
ஆனால் ஆறிடும் ரணமல்ல
அனுபவித்து..
நீதி தேவதை இவனுக்கு மட்டுமென
இல்லாமல் பலருக்கும்
படியளக்கும் போது
கண்ணோடு தேர்த்து இதயத்தையும்
இறுக மூடிக்கொண்டால்
ஆத்திரம் இன்று இவனுக்கு!
ஒதுக்கப்பட்டவன் எனும் பட்டத்தை
அளித்து..! ஏதோ ஒரு வீதியில்..
இறந்து போகும் வரை சீண்டுவார் இல்லாமல்..!

Friday, June 24, 2011

சிறுகுருவியாய்...! ..

மீண்டும் மீண்டும் தன்னை
நிரூபிப்பதையே
தினசரி-செயல்களாக்கி
வாழ்நாட்களை இழந்துகொள்வதில்
துளியும் விருப்பமில்லாதவனாய்
என் சூரியனை..
இடம் மாற்ற புறப்பட்டு..
இதோ பறக்க எத்தனிக்கும்
சிறுகுருவியாய்...!
சுமக்க ! சுமைகள்
ஆயிரம் இருக்கலாம்
ஆனால் பறக்க இறக்கைகள்
இரண்டு மட்டுமே!
அதை துருப்பிடிக்க
வைக்க மனம் இல்லாதவனாய்..
என் வானம் நோக்கி..!

தேவதையின் முகத்தை.... சிறுப் பிள்ளையில்...கண்டேன்

சென்னைப் போக்குவரத்து..
பலருக்கு எரிச்சலையும்
எனக்கு சிறு சந்தோஷத்தை
தருகின்ற விஷயம்..
பலரிடம் சொல்கையில்
கிண்டலையும், கோபத்தையுமே
பரிசாய் பெற்று
வளைந்து வளைந்து
முந்தி அடித்து செல்லும்
வித்தியாசமான சந்தோசத்தை

இன்றுவரை ரசிக்கிறேன்..

காலை நேர போக்குவரத்தில்
அலுவலகம், பள்ளியென
அவசரமாய் அலறியடித்துச் செல்லும்
வாகன ஓட்டிகளைக் கண்டு
பரிதபமாய் பார்த்து, சிரித்து
என்னை மறந்து ரசித்து
வாகனம் ஓட்டி
சென்றுக் கொண்டிருக்கையில்
கருமேகத்தை விலக்கி
ஒரு அழகிய நிலவு
என் கண்முன்னில் பதிய
உற்று நோக்கிய போது
பேருந்தின் பின் இருக்கையில்
அமர்ந்திருந்த அம்மாவின் தோளில்
அனாயாசமாக நின்று
பேருந்தின் கண்ணாடித் தூசிகளை
பிஞ்சு கரங்களால் கிறுக்கி
மங்கலான கண்ணாடிகளை
வெளிச்சமாக்கி வெளிவந்த
அழகிய நிலவை ரசிக்காமல்
இருக்க முடியுமோ??

என்னைக் கண்டு
சிறு புன்னகை உதிர்க்க
எனக்குள் ஆனந்தம்..
என்னை மறைத்துச் செல்லும்
வாகனங்களுகிடையே
என்னை தேடியது ஒரு அழகிய தேவதை..
பேருந்தை பின்தொடர்ந்து
மறைந்து மறைந்து
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு
பயணித்த போது
எல்லாம் மறந்து சொல்ல இயலா
சந்தோசம் என்னுள்..

நின்று நின்று வரும் பேருந்திற்காக
என் வேகத்தை குறைத்து
தேவதையை முன்னே செல்லவிட்டு
பின் தொடர்ந்து செல்கையில்
குழந்தையின் மகிழ்ச்சியை
விவரிக்க வரிகளில்லை
என்னிடம்..
முடியாத சாலையாக
முடியாத பயணமாக
தொடராதோ என எண்ணங்கள்
மனதில் ஓட
கனத்த இதயத்தோடு
கடைசி புன்னகையை
உதிர்த்துவிட்டு
கண்களால் கொஞ்சி
வேகத்தை கூட்டி
என்னை தேடப்போகும்
தேவதையை நினைத்து
மனம் கலங்கி
வீடு வந்து சேர்ந்தபோதும்
மறக்க முடியவில்லை
தேவதையின் முகத்தை....
சிறுப் பிள்ளையை
ஏமாற்றி விட்டேனோ??
மன பாரம் என்னுள்...

-தோழி கவிதாஸ்ரீ..

Thursday, June 23, 2011

மஹா ஜனங்களே..! கேளுங்க ..கேளுங்க..


இந்த பாட்டுல நம்ம கமல் அண்ணாத்த பாடுற
எல்லா வரியையும் ஒன்னு விடாம நல்லா கவனிக்குரிங்க,
கவனிச்சா மட்டும் பத்தாது..,
Hutch dog மாதிரி அவர் சொல்ற கருத்தலாம்
விடாம பாலோவும் பண்ணனும்!!:)
சரியா........?
http://youtu.be/i6s0EoB35Q8

நாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்கையைத் திண்று அல்ல...

ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் பூகம்பம் அணுமின் சக்தி பற்றிய விவாதத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அணுசக்தியின் நிறம் நமக்கு காட்டப்பட்டிருப்பதைப் போல பச்சையல்ல; இரத்தச்சிவப்பு.

அணுமின் நிலையம் நிச்சயமாக வெடிக்கக்கூடிய டைம்பாம். தற்போதுள்ளவை ஹிரோஷிமா நாகசாகியில் வெடித்தவைகளைவிட பல லட்சம் படங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை. இயங்கு நிலையில் இருக்கும் (வெடிக்காமல்) ஒரு அணுமின் நிலையத்தின் ஏற்றுக் கொள்ளக்கூடிய கதிரியக்க அளவு என்பதே மிக அபாயகரமான அளவே.

இதுவரை வெடிக்கப்பட்டுள்ள இரண்டு அணுகுண்டுகளினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விட அமெரிக்காவில் மட்டும் அணுமின் உலைகளினாலும் சோதனைகளினாலும் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

அனல்மின் / நிலவாயு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விட அல்லது போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை வெளியிட்டதை விட மிக அதிக சுற்றுச்சூழல் அபாயத்தை அணுமின் நிலையங்கள் ஏற்படுத்துகின்றன. அணுமின் நிலையங்கள் மீது ஒரு பூகம்பம் அல்லது தீவிரவாத தாக்குதல் போதும்; மனித குலத்தின் மிகப்பெரும் பகுதியை, மிருகங்கள் மற்றும் பசுமை உலகத்தை ஒரே வீச்சில் அழித்து முடிக்க.

இதற்கு ஒரே தீர்வு இனியொரு அணுமின் உலைகளை கட்டமைக்காமல் இருப்பதும், இருக்கும் உலைகளை உடனடியாக செயலற்று போகச்செய்வதும்தான். "நாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்கையைத் திண்று அல்ல" என்ற காந்தியின் வார்த்தை இங்கு பொருத்தமாக இருக்கும்.
நமக்கு உண்மையிலேயே தேவைப்படும் அளவு வாழ்க்கை சாதனங்கள், சக்தி மற்றும் வசதிகளை மட்டுமே கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நுகர்வு கலாச்சார மோகத்தினால் உந்தப்பட்டு அணுசக்தி மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு, உடல் திசுக்களை கொல்லும் செல்போன் பயன்பாடு போன்ற அனைத்தும் மனிதகுல நலனுக்கெதிராக நாமே குழி தோண்டிக்கொண்டுள்ளோம் என்பதையே காட்டுகிறது.

கே. ராஜ ராஜன்

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பூமியின் எடையில் சிறிது மாற்றம் .....

"ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்' என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி ஏற்பட்டது. அந்நாட்டின் மூன்று மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. மேலும், இரண்டு மாகாணங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டன. ஜப்பான் பல தீவுக் கூட்டங்களால் ஆன நாடு.

எனினும், ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோக்கு, கியூஷூ என்ற நான்கு பெரிய தீவுகள் தான் முக்கியமானவை. இவற்றிலும், ஹோன்ஷூ தான் மிகப் பெரியது. இதில் தான், தலைநகர் டோக்கியோ உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹோன்ஷூ தீவு, 8 அடி நகர்ந்துள்ளதாகவும், பூமியின் அச்சு 17 செ.மீ., நகர்ந்துள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மேலும் கூறியதாவது:தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பூமியின் எடையில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது சுற்றும் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், ஒரு நாளில் மொத்த வினாடிகளில் 1.8 மைக்ரோ வினாடிகள் குறையும். ஒரு நாள் என்பது 86,400 வினாடிகள் கொண்டது.

இந்த மாற்றத்தால், பாதிப்பு எதுவும் ஏற்படாது. இதுபோன்ற அச்சு மாற்றங்கள் பூமியின் வரலாற்றில் சகஜம் தான். கடந்த 2010ல் சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தால், ஒரு நாளில் 1.26 மைக்ரோ வினாடிகளும், 2004ல் சுமத்ராவில் நிகழ்ந்த 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் 6.8 மைக்ரோ வினாடிகளும் குறைந்துள்ளன.இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.

"மெய்ப்பொருள் காண்பதறிவு" தமிழ் வாழ்க!

திரு. ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
இரு தினங்களுக்குமுன் "முல்லா ஓமர் கொல்லப்பட்டார்" என்ற செய்தியைப் பல்வேறு செய்தித் தளங்களிலும்  தலைப்புச் செய்தியாக வாசிக்க நேர்ந்தது. இச்செய்தியை தினமணி, தினமலர் மற்றும் தட்ஸ்தமிழ் ஆகிய தமிழ் செய்தித்தளங்கள் வெளியிட்டிருந்தனர். அவர்களோடு இந்நேரம்.காமும் இச்செய்தியை வெளியிட்டிருந்ததையும் கவனித்தேன், என்றாலும் நான் அவதானித்த நுண்ணிய வேறுபாட்டை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முல்லா ஓமர் என்பவரை அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான்மீது படையெடுக்கும்வரை அநேகமாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

9/11 தாக்குதலுக்குக் காரணம் பின்லேடன் என்பதாக சர்வதேச செய்தி ஊடகங்களும் அமெரிக்காவின் குரலையே எதிரொலித்த நிலையில், "பின்லேடன் தங்கள் நாட்டின் கவுரவ விருந்தினர் என்றும், 9/11 தாக்குதலுக்குப் பின்லேடன் காரணம் என்பதற்கான ஆதாரங்களை ஒப்படைத்தால், முறையாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தவர்தான் முல்லா ஓமர்.

உலகச்சந்தையில் கொடிகட்டி பறந்த ஓபியம் என்ற போதைப்பொருளை ஐ.நா சபையின் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, ஒழித்துக் கட்டுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டியபோதும் அதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் அப்போதைய ஆப்கன் ஜனாதிபதியாக இருந்த முல்லா ஓமர், ஒரேயொரு சட்டம் போட்டு சிலமாதங்களிலேயே பெருமளவில் குறைத்தார். மேலும், ஓபியம் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் நிறைவேற்றியதை ஐ.நா மற்றும் அமெரிக்காவும் பாராட்டியதோடு, முல்லா ஓமரின் அரசுக்கு உதவுவதற்காக நிதி உதவியும் செய்தது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

போலியான காரணங்களைச் சொல்லி, முன்முடிவுடன் போரிட்ட அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு ஐநாவும் உலகநாடுகளும் ஒத்து ஊதியதால், உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக போர்நிறுத்தம் மேற்கொண்டு தலை மறைவாக இருக்கும் ஆப்கானின் முன்னால் ஜனாதிபதி முல்லா ஓமரை, பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதாகச் சொன்னது. தட்ஸ்தமிழ்.காம் வெளியிட்ட இச்செய்தியில் முல்லா ஓமரை அவன் - இவன் என்றும், பயங்கரவாதி என்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

தட்ஸ்தமிழ் செய்தியாளாருக்கு முல்லா ஓமர் பயங்கரவாதி என்பது எப்படி தெரியும்? ஜனநாயக முறைப்படி ஒரு நாட்டுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அமெரிக்காவின் எதிரிக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்தார் என்ற காரணமன்றி, அதுவும் ஆதாரங்களை சமர்ப்பித்தால் விசாரித்து தண்டனை வழங்குவோம் என்று சொல்லியும், அமெரிக்கா அத்தகைய ஆதாரங்கள் எதையும் வழங்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் ஜனாதிபதியை எப்படி பயங்கரவாதி என்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது!

தங்கள் நாட்டின்மீதான ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களெல்லாம் பயங்கரவாதிகள் என்றால் நமது தேசப்பிதா காந்தி உள்ளிட்ட சுதந்திரப்போராட்டத் தியாகிகள் அனைவருமே இவர்களின் பார்வையில் பயங்கரவாதிகளா? என்று கேட்கத் தோணுகிறது.
ஒரு நாடு குற்றம் சுமத்தியுள்ள ஒருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் ஜனாதிபதிகளெல்லாம் பயங்கரவாதிகள் என்றால், மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளி என அமெரிக்காவே ஒப்புக் கொள்ளும் டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பயங்கரவாதி தானே? தட்ஸ்தமிழ்.காம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவன் - இவன் என ஏக வசனத்திலும் பயங்கரவாதி ஒபாமா என்றும் தன் செய்திகளில் குறிப்பிடுமா?
பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு மாநகராட்சிக்கு ஒருவர் என்றளவில்கூட செய்தியாளர்கள் இருப்பதில்லை. இணையத்தில் மட்டும் செயல்படும் தட்ஸ்தமிழ்.காம் ஆங்கிலச் செய்திகளையும், பிற ஊடகங்களின் செய்திகளையும் வெட்டி, ஒட்டி சுட்டுதான் செய்திகளை நிரப்புகிறது என்பதை இணையத்தில் வலம்வரும் எம்போன்ற வாசகர்கள் அறிவர். இந்த லட்சணத்தில் எல்லைதாண்டிய செய்திகளை ஏனோதானோவென, பத்திரிக்கை தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல் செய்தி வெளியிடுகிறார்களே என்ற வேதனையில்தான் இதை வாசகர் மடல் பகுதிக்கு அனுப்புகிறேன்.

எம்போன்ற நடுநிலை வாசகர்களின் எதிர்பார்ப்பை இத்தகைய செய்தித்தளங்கள் நிறைவேற்றப்போவதில்லை என்பதால் முடிந்தவரை அவர்களின் செய்திகளை சீரியசாக எடுக்கப்போவதில்லை. இந்நேரம்.காமில் வாசகர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடுநிலை செய்திகளும் வருவதாக அலுவலக நண்பர் சொன்னதன்பேரில் இந்த மடலை எழுதினேன். பிரசுரிக்கத் தகுதியானது என்று கருதினால் தயவு செய்து அடித்தல்/திருத்தலின்றி உங்கள் தளத்தில் வெளியிடவும்.

"மெய்ப்பொருள் காண்பதறிவு" தமிழ் வாழ்க! தமிழன் வாழ்க! 
அன்பர் - கோ.வள்ளியப்பன், ஈரோடு.

உசேன் ஒரு வாழ்க்கை...

இந்தியாவின் பிக்காஸோ என்ற பெருமை பெற்ற ஓவியர் மக்புல்ஃபிதா ஹுசைன் உலகு நீத்துவிட்டார். இந்தியா தன்னைப் பெருமைப்படுத்திய புதல்வர்களுள்மேலும் ஒருவரை இழந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஊடகங்களும், கலைஞர்களும் அவருக்குப்பெரும் புகழஞ்சலி செலுத்துகின்றனர்.

இருந்தபோதிலும், தன் கடைசி காலத்தில் தாய்நாட்டில்இருக்க முடியாமல் ‘துரத்தியடிக்கப்பட்டு’ வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் குடியுரிமைப் பெற்றிருந்தார் அவர்.  நாட்டின் ஒரு பெரும் கலைஞனை, கடைசி காலத்தில் ‘துரத்தியடித்த’தீராப் பழியை இந்திய தேசம் சுமக்கிறது.. அதற்குக் காரணமாக, அவருடைய ஒருசில ஓவியங்களும், அவர் பெயர் மீதான அரசியலும் தான் அமைந்திருந்தன என்றால் மிகையாகாது.

மறைந்துவிட்ட எம்.எஃப் உசேன் மிகத் திறமையான ஓவியர் என்றபோதிலும், சொந்த நாடான இந்தியாவில் அவர் பெருமளவுக்குப் பேசப்பட்டதெல்லாம் அவரைச் சுற்றிய சர்ச்சைகளினால்தான். மாதுரி தீட்சித் என்கிற ஹிந்திப் பட நடிகையின் ஆதர்ச ரசிகராக சிறிதுகாலம் அவர்அறியப்பட்டிருந்தார். அந்த நடிகையை வைத்து ஒரு திரைப்படத்தையும் அவர் எடுத்திருந்தார்.

அதன்பின்னர் அவருடைய சர்ச்சைக்குரிய ஓவியங்கள் தாம் அவரைப்பற்றி பேசவைத்தன. பாரதமாதா என்கிற உண்மையல்லாத உருவகத்தை அவர் வரைந்த விதமும், ஹிந்துகடவுளர்களை, குறிப்பாக, சரஸ்வதியை அவர் ஆடையில்லா நிலையில் வரைந்ததும் ஹிந்து பெருமக்கள் அவர்மீது கோபம் கொள்ளச் செய்தன.  அரசியலால்தூண்டப்படாமல் ஹிந்து பெருமக்கள் இதில் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தஉணர்வுகள் புரிந்துகொள்ளப்படவேண்டியவையே.

எம் எஃப் உசேன் இறந்து விட்டாலும், அவருடைய ஓவியங்களை முன்வைத்த ‘அரசியல்’ மீண்டெழுந்து தலைவிரித்தாடுகிறது.

பொதுவாக, உருவம்வரைவதை - உசேன் தன் பிறப்பால் சார்ந்திருந்த இஸ்லாமிய மதமும் சமூகமும் கடுமையாக எதிர்க்கின்றன – அதுவும் மிகக் கண்ணியமாகக் கூட உருவப்படங்களை வரைவதற்கு அவை அனுமதிப்பதில்லை என்னும் நிலையில், உசேன் எப்படி உருவங்களை ஆர்வமாக வரையத்தொடங்கினார் என்பதற்கு அவருடைய வாழ்க்கையே விடையளிக்கிறது.

எம் எஃப் உசேன் சிறுவயது முதலே ஒரு பெயரளவு முஸ்லிமாக, இந்து மதத் தத்துவங்களின் மீது மிகப் பிடிப்புள்ளவராகவே வளர்ந்து வந்திருக்கிறார். வால்மீகி, துளசிதாசர் ஆகியோர் எழுதிய ராமாயணங்களை, ஹிந்து மதத்தின் உபநிஷத்துகளை தீவிரமாகப்படித்து வாழ்ந்தவர் உசேன். ராம் மனோஹர் லோஹியா என்கிற ஜனசங்கத் தலைவரின் விருப்பத்தை ஏற்று சித்திரத்தில் ராமாயணத்தை வரைந்துதள்ளியவர் அவர். தன் ஓவியப் பணியைத் தொடங்கும்போதெல்லாம் விநாயக உருவத்தை வரைந்துவிட்டே துவங்குமளவுக்கு பூரண ஹிந்துவாகவே தன்னைவரித்துக் கொண்டவர் உசேன். பதிவொன்றில் சொல்லியிருப்பது போல, தன் உணர்விலும், இரத்தத்திலும் ஹிந்து உணர்வே ஊறியவர்தான் உசேன். அவரே தன்னை ஒரு முஸ்லிமாகப் பார்க்கவில்லை.

சரி, ஹிந்துமதத் தத்துவங்களை உள்வாங்கி, அதன்படி வாழ்ந்த ஒருவர் ஹிந்துக் கடவுளர்களை நிர்வாணமாக வரைந்து, ஏன் ஹிந்து பெருமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தவேண்டும்? இங்கே தான் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உசேன் என்ற "முஸ்லிம்" பெயர்செய்த ‘பெருங்காயம்’ அது. ஊடகச் சமையலில் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.

"ஹிந்துமதத்தில் நிர்வாணம் என்பதற்கு பல தத்துவ விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. நிர்வாணம் என்பது தெய்வீகம், நெருப்பை அணைப்பதன் அடையாளம், உண்மையை அறிவதன் குறியீடு என்றெல்லாம் சொல்லி இன்றைக்கும் அதற்கான எடுத்துக்காட்டுகளாக சிவலிங்கங்களும், குகைவரைக் கோயில்களின் சிற்பங்களும் காட்சியளித்துக் கொண்டிருக்கையில், உசேன் ஆபாச உணர்வைத் தூண்டாமல் கலையுணர்வு ததும்ப வரைந்த ஓவியங்கள் எப்படி தவறாகும்" என்று கலை இலக்கிய விமர்சகர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும், உசேன் தன் மகளின் திருமண அழைப்பிதழில் கூட சிவன்-பார்வதியின் தழுவல் நிலையை வரைந்தபோது எழாத எதிர்ப்பு காலங்கடந்து வந்தது ஏன் என்றும்கேள்வி நீள்கிறது.

உசேன் இவ்வாறு வரைந்ததை எந்த (சரியான) முஸ்லிமும் ஆதரிக்கவில்லை. ஏற்கனவே சொன்னது போல, மிகக்கண்ணியமாகக் கூட உருவங்களை வரைவது கூடாது, தடுக்கப்பட்டது என்றே முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

ஹிந்து மதத்தில் நிர்வாணம் பழிக்கத்தக்கதல்ல. உசேனின் நிர்வாண ஓவியங்களை அவர் பெயரளவுக்குச் சார்ந்திருந்த முஸ்லிம் சமூகமும் ஆதரிக்கவில்லை என்றால் இந்த ஓவியங்களை வைத்து நடத்தப்படும் அரசியலின் மூல ஊற்று எது?

அவர் பெயர் தான் அது. நம்புங்கள், நடைமுறையில், பெயரில்தான் எல்லாம் இருக்கிறது.

முழுதும் ஹிந்துத் தத்துவங்களோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த உசேன் தன் பெயரை மாற்றிக் கொண்டு, ஒரு உமேஷாகவோ, உமையவனாகவோ அந்த ஓவியங்களை வரைந்திருந்தால் அரசியல் பிழைப்புக்கு அற்பக் காரணங்களைத் தேடிக் கொண்டிருந்த ‘சங்’கத்தினருக்குப் பிரச்னை செய்ய வழியற்றுப் போயிருக்கும். ஆனால், உசேன் என்ற அந்தப் பெயர் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. "ஆகா, எங்கள் கடவுளை ஆபாசமாக வரைந்துவிட்டான், அடிடா அவனை!" என்று ஹிந்து பொதுமக்களைத் தூண்ட, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அவை ‘வாய்ப்பை’க்கண்டறிந்தன. உயிர் தப்ப நினைத்த உசேன், அதன்பின் கத்தர் குடியுரிமை பெற்று, இலண்டனில்நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

இந்தப் பிரச்னையில், அரசியலாடும் மனிதர்களை நான்காகப் பிரிக்கலாம்:

1) கருத்துச் சுதந்திரவாதிகள் என்னும் காகிதப்புலிகள்: இவர்கள் உசேன் மீதான தாக்குதலைக் கண்டித்தார்கள். தஸ்லிமா நஸ்ரின் என்றாலும் உசேன்எ ன்றாலும்  கருத்துச் சுதந்திரம் தான் முக்கியம் என்று களத்தில் குதிப்பவர்கள்.

மனிதர்கள் சார்புடையவர்களே என்னும் உண்மை உணராதவர்கள் இவர்கள். இவர்களுடைய சார்பு (அது மதமாகவோ, மொழியாகவோ, இனமாகவோ, கலையாகவோ இருக்கலாம்)பாதிக்கப்படும்போது உண்மை உணர்ந்து அதே கருத்துச் சுதந்திரத்தின் இடுக்கில் நுழைந்து வெளியேறக்கூடியவர்கள் இவர்கள்.

2) ஹிந்துத்துவ அரசியல்வாதிகள்: இவர்கள் தாம் இதனை வாய்ப்பாகப்பயன்படுத்திக் கொண்டவர்கள். ஆனால், எதிர்பார்த்த ஆதாயம் எதையும் பெறாததுடன், தேசத்துக்கும் தமது துரத்தியடிப்பின் மூலம் களங்கம் ஏற்படுத்தியவர்கள்.

"ஏன் இதனை வரைந்தாய்?" என்று கேட்பதை விட "ஏன் அதனை வரையவில்லை?" என்று கேட்பதில் அரசியலாதாயார்வ மிக்க இவர்கள் இந்திய ஞான மரபின் தத்துவக்குஞ்சுகள் என்று தம்மைக் கருதிக்கொள்பவர்கள்.

காலத் தேவைக்கேற்ப, பொதுவுடமை பேசுபவர்களைப் போலவே, இவர்கள் முதல்பட்டியலிலும் முகம் மறைத்து தலைக் காட்டுவதுண்டு.

3) முஸ்லிம் முல்லா சமூகம்: இந்தப் பிரச்னை வெறுமனே உசேனை மாத்திரம் குறிவைப்பதல்ல என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, பெரும்பாலும் "மெளனம்" காத்த சமூகம்இது.              உசேன் வரைந்த நிர்வாண ஓவியங்களை ஒரு சில அறிஞர்கள் கண்டித்தாலும் பெரும்பாலோனோர் கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, மரியாதையாகக் கூட உருவப்படம் வரைவதற்குத் தடையைக் கொண்டிருந்தும், உசேன் வரைந்த, முழுவதும் தன்னை மூடிக்கொண்ட ஒரு பெண் சித்திரத்துக்கு ‘பாத்திமா’ என்று பெயரிடப்பட்டதற்கும்கூட, இச்சமூகம் போதுமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு இந்துத்துவாக்களின் மேற்குறிப்பிட்டகேள்வியும் காரணமாக இருக்கலாம்.

4) பொதுமக்கள்: வெறுமனே உணர்ச்சிக் கொந்தளிப்பில் காற்றடிக்கும்பக்கம் செல்லும் பட்டங்கள்.

எந்த விஷயத்திலும், அறிவுபூர்வமாகச் சிந்தித்தால், நாம்மேற்கண்ட யாராலும் ஏமாற்றப்பட மாட்டோம் என்பதை இவர்கள் விளங்கிவிட்டால், இந்தியாவில் இத்தகைய அரசியல்குப்பைகள் ‘ஊடகச் சமையல்’ செய்யப்படமாட்டாது. அவர்களுக்காகத் தான் இந்தக்கட்டுரை.
நன்றி!
குறிப்பு: எம்.எஃப் உசேன்   வாழ்க்கை தகவல்கள் இணையங்களிலிருந்தே பெறப்பட்டன.
- வாசகன்!

மும்பை அருங்காட்சியகத்தில் ...

150 வருட சரித்திரத்தில் முதல் முறையாக மும்பையில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரிய வகையாக கருத்தப்படும் இருதலைமணியன் எனப்படும் மண்ணுளிப்பாம்பு திருட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிய வகை பாம்பின் வால் மிகவும் மழுங்கியும் உருண்டையான முனையும் கொண்டு விளங்குவதால் தலையைப் போல தோற்றம் அளிக்கிறது; ஆகையால் இப்பாம்பிற்கு இரண்டு தலைகள் உள்ளன என்ற பெரும் பாலான மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாம்பாட்டிகள் கண் போலத் தெரிவதற்காக இதன் வாலை சற்றுக் காயப்படுத்திவிடுவார்கள் பிறகு இரட்டைத்தலை கொண்ட பாம்பு என்று கூறி மக்களை ஏமாற்றி பிச்சை எடுப்பார்கள். இந்த பாம்பிற்கு அமெரிக்காவில் அதிகமாக கிராக்கி உள்ளது. இது நச்சுத்தன்மை அற்ற பாம்பு என்பதால் அமெரிக்காவில் அதிக விலை கொடுத்து வாங்கி செல்லமாக வளர்ப்பார்கள். மேலும் மாடலிங் துறையிலும் நிர்வான அழகிகளுக்கு இந்த பாம்பை அதிகம் பயன்ப்படுத்துவதும், சூதாட்ட விடுதி, சாராய கடைகளிலும் அழகிற்காக அலங்கரிக்க இந்த பாம்பை கண்ணாடி பெட்டிகளில் வைத்திருப்பார்கள். நம்ம ஊரில் மீன் தொட்டிகள் வைத்திருப்பது போல. சமீப காலமாக இந்த பாம்பிற்கு அங்கே அதிக கிராக்கி ஏற்ப்பட்டுள்ளது. ஆதலால இது அதிகம் காணப்படும் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் இதை வாங்கி அமெரிக்கா கடத்துவதற்காக நிறைய உள்ளூர் ஏஜெண்ட்கள் அலைகிறார்கள். இந்த நிலையில தற்போது தேசிய அளவில் புகழ்பெற்ற மும்பை விலங்குகள் சரணாலயத்தில் திருட்டு போயிருப்பது பெரும் அதிர்ச்சியை விலங்குகள் நல விரும்பிகள் மத்தியிலும், 150 வருட சரித்திரத்தில் இதுவரை எந்த விலங்கினங்களும் காணாமல் போகத நிலையில் இந்த திருட்டு பொது மக்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

21 ஹெக்டர் நிலபரப்புள்ள மும்பை அருங்காட்சியகத்தில் 10 பாம்புகள் உட்பட 600 விலங்கினங்கள் உள்ளன. இந்த பாம்பு வைரம் கக்கும் என்று கற்பனை இதிகாசங்களில் வரும் பொய்யே இது திருட்டு போனதற்கு காரணம் என்று தானேவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்த பாம்பு வைக்கப்பட்டிருந்த கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதே இந்த பாம்பு தப்பாமல் திருடு போய் உள்ளது என்று சரணாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இணைய முகவரியின் இறுதியில் .com

1980 ஆம் ஆண்டுகளில் அறிமுகமான இணைய தள பெயர்களை தனியாக அடையாளப்படுத்த அவற்றின் இணைய முகவரியின் இறுதியில் .com அல்லது .net மற்றும் .org என்ற மூன்று பெரும்பிரிவுகளாக வகைப்படுத்தி இருந்தனர்.பிறகு 2000 ஆண்டின் தொடக்கத்தில் இணைய தளங்களின் எண்ணிக்கை அசுர வளர்ச்சியடைந்ததால், அவற்றின் பின்னொட்டு (Suffix) அடையாளங்களில் மேலும் சில வகைகளை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக .cc, .co போன்றவற்றைச் சொல்லலாம்.

மென்மேலும் வளர்ச்சியடைந்த இணையத்தில், முகவரிகளில் நாடுகளின் பெயர்களையும் .in, .us, .de மற்றும் .info, .biz என ஏழுவகைகளுடன் மொத்தம் முன்னூறு வகைப்படுத்தி,இணைய தேடல்வசதி எளிமையாக்கப்பட்டது உலகின் அனேக நாடுகள் தனித்தனி வழங்கிகளில் இணைய சேவையைத் செயல்படுத்தத் தொடங்கிய பின்னர் மேலும் வகைப்படுத்த வேண்டிய தேவை எழுந்ததால் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) என்ற அமைப்பு மேலும்சில புதிய வகைப் பிரிவுகளை அறிமுகம் செய்ய வேண்டி உருவாக்கப்பட்டது.

ஏற்கனவே புழக்கத்திலுள்ள 300 க்கும் மேற்பட்ட பின்னொட்டு (Suffix) களில் 180க்கும் மேற்பட்டவை நாடுகளின் பெயரால் அறியப்படுகிறது. அதையே சர்வதேச நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் பெயர் (Brand) மற்றும் நிறுவன பெயரால் வகைப்படுத்துவதை அங்கீகரிக்க வேண்டி இன்று ICANN அமைப்பு சிங்கப்பூரில் ஆலோசனை நடத்துகிறது.

அரபு மற்றும் சீன மொழி உள்ளிட்ட பின்னொட்டுகளையும் அங்கீகரித்து, அடுத்த வருடம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் .bank, .sony , .dubai என்று தொழிலின் தன்மை, பொருட்களின் பெயர் மற்றும் இடன்ப்பெயர்களால் இணைய தளங்களை துல்லியமாக அறியலாம்.ஆபாச தளங்களை.xxx என்றும் சினிமா மற்றும் பொழுதுபோக்கு தளங்களை .movies என்று வகைப்படுத்தி அறியலாம்.

இந்த பின்னொட்டுகள் விரிவடையும் நிலையில் நமது அரசியல் கட்சிகள் .dmk, .admk, .dmdk என்றெல்லாம்கூட இணைய தளப்பெயர்களை வைத்துக்கொள்ளலாம். எனினும் இதற்கான நுழைவுக் கட்டணம் 185,000 அமெரிக்க டாலராக இருக்கும் என்றும், தேர்வு செய்யப்பட்ட பெயர்களை நிரந்தரமாக்க ஆண்டுதோறும் 25,000 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அரசியல் கட்சிகளுக்கு இதெல்லாம் பிசாத்து காசு என்றாலும் பெரும்பாலான பயனர்கள் பின்னொட்டுகளைப்பற்றி கவலைப்படாமல் கூகிலில் ஓரிரு சொற்களை தட்டச்சு செய்து தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பதால் புதியவகை பின்னொட்டுகள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

Thursday, June 9, 2011


முற்பகல் செய்யின் - சிறுகதை

கனா
கண்டேனடி தோழி .....ரிங் டோன் அலறுது...


" என்ன வேணும்? .."

" ஏங்க எடுத்ததுமே கோபப்படுறீங்க.. ?."

" சரி சொல்லு.. நேரத்த வீணாக்காம.."

" இல்ல இன்னிக்கு என்ன குழம்பு வெக்கணும்னு.."


" இதுக்கெல்லாமா அலுவலுக்கு போன் ?.எதாச்சும் வெய்யேன்.."


" இல்ல நேற்று புளிக்குழம்பு சரியா சாப்பிடல.. பிடிக்கலையோன்னு.."

" ஏதோ பண்ணு .. இதுக்கெல்லாம் போன் போடாத.." வைத்துவிட்டான்..
_________________________________________

கனா
கண்டேனடி ...............


" என்..................................ன...?"

" எங்கண்ணா கிட்ட இருந்து மெயில் வந்திருக்கு.."


" அதுக்கு இப்ப என்ன.? சாயங்காலம் சொன்னா போதாதா.?"

" உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒரு சந்தோஷமான செய்தி.. அதான் .."

" ஒண்ணும் குடிமுழுகிடாது .. தொந்தரவு பண்ணாதே.. அதான் கணினி உபயோகிக்க
சொல்லி தந்தேன்ல..ஃபார்வர்ட் பண்ணு.."

" இந்த வெளிநாட்டுல வந்து இப்படி யார் கிட்டயேயும் பகிர்ந்துக்க முடியாம
மாட்டிப்பேன் னு தெரிஞ்சா.. சே வந்திருக்கவே மாட்டேன்.. க்ர்ர்ர்ர்.."

" சரி .. சொல்லி தொலை...சீக்கிரம்.."

" ஒண்ணும் வேண்டாம்.. " டொக்...

-------------------------------------------------------------------------------"உப்பு புளி காரம் சரியா இருக்கான்னாவது சொல்லுங்களேன்.."


" ம்...ம்.." டிவி பார்த்துக்கொண்டே..


டிவியை அணைத்தாள்.. பிடுங்கினான் ரிமோட்டை...

"முக்கியமான நேரம் ...கோல் போட்டுட்டான் பாரு.. ஏன் அணைச்ச.?

"
"சாப்பிடும்போதாவது இந்த சனியனை பார்க்காம இருக்கக்கூடாதா.?. சமையல்ல குற்றம் குறை சொன்னாத்தானே திருத்திக்க முடியும்.."

" ஆமா பெரீய்யயயயயய.. சமையல்..எல்லா பொடியும் எங்கம்மாவும் உங்கம்மாவும்
செய்து தராங்க ஏதோ காய்கறிய போட்டு செய்ற .. அதுக்கு இவ்ளோ பில்டப் ஆ..?"

" உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. செய்து பாருங்க அப்ப புரியும்.."

" கொஞ்சம் ரசம் .போட்டுக்கோங்க... அய்யோ ஏன் கழுவுறீங்க...?"
" மேட்ச் பார்க்க விடுறியா கொஞ்சம்?.."

----------------------------------------------------------பேப்பர்
வாசித்துக்கொண்டிருந்தவனிடம் .


" ஏங்க மாரியம்மன் கோவில் ல தேங்காய் உடைக்கும் திருவிழாவாம்.. போலாமா..?..
"
பேப்பரை பறித்தாள்..

" கொடு இங்க.."


" கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மொதல்ல.."


" கேளு.."

" மாரியம்மன் கோவில் ல தேங்காய் உடைக்கும் திருவிழாவாம்.. போலாமா..?..
"

" ஏம்மா அதுக்கெல்லாம் நீயே போக கூடாதா.. நான் ரெஸ்ட் எடுக்கணும்... "

" தெரியும் உங்க ரெஸ்ட் என்னன்னு.. ஆங்கில பட டிவிடி (ஜேம்ஸ்பாண்ட்)வாங்கிட்டு வரும்போதே நெனச்சேனே.."

-------------------------------------------------------------------------------


" எழும்புங்க.. அய்யோ எழும்புங்களேன்..."

" தூங்க விடுடி.. ஞாயிற்றுக்கிழமையாவது.."

" உங்க பிரண்ட் பொண்ணு அந்த புஜ்ஜூ குட்டிக்கு பொறந்த நாள் இன்னிக்கு. வர சொன்னாங்களே.."

" அதான் கிஃப்ட் வாங்கிட்டல்ல.. நீயே போய்டு.. அவன் கிட்ட நான் சொல்லிக்கிறேன்.. கேட்டா அர்ஜெண்டா ஆபீஸ் விஷயமா போயிருக்கார்னு சொல்லிடு. முடிஞ்சா லஞ்ச் ல ஜாயின் பண்றேன்.."

----------------------------------------------------

" இந்த டூல்ஸ் பாக்ஸ் எங்கே இருக்கு.."

வீட்டு
மாடியில் நின்று கத்துறான்..

" அங்கேயே தான் 3 வது செல்ஃப்ல.."

" கண்டுபிடிக்க முடில.. நீ வந்து எடுத்து கொடு.."


" நான் அத்தகிட்ட பேசிட்டிருக்கேன் ஸ்கைப்புல.. நீங்களும் சீக்கிரம் வாங்க.. வேலை
அப்புரம் பார்த்துக்கலாம்..ஹிஹி."

ஜன்னல் பழுது பார்க்கும் வேலையை முடித்துவிட்டு கீழே வந்தவன் ,
" சரி பசிக்குது சாதம் போடு..."

" எல்லாம் மேசையில இருக்கு பாருங்க.."


" நீ என்ன பண்றே..?"

" இருங்க ஒரு முக்கியமான சமையல் குறிப்பு வாசிச்சுட்டு இருக்கேன்.. அப்புரம்
நானும் ஒரு சின்ன பதிவு போடணும்... பிலீஸ் நீங்களே போட்டுக்கங்க.."


---------------------------------------------------------


கல்யாண
மாலை கொண்டாடும் வேளை.......... அவள் மொபைல் அடிக்குது..
மொத்தமாய் பாடி முடிக்குது..

மீண்டும்
...கல்யாண மாலை..................


" எங்கே போனா இவ.."

" என்னங்க கூப்பிட்டீங்களா... ஒரு 10 நிமிஷம்.. இந்த பதிவை (பேஸ்புக்) முடிச்சுட்டு வந்து
பேசுறேன்.. நிதானமா..." டொக்..

-----------------------------------------------------------


டிரிங் டிர்ங்.......... காலிங் பெல்...

" கதவு திறந்துதான் இருக்கு... கொஞ்சம் அழுத்தி தள்ளுங்க..."


" ஏன் நீ என்ன பண்ணிட்டு இருக்க..?.. வந்து இந்த சாமான்களை பிடியேன்.."

" பிலீஸ் ங்க.. என்னோட பல நாள் கல்லூரி தோழி ஆன்லைன்ல... ரொம்ப
சுவாரஸ்யமா பேசிட்டிருக்கா.."

" நீ செய்றது கொஞ்சங்கூட நல்லால்லே... "

" ஆமா நீங்களும் பேசுறதில்ல.. என்னையும் பேச விடாதீங்க..நல்லவேளை எனக்கு இணையம் சொல்லி தந்தீங்க.. நல்லா பொழுது போவுதுங்க..."
அடப்பாவமே, புள்ள குட்டி வருவதுக்குள்ள இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கணுமே னு நேரா சென்று அணைத்தான் கணினியையும், மனைவியையும்....

கொஞ்சம் விஷயம் கொஞ்சம் வழக்கம் போல...ஹிஹி..

வெட்டுக்கிளிகள் சுமார் 13 விதமான சப்தங்களை எழுப்புகின்றன. இந்த சப்தங்களின் மூலம் மற்ற வெட்டுக்கிளிகளுக்கு வெவ்வேறு செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறதாம்.
* (நம்ம பசங்க sms  பண்ணுறாப்போல ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி ..!  )


லாக்கா எனப்படும் பூச்சிகளின் உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வகைப் பிசின்தான் அரக்கு. உலக அளவில் இது இந்தியாவில்தான் 80 சதவிகிதம் கிடைக்கிறது.


பிராணிகளில் அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது ராட்சத ஆமைதான். இவை 300 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.
*(கொடூரமா *இராட்சத*  இருந்தாதான் அதிக நாள் வாழ முடியுமோ?)

யானைக்குட்டி பிறந்தவுடன் 125 கிலோ எடையிருக்கும்.
*(அதான் நான் தூக்கி கொஞ்சவே இல்லங்க )

பாம்பு கடிக்கும் போது சுரக்கும் நஞ்சு 4 முதல் 6 துளிகள்தான்.
*(ஹூக்கும் அதுக்கே பூய் சேர்ராய்ங்க.. பின்ன! பசுமாதிரி லிட்டர் கணக்குலையா சுரக்கனும்.!   )

நெருப்புக் கோழி முட்டைகளை பகலில் பெண்ணும், இரவில் ஆணுமாக இரண்டும் அடைகாக்கின்றன.
*(சின்ன டவுட் நெருப்புகோழி முட்டை வெந்துடாதா? நாங்களும் திங்க் பண்ணுவோம்ல   )

ஒரு பட்டுப்பூச்சிக்கூடு சுமார் 3000 அடி நீளமுள்ள பட்டு நூலைத் தருகிறது.
*(பேசாம 30 -அடில ஒரு புடவையே கொடுத்திருந்தா நல்லா இருக்குமே )

நாய்களுக்கு வியர்வை நாக்கின் வழியாகத்தான் வெளியேறுகிறது. அதனால்தான் நாய் ஓடும் போது நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது.
*(ஹாஹா நோ கம்மேண்ட்ஸ் அப்புரம் ஜொள்ளு பார்டிங்கல்லாம் என்னை முரைப்பாய்ங்க  )

ஸ்லாத் எனும் மிருகம் தலைகீழாக நடக்கும். மேலும் இது தண்ணீர் குடிப்பதில்லை.
*(நாளைல இருந்து தரை பண்ணி பார்க்குறேன் ..இந்த பாலைவனத்தில் இருக்குறவங்களும் ட்ரை பண்ணலாமே!)

பூச்சியினங்களில் குறைவான ஆயுட்காலம் கொண்டது ஈ தான். ஆண் ஈ 14 நாட்களும், பெண் ஈ 29 நாட்களும் உயிர் வாழும்.
*(ஈ -க்கும் லவ் பெயிலியர்லாம் இருக்கும் போல..! ஹாஹா ஆனா ஒன்னு ஒருமாசத்துக்குள்ல எல்லாம் முடிஞ்சுரும் டீ.வி -சிரியலுக்கு இது தேவலை.. )

புத்திசாலியான 10 மிருகங்களுள் பன்றியும் ஒன்று.
*(இனி எவனாவது திட்டட்டும் ஹாஹா )

கோல்டன் ஈகிள் எனும் கழுகு ஒரு சிறு முயலை ஆகாயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்க்கும் சக்தியுடையது.
*
embed code

உலகின் மிகப் பெரிய விஷயங்கள்..(கூடவே என் நக்கல்கலும் இலவசம்)


நல்ல விஷயங்களை    எப்படி சேர்த்தா..என்ன..! படிங்க தெரிஞ்சுகோங்க..!
உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.
 * (ஆனா ஒண்ட்ரை மணிநேரம் தான் படம் போடுவாய்ங்க..)


உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.

  *(தங்கத்தையும் பயபுள்ளைங்க கிட்டதான் வாங்கனும் போல!)


உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.
 *(அப்போ நயன்தாரா இல்லையா? ச்சீச்சீ நயாகரா இல்லையா?)


உலகின் மிகப் பெரிய அணை அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.

*(தண்ணில்லாம் இருக்குமா! அது சரி அமெரிகாவுல இல்லாத தண்ணியா! நான் சாமி சத்தியமா தண்ணியைத்தான்  சொன்னேன்)


உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிகோ வளைகுடா.

 *(அப்போ ரோடெல்லாம் வளைஞ்சு வளைஞ்சு தான் போகுமோ ஹிஹி ஒரு பொதுஅறிவுதாங்க..)


உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு இந்தியா.

 *(மிஸ்டு கால் கொடுக்குறதுதான் இப்போ பெஸ்ட் ! ஆனாலும் இதுலயாவது முன்னால வந்தோமே)


உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.

 *(நல்லவேளை ரூபியும் மொக்ஷ்-ஸும் அங்கே பொறக்கலை.. 128-வரி அம்மாடி!-இது ரூபி!.. 128-வரிகளா..மம்மி டாமி காப்பாத்துங்க..-இது மொக்ஷ்)


உலகின் மிகப் பெரிய பூங்கா ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

 *(நமக்கு அங்கயும் ஒரு நண்பன் இருக்கான்..பயபுள்ள..இப்பொதான் தெரியுது என்ன வேலை பாக்குறான்னு..*புல்லுகில்லு வெட்டிகிட்டு இருப்பானோ?*)


உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.

 *(நான் ஒரே ஒரு ஆளை அனுப்புறேன்..முடிஞ்சா.சமாளிச்சுட்டு அப்பொறம் 40000-பேரை வச்சி சமாளிக்க முடியும்னு பேட்டி கொடுங்க முடிஞ்சா..(எங்க இரத்திகா? மணி 4-ஆகப்போவுது..! )  )


உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான்.

*(சம்பந்தமில்லாத இடம் நம்ம புள்ளைங்களுக்கு..! ம்ம்..இருந்தாலும் ..காங்ரஸ் பேரு இருக்குற ஒரே காரணத்துக்காக..நான் போல..)
உலகின் மிகப் பெரிய கிறிஸ்துவத் தேவாலயம் இத்தாலியிலுள்ள புனித பீட்டர் தேவாலயம் தான்.

 *(பிரேசில் சிலை -ல மட்டும் தான் பெருசு போல.. )


உலகின் மிகப் பெரிய அரண்மனை சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இம்பீரியல் அரண்மனை தான்.

 *(ராஜ வாழ்க்கைதான் ஆனா ஒரு ஈ-மெயில் கூட கண்காணிப்புல சிக்காம வெளில போகமுடியாது.. )


உலகின் மிகப் பெரிய ஹோட்டல் ரஸ்யாவின் மாஸ்கோவிலுள்ள ரோஸிலா தான்.

*(யாராவது அங்க இருகீங்களா..!..சாப்பாடு சாப்பாடு..)
உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம் தான்.
 *(விளையாட சொன்னா கூட பரவாயில்லை ஆனா ஊரு பேரை மட்டும் மருபடியும் டைப் பண்ண சொல்லாதீங்க..)


உலகின் மிகப் பெரிய இரயில்வே சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் தான்.
 *(நல்ல இடம் தான் ஆனா காத்திருக்கனுமா என்ன.?)


உலகின் மிகப் பெரிய விமான நிலையம் ரியாத்திலுள்ள காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம் தான்.
 *(ரியாத் காலித் ! பிண்ணீட்டாங்க..போங்க..)


உலகின் மிகப் பெரிய கடல்துறைமுகம் அமரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுகம் தான்.

*(நான் இதுக்குமேல மொக்கை போட்டால் அடிக்க வருவெண்ணு சொல்லாமல் சொல்லும் அன்புள்ளங்களே! ..  (இப்ப்டி இடையில எதாவது சொல்லலன்னா..! நம்மலை பிடிச்சு மேய்ஞ்சுடுவாங்க..) மாலை வணக்கம்)
உலகின் மிகப் பெரிய இரயில்வே பிளாட்பாரம் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்விக் பிளாட்பாரம் தான்.
*(ஹாஹா..இது பாயிண்ட்...கடைசில ப்ளாட்பாரத்துல..உங்களை விட்டேன்னு ..தப்பா நினைச்சுகாதீங்க..! டாட்டா பைய் பை சீ யு!.. ஹாஹா..)

Wednesday, June 8, 2011

காதல் ஸ்பெஷல்.....
கைகளில் அழகுபடுத்திய மருதாணியுடன்
புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்..
கைபேசியில் பேசிக்கொண்டே எனைக் கடந்தபோது
வெகுநேரம் முன்வந்து தொந்தரவு செய்த என் ஒற்றை முடியை
காதோரம் ஒதுக்கி விட்டுச் சென்றாயே..
அந்த நொடியில்..
அருகமர்ந்து பேசியபடியே
உன் தோள் சாய்ந்து தூங்கியிருந்தேன்..
ஏதும் சொல்லாமல் என் பக்கமாய்
உன் தலையை சாய்த்துக்கொண்டாயே..
அந்த நொடியில்..

நானே செய்ததாகச் சொல்லி
உன்னிடம் நீட்டிய பலகாரத்தை
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
“சூப்பரா இருக்குப்பா“னு சொல்லி சமாளித்தாயே..
அந்த நொடியில்..பேருந்துப் பயணத்தின் கூட்டத்தினிடையே
என்னை உற்று நோக்கிய யாரோ ஒருவனை
எரித்துவிடுவதாய் பார்வை வீசினாயே..
அந்த நொடியில்..ஒவ்வொரு முறையும்
எனக்கான பிறந்தநாளை மறந்துவிட்டு,
கோபித்துக்கொண்ட என்னை சமாதானம் செய்ய
ஏதேதோ கோமாளித்தனங்கள் செய்வாயே..
அந்த நொடியில்..புதிதாய் வாங்கிய பேனாவை
எழுதிப்பார்க்க ஆசைப்பட்டு ஏதோ கிறுக்கினாய்..
என்னவென்பதை எடுத்துப் பார்க்க
என் பெயர் இருந்ததே....
அந்த நொடியில்..அழைபேசியில் வரும் கணிணி குரலை
“சொல்லுடா செல்லம்“ என அழைத்து
வேண்டுமென்றே வெறுப்பேற்றி
என்னிடம் அடி வாங்குவாயே..
அந்த நொடியில்..புதிதாய் புடவை உடுத்திவந்த என்னை
செல்லமாய் தலையில் குட்டி
“எப்டி சேலை கட்டிருக்க பாரு“என தரையமர்ந்து
கீழ் மடிப்புகளை சரிசெய்தாயே..
அந்த நொடியில்..எப்போதும் பேர் சொல்லியே அழைக்கும் நீ
காதல் அதிகமாகும்போது மட்டும்
“கோழிகுஞ்சு“என என்னிடம் சிணுங்குவாயே..
அந்த நொடியில்..சொர்க்கமும் நரகமாய்
நீ அருகிலில்லாத இந்த காதலர் தினம்..
பிரிவின் ஏக்கத்தில் தவித்துக்கிடந்த தருணம்
உன்னிடம் வந்த குறுஞ்செய்தி.. “ஐ மிஸ் யூடி கோழிகுஞ்சு“..
இந்த நொடியில்...
.
.
“ஐ லவ் யூடா
.