புற்றுக்
கரையானை
புசித்துண்ட
கருநாகம்
புற்றை
குடியாய்
கொள்வது
போல்
கற்கோவில்
கட்டியவராம்
தமிழரெல்லாம்
காத்திடுவார்
வரிசையிலே
பொற்கோவில்
தனில்
புகுந்த
பூநாகம்
பார்ப்பரிங்கே
பொய்க்கும்
மொழி
புரிகிறதா
கடவுளுக்கு...!
நீக்கமற
நிரைந்துவிட்ட
நீள்சடையோன்
நினை
வணங்க
இடைத்தரகன்
மடைபோல
நிற்கின்றான்
மடை
திறந்த
வெள்ளம்
போல்
மல்கும்
கண்ணீர்
உனைத்தழுவ
மாணிக்க
வாசகரின்
சுவைத்தமிழோ
என்செய்கும்
விடையேறி
இவண்
வருவாய்
இனிதன்மை
விளங்கிடவே
எனதமிழில்
வருதிப்பேன்
வருவாயோ
என் தேவ!
-கவிதைக்காரன்.
2 comments:
மிகசிறந்த கருத்துள்ள ஆக்கம் பாராட்டுகள் .தொடர்க .............
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News
Post a Comment