Tuesday, January 7, 2014

நிகழ மறுக்கும் அற்புதம் அவன்

Strong Beauty face detail by Art-of-man
காற்றிலெழுதியவை



நீங்கள்
நண்பனாக்கிக்கொள்ளும்
தகுதிகளற்றவன்
அவன்.
போட்டி
பொறாமையில்
திளைத்தவன்
உங்கள்
உடமை
கவர்பவன்
கச்சிதமாய்
தனக்கேதும்
தெரியாதென்று
நடிப்பவன்
காட்சிகளை
புனைத்து
கதை
விட்டு
உங்களை
நம்பச்செய்ய
வைப்பதில்
கைதேர்ந்தவன்

உற்சாகமான
வார்த்தைகள்
அவனுக்கு
வசதிப்படுவதில்லை
இருண்ட
உலகின்
சுடுகின்ற
வெப்பநதி
அவன்.

தவறி
நட்பில்
விழுந்திடாதீர்
எப்போது
வேண்டுமானாலும்
உங்களை
கவிழ்கவோ
பழிவாங்கவோ
நம்பிக்கைக்கு
ஊறுசெய்யவோ
அவன்
தயங்குவதேயில்லை
அவனோடு
நட்பு
கொள்ளாதீர்

உங்கள்
தோழி
தமையரை
அவனுக்கு
அறிமுகஞ்
செய்யாமலே
விடுங்கள்
அவனுக்கு
சகோதரிகள்
தேவையில்லை

அவன்
குற்றங்களை
மன்னிக்க
துணியாதீர்கள்
குறுவாட்களை
அவன்
இடையிலிருந்து
இறக்கியிருக்க
மாட்டான்
விசுவாசமற்றவன்
முன்பே
சொன்னது
போல்
பொய்
அவனுக்கு
பொங்கல்சுவை

அவனுமென்ன
செய்வான்
இச்சமூகம்
அவனுக்கு
விசத்தை
ஊட்டிவிட்டதன்பேரில்
விசத்தை
தானே
பகிருவான்
அவனிடமெப்படி
கண்ணியம்
கேட்கிறீர்கள்

பணம்
புகழ்
பதவி
பேராசையெல்லாம்
அவனுக்கில்லை
எப்போதாவது
கொஞ்சம்
பேனாக்களின்
வீரியத்தில்
கிறுக்குவான்
எழுத்தென்னும்
போதை.

அவனுக்கு
வழிகாட்டாதீர்
அவனை
தூக்கிசுமக்காதீர்
பின்பற்றாதீர்
அவன்
விழுந்தே
கிடப்பவன்
எப்போது
விழுவான்
எழுவான்
எண்ணிக்கிடப்பதில்
அர்த்தமில்லை
அவனுக்கு
புன்னகைக்க
தெரியும்
அறத்தின்
பெயரால்
மனிதனென்பதற்கு
சிறு
அடையாளம்.

நீங்கள்
புன்னகை
கேட்டால்
கொஞ்சம்
தேடித்துழாவி
உள்ளொன்றும்
புறமொன்றுமாய்
கொஞ்சம்
வழித்து
கொடுப்பான்
எப்போது
வேண்டுமானாலும்
சம்பவித்து
விடக்கூடிய
மரணத்தின்
சுமை
அவன்.

விலகிநில்லுங்கள்
அவனோடு
நட்பு
பாராட்டாமல்
உங்களை
சுமக்கும்
வலிமை
அவனுக்கு
இல்லை
நல்லவனென்ற
வார்த்தை
கண்டுபிடிக்கப்படும்
முன்
பிறந்தவன்
அவன்.


நிகழ
மறுக்கும்
அற்புதம்
அவன்
அற்பன்
என்றாலும்
தாங்கிக்கொள்வான்

இதற்கும்
மேல்
அவனோடு
நட்பு
கொள்வீரென்றால்
ஒரு
கணப்பொழுதில்
உடைந்து
விழும்
கண்ணீர்குமிழி
யொன்றைத்தவிர
உங்களுக்கு
கொடுக்க
அவனிடம்
ஒன்றுமே
இராது
அவன்
நானில்லை
என்று
பிரகடனம்
செய்யும்
துணிவெனக்கு
போதவில்லை
போல

-கவிதைக்காரன்.

1 comment:

Anonymous said...

Online Casino UK | Best Casino Sites 2021 | Online Casino UK
Online Casino 바카라 UK - UK's #1 Online Casino with Sports Betting, Slots, Live Casino, Keno and Table choegocasino Games. Play £10, Get 30 Free Spins 1xbet korean + 100 Free Spins.