Wednesday, November 9, 2011

பிறந்த நாள் வாழ்த்து...!



தேவதைகளின் கூட்டத்தில் 
இன்று புத்தம் புதியதாய் 
பூத்த ஊதாப்பூவிவள்...


அண்மையில் தொலைவைத் 
தொலைத்து அன்பில் 
தங்கையாய்...!
என் பாசத்திற்குரியவள்..!

மேகங்கள் நிறம் மாறும் 
மழை நீருக்கு நிறமில்லை 
இவள் செல்லக்கோபங்கள் 
உள்நுழைந்திருக்கும் 
பாசமும் அப்படித்தான்..

சுற்றும் பூமியில்
சிறகு மட்டும் எனக்கிருந்தாள்
இன்றே பறந்து போய்
என் தங்கையை
ஆரத்தழுவிக்கொள்வேன்..!

நவம்பரில் பிறந்த
நட்ச்சத்திரமிவள் மேல்
தீராத பாசம் பொன்னொளியாய்
மின்னி இருக்கும்..!
என்நாளும்..!

இணையத்தொட்டிலில்
நட்பின் கருவில்
பிறந்து உறவுகளைத் தாண்டி..
உண்டென்று உணர்த்தும் கூட்டத்தில்
உருவெடுத்த நிலவிவள்

தெருவிளக்கின் கீழே
விளியாடிய சிறுமி என்றே
சீண்டிப்பர்த்தால் சித்த மருத்துவம் சொல்லி
சிந்தைகலங்கச்செய்தவள் ...!

பலகனவுகள் தாண்டி
திசைகாட்டி நீண்டும் என்றும் தொடர்ந்திடும்
இவள் பாசம் ..!

மனதிலிருக்கும் நேசம்
எழுத்தில் கொண்டுவரத்தெரியவில்லை
எடுத்துச்சொல்ல தேவை இல்லை
என்நாளும்
நிலைக்கும் இந்த அன்பு...!


இனிய வாழ்த்துக்கள்
இரட்டைகுழலியாய்... வந்துன்னைச்சேரும்
நிலவைச்சுமக்கும் நிலவினுக்கு
நித்தம் எந்தன் வாழ்த்திருக்கு..!


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தங்கையே...!

என்றும் அன்பில்

தமிழ் அருவி
-தமிழ் அருவி

No comments: