அது வேறு உலகம். அங்கே இருப்பது ஒரேயொறு ஆலயம்.
அதில் வசிப்பது இந்துக்கடவுளோ, இலாமியக்கடவுளோ, கிறிஸ்தவக்கடவுளோ அல்ல ...
ஆனால் அங்கே ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் மனிதர்கள் வந்து வழி பட்டுப் போகிறார்கள்.பலர் மாதக்கணக்கில் அங்கே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். அப்படி வாழ்ந்து வந்தவர்களில் நானும் ஒருவன்.
வாகனங்களிம் புகையால் அந்த ஆலயம் பழுப்பேறிவிடக்கூடாது என ஒரு கிலோ மீட்டருக்கு அப்பாலே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன..
புகை இல்லாத பேட்டரிக்கார்கள் அங்கிருந்து ஆலயத்துக்குள் அழைத்துச்செல்ல பயன் படுகின்றன. அந்த ஆலயத்தை மாசு படுத்துகின்றன என்ற ஒரே காரணத்துக்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட ஆலைகள் நூறுக்கும் மேல்.
உலகெங்கும் இந்திய ருபாயின் மதிப்பு ஒரு அமேரிக்க ராலருக்கு சராசரியா நாற்ப்பந்தைந்து ருபாய் என கணக்கிடப்படுகிறது . ஆனால் அந்த ஆலயத்தில் அந்த கணக்கெல்லாம் செல்லுபடி ஆகாது. ஆம் , அந்த ஆலயத்தில் இந்தியர்களுக்கு நுழைவுக்கட்டணம் 20- ருபாய். வெளிநாட்டவருக்கு 20-டாலர்.
ஒரு ருபாயும் ஒரு டாலரும் அங்கு ஒன்றுதான்.
அப்படி யென்ன அங்கிருக்கிறது என்கிறீர்களா? காதல் இருக்கிறது. ஆம்! அந்த ஆலயத்தின் பெயர் தாஜ் மஹால்.
NEWNESS IS THE SECRET OF ITS BEAUTY என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட கல்வெட்டை உண்மையாக்கும் வண்ணம் எப்போதும் புதிதாகவே இருக்கும்
தாஜ் மஹால், வானம் புதிதாக இருப்பது இயற்கை வானத்தைக்காட்டிலும் புதிதாய் இருக்கக்காரணம் “காதல்” தான்!
அதை கட்டச்சொன்னவன் ஒரு காதலன், அதைக்கட்டிக்கொடுத்தவன் ஒரு காதலன்... அதை காத்து நிற்பது காதலர்கள்....
காதலர்கள் எங்கே இருந்தாலும் சுற்றுப்புறத்தை மறந்து காதலில் லயித்துப்போவார்கள் ஆனால் இங்கு மட்டும் கதலர்கள் தங்களை மறந்து தாஜ்மஹாலில் லயித்துப்போகிறார்கள்.
மக்ரீனா- ’குஷி’ -விஜய்ப்படத்தில் வரும் பாடல் இல்லை இது 400- வருடங்களுக்குமேல் புகை, பனி,வெயில் மழை... அனைத்திலிருந்தும் பழுப்பேறாமல்“தாஜ்மஹாலை-க் காக்கும் ” வெள்லைச்சலவைக்கல்.
சில நூற்றாண்டுகள் அந்த கல் மண்ணுக்குள்லே இருந்திருந்தால் வைரமாக மாறி இருக்கும். ஆனால் தாஜ்மஹால் அளவுக்கு கொண்டாடப்பட்டிருக்குமா?
கல்லிலும் காதல்..
நடுவில் வீற்றிருக்கும் கோபுரத்தை சுற்றிக் கட்டப்பட்ட நான்கு தூண்களும் சற்று வெளிப்புறம் சாய்ந்தபடி கட்டப்பட்டிருக்கிறது -விழுந்தால் கூட தாஜ்மஹாலை சேதப்படுத்திவிடக்கூடாதாம் ஒவ்வொறு அணுவிலும் காதல்...காதல்... காதல்..
நுழைவு வாயிலைத்தாண்டி உள்லே நுழைந்ததும் அத்தனைப்பெண்களும் மும்தாஜ்-காளாகமாறி விடுகிறார்கள். ஆனால் பாவம் பல ஆண்கள் ஷாஜகான்களாக ஆக முடியாமல் தவிக்கிறார்கள்..!
என்றாலும் அங்கே ஒரு ஷாஜகான் இருக்கிறான். - தாஜ்மஹாலைக்காக்கும் காவலாளிகளில் ஒருவன். காலையில் உள்நுழைந்து இரவு கடைசி ஆளாக என்னை (தபு) சிலநாட்க்களாய் கவனித்தவன். ஒருநாள் என்னை பார்த்தவுடன் புன்னகைத்தான்.! பேச ஆரம்பித்தோம்!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவனுக்கு வேலை ஏதும் கிடைக்காததால் காவல் துறையில் சேர்ந்திருக்கிறான். இனிமேல் தனக்கு அழுக்கடைந்த காவல் நிலையம், திருடர்கல் நீதிமன்றம் என வாழ்க்கைப்போகப்போகிறது என நினைத்தி இருந்தவனை , “தாஜ்மஹாலை’’ காவல் காக்கப்போ! என்றவுடன் தான் அடைந்த ஆனந்தத்தை அவன் கண்கள் விவரித்த விதத்தில் காதல் எத்தனை அழகாய்... தெரிந்தது தெரியுமா எனக்கு....
இங்கு வந்து ஐந்து வருடம் ஆகிறதாம் இதுவரை ஒருமுறைக்கூட ஊருக்குப்போனதில்லையாம்.ஊரில் அம்மா மட்டும் தனியே... எப்போதாவது அவரை வரச்சொல்லி பார்த்துக்கொள்வதோடு சரி... மற்ரபடி அவனுக்கு வாழ்க்கையே தாஜ்மஹால் தான்...
“எனக்கு எல்லாம் இந்த கோவில் தான் பனி,மழை வெயில் எதுவும் எனக்குத்தெரியாது. ஷாஜகான் கூட தன் கடைசிகாலத்தில் சிறைவைக்கப்பட்ட இடத்திலிருந்து தாஜ்மஹாலை பார்த்தபடியே தான் இறந்தான். நான் இதை காவல் காத்துக்கொண்டிருக்கும் போதே இறக்கவேண்டும்”- என அவன் பரவசத்தோடு பேசும் போது பேசுவதைக்கேட்கையில்....
தாஜ்மஹாலே உன் மாடத்தில் குடியிருக்கும் புறாக்கள் சிந்தும் கழிவுகளை சுத்தம் செய்யும் வேலையாவது எஅனக்குக்கொடேன் என கத்த வேண்டும் போல இருந்தது...எனக்கு
வானம் இருளத்தொடங்கியது... “இங்கே வருகிறவர்கள் இரவானால் இதைசமாதியாக நினைத்து உள்லே செல்ல பயப்படுவதையும் அப்படி சென்றாலும் பயத்தை காட்டிக்கொள்லாமல் இருக்க சப்தமெழுப்பியபடியே செல்வதை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது என்றான் அவனது கவலையைக் கேட்கையில் அப்படியே பெண்ணாக மாறி அவனைக்காதலிக்க முடியாதா என்றிருந்தது..
காதலே... அவனை கவனித்துக்கொள் அவனுக்கு ஒரு நல்ல காதலியைக்கொடு...
மழையானவள்... (தபு சங்கர் ) -லிலிருந்து.....!
(தாஜ் மஹால் உள்கட்டமைப்பு புகைப்படங்கள் :http://jekophoto.eu/gallery/public/events/alexa-presents-on-ice-berlin-2008/taj-mahal-inside/ )
-கார்த்திக் ராஜா...!

No comments:
Post a Comment