Wednesday, May 23, 2012

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரா.புவன்


பிறந்த நாள் வாழ்த்துன்னு கவிதை எழுதுறது வழக்கமா கஸ்ட்டப்படுறதே இல்ல எனக்கு . 

அந்த நபரோட கேரக்டரையும் என்னோடான அவரது பழக்கத்தையும் புருவத்தின் நடுவில் கொண்டு வந்து சிந்திக்க ஆரம்பிச்சா போதும் வார்த்தைகள் வந்து விரல் நுனியில் தந்தி அடிக்க எதுகை மோனை மேலே கொஞ்சம் ஏறி நின்னு அடிக்க 
கவிதையா கொட்டிடும்.... 

ஆனா இவர் அப்படிச்சாதாரணமானவரில்லையே... 
கிட்டத்தட்ட பாதி முகநூல் முக்கியஸ்தர்களுக்கும் அறிமுகமான முக்கியப்புள்ளி.... ரா. புவன் --- அப்படின்னு சொன்னா யார்ன்னு கேக்குற ஆள் கொஞ்சமே கொஞ்சம் இங்கே  

சரி இப்போ என்ன சொல்ல வர்ரேன்னா! எனக்கும் இவருக்குமான பழக்கம் சரியா 8 மாசம் முன்னாடி...  “திசைகாட்டி” -அப்படின்ற குழுவில் இணைத்து விட்ட நாள் முதல்.... 

அட ஆமாங்க ... சும்மா மொறைச்சாலே கம்மெண்ட்ல ஆளை கலாய்ச்சு காலி பண்ணிடுற கேக்ங்ஸ்ட்டரா நான்  திரிஞ்சுக்கிட்டு இருந்த காலக்கட்டத்தில் 

அன்றைக்கு ஒரு நாள்... 
[அட,.... அதாங்க இவரை திசைகாட்டியில இணைத்த அன்று]

இரவு நேரம் கம்மெண்ட்ல எல்லாரையும் ஓட்டிக்கிட்டுஇருக்குறேன் சைட்ல சத்தமே இல்லாம என்னைய  அக்குவேறா ஆணீ வேறான்னு பிரிச்சு தூர்வாரிக்கிட்டு இருக்காரு சார்.... என்னடான்னு பார்த்தா

எங்க கார்த்தியண்ணனை யார்ப்பா கலாய்ச்சதுஅடிங்கடா கேட்ட உடைங்கடா பூட்டைன்னு .. ஏகமாக அமளி துமளி அள்ளி வீசுறாரு சில பல பிட்டுக்களை... 

ஏய்ய்ய்... இந்தாப்பா நில்லு நில்லு யாரு நீயி... 
என்னையவே இந்த ஓட்டு ஓட்டுறன்னு கேட்ட்டா... 
அட நீங்க சும்மா இருங்கன்னே உங்களுக்கு ஒண்ணும் தெரியாது நான் தான் உங்க சிஷ்யன்னு சொல்லி போய்க்கிட்டே இருக்காரு அவர் வேலையில கருத்தா....


இது சரிவராதேன்னு ஒரு நாள் பொறுத்திருந்தா மறுநாள் 
சார் போடுற அத்தனை போஸ்ட்டும் எனக்கு ஆப்பு வைப்பது போல 
என்னை அண்ணனு கூப்பிட்டது கூட பரவால்ல
 

****நான் கஷ்ட்டப்பட்டு கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுறப்பொண்ணையும் போய் அக்கா-ன்னு கூப்பிட்றது ... 

கடைசியா ஒரு முடிவோட இவரு போன் நம்பரைத்தேடி அட யார்பா நீ-ன்னு பேச ஆரம்பிச்சோம் .. பேசியே ஆளைக்கவுத்திட்டார்.... அப்பொறம் இவரு சவுதி கிளம்பும் வரைக்கும் நானும் இவரும் கூடி கும்மியடிச்சு ,,,, பேசாத கதைகள் இல்ல அடிக்காத லூட்டி இல்லை...! 


அப்பவே தலை-க்கு கவிதை எழுதுறது ரொம்ப இஸ்டம்....
 
காதல் கவிதையா அள்ளி வீசுவாரு... என்னோட வால்-ல நான் எழுதும் கவிதைய படிச்சுட்டு அண்ணே அதுக்குள்ள பத்து லைக்கா ? என் கவிதை இன்னும் காத்து வாங்குதுன்னு கடுப்பேத்துவாரு 

[ஏன்னா நான் கவிதை எழுதிக்கொல்ல ஆரம்பிச்ச காலமும் அப்படித்தானே எனக்கும் இருந்தது...]

இரண்டு பேருக்குமிடையே கவிதைப்போட்டி வைச்சுப்போம் ஒரு தலைப்பு கொடுத்து அதில் கவிதை எழுதனும்ன்னு பேசித்தீர்மானிச்சு எழுதி ஒருத்தர் ஒருத்தர்கிட்ட காட்டிப்போம்.

அப்படியும் இப்படியுமா பழகிய நாட்கள் கரைந்து போக 
ஒரு நாள் சவுதிக்கு [அல்-ஜுபைல்] கிளம்பிப்போனபின்னாடி ... தான் இவருக்குள்ள இருக்கும் பவர் ஸ்டார் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சிருப்பார்ன்னு நினைக்கிறேன்.. 

 
இனிமே நான் போற பாதை சிங்கப்பாதைன்னு அப்போத்தான் அல்ஜிபைல் ப்ளாட்பார்த்தில் உக்கார்ந்து ஒர்ரூபா காயினை சுண்டிருப்பார் போல அதுக்கப்புறம் தலைவரு தொட்டதெல்லாம் தூள் பறக்க ஆரம்பிச்சிரிச்சி... 

சும்மாவே திங்கு திங்குன்னு ஆடுவாரு பவர் ஸ்டார் வேற உள்ள புகுந்துட்டாரு கேக்கவா வேணும்... 

தலை முடிய சிலுப்பிக்கிட்டு தமிழ்தாயை வணங்கிக்கிட்டி பேனாவ தலைகீழா திருப்பி பிடிக்க ஆரம்பிச்ச டர்னிங் பாய்ண்ட் அங்க தான்... 
அது மட்டுமில்லாம தன் பெயரை தமிழ்ல “ரா புவன்” அப்படின்னு வேற மாத்திட்டார்.

****இந்த இடத்தில் நீங்க இந்த லிரிக்ஸை முணு முணுக்கவும் :


அடுத்து அண்ணன் ஸ்டேட்டஸ் புலி  
 “அப்துல் வாஹப்” கிட்ட அஸிஸ்டெண்டா சேர்ந்துட்டார் போல... சமுதாயம் , குடும்ப வாழ்க்கைன்னு ஸ்டேட்டஸில் பிரிச்சு மேய ... 


திடீர்ன்னு உலக நியதின்னு கிளம்பிட்டாரு... அடுத்து நம்ம டாஸ்மாக் ஆதீனம் “டிமிட்ரி இவ்னொஸ்கி” 
[ அப்போதைய கார்த்தி கர்னா ] காற்றும் வீச மது கலந்த மசால் வடை விற்க ஆரம்பிச்சுட்டாரு... 


வேல்குமார். தீசன், டெண்டல் எழிலன், சாந்தி ப்ரீஸ் , ரவி நாக், பிரபின் ராஜ் , -ன்னு பெரிய பெரிய ஃபேஸ்புக் “கை”-ங்க கூட  

[லிஸ்ட்டில் இன்னும் பலர் இருக்கலாம் ஆனால் இப்போது எனக்கு மணி நள்ளீரவு 1:47 ஆக தூக்கம் கண்ணைச் சொக்குவதால் மூளைக்கு அதிக வேலை கொடுக்க எண்ணமில்லை ] சேர்ந்து பேஸ்புக்கில் பவனி வர ஆரம்பிச்சுட்டார்... [now 2:17a:m]

ஸ்ருதி சுத்தமா இறங்கி அடிக்கும் போது “திசைகாட்டியில்” **பெண்கள்ன்னு*** ஒரு கவிதைப்போட்டி -ஒண்ணு நடத்தினோம்.... பழைய தொழிலை மீண்டும் கையிலெடுத்து கவிதையில் களமிறங்க...  
 

பெண்கள் தலைப்புக்காக எழுதும் போது அம்மாவை மட்டுமே சுற்றிச் சுற்றி எழுதியதால் ஒற்றை நொடியில் வெற்றி வாய்ப்பை இழக்க .. 
சக கவிஞர் ஒருவரின் கவிதைக்கரு நல்லா இருக்கேன்னு எடுத்து தன் இரண்டாவது கதையை எழுத ஆரம்பிச்சுட்டார்,,, 

ஏற்கனவே முதல் கதையை எழுதி வெளியிட்டு நல்ல பெயர் சம்பாதித்ததால் அடுத்த கதைக்கு ரசிகர் பட்டாளமும் அதிகமாக அடுத்தடுத்து கதைகள்ன்னு களமிறங்கி விளையாட ஆரம்பிச்சார்... 

இவரது கதைகளின் தீவிர விசிறி நானும் , ஷெர்கன் ஹமீது அண்ணனும்...திடீர்ன்னு ஒரு நாள் அண்ணே ஒரு பாட்டு ஒண்ணு எழுதலாம்ன்னு இருக்கேன்னு சொன்னார். அட வாழ்த்துக்கள்பான்னு வழக்கம் போல என்னுடைய வாழ்த்தைச்சொன்னதும் லிரிக்ஸ் காமிச்சார்... 

எப்போதும் வெளியில் இவரது படைப்புகளை புகழ்ந்துவிட்டு தனியா கூட்டிட்டுப்போய் இன்பாக்ஸ்ல தவறுகளை மண்டையில் கொட்டி பழக்கப்பட்டதால் அதிலும் சில கரெக்‌ஷனைக்கொடுக்க.. தன் குரலாலே பாடி தன்னோட முதல் முயற்சியை முதலாவதாக எனக்கு அனுப்பி எப்படி இருக்குன்னு கேட்டார். 

இசையில்லாத அந்த குரல் மெலடிக்கு கொஞ்சம் மிரட்டலாகவே தோன்ற மனதில் பட்டதைச்சொன்னேன் . பின், நண்பர் ஒருவர் பாடி இசையமைத்துக்கொடுத்ததுன்னு  வலைதளத்தின் வீடியோ லிங்கை கொடுத்தார் நிஜமாவே நல்லா இருந்தது...

[உங்களில் பலரும் கேட்டிருப்பீங்களே? ] 

இப்படியே தொட்டதெல்லாம் துலங்கிக்கொண்டிருந்த பாதையில் போய்க்கொண்டிருப்பவனை சிலநாட்களாக காணாமல் போக ... திடீர்ன்னு ஒர் நாள் செல்போன் திரையில்  தலைவர் நம்பர் டிஜிட்டல் எழுத்துக்களில் ஒளிர  எடுத்துகேட்டபோது அடுத்த முயற்சி இசைஆல்பம் பண்ணலாம்ன்னு இருக்கேன்னே...ன்னார்... 

அதில் சில முயற்சிகளையும் எப்படி செயல் வடிவம் கொடுக்குறதுன்ற தன்னோட கருத்துக்களையும் பகிர்ந்துக்கிட்டார் .. முதல் பாட்டுக்கு லிரிக்ஸ் ... வழக்கம் போல உங்க கிட்டதான் முதல்ல அண்ணேன்னு அனுப்பி வைச்சார்.... “பங்காளி பங்காளின்னு ” தொடங்கும் அந்த பாடல் 
அடடே பயபுள்ள டாப் கியரில் போகுதேன்னு சந்தோஷப்பட வைத்தது.


இதோ அடுத்து சிங்கப்பூர்க்கு போலாம்ன்னு இருக்கேன்னு சொல்றார்.... கால்ல சக்கரம் கட்டிட்டுச் சுத்துறார்... 
அல் ஜுபைல் வந்ததுக்கு சம்பாதிச்ச காசுல மனசுக்கு திருப்தியா இந்த ஆல்பத்தை முடிக்கனும்ன்னு நினைச்சிருக்கேன்றார்... 


கொஞ்சம் பெருமையாகவே இருக்கு மனசுக்கு பிடிச்சதை செய்யவும்.. 
மனசுக்கு பிடிக்கலைனா தூக்கி ஒதுக்கவும் ஒரு பக்குவம் வேணுமில்லீங்களா அது ரா. புவன் கிட்ட இருக்கு... 

இந்த பதிவு அவரை [னை] புகழ்ந்து எழுதவோ, இல்ல எனக்கும் அவருக்குமான பிணைப்பை அவனுக்குச்சொல்லவோ இல்லை அவரோட நட்பு வட்டங்களின் பார்வைக்காகவோ இதை எழுதலை.. 

சொந்த வாழ்க்கை கஷ்ட்டங்களை தாண்டி சாதிக்க முடியும்ன்னு நினைகுறவங்கல்ல பாதி பேரு அந்த சோகத்தை தோள்ல தூக்கிப்போட்ட்டுக்கிட்டு சுமை தாங்க முடியாம ...  தேம்பிப்போய்டுறாங்க...   

ஆனா அதையெல்லாம் தாண்டி சாதிக்கனும்ன்னு நினைக்குறவங்க மனசால குழந்தையா இருக்க நினைப்பதே இல்லை புவன் எனக்குத்தெரிஞ்சு ஒரு குழந்தை..  

அவன் சோகப்பட்டு பேசி ஒரே ஒரு முறை பார்த்திருக்கேன் [கேட்டிருக்கேன்] அதுவும் ஒரு மொக்கை பிகருக்காக வருத்தப்பட்டான்னு நினைக்கிறேன்...  
[அப்போதும் நான் அவனை கலாய்கவே செய்தேன்.. ]

அவனால எவ்ளோ சோகத்தையும் தாங்கிக்க முடியும் ஆனா, அது அந்த ஒரு நிமிடம் தான் ... அடுத்த நிமிஷம்  தீபாவளிக்கு எடுத்த சட்டையை ஹேங்கரில் மாட்டிட்டு  வந்தவன் போல  நிப்பான்.. 

[அய்யய்யோ மரியாதையா பதிவு எழுதனும்ன்றதுக்காக வார்த்தைக்கு வார்த்தை அவர் இவர்ன்னு எழுத வேண்டி இருக்கே ..இதுக்கு நான் சின்னதா 20 வரில கவிதையாவது எழுதி இருக்கலாமோ...] 

இப்படி தனக்கு பிடிச்ச வாழ்க்கைய தன்னோட ஸ்டைல்ல  சந்தோஷமா வாழத்தெரிந்தவனுக்கு இன்னைக்கு ஒரு வயசு கூடிப்போச்சு... வாழ்த்துச்சொல்ல எல்லோரையும் கூட்டி வைச்சு கூடி கும்மியடிச்சு ட்ரீட் கேட்க ஆயிரம் பேர் இருப்பாங்க ...

ஆனா எனக்கு அவர்[ன்] கொடுக்குற மரியாதைக்கும் அங்கீகாரத்திற்கும் 
நான் என் உடன்பிறப்புகளுக்கும் மேல அவரை[னை]ப் பார்ப்பதால்... அப்படி முடிக்க முடியலை... எனி வே நல்லா இரு புவன் என்னைக்கும் இதே சந்தோஷத்தோட....!   

ரொம்ப சீரியஸா பேசுறதால நான் ரொம்ப பெரிய மனுஷன்னுல்லாம் ஃபீல் பண்ணிடாதீங்க ...! ஆக்ச்சுவலி  அவன்[ர்]தான் என்னை அண்ணன்னு கூப்பிட்றார்..

நான் அவரை அண்ணார்ந்தும் ஒரு அஞ்சு நிமிஷம் கஸ்டப்பட்டு சுத்து வந்தா தான் முழுஷா பார்க்க முடியும்... ஹாஹ ஒரே ஒரு வருஷம் முந்திட்டேன்... அதனால அண்ணான்னு கூப்பிட்றார்... அவ்வ்வ் 

[நீ அன்னைக்கே அந்த பொண்ணை அக்கான்னும் என்னை அண்ணான்னும் கூப்பிடாம இருந்தா நான் பாட்டுக்கு வேற வழில போயிருப்பேன்ல ஹஹஹ் ]   

இத்தனையும் சொல்லியும் நிறைய சொல்லாமல் விட்டதாக திரும்பி பார்க்கிறேன்., இவ்ளோ பழகிய இந்த பவானிக்காரனை நான் இதுவரை பார்த்ததே இல்லை... அவரும் தான்...! 

முகநூல் - இணையம் கொடுத்த இன்னோர் உறவிவன் [ர்]... 

என்றும் நல்லா இரு புவன்... 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா புவன்...! 

5 comments:

Shanthi Raj said...

பிறந்த நாள் வாழ்த்துகள் புவன் லைஃப் ல சந்தோசமா இரு ஆனா எப்பவும் விழிப்பா இரு. இந்த வயசுல அனுபவிக்காம எந்த வயசுல அனுபவிக்க போற அதே சமயம் உள்ள எப்பவும் ஜாக்கிரதையா இரு. எல்லா வளங்களும் பெற வாழ்த்துகள் பிராத்தனைகள்

mahesh said...

வணக்கம் அண்ணே
நல்லா இருக்குரீங்க்அலா?

தர்ச்செயலா இன்று உங்க ப்லாக்க எட்டி பார்த்தேன்
ம்ம்ம் நல்லா எழுதிகிட்டு வரிங்க்அ!
அப்படியே மேலும் மேலும் நிரைய பதிவுகல் எழுத வாழ்த்துக்கல்!

சீக்கிரம் ஒரு பதிவராக மார வாழ்த்துக்கல்!


----
பிறந்த நாள் வாழ்த்துகள் புவன் அண்ணே

புவன் said...

அண்ணே.. ரொம்ப நாள் கழிச்சு சொல்றேன்னு நினைக்காதீங்க.. இன்னைக்கும் உங்க போஸ்ட்டை படிச்சேன்னு சொல்லலாம்ல.. ஐ லவ் யூ பிரதர்.. திசைகாட்டியின் குழந்தையாவே இருந்திருக்கலாம்னு தோணுது

RA Bhuvan said...

அண்ணே, இன்னைக்கும் மறுபடி படிச்சேனே... ஹிஹி. ரொம்ப பெருமையா இருக்கு.. ஆனா இப்போ குழந்தை மட்டுமில்லண்ணே... கொஞ்சம் வளர்ந்துட்ட உங்க தம்பி... :) லவ் யூ சோ மச் பிரதர்

RA Bhuvan said...

அண்ணே, இன்னைக்கும் படிச்சேன்.. ரொம்ப பெருமையா இருக்கு.. :) லவ் யூ சோ மச் பிரதர்.. என்ன ஒண்ணு, இப்போ கொஞ்சம் வளர்ந்துட்டேன் ஹிஹிஹி