Monday, November 7, 2011

ஐ.டி துறையின் தகவல் தொழில்நுட்ப சுவையான நகைச்சுவைகள்


பொதுவாக ஒரு அழுவலகத்தில் வேலையில் இருந்தால் கண்டிப்பாக அங்கு பல சுவையான சம்பவங்கள் நடக்கும். அதுவும் இளைஞர்கள் இருக்கும் இடத்தில் இந்த மாதிரியான விசயங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் IT துறையில் சொல்லவே தேவை இல்லை. அப்படி நான் பணியாற்றிக் கொண்டு இருந்த எனது முன்னாள் அழுவலகத்தில் நான் சந்தித்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்...


சம்பவம் 1

Computer Techie
நான் என்னுடைய பழைய அழுவலகத்கில் கணினி பழுது பார்க்கும் ( Desktop Engineer ) வேலையில் இருந்தேன். ஒவ்வொரு பயனாளர்களும் ( End users ) தங்கள் கணினியில் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்கும் போது எங்களை அழைத்து பிரச்சினைகளை சரி செய்வது வழக்கம். அன்றும் அதே போல் ஒரு துறையின் துணைப் போது மேலாளர் ( Deputy General Manager ) என்னை அழைத்தார். 

இந்த அழுவலகமானது கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் அழுவலகம். அதனால் இங்கு இருக்கும் கடைநிலை பயனாளர்களுக்கு கணினியை பற்றிய போதிய புரிதல் அறிவு இருக்காது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் இது அவகளுடைய துறை கிடையாது...

சரி விசயத்துக்கு வருவோம்... அவர் தன்னுடைய கணினியில் இமெயில் வேலை செய்யவில்லை என்று புகார் செய்து இருந்தார். நாங்களும் இங்கு இருந்து கொண்டு எல்லா வழங்கிகளும்( Server ) அதனுடைய சேவைகளும் ( Email Service ) சிறப்பாக வேலை செய்வதாக சொல்லி, அவருடைய கணினியை மீள்துவக்க ( Restart ) சொன்னோம். அவரும் அவ்வாறே செய்து விட்டு பார்த்து விட்டு மறுபடியும் எங்களை அழைத்து தற்பொழுதும் வேலை செய்யவில்லை என்றார். ஆக இந்த பிரச்சினையை நேரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து நான் கிளம்பினேன்.

அங்கு நான் சென்றடைந்ததும் அவரை நான் ஒரு முறை முயற்ச்சி செய்து பாக்க சொன்னேன். அப்பொழு அவர் 1,2,3,4,5 என்று டெஸ்க்டாப்-யில் இருக்கும் ஒவ்வொரு ஐகான் வரிசைகளை எண்ணி கொண்டு ஐந்தாவது வரிசையின் கடைசியில் உள்ள ஐகான்-ஐ தேந்தெடுத்து டபுள் கிளிக் செய்தார். அப்படி செய்து விட்டு

"பாத்தீங்களா தம்பி, நானும் காலைல இருந்து இதை தான் பண்ணிட்டு இருக்குறேன், இமெயில் ஓபன் ஆக மாட்டேங்குது. தினமும் இங்க தான் கிளிக் பண்ணுவேன், இமெயில் ஓபன் ஆகிடும். இன்னைக்கு என்ன பிரச்சினையோ? கொஞ்சம் பாத்து சரி பண்ணி குடுங்க... " என்றார்...

எனக்கோ சரியான சிரிப்பு. ஏனென்றால் அவர் டபுள் கிளிக் செய்தது ஒரு வோர்ட் ஃபைல்-க்கான ஐகான். அதை அவர் ஒவ்வொரு முறை டபுள் கிளிக் செய்யும் போதும் அந்த வோர்ட் ஃபைல் தான் அவருக்கு திறந்திருக்கிறது. இந்த பிரச்சினையை தான் இவர் இமெயில் சேவை வேலை செய்யவில்லை என்று எங்களிடம் புகாராக அளித்திருந்தார்.

மேலும் அவரிடம் விசாரித்ததில், அவர் ஒவ்வொரு முறை இமெயில் சேவையை பெற இப்படி தான் ( அதாவது ஐகான் வரிசைகளி எண்ணி, ஐந்தாவது வரிசையில் இருக்கும் கடைசி ஐகான்-யை டபுள் கிளிக் செய்து) செய்வதாக கூறினார்.

யோசித்து பார்த்ததில், முன்தினம் யாரோ ஒருவர் டெஸ்க்டாப்-ல் இருக்கும் ஐகான்-களை Arrange Icons by Name கொடுத்து விட்டு மாற்றியிருக்கக் கூடும் என்று தோன்றியது.


அட அறிவு ஜீவிகளா>>>? 

No comments: