Tuesday, November 15, 2011

அமேரிக்க ஜனநாயகம்.... ??



நியூயோர்க் ஸூகோட்டி பார்க்கில் முகாமிட்டு வோல் ஸ்ரீட்டை நிரப்புவதற்கான போராட்டங்களை நடத்தியவர்களை நியோர்க் போலிஸ் காடைத் தனமாக வெளியெற்றியது. 15ம் திகதி அதிகாலை தமது நாட்டில் ஜனநாயகம் குறித்தும் கருத்துச் சுந்ததிரம் குறித்தும் பேசும் நியோர்க் நகர மேயரின் உத்தரவின் பேரில் போலீஸ் வெளியேற்றியது.
உலகம் செத்துப் போயிருந்த அதிகாலை ஒரு மணியளவில் நியூயோர்க் போலீஸ் கமிசனர் களத்தில் இறங்க அமைத்தியாக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு எதிரான தாக்குதல் ஆரம்பமானது. அமரிக்க ஜனநாயகம் உள் நாட்டிலும் தனது கோரத்தைக் காட்டியுள்ளது.
அடிப்படை வாழ்வுரிமைக்காக மட்டுமே இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாம் தான் இந்த உலகின் 99 வீதமானவர்கள் என்று ஆரம்பித்த இந்தப் போராட்டம் நியூசிலாந்து வரை பரவியது குறிப்பிடத்தக்கது.
200 இற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைதின் போது போலிசாரின் தாக்குதலுக்குப் பலர் காயமுற்றனர். 17ம் திகதி செப்டெம்பர் மாதம் ஆரம்பித்த இப்போராட்டத்தின் இதயப் பகுதியை குறுகிய முன்னறிவிப்புடனும் வன்முறையோடும் பொலீசார் அகற்றினர்.
அதிகாலையில் நிலைமையைப் புரிந்துகொண்ட நகரத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியும் மனித் உரிமைச் செயற்பாட்டாளருமான லூசி பில்லிங்ஸ் போலீசாரை அங்கிருந்து விலகுமாறும், அபகரிக்கப்பட்ட கூடாரங்களை மீளளிக்குமாறும், கைதானவர்களை விடுதலை செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே நீதிமன்ற நிர்வாகிகள் லூரி பில்லிங்க்ஸை தொடர்புகொள்ளாமல் வேறு ஒரு நீதிபதியைத் தெரிவு செய்து போலீசிற்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்தனர்.
அமரிக்க நீதியும் மேற்கின் ஜனநாயகமும் தமது வியாபாரம் பாதிக்கப்படுவதாக பல் தேசியக் கொள்ளைக் காரர்கள் புகார் வழங்கினால் மட்டுமே செயற்படும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்.
நடந்த சம்பவங்களை செய்தியாக்கிக் கொண்டிருந்த நியூயோர் டெயிலி செய்தியாளர் போலிசால் தடுக்கப்பட்டார். பின்னதாக செய்திவெளியிட்ட காரணத்தால் கைது செய்ய்யப்பட்டார்.
ஜூலி வோக்கர் என்ற தேசிய பொது வானொலியின் செய்தியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஏ.பி செய்திச் சேவையைச் சேர்ந்த சீத் வேங் புகைப்படம் பிடித்த காரணத்தால் கைதுசெய்யப்படு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுவரை 9 ஊடகத் துறையைச் சார்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்த தகவல்களின் படி சட்ட ரீதியாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீள ஆரம்பிப்பதற்கான தற்காலிக உத்ரவை நீதமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.

சர்வதேச இயக்கமாக விரிவடைந்துள்ள இப்போராட்டம் இலகுவில் நிறுத்தப்பட முடியாத இயக்கமாக விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: